திருமந்திரத்தின் சிறப்பம்சங்கள்

திருமந்திரத்தின் சிறப்பம்சங்கள், பேரா.பு.சி. இரத்தினம், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 65ரூ. திருமூலர் அருளிய திருமந்திரத்தின் பாடல்களில் 42 பாடல்களை தேர்ந்து எடுத்து விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 8/1/2014.   —-   சிலப்பதிகாரம் மூலம், மணிமேகலை மூலம், கலாஷேத்ரா பப்ளிகேஷன்ஸ், விலை ரூ120, ரூ120. ஒரு பக்கம் கணினி வரவால், இஷ்டப்படி பலரும் நூல் எழுதி சந்தையில் வெளியிடும் நேரத்தில், ஐம்பெரும் காப்பியங்களில் இரண்டை கோவிலூர் ஆதினகர்த்தர் வெளியிட்டிருக்கிறார். இவை மூல நூல்களின் செம்பதிப்பாகும். […]

Read more

நாலடியார்

நாலடியார், புலியூர் கேசிகன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 208,விலை 120ரூ. திருக்குறளோடு ஒத்த சிறப்புடைய நூல் நாலடியார் என்பதை, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்ற பழந்தொடர் உணர்த்துகிறது. பதினென்கீழ்கணக்கு என்னும் பதினெட்டு நூல்களுள் ஒன்றான இந்த நூல் நல்லொழுக்கம், பொறுமை, முயற்சி நட்பு போன்ற வாழ்வியல் கருத்துக்களைக் கூறும் நீதி நூல். அறன் வலியுறுத்தல், ஈகை, கல்வி, பெருமை, மானம், சுற்றந்தழால், நட்பு ஆராய்தல் முதலிய பல அதிகாரங்கள் திருக்குறள் அதிகாரங்களின் தலைப்புகளாகவே அமைந்துள்ளன. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பிரிவுகள் […]

Read more

ஜான் கென்னடி கொலையானது எப்படி?

ஜான் கென்னடி கொலையானது எப்படி?, சிவதர்ஷினி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 70ரூ. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி, 1963ம் ஆண்டு டல்லாஸ் நகரில் காரில் ஊர்வலமாக சென்றபோது எவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டார்? அவரை சுட்டதாக கைது ஆன ஆஸ்வால்டு என்பவனை ஜேக் ரூபி என்பவன் சுட்டுக்கொன்ற மர்மம் என்ன? என்பது பற்றியும், மற்றும்  இது தொடர்பான அனைத்து தகவல்களும் துப்பறியும் நாவல்போல சுவைபட தொகுத்துத் தரப்பட்டுள்ளன. கென்னடி கொல்லப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவரை உண்மையில் சுட்டுக்கொன்றது […]

Read more

திராவிடத் தெய்வம் கண்ணகி

திராவிடத் தெய்வம் கண்ணகி, தொகுப்பாசிரியர் சு. சண்முகசுந்தரம், காவ்யா, சென்னை 24, பக். 926, விலை 700ரூ. ஒற்றைச் சிலம்பு கொண்டு மன்னனிடம் நீதி கேட்டு வாதாடி, மதுரையைப் பற்றி எரியச் செய்தாள் கண்ணகி. அவளது சிலம்பாலும், சினத்தாலும் உருவான சிலப்பதிகாரம் திராவிட இதிகாசமாகப் போற்றப்படுகிறது. கண்ணகி திராவிடத் தெய்வமாக வணங்கப்படுகிறாள். வீரபத்தினி, நடுகல், தாய்த் தெய்வம் போன்ற முன்னோர் வழிபாடுகள் திராவிட வழிபாடுகளாக விளங்கி வருகின்றன. கண்ணகி வழிபாடு திராவிட மக்களின் தாய்த் தெய்வ வழிபாட்டில் ஒன்றாகவும், ஆரம்பகாலம் தொட்டே வளர்ந்து வந்த […]

