ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஒரு வாழ்க்கை வரலாறு

ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஒரு வாழ்க்கை வரலாறு. அருண் திவாரி. தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.548, விலை ரூ.495. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு. அவரோடு நெருங்கிப் பழகிய நூலாசிரியர், அப்துல் கலாமின் வாழ்க்கையை வெறும் நிகழ்வுகளின் தொகுப்பாகப் பார்க்காமல், அந்த நிகழ்வுகளின் ஊடே அப்துல்கலாம் விட்டுச் சென்ற வாழ்க்கைப் பார்வையை நூல் முழுவதும் இழையோட விட்டிருக்கிறார். அப்துல்கலாமின் இளமைப் பருவம், ஒரு விமானியாக வேண்டும் என்று அவர் கண்ட கனவு நிறைவேறாமல் போனது, ஆனால் அதற்கும் […]

Read more

நல்ல தமிழில் எழுதுவோம்

நல்ல தமிழில் எழுதுவோம், என் சொக்கன், கிழக்கு பதிப்பகம், பக்.256, விலை ரூ.200. தமிழர்கள் தம் தாய்மொழியின் பெருமையை உணர்ந்து அதைப் பிழையில்லாமல் படிக்கவும் எழுதவும் பழக வேண்டும். ஏனெனில், தமிழ் மொழியில் ஓர் எழுத்தை மாற்றி எழுதினாலும் அதன் பொருள் மாறிவிடும். ஒரு மொழிக்கு ஆணிவேர் போன்றது இலக்கணம். அதை முறையாக – சரியாகக் கற்றுக் கொண்டால்தான் பிழை இல்லாமல் எழுதவும், படிக்கவும், உச்சரிக்கவும் முடியும். மொழித் தூய்மைக்கு முக்கியமானது பிழை இல்லாமல் எழுதுவதுதான். இன்றைக்கும் பலரும் தடுமாறிப் போவது வல்லின, மெல்லினச் […]

Read more

மாவீரன் அலெக்சாண்டர்

மாவீரன் அலெக்சாண்டர், எஸ்.எல்.வி. மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், பக். 312, விலை 235ரூ. ஆயிரம் தன்னம்பிக்கை நூல்களை வாசிப்பதும் ஒன்றுதான்… கிரேக்கப் பேரரசன் அலெக்சாண்டரின் வாழ்க்கையைப் படிப்பதும் ஒன்றுதான் என்ற வரிகளுடன் தொடங்குகிறது இந்தப் புத்தகம். பொதுவாகவே, வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படைப்புகளை கட்டுரை வடிவிலேயே பார்த்து பழகிய நமக்கு, இந்தப் புத்தகம் சற்று மாறுபட்டதாகத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட ஒரு கதையைப் படிப்பது போன்ற உணர்வையே தருகிறது இந்நூல். 33 யுகங்கள் எடுத்தாலும் அடைய முடியாத சாதனைகளை வெறும் 33 ஆண்டுகளில் வென்றெடுத்த […]

Read more

விடியலின் வெளிச்சம்

விடியலின் வெளிச்சம், கவிஞர் இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், பக். 72, விலை 90ரூ. ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஆண்டவனுக்கு அருகில் போகலாமென்றால் ஆற்றல் மிக்கது பணமா? பகவானா? போன்ற விடைதேடும் வினாக்கள் நிறைந்த கவிதைகளின் தொகுப்பு. ஒரு காதல் பூப்பதையும், அவஸ்தைப்படுவதையும் உணர வைக்க கவிஞரால் முடிகிறது. நன்றி: குமுதம், 31/8/2016.

Read more

திருவாசக ஆய்வுரைக் களஞ்சியம்

திருவாசக ஆய்வுரைக் களஞ்சியம் -(51 பகுதிகள்- 51 ஆய்வுரைகள்) , பதிப்பாசிரியர்கள் தயானந்த சந்திரசேகர சுவாமிகள், குன்றக்குடி பெரியபெருமாள், தா.மணி, திலகவதியார் திருவருள் ஆதீனம், பக்.256. விலை ரூ.100. 2002ஆம் ஆண்டில் கோட்டை- 1; முதல் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நூல், தற்போது இரண்டாவது(2016) பதிப்பு கண்டிருக்கிறது. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் உள்ள 51 பதிகங்களுக்கும், 51 சமயத் தமிழறிஞர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. தவத்திரு ஊரன் அடிகள், சாந்தலிங்க இராமசாமி அடிகளார், வை.இரத்தினசபாபதி, தமிழண்ணல், கலைமாமணி விக்கிரமன், ச.வே.சுப்பிரமணியன், அய்க்கண், கு.வெ. பாலசுப்பிரமணியன், […]

