நெப்போலியன்

நெப்போலியன் சாமானியன் சக்கரவர்த்தியான சாதனைச் சரித்திரம், எஸ்.எல். வி. மூர்த்தி, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 416, விலை 300ரூ. நெப்போலியனைப் பற்றிய ஏராளமான புத்தகங்கள் வெளிவந்திருந்தாலும், அவருடைய முழு பரிமாணத்தையும் வெளிக்கொண்டு வருவதாக அமைந்துள்ளது இந்நூல். பிரான்ஸின் காலனியான கார்ஸிகா என்னும் குட்டித் தீவில் பிறந்து, வறுமைச் சூழலில் அரசு நிதியுதவியோடு ராணுவப் பள்ளியில் சேர்ந்து, இரண்டு ஆண்டு படிப்பை ஓராண்டிலேயே படித்து முடித்து, 16ஆவது வயதில் லெஃடினெட், 24ஆவது வயதில் ராணுவப் படைத்தளபதி, பிரிகேடியர் ஜெனரல் என தனது கடின […]

Read more

நான் சுவாசிக்கும் சிவாஜி

நான் சுவாசிக்கும் சிவாஜி, ஒய். ஜீ. மஹேந்திரா, கண்ணதாசன் பதிப்பகம், பக். 192, விலை 120ரூ. ரசிகர்கள் பார்வையில், சிவாஜியை பார்ப்பது ஒரு பரிமாணம். அவரை சந்தித்தவர்கள் பார்வையில் அவரை பார்ப்பது, வேறொரு பரிமாணம். அவருடன் நெருங்கி பழகிய குடும்ப நண்பர், சிவாஜியுடன், 33 படங்களில் நடித்தவர் என்ற முறையில் நூலாசிரியரின் எழுத்தில் நாம் பார்க்கும், சிவாஜியோ, முப்பரிமாணமாக, மனதுள் விரிகிறார். பொதுவாக சிவாஜியின் நடிப்பை வியந்திருக்கும் ரசிகர்களுக்கு, அவர் நடிப்பில் காட்டிய நுணுக்கங்களையும், மேதைமைகளையும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நூலாசிரியர் விவரிக்கையில், அட, ஆமாம்ல […]

Read more

சிந்தனைச் சுரங்கம்

சிந்தனைச் சுரங்கம் (முதல் பாகம்), கா. திரவியம், பூம்புகார் பதிப்பகம், பக். 432, விலை 425ரூ. தமிழக முன்னாள் தலைமை செயலர் அமரர் கா. திரவியம் இ.ஆ.ப. நான்கு தொகுதிகளாக எழுதி வெளிவந்த சிந்தனை சுரங்கம் என்ற நூலின் முதல் பாகம் மட்டும், தற்போது மறுபதிப்பாக வந்துள்ளது. மேலைநாட்டு, இந்திய நாட்டு அறிஞர்கள், தமிழ் இலக்கியங்கள், பழமொழிகள் என, சிந்தனைகளின் அகர வரிசைத் தொகுப்பு, பொருளகராதியுடன் வெளிவந்துள்ளது. சிறப்பான சிந்தனைகளின் தொகுப்பு. எளிய நடையில் மொழியாக்கம் செய்துள்ளது, ஆசிரியரின் ஆழ்ந்த தமிழ் புலமைக்கு எடுத்துக்காட்டு. […]

Read more

குருதிக் களத்தில் ஒளிப்பதிவு செய்தவர்கள்

குருதிக் களத்தில் ஒளிப்பதிவு செய்தவர்கள், ஜெகாதா, சபரீஷ் பாரதி வெளியீடு, பக். 128, விலை 80ரூ. ஒரு போர் பற்றிய தகவல்கள் எந்தளவுக்கு பரபரப்பை கிளப்பி விடுகின்றனவோ, அதேபோல்தான், போர் குறித்த புகைப்படங்களும். ஆனால் செய்யதிகளைவிட அவை, மக்களிடம் ஒருவித அச்சத்தையும், இரக்கத்தையும் ஏற்படுத்துவதில் முன்னிற்கின்றன. அப்படி போர்களில் உயிரை துச்சமாக மதித்து, கேமராக்களுடன் ஓடி, போரின் பாதிப்புகள், மனித உரிமைமீறல்கள், பரிதாபம், கொடூரங்களை புகைப்படங்களாக பதிவு செய்த, 50 புகைப்பட கலைஞர்களின் வாழ்க்கை பதிவு தான் இந்த நூல். அமெரிக்கா, சோவியத், பிரிட்டன் […]

Read more

வாழ்க்கை வாழ்வதற்கே

வாழ்க்கை வாழ்வதற்கே, திருநாவுக்கரசு, அட்சரா பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 140ரூ. வாழ்க்கை என்பது வரம். அதை நாம் அனுபவித்து வாழவேண்டுமே தவிர, ஒரு சில தோல்விகள் காரணமாக நாம் அதை இழந்துவிடக் கூடாது. முக்கியமாக தற்கொலை எண்ணம் கூடவே கூடாது என ஆணித்தரமாக நூலாசிரியர் விளக்குகிறார். ஒவ்வொர் வயதையும் நாம் கடக்கும்போது நம் மனதும் உடலும் பல்வேறு உளவியல் சிக்கல்களையும், மாறுதல்களையும் கையோடு கொண்டுவரும். அப்போது ஏற்படும் மன மாற்றங்களின் காரணமாக ஒரு சிலர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். […]

