உள்முகமாய் ஒரு பயணம்

உள்முகமாய் ஒரு பயணம், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. தியானக் கூடங்களில் தனது சீடர்கள் மற்றம் நண்பர்களுக்கு, ஓஷோ வழங்கிய உரைகளின் தொகுப்பு நூல். காலையும் மாலையும் மேற்கொள்ளும் தியான வழிமுறைகளை ஒஷோ வரையறுத்து தந்துள்ளார். மனக்கசடுகள் நீங்கும்போதுதான் மனத்தூய்மை தென்படும் என்பது அவரது போதனை. தூசி படிந்த கண்ணாடியாய் மனம் இருக்கக்கூடாது. அது, துடைக்கப்பட்ட பளபளப்பான கண்ணாடியாய் ஆக வேண்டும். அப்போதுதான் அதில் இறைமை பளபளவென்று பிரதிபலிக்கும் என்கிறார் ஓஷோ. பல குட்டிக் கதைகளை புத்தகமெங்கிலும் தூவி, ஆழ்நிலை வாழ்க்கை வாழத் […]

Read more

உலகம் சுற்றும் தமிழன்

உலகம் சுற்றும் தமிழன், ஏ.கே. செட்டியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ. நவீன தமிழிலக்கியத்தில், பயண நூல்களை எழுதிய முன்னோடி எழுத்தாளரான ஏ.கே. செட்டியார், 1937 மற்றும் 1939ல் தாம் மேற்கொண்ட கப்பல் பயணங்கள் மூலம் கண்டுகளித்த ஜப்பான், அமெரிக்கா, அயர்லாந்து, பாரிஸ், டென்மார்க், ஜெர்மன், இத்தாலி, தென்னாப்ரிக்க நாடுகளைப் பற்றிச் சுருக்கமாக எழுதிய பயணக் குறிப்புகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. காந்தியடிகளுக்கு உலக நாடுகளில் உள்ள பெருமைகளை விளக்குகிறது முதல் கட்டுரை. பீனிக்ஸ் பூங்கா அயர்லாந்தில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலேயே மிகவும் […]

Read more

திருக்குறளில் காமம்

திருக்குறளில் காமம், இ.கி.இராமசாமி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 188, விலை 125ரூ. ஒரு பொருள் பற்றிய இருபத்து மூன்று அறிஞர்களின் கட்டுரை தொகுப்பு இந்த நூல். திருக்குறளில், காமத்துப்பாலின் சிறப்பு, காமமும், இன்பமும் ஒன்றா, காமம் இழிபொருளாக எப்போது மாறியது, காமம் தரும் கனிந்த வாழ்வு, காமத்துப் பாலும் கானல்வரியும், அகத்திணை மரபும், காமத்துப்பாலும் எனப் பல்வேறு தலைப்புகளில், திருக்குறள் கருத்துக்கள் ஆராயப்பட்டு உள்ளன. காமம் என்பதற்கு சரியான பொருள், நூலின் முதலிலேயே கருத்துரைகள் என்ற தலைப்பில் தரப்பட்டிருக்கிறது. மனமொத்து இருபாலும் […]

Read more

நினைவு அலைகள்

நினைவு அலைகள், கலாநிகேதன் பாலு, வசந்தா பிரசுரம், சென்னை, பக். 206, விலை 150ரூ. கலைத் துறையிலும், எழுத்துத் துறையிலும் ஆர்வம் உள்ளவர் இந்நூலாசிரியர். இவர் 60களில் கலாநிகேதன் சபாவில் செயலாளர் பொறுப்பில் இருந்தபோது, அன்றைய பிரபலங்கள் பலருடனும் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது. அந்த அனுபவங்களை அமுதசுரபி உள்பட பல்வேறு பத்திரிகைகளிலும் எழுத, அது பிரபலமானது. இந்நூலில் அவையும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலின் முதல் கட்டுரையில் ஷெனாய் வாத்ய மேதை பிஸ்மில்லாகான் சென்னை வந்தபோது, அவரையும் அவரது இசைக்குழுவினரையும் திருமதி சுப்புலெட்சுமி கல்கி சதாசிவம் தங்கள் […]

Read more

நேனோ ஓர் அறிமுகம்

நேனோ ஓர் அறிமுகம், அருண் நரசிம்மன், தமிழினி, பக். 96, விலை 75ரூ. இயற்கை நிகழ்வுகளில் புதைந்திருக்கும் நேனோ பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும், குறிஞ்சி மலரைக் கண்டால் எவ்வளவு மகிழ்வு ஏற்படுமோ, அத்தனை மகிழ்வும் திருப்தியும், இந்த நூலின் 12 அத்தியாயங்களில் இருந்தும் கிடைக்கின்றன. கி.மு. 7ம் நூற்றாண்டில் துவங்கி, 2013ம் ஆண்டு வரை, நேனோ தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட பரிணாம மாற்றங்களும், மைல் கற்களும் இந்த நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்தெந்த பொருட்கள், நேனோ சார்ந்தவை. எவை நேனோ அல்லாதது என்ற […]

