பிருகு முனிவரின் பிருகு சம்ஹிதா

பிருகு முனிவரின் பிருகு சம்ஹிதா, எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன், குமரன் பதிப்பகம், சென்னை, பக். 888, விலை 500ரூ. சப்த ரிஷிகளில் ஒருவரான பிருகு முனிவர், பிரம்மாவின் புத்திரர். ஜோதிட ஞானத்தின் கரையற்ற கடல் போன்றவர் என போற்றப்படுபவர். அவர் வடமொழியில் இயற்றிய இந்த நூல், மிக எளிமையாகவும், அருமையாகவும், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. ஒரு லக்னத்திற்கு, 108 வித பலன்கள். இப்படி 12 லக்னங்களிலும், ஒன்பது கிரகங்கள் இருப்பதால் விளையும் பயன்கள் என, 1296வித பலன்களை, பிருகு முனிவர் இந்த நூலில் […]

Read more

பறவைகளும் சிறகுகளும்

பறவைகளும் சிறகுகளும், பாஸ்கர் சக்தி, கயன் கவின் புக்ஸ், சென்னை, பக். 152, விலை 110ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-865-9.html பெண்கள் பறவைகளாக… தேடல் சிறகுகளாக… நீ உன் சொந்த விஷயத்தை எழுதலாம். ஆனால் உன் எழுத்து அதை ஒரு பொது அனுபவமாக மாற்ற வேண்டும்.  இல்லாவிடில் அது வெறும் சுயபுராணமாகிவிடும் என்ற எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப பாஸ்கர்சக்தியின் அனுபவம் பொது அனுபவமாக மாறும் மந்திரம்தான் இக்கட்டுரைகளின் சிறப்பும். இயல்பான வாழ்க்கையைப் பதிவு செய்யும் கட்டுரைகள் […]

Read more

சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்

சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள், தொகுப்பு ச. தில்லைநாயகம், சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 304, விலை 155ரூ. அருமையான 30 கட்டுரைகள். அதிலும் நான்கு பிரிவாக ஆளுமையும், ஆக்கங்களும், மதிப்பீடுகளும் எதிர்பார்ப்புகளும் படைப்பாளிகளும் படைப்புகளும், சமூக அரசியல் சிந்தனைகளும்) பிரித்து கொடுத்திருக்கிறார்கள். சிறந்த எழுத்தாளர்களின் அனைத்து எழுத்துகளுமே சிறப்பாகத்தான் இருக்கும். அதிலும் சிறப்பானவற்றை காலத்திற்கு ஏற்றாற்போல தேர்வு செய்துள்ள தில்லைநாயகத்தைப் பாராட்ட வேண்டும். அகிலனின் சித்திரப் பாவைக்கு ஞானபீடப் பரிசு கிடைத்தது தொடர்பான கட்டுரை, தமிழகத்தில் யார் விருது பெற்றாலும், ஒருமுறை எடுத்துப் […]

Read more

சிலம்புச்சாலை

சிலம்புச்சாலை, சுப்ர.பாலன், வானதி பதிப்பகம், சென்னை, பக். 156, விலை 100ரூ. கல்கி வார இதழில் தொடராக வெளிவந்ததின் நூல் வடிவம். தமிழ் இலக்கியத்தின் புதுமைக் காவியமான சிலப்பதிகாரத்தை புதிய ஆய்வுச் சாலையில் எடுத்துச்சென்றிருக்கிறார் சுப்ர. பாலன். புகார் நகரை பூம்புகாராகக் காணும் நூலாசிரியர். கோவலன், கண்ணகி கால அந்தப் புராதன நகரம், இப்போது களையிழந்து போனதை கனத்த மனதுடன் விளக்குகிறார். கோவலன், கண்ணகி தடம் பதித்த மற்ற இடங்களான ஸ்ரீரங்கம், உறையூர், கொடும்பாளூர் என ஒவ்வோர் ஊரையும் விவரிக்கும் ஆசிரியர், அந்தந்த இடங்களின் […]

Read more

நபிகள் நாயகம்

நபிகள் நாயகம், குலாம் ரசூல், காஜியார் புக் டிப்போ, தஞ்சாவூர், பக். 420, விலை 120ரூ. அண்ணல் முஹம்மத் நபி சரிதையை புதிய பாணியில் கூறும் நூல். நபி அவர்களைப் பற்றி தமிழில் பல நூல்கள் வந்திருந்தாலும், அவரைப் பற்றிய சரித்திர சம்பவங்கள், நிகழ்வுகள், அவற்றிற்கு ஆதாரமான நூல்களைக் குறிப்பிட்டு இச்சரிதத்தை உருவாக்கி இருப்பதால் கவனத்திற்குரிய நூலாகிறது. முஸ்லிம் சமூகத்தார்மட்டுமல்லாது, பிற சமூக அன்பர்களும் படித்துப் பயனடையும் வகையில் படைத்திருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 30/4/2014.   —- அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள், […]