Read more

தமிழர் சமூக வாழ்வு

தமிழர் சமூக வாழ்வு, இர. ஆலாலசுந்தரம், தமிழில் ம. இளங்கோவன், பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 260ரூ. தமிழர்களின் மூத்த குடிகள் – மூதாதையர் பற்றிய அடையாளங்களை இந்த நூல் வாயிலாக அறிந்து கொள்ளும் வகையில் பல அறிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 24/8/2016.   —- 1000 செய்திகள், முக்தா சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், விலை 100ரூ. பட அதிபர் “முக்தா” சீனிவாசன், 1000 செய்திகளை (தகவல்கள்) தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டு, ஏற்கனவே முதல் பாகத்தை வெளியிட்டுள்ளார். 2-வது, 3-வது , […]

Read more

நீதி நூல்கள்

நீதி நூல்கள், சி. நிவேதா, ஆர்.ஆர். நிலையம் வெளியீடு, விலை 40ரூ. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, உலக நீதி, நன்னெறி ஆகிய நீதிநூல்களின் மூலமும், உரையும் கொண்ட புத்தகம். சிறிய நூல் என்றாலும், மிகப் பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.   —- உலகின் முதல் சாதனைகள், சா. அனந்தகுமார், பூங்கொடி பதிப்பகம், விலை 50ரூ. பொதுவாக மாணவ-மாணவிகளும் பொதுப்பரீட்சை எழுதுபவர்களும் அறிந்திருக்க வேண்டிய விஷயங்களை கேள்வி – பதில் ரூபத்தில் கொடுத்துள்ளார் சா. அனந்தகுமார். மொத்தம் 1012 கேள்வி […]

Read more

சித்தர் பாடல்கள் பட்டினத்தாரின் பைந்தமிழ்ப் பாடல்கள்,

சித்தர் பாடல்கள் பட்டினத்தாரின் பைந்தமிழ்ப் பாடல்கள், புலவர் அடியன்மணிவாசகன், சங்கர் பதிப்பகம், விலை 240ரூ. பட்டினத்தாரின் பைந்தமிழ்ப் பாடல்களையும், அவற்றுக்கான உரை விளக்கமும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்ட நூல். ஒவ்வொரு பாடல்களிலும் பொதிந்துள்ள இன்பத்தை நாம் பாடல்களை படிப்பதன் மூலம் அனுபவிக்க முடியும். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.   —- தேடல், எஸ். கண்ணன், திருவரசு புத்தக நிலையம், விலை 80ரூ. அனைவருக்கும் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்ட 23 சிறுகதைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.

Read more

மாந்தரீகச் சித்தர்கள்

மாந்தரீகச் சித்தர்கள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 75ரூ. பதினெண் சித்தர்கள் பற்றி இந்த ஒரே புத்தகத்தில் முழு விவரங்களையும் கொடுத்துள்ளார் ஜெகாதா. மச்சமுனி, சட்டமுனி, அகப்பைமுனி ஆகியோருக்கு தலா 10 மனைவிகள். குதம்பை, தன்வந்தரி ஆகியோருக்கு தலா 16 மனைவிகள். போகருக்கு மனைவியரும், குழந்தைகளும் ‘கணக்கில் அடங்காதவர்கள்’ என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். சித்தர்களின் தாய், தந்தை, குரு, சாதி, தலைமுறை, பிறந்த நட்சத்திரம் முதலிய விவரங்களம் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 24/8/2016.

Read more

அதிர்வுகள்

அதிர்வுகள், இலங்கை ஜெயராஜ், விகடன் பிரசுரம், விலை 160ரூ. இலங்கையில் புகழ் பெற்ற தமிழறிஞர் ஜெயராஜ். தலைசிறந்த பேச்சாளர், “கம்வாருதி” என்று புகழ் பெற்றவர். அவர் எழுதிய சிறந்த கட்டுரைகள் கொண்ட இந்த புத்தகத்தை, சிறந்த பெக்கிஷம் என்று கூறினால் அது மிகையல்ல. சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளும், மெய்சிலிர்க்கச் செய்யும் கட்டுரைகளும், நெஞ்சை ஊடுருவும் கட்டுரைகளும் பொன்னும் வைரமுமாக ஜொலிக்கின்றன. கம்பவாருதி ஜெயராஜின் பேச்சைக் கேட்டு மயங்கியவர்கள், இந்தக் கட்டுரையைப் படித்தால் நெகிழ்ந்துவிடுவார்கள் என்பது நிச்சயம். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.

Read more
1 466 467 468 469 470 505