Read more

தமிழ் இலக்கியங்களில் மனமும் மருந்தும்

தமிழ் இலக்கியங்களில் மனமும் மருந்தும், ப. குப்புசாமி, மணி வாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 125ரூ. மனம் பற்றி தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியங்கள் கூறிய கருத்துக்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. இக்காலத்தில் அதிகமாக பேசப்படும் மன உளைச்சல் பற்றி தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு பேசப்பட்டுள்ளது என்பது விளக்கமாகவும், விரிவாகவும் கூறப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள மருத்துவ குறிப்புகளையும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 8/1/2014.   —-   சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள், சு. […]

Read more

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு, சி. பாலசுப்பிரமணியன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 280, விலை 99ரூ. கால வகையில் பகுக்கப்பட்ட, தமிழ் இலக்கிய வரலாற்று நூல் இது. சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், இக்காலம் என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளது. அந்தந்தக் காலங்களில், தோன்றிய இலக்கியங்களின் வரலாறு எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் வினாத்தாள் அமைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு எழுதுவோருக்கு உதவும் வகையில், இதுவரை சாகித்ய அகாடமி விருது பெற்ற […]

Read more

கர்ணன்

கர்ணன், எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, சென்னை 108, பக். 376, விலை 320ரூ. பாரதப் போரில் அர்ச்சுனன் தர்ம யுத்தம் செய்தானா? அல்லது யுத்த தர்மத்தை மீறி கர்ணனைக் கொலை செய்தானா? குந்திதேவி கர்ணனைத் தன் மகன் என்று அறிமுகப்படுத்தாதன் நோக்கம் என்ன? தர்மன் உண்மையில் சமாதானத்திற்கான வழியை நாடினானா அல்லது நாடு முழுவதையும் அபகரிக்கும் எண்ணத்தில் இருந்தானா? கர்ணன் துரியோதனனுக்கு நண்பனாக செயல்பட்டானா? துரோகம் செய்தானா? துரியோதனன் நட்புக்காக கர்ணனை ஆதரித்தானா? அல்லது தன் பாதுகாப்புக்காகவா? போன்ற […]

Read more

காற்றின் குரல்

காற்றின் குரல், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை 92, பக். 264, விலை 250ரூ. ராமாயண காவியத்தின் நாயகனான ஸ்ரீராமன், ஒரு மாதக் குழந்தையாகத் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்க, அன்னை கௌசல்யை தன் குழந்தையை ரசித்து மகிழ்வதில் தொடங்கி ஸ்ரீ ராமர் சரயூ நதியில் கலந்து விண்ணுலகம் செல்வது வரை உள்ள ராமாயணக் கதையிலுள்ள முக்கிய நிகழ்வுகள் 44 அத்தியாயங்களாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் வால்மீகி ராமாயணத்திலிருந்தும், ஒரு சில சம்பவங்கள் வேறு சில ராமாயணங்களிலிருந்தும் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள் […]

Read more

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம்

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம், தி. குலசேகர், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600083, விலை ரூ. 150 ஹாலிவுட் திரைப்பட வரலாற்றில் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்த மாபெரும் கலைஞன் சார்லி சாப்ளின். சினிமாவில், தான் பேசாமலேயே தன்னை எல்லோரும் வியந்து பேசும்படி மௌன மொழியில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திக்காட்டியர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்த இவரது ஆரம்பகால வாழ்க்கை, வேதனைகளும், சோதனைகளும் நிரம்பியவை. வறுமைக்கும், மாற்றந்தாயின் […]

Read more

கலிங்கத்துப் பரணி

கலிங்கத்துப் பரணி, ஆ.வீ. கன்னைய நாயுடு உரை, முல்லை நிலையம், சென்னை 17, பக். 392, விலை 175ரூ. ஆயிரம் யானைகளை போரில் வென்ற ஆண்மை வாய்ந்த தலைமகனைச் சிறப்பித்துப் பாடுவத பரணி. தொண்ணூற்று வகை பிரபந்தங்களுள் ஒன்று. தமிழ்த் தரணி போற்றும் பரணிகள் பல உள்ளன. எனினும், பரணி என்றதுமே நினைவுக்கு வருவதும், முதன்மையானதும் ஜெயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணியே. இதற்கு பலர் உரை எழுதியுள்ளனர். ஆனால், படிப்போர் மிக எளிதாய்ப் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லுக்குச் சொல் என்ற அளவில் பதவுரையும், நீரோடை […]

Read more
1 39 40 41 42 43 56