Read more

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள், ஜெயந்தி சங்கர், காவ்யா, சென்னை, விலை 880ரூ. சிங்கப்பூர் சூழ்நிலையில் உருவான சிறுகதைகள் உலகப் பெண்களின் உள்ளார்ந்த வலிகளையும், நகர எந்திரங்களுக்கு இடையே நசுங்கிவிடாமலும் உலகமயமாதலால் உடைந்து நொறுங்கிப் போகாமலும் மனிதனை நூலாசிரியர் ஜெயந்தி சங்கரின் கதைகள் காப்பாற்றுவதுடன், கை கொடுக்கும் வகையில் 99 சிறுகதைகளும், 3 குறுநாவல்களும் தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதைகளிலும் ஈரம் அதிக அளவில் இருப்பதால் அனைவருடைய மனதையும் எளிதாக தொட்டுவிடுகிறது. நூலாசிரியர் மதுரையில் பிறந்து, சிங்கப்பூரில் வசித்தாலும், தனது நாட்டையும், மக்களையும் தனது படைப்புகள் மூலம் […]

Read more

நூறு வயது வாழவேண்டுமா?

நூறு வயது வாழவேண்டுமா?, திரிசக்தி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 70ரூ. புரியாதவர்களுக்கு புதிராகத் தெரியும் சித்தர்கள், புரிந்தவர்களுக்கோ புதையலாகத் தெரிபவர்கள். மனித சமூகத்தின் மீது அவர்கள் காட்டிய அக்கறை கொஞ்ச நஞ்சமல்ல. எது வாழ்க்கை என்பதையும், அதை எப்படி முறைப்படி வாழவேண்டும் என்பதையும் வகுத்துக் காட்டிய சித்தர்களின் வாழ்வியல் ரகசியங்களை தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர் சைதை முரளி. நன்றி: தினத்தந்தி, 30/4/2014.   —- எனை வெறுப்பவன் எனக்களித்த பரிசு, தமிழ்பிரியன்(எ) பெ.வை.மணிகண்டன், அறம் பதிப்பகம், புதுச்சேரி, விலை 65ரூ. காதலிக்கு காதல் வருவதற்காக சற்று […]

Read more

சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

சேக்கிழார் பிள்ளைத்தமிழ், மூலமும் விளக்கவுரையும், விளக்கஉரை-வித்துவான் பாலூர் கண்ணப்பமுதலியார், பூம்புகார் பதிப்பகம், சென்னை, பக். 926, விலை 580ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-789-8.html சேக்கிழார் பெருமான் மீது கொண்ட தீராத பக்தியின் காரணமாக, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாடிய நூல்தான் சேக்கிழார் பிள்ளைத்தமிழ். இது குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுகிறது. இவ்வரிய நூலுக்கு அரும்பத உரையும், விளக்க உரையும் எழுதியுள்ளார் பாலூர் கண்ணப்ப முதலியார். இவ்விளக்கவுரை சாதாரண உரையாக அல்லாமல், பெருவிளக்க உரையாகவும் […]

Read more

இந்தியச் சூழலும் முஸ்லிம்களும்

இந்தியச் சூழலும் முஸ்லிம்களும், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை, விலை 60ரூ. பல்வேறு மதங்கள், இனங்கள், கலாச்சாரங்கள், மொழிகள், பண்பாடுகளைச் சேர்ந்த மக்களைக் கொண்ட சமூகமாக நமது இந்தியத் திருநாடு திகழ்கிறது. இத்தகைய பன்மைச் சமூகச் சூழலில் ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும்? முஸ்லிம் அல்லாத சமூகத்தாருக்கு மத்தியில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு இஸ்லாம் தருகின்ற அறிவுரைகள் யாவை? என்பன போன்ற கேள்விகளுக்கு மவுலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அழகிய முறையில் விளக்கம் அறித்துள்ளார். முஸ்லிம் அல்லாத நாட்டில் வாழ்கின்ற ஒரு முஸ்லிம், அந்த […]

Read more

இந்தியப் புதையல் ஒரு தேடல்

இந்தியப் புதையல் ஒரு தேடல், பால் ப்ரன்டன், தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், பக். 520, விலை 300ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-221-2.html ஆன்மிகத்தில் உச்ச நிலையை அடைவதற்காக பால் ப்ரன்டன் என்ற இங்கிலாந்து பத்திரிகையாளர் இந்தியாவில் மேற்கொண்ட பகீரத பிரயத்தன பயணங்களை விளக்கும் நூல். 1930களில் அவ்வளவு போக்குவரத்து வசதிகள் இல்லாத காலகட்டத்தில் இதற்காக பல ஆண்டுகள் இந்தியா முழுவதும் நகரங்களிலும், சிற்றூர்களிலும், காடுகளிலும், மேடுகளிலும், மலைகளிலும், பாலைவனங்களிலும், நதிக்கரைகளிலும், குகைகளிலும் அலைந்து திரிந்துள்ளார். இந்தப் பயணத்தின்போது […]

Read more
1 86 87 88 89 90 128