சோவின் ஒசாமஅசா

சோவின் ஒசாமஅசா, எழுத்தும் தொகுப்பும் மணா, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 256+256, விலை 190ரூ+190ரூ. ஒரு சாதாரண மனிதனுக்குள் இத்தனை அசாதாரண அனுபவங்களா என்று வியக்க வைக்கும் நூல். வழக்கறிஞர், பத்திரிகையாளர், விமர்சகர், நடிகர், அரசியல்வாதி, நாடகவாதி என்று பன்முகத்தன்மை கொண்ட சோவின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் கருத்துச் சுரங்கம். தாத்தா ராமநாதய்யர் தொடங்கி இந்தியாவின் மிகப்பெரிய தலைவர்கள் மற்றும் ஆளுமைகளுடனான அவரது அனுபவங்களைச் சொல்லும்போது, உண்மையைத் துணிந்து சொல்லும் போக்கு சோவுக்கே உரியது. எம்.ஜி.ஆர்., சிவாஜி, எம்.ஆர்.ராதா, காமராஜர், ராஜாஜி, பாலசந்தர், மொரார்ஜி, […]

Read more

சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே

சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே, (அடித்தட்டுக் கண்ணோட்டத்தில் சமய நல்லுறவு உரையாடல்), ஆங்கில மூலம் ஆ. அலங்காரம், தமிழில் அ. அந்தோனி குருசு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,  சென்னை, விலை 180ரூ. அனைத்து சமயங்களிலும் உள்ள சாதி, வர்க்க ஏற்றத் தாழ்வுகளை கொடுமைகளைப் போக்க சமயங்களின் மூலமாகவே என்ன செய்ய வேண்டும்? என்று ஆராயும் நூல். விவேகானந்தர் தன்னுடைய சீடர்களிடம், ஏழைகளுக்கும் துன்புறுவோர்களுக்கும் பணி செய்வதே உங்கள் தொழில். அதில் சாதி அல்லது நிறவேறுபாடு பார்க்கவும் கூடாது என்று கூறியிருப்பது […]

Read more

நோக்கு நூல்கள் மரபும் புதுமையும்

நோக்கு நூல்கள் மரபும் புதுமையும், இரா. பன்னிருகை வடிவேலன், தமிழாய்வு மன்றம், பக். 104, விலை 100ரூ. பழந்தமிழ் இலக்கிய, இலக்கண, நிகண்டு நூல்கள், அவை தொடர்பான ஆய்வுகள் போன்றவை தற்போது பெருமளவில் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன. இது தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு உதவுகிறதோ இல்லையோ, பழந்தமிழ் நூல்கள் அழிந்துவிடாமல் அவற்றைப் புதுப்பொலிவுடன் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லவும் உதவுகின்றன என்பது முற்றிலும் உண்மை. அந்த வரிசையில் பலரும் அறியாத ஐந்திணை மஞ்சிகன் சிறு நிகண்டு, நிரரர் நிகண்டு, சிந்தாமணி நிகண்டு ஆகிய நிகண்டு நூல்கள் […]

Read more

கயல் பருகிய கடல்

கயல் பருகிய கடல், மாலன், கவிதா பதிப்பகம், சென்னை, விலை 130ரூ. இலக்கியங்களை ஆய்வு செய்து கட்டுரைகள் வடிப்பதில் புகழ் பெற்ற மூத்த பத்திரிகையாளர் மாலன் எழுதிய சிறந்த இலக்கியக் கட்டுரைகள் கொண்ட நூல் கயல் பருகிய கடல். இதில் மாலன் முக்கியமாக ஆராய்ந்துள்ள விஷயம், தமிழில் வெளியான முதல் சிறுகதை எது? அதை எழுதியவர் மகாகவி பாரதியாரா? அல்லது வ.வே.சு. அய்யரா? தமிழ் இலக்கியவாதிகள் நீண்ட காலமாக சொல்லி வருவது, தமிழின் முதல் சிறுகதை வ.வே.சு. அய்யர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் என்பதாகும். […]

Read more

கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும்

கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும், தோழமை வெளியீடு, சென்னை, விலை 150ரூ. உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர் டைரக்டர் பாலசந்தர். 100 படங்களை இயக்கியவர், புரட்சிகரமான கதைகளைத் துணிந்து படமாக்கியவர். ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். கமல்ஹாசனை பட்டை தீட்டியவர். ஒரு படத்தைப்போல இன்னொரு படம் இல்லாதபடி, விதம் விதமாகப் படங்களை எடுத்த திறமைசாலி. பாடல் காட்சிகளை படமாக்குவதில் புதுமையைப் பகுத்தியவர். அண்மையில் காலஞ்சென்ற பாலசந்தரின் நினைவாக இந்நூலை சேவியர் எழுதியுள்ளார். புத்தகம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. ரஜினியை பாலசந்தர் பேட்டி கண்டது […]