Read more

பொலிவியன் டைரி

பொலிவியன் டைரி, எர்னெஸ்டோ சே குவாரா, தமிழில் என். ராமச்சந்திரன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 350, விலை 220ரூ. லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவில் மக்களை அடிமைத்தளையில் இருந்து மீட்க எர்னெஸ்டோ சே குவாராவும், அவரது தோழர்களும் புரட்சிப் போராட்டம் நடத்தினர். புரட்சிப் போராட்டக் களத்தின் தினசரி நிகழ்வுகளை சே குவாரா பதிவு செய்துள்ளார். அது நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சே குவாரா என்ற தனியொரு மனதின் மறைந்து எத்தனையோ ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், இன்றும் உலகம் முழுவதும் இளைய தலைமுறையினர் மத்தியில் […]

Read more

உன்னால் கடக்க முடியும்

உன்னால் கடக்க முடியும், ஓஷோ, தமிழில் வனமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 376, விலை 200ரூ. இருபதாம் நூற்றாண்டு சிந்தனையாளர்களுள் ஓஷோ ரஜனீஷுக்கு முக்கியமான இடம் உண்டு. பாரத ஞானப் பின்புலத்தில் மேற்கத்திய நாடுகளில் அவர் நிகழ்த்திய பிரசங்கங்கள் பல இப்போது தொடர்ந்து நூல் வடிவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெளிநாட்டு பக்தர்களிடையே ஓஷோ உரையாடியதன் சில பகுதிகள் தொகுக்கப்பட்டு ஏற்கெனவே விஸ்டம் ஆப் தி சேண்ட் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நூலாக வெளிவந்தது. அதுவே எளிய நடையில் மொழி பெயர்க்கப்பட்டு உன்னால் கடக்க […]

Read more

உலகக் காப்பியங்கள்

உலகக் காப்பியங்கள், இரா. காசிராசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 484, விலை 360ரூ. கற்பனை வளம், சிந்தனைத் திறன், சுவை உணர்வு, இலக்கிய நயம் ஆகியவை மிக்க ஓர் உன்னதப் படைப்புதான் காப்பியம். மனித சமுதாயமும், மனித வாழ்க்கையுமே இதன் அடிப்படை. உலக மொழிகளில் இலக்கியப் படைப்பு எவ்வாறு வளம் பெற்றுப் பொலிந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டும் நோக்கில் இந்நூல் அமைந்துள்ளது. தமிழ்க் காப்பிய ஆய்வாளர்களுக்கு ஒப்பீட்டு முறையில், உலகக் காப்பியங்களைத் தொகுத்து அளிக்கும் முயற்சியாக இந்நூல் உள்ளது. காப்பியத்தின் […]

Read more

காசி இராமேசுவரம்

காசி இராமேசுவரம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 599, விலை 420ரூ. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் மிகப்பெரிய பாலமான காசியும் இராமேசுவரமும் மிகப் பழமையான புண்ணிய திருத்தலங்கள் மட்டுமல்ல, அவை நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு இலக்கணமாகவும் திகழ்பவை. இவருடைய படைப்புகளின் வியக்கவைக்கும் தனித்தன்மை என்னவென்றால், அவர் எழுத எடுத்துக்கொள்ளும் பொருளின் மேல் அவருக்கிருக்கும் ஆதிக்கம். அவரது பரந்த விரிந்த அறிவு வேட்கை நூல்களின் தலைப்புகளைப் பார்த்தாலே பிரமிக்க வைத்துவிடும். எடுத்தது எப்பொருளாயினும் அப்பொருளின் நுணுக்கங்களையும் விழுமியங்களையும், ஒன்றுவிடாது ஆழ்ந்து ஆராய்ந்து தக்க […]

Read more

கம்பனில் சட்டமும் நீதியும்

கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன், வானதி பதிப்பகம், பக். 184, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-278-0.html கம்பன் காப்பியம் என்பது ஓர் உயர்பாற்கடல். அதில் இருந்து யார் யாரோ எவ்வளவோ கருத்து அமுதத்தை அள்ளி அள்ளிப் பருகியிருக்கிறார்கள். ஆனால் இதுவரை அறியப்படாத கருத்துக்களை தேடி எடுத்துக் கொண்டுவந்து தந்திருக்கிறார் நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன். சட்டமும் நீதியும் அவரது உயிரிலும் உணர்விலும் கலந்துவிட்ட ஒன்று என்பதால், நீதியரசர் கம்பனில் இருந்து சட்டத்தையும் நீதியையும் எடுத்துத் தருவது […]

Read more
1 84 85 86 87 88 336