முதலாம் இராசராச சோழன்

முதலாம் இராசராச சோழன், கே.டி. திருநாவுக்கரசு, விகடன் பிரசுரம், சென்னை, பக். 326, விலை 135ரூ. முதலாம் இராசராசனின் வரலாற்றை சொல்லும் நூலாக இது இருந்தாலும் நூலின் இரண்டாவது பகுதியில்தான் இராசனின் வரலாறு தொடங்குகிறது. முதலாம் இராசராசசோழனின் முன்னோராகிய மன்னர்கள் திருமாவளவன், முதலாம் பராந்தகன், விசயாலயன், ஆதித்தன், பராந்தகன் பரகேசரி, கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தர சோழன் போன்றோரின் ஆட்சிக் காலச் சாதனைகள் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இராசராச சோழன் வரலாறு, காந்தளூர் போர், ஈழப் படையெடுப்பு, கலிங்க வெற்றி போன்ற பகுதிகளோடு தொடங்கி, இராசராசனின் ஆட்சி […]

Read more

திருவரங்கன் உலா

திருவரங்கன் உலா, ஸ்ரீ வேணுகோபாலன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 400ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-377-8.html ஏறத்தாழ 650 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்து பெரும் பகுதியை கைப்பற்றிய துருக்கியர்களின் ஆட்சியின்போது பெரும்பாலான கோவில்களும் அங்கு இருந்த சிலைகளும் நாசப்படுத்தப்பட்டன. அப்படிப்பட்ட அழிவில் இருந்து தப்பிக்க ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்த திருவரங்கன் விக்ரகம், பலரது உயிர் தியாகங்களுக்கு ஊடே எவ்வாறு பாதுகாப்பாக தென் இந்தியா முழுவதும் ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்டது என்ற வரலாறு பின்னணியுடன் எழுதப்பட்ட […]

Read more

நாகூர் நாயகம் அற்புத வரலாறு

நாகூர் நாயகம் அற்புத வரலாறு, நாகூர் ரூமி, வள்ளல் அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி, விலை 140ரூ. இந்த விநாடி, அடுத்த விநாடி போன்ற நூல்களை எழுதிய நாகூர் ரூமீயின் இன்னொரு படைப்பு நாகூர் நாயகம் அற்புத வரலாறு. நாகூர்பதியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் தவராஜ செம்மேரு என்று குணங்குடியார் போற்றி மகிழ்ந்த நாகூர் ஆண்டவர், மீரான் சாகிபு வலியுல்லாஹ், ஷாகுர்ஹமீது பாதுஷா, எஜமான் ஆண்டவர் என்றெல்லாம் ஜாதி, மத பேதமின்றி அனைத்து மக்களாலும் புகழ்ந்து ஏற்றப்படுகின்ற இறைநேசகர் அப்துல் காதிர் அவ்லியாவின் வரலாற்றுத் தொகுப்பு […]

Read more

மறக்கவே நினைக்கிறேன்

மறக்கவே நினைக்கிறேன், மாரி செல்வராஜ், விகடன் பிரசுரம், பக். 286, விலை 150ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-229-5.html ஆனந்தவிகடன் வார இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதை தொகுப்பு மூலம், எழுத்துலகில் அறிமுகமானவர், மாரி செல்வராஜ். தான் செய்தவற்றை, நியாயப்படுத்தியோ அல்லது ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கும் தோரணையோ எதுவும் இல்லை. இதுதான் நடந்தது. இதை தான் செய்தேன் என்ற நிர்வாண அழகில், தனி கவனம் ஈர்த்துள்ளார். மரணத்தின் நாட்குறிப்பு கட்டுரையில், டைரிகளோடு, தான் சந்தித்த […]

Read more

சந்திரசேகரம்

சந்திரசேகரம், திருமகள் நிலையம், சென்னை, விலை 175ரூ. காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகளைப் பற்றி எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் எழுதியுள்ள நூல் சந்திரசேகரம். மிகச் சிறந்த ஞானிக்கு இலக்கணமாகவும், சன்யாசிக்கு இலக்கணமாகவும், மனிதருக்கு இலக்கணமாகவும் வாழ்ந்தவர் காஞ்சி பெரியவர். அவருடைய ஆருளுரைகளை அடிப்படையாகக் கொண்டு ஆன்மிக விளக்கங்களையும், பெரியவரின் பெருமைகளையும் அவர் நிகழ்த்திய அற்புதங்களையும் அழகிய முறையில் எடுத்துக்கூறுகிறார். காஞ்சிப் பெரியவரை பார்க்காத-அவரைத் தரிசிக்க வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு பெரியவரின் உன்னத பண்புகளை எடுத்துக்கூறி ஒரு உண்மையான துறவியை-மகானை அடையாளம் காட்டுகிறார். இந்த நூலைப் […]