Read more

குருவிக்கூடு

குருவிக்கூடு, கோவன் பதிப்பகம், சென்னை, விலை120ரூ. பத்திரிகைகளில் சிறுகதை வெளிவருவது குறைந்துவிட்டது. ஆனால் சிறுகதை படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்துவிடவில்லை. அப்படிப்ட்டவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியும், தெவிட்டாத இன்பமும் அளிக்கக்கூடியது பிரபல எழுத்தாளரும், பேராசிரியருமான முகிலை இரா. பாண்டியனின் குருவிக்கூடு சிறுகதைத் தொகுதி. கதைகள் ஒவ்வொன்றும் மனதை வருடுகின்றன. எனினும் பாரம் என்ற சிறுகதை புதிய உச்சத்தைத் தொடுகிறது. ஜான் என்ற மனவளர்ச்சி குன்றிய குழந்தையைப் பற்றிய கதை. பிறருக்கு உதவுவதையே லட்சியமாகக் கொண்ட தங்களுக்கு இக்குழந்தை ஏன் பிறந்தது? தங்களுக்குப் பின் அக்குழந்தையைக் காக்கப்போவது […]

Read more

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 350ரூ. இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் நிலவி வரும் தவறான புரிதல்களைப் போக்கும் வகையிலும், இஸ்லாம் மார்க்கத்தை பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் எழுத்தாளர் நாகூர் ரூமி எழுதியுள்ள நூல். இஸ்லாம் என்றால் என்ன? திருக்குர்ஆனும், ஹதீதும், இஸ்லாத்தின் தோற்றம், முஸ்லிம்களின் கடமைகளும் நம்பிக்கைகளும் போன்ற தலைப்புகள்ல் இஸ்லாம் குறித்த எதார்த்த நிலையை எளிமையாக தெளிவுபடுத்துகிறார். இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா? திருக்குர்ஆன் அருளப்பட்ட வேதமா? எழுதப்பட்ட புத்தகமா? ஜிஹாத் என்பது […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள், அ.ச. ஞானசம்பந்தன், நிர்மலா மோகன், சாகித்ய அகாதெமி, சென்னை, பக். 128, விலை 30ரூ. பேராசிரியர், எழுத்தாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் என்று பல பெருமைகளைக் கொண்ட முதுபெரும் தமிழ் அறிஞர் அ.ச. ஞானசம்பந்தனைப் பற்றி, இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் எழுதியுள்ளார் நிர்மலா மோகன். அ.ச.ஞா.வின் வாழ்வும் பணியும் பற்றிய கட்டுரையில் அவர் இலக்கியச் சிற்பியாக செதுக்கப்பட்டு உருமாறி வந்த வளர்ச்சிப்பாதை தொகுக்கப்பட்டுள்ளது. வி.எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி, திரு.வி.க. தெ.பொ.மீ. […]

Read more

அதியமான் முதல் ஆங்கிலேயர் வரை

அதியமான் முதல் ஆங்கிலேயர் வரை, பா. சேதுமாதவன், உலா பதிப்பகம், திருச்சி, பக். 136, விலை 80ரூ. சங்ககால மன்னர்கள் முதல் ஆங்கிலேயர்கள் வரை பலரும் சோழநாட்டைக் கைப்பற்ற முயற்சித்தனர். காரணம் அதன் பெருவளமும் புவியியல் ரீதியாக பெற்றிருந்த இயற்கை அமைப்புமேயாகும். இம்முயற்சியில் பலர் வெற்றியும் கண்டனர். பல மொழிகள், இனங்கள், தேசங்களைச் சேர்ந்தவர்களின் அரசியல் நிரிவாகத்தின் கீழ் சோழநாடு இயங்கி வந்ததால், காலந்தோறும் பல நெருக்கடிகளையும், பன்னாட்டு, கலாச்சார சமூக பொருளாதார மாற்றங்களையும், கலை, இலக்கிய வளர்ச்சியையும் பாதிப்பையும் கண்டது. இச்சரித்திரக் கூறுகளை […]

Read more

இந்தியத் தேர்தல் வரலாறு

இந்தியத் தேர்தல் வரலாறு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த் சென்ஸ், சென்னை, பக். 607,விலை 650ரூ. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலாவது பொதுத்தேர்தல் 1952ம் ஆண்டு இந்தியா முழுவதும் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடும், ஆந்திராவும் இணைந்து சென்னை மாகாணம் என்ற பெயரில் ஒரே மாநிலமாக இருந்தது. அந்த தேர்தலில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஐக்கிய முன்னணி அமைத்து, மந்திரசபையை அமைக்கத் திட்டமிட்டன. சுதந்திரம் அடைந்தபின், முக்கிய மாநிலமான சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழப்பதை பிரதமர் நேரு விரும்பவில்லை. […]

Read more
1 85 86 87 88 89 336