Read more

கௌடலீயம் பொருணூல்

கௌடலீயம் பொருணூல் (அர்த்த சாஸ்திரம் முதல் பகுதி), மொழிபெயர்ப்பாளர் மு. கதிரேசச் செட்டியார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, பக். 664, விலை 400ரூ. ஆட்சியியல் என்ற மையக் கருத்தின் அடிப்படையில், ராஜதந்திரி என்று அழைக்கப்படும் கௌடில்யரால் உருவாக்கப்பட்ட இந்நூல், அன்றைய இந்தியாவிலிருந்து பலதுறைசார் அறிவியலையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அன்றைய இந்தியாவின் சிறந்த பகுதிகளை மட்டுமன்றி இருண்ட பக்கங்களையும் அறிய உதவுகிறது. அர்த்த சாஸ்திரத்தின் முதல் பகுதியான இந்நூலில் அரசியல், தொழிற்தலைவர் செயன்முறை, ஒற்றாடல், உழவிலா நிலத்தைப் பயனுற அமைத்தல், கடன் கோடல், தண்டக் […]

Read more

சரித்திரப் பிழைகள்

சரித்திரப் பிழைகள், எஸ். அர்ஷியா, புலம், பக். 168, விலை 120ரூ. சமகால நிகழ்வுகள் குறித்த, இந்நூல் ஆசிரியரின் விமர்சன கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 15 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் கட்டுரையாக, 2011 செப்டம்பர் 11ம் தேதி நடந்த, பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த ஆய்வுக் கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. மதுரை மாவட்டம், யானைமலையை வெட்டி, கோவில் அமைக்க முயன்ற வழக்கில், இயற்கை செய்து வைத்திருக்கும் கலையைக் காட்டிலும் அழகானது வேறு எதுவுமில்லை என்கிறார் நூலாசிரியர். ஓவியர் எம்.எப். ஹூசைன் பற்றிய […]

Read more

கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி

கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி, மு. ஸ்ரீனிவாஸன், சேகர் பதிப்பகம், பக். 440, விலை 350ரூ. மூத்த தமிழ் எழுத்தாளரான மு. ஸ்ரீனிவாஸன், அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதி வருபவர். இவருடைய கட்டுரைகள், கதைகள், கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ள இந்த மஞ்சரி, பிறர் கவனத்துக்கு வராத பல அம்சங்களை எளிய நடையில் வாசகர்களிடம் சேர்க்கிறது. அறிவியல் தமிழ் எழுத்தாளரான பெ.நா. அப்புசுவாமியின் கடிதங்கள் குறித்த கட்டுரையில் அவரது மேதைமையும் தன்னடக்கமும் வெளிப்படுகின்றன. சிறையில் தவம் என்ற கட்டுரை, பர்மாவின் மாண்டலே சிறையில் […]

Read more

நில அமைப்பும் தமிழ்க் கவிதையும்

நில அமைப்பும் தமிழ்க் கவிதையும், தனி நாயக அடிகள், தமிழில் க. பூரணச்சந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 204, விலை 150ரூ. ஓர் இன மக்களின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் நிர்ணயிப்பதில் நிலவியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த மண்ணில் தோன்றுகின்ற கவிதை உள்ளிட்ட அனைத்துக் கலைகளும் அந்த மண்ணின் பண்பாட்டு அடையாளங்களை எடுத்துக்காட்டுவதாகவே அமைந்துள்ளன. இதற்கு தமிழ் மண்ணும் தமிழ்க் கவிதைகளும் விதிவிலக்கல்ல. எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு ஆகியவை தமிழ் மண்ணின் பண்பாட்டு அடையாளங்களை மட்டுமின்றி, அன்றைய சுற்றுச்சுசூழல் […]

Read more

செந்தமிழ் காவலர் டாக்டர் அ. சிதம்பரநாதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் உரைகள்

செந்தமிழ் காவலர் டாக்டர் அ. சிதம்பரநாதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள், உரைகள், பதிப்பாசிரியர் இராம. குருநாதன், முதல் தொகுதி பக். 416, விலை 275ரூ., இரண்டாம் தொகுதி விழிகள் பதிப்பகம், பக். 416, விலை 275ரூ. தருமை ஆதினத்தினத்தின் மூலம் செந்தமிழ் காவலர் என்ற பட்டம் பெற்ற சிதம்பரநாத செட்டியார், மாணவர் பருவத்திலேயே தான் பயின்ற கல்லூரியில், ஆகிலத்திலேயே எழுதப்பட்டு வந்த அறிக்கைகளைக் கண்டித்து, பல எதிர்ப்புகளையும் தாண்டி தமிழில் எழுதி, மாணவர்களிடையே தமிழ் உணர்வை வளர்த்தவர். பிராங்க்ளின் கெல், ஜி.யு.போப், நினைவு தங்கப் பதக்கங்களைப் […]

Read more
1 23 24 25 26 27 88