Read more

பாரதிதாசன் கட்டுரைகள்

பாரதிதாசன் கட்டுரைகள், தொகுப்பாசிரியர்-பேரா. மு. சாயபு மரைக்காயர், வெளியீடு-கங்கை புத்தக நிலையம், சென்னை, விலை 90ரூ. மொழி, நாடு, சமயம், வாழ்வியல், பல்சுவை, சமுதாயம் என்ற 6 பெருந்தலைப்புகளில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய 53 கட்டுரைகளைக் கொண்ட நூல். பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ் உணர்வையும், தமிழ் இனப்பற்றையும், எடுத்துக்காட்டும் வகையிலும், சமயப் பூசல்களையும், சாதி கொடுமைகளையும், கடவுள் மறுப்பையும், பெண்ணடிமைத்தனத்தையும், தொழிலாளர் துயரத்தையும் வெளிப்படுத்தும் வகையிலும் அவரது கட்டுரைகள் சிந்தனைக்கு விருந்தாக அமைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 18/6/14.   —–   கண்ணன் கதைகள், […]

Read more

அம்மா சொன்ன குட்டிக் கதைகள்

அம்மா சொன்ன குட்டிக் கதைகள், தொகுப்பு-சே. இளையகுமார், முத்துக்குமரன் பதிப்பகம், திண்டுக்கல், சென்னை 125ரூ. தமிழக மக்கள் வாழ்க்கையில் கலை, இலக்கியம், இயல், இசை, நாடகம் ஆகியவை இரண்டறக் கலந்துள்ளது. இதனால் கதை மூலமாக சொன்ன கருத்துக்கள் மிக எளிதாக மக்களை சென்றடைவதால், தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா கதை மூலமாக பல நல்ல கருத்துக்கள், சிந்தனைகள் அடங்கிய குட்டிகதைகளை மேடைகளில் கூறிவருகிறார். முதல் அமைச்சரின் 66வது பிறந்த நாளையொட்டி 66 கதைகள் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதைக்கும் ஏற்றார் போன்று ஓவியங்களையும் நூலாசிரியர் இணைத்துள்ளார். […]

Read more

காஞ்சி மகானின் கருணை அலைகள்

காஞ்சி மகானின் கருணை அலைகள், டாக்டர் ஷ்யாமா சுவாமிநாதன், செங்கைப்பதிப்பகம், செங்கல்பட்டு, விலை 300ரூ. நடமாடும் தெய்வமாக போற்றப்பட்ட காஞ்சி முனிவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகளின் விரிவான வாழ்க்கை வரலாறு, அவர் ஆண்டுவாரியாக மேற்கொண்ட யாத்திரைகள் பற்றிய விவரங்கள், நாட்டின் பெரும் தலைவர்கள் அவரை சந்தித்தபோது நடைபெற்ற அதிசய-ருசிகர தகவல்கள் போன்றவை மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியுடன் அவர் நடத்திய உரையாடல்கள் சிந்திக்கவைக்கின்றன. இவற்றுடன் காஞ்சி மடாதிபதியை சந்தித்த பலரின் அற்புத அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. காஞ்சி மகானைப் பற்றி தெளிவாக அறிந்து […]

Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு, தந்தி பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-233-0.html தினத்தந்தியில் வரலாற்றுச் சுவடுகள் நெடுந்தொடர் வெளியானபோது ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு 100 நாட்களுக்கு மேல் தொடர்ந்தது. அது இப்போது தந்தி பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 400 பக்கங்கள். முழுவதம் கண்ணைக் கவரும் வண்ணத்தில். ரஜினி பெங்களூரில் பஸ் கண்டக்டராக வேலை பார்த்தது, பின்னர் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து, அபூர்வராகங்கள் படத்தின் மூலம் தமிழ்ப்பட உலகில் அறிமுகமானது. படிப்படியாக சூப்பர் […]

Read more

கி.பி. 1800ல் கொங்குநாடு

கி.பி. 1800ல் கொங்குநாடு, புலவர் செ. இராசு அடைப்பாடி அமுதன், அனுராதா பதிப்பகம், பக். 344, விலை 190ரூ. திப்பு சுல்தான் ஆங்கிலேயருடன் போரிட்டுக் களப்பலியான பிறகு, கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிடைத்த மைசூர் மற்றும் கொங்குநாட்டுப் பகுதிகள் பற்றி, ஒரு களஆய்வு செய்ய எண்ணினார் அன்றைய ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் மார்க்விஸ் வெல்லெஸ்லி பிரபு. இப்பொறுப்பு டாக்டர் பிரான்சிஸ் புக்கானன் என்பவரிடம் அளிக்கப்பட்டது. டாக்டர் புக்கானன் அதை ஏற்று, வழிகாட்டி, காவலர்கள், மொழி பெயர்ப்பாளர், படம் வரைபவர் ஆகிய குழுவினருடன் மதராசில் இருந்து புறப்பட்டுச் […]

Read more
1 87 88 89 90 91 128