ஹாலிவுட் பிரபலங்கள்

ஹாலிவுட் பிரபலங்கள், கண்ணம்மா பதிப்பகம், புதுச்சேரி, விலை 120ரூ. சினிமா கண்டுபிடிக்கப்பட்டு 120 ஆண்டுகள் ஆகின்றன. படத் தயாரிப்பில், உலகத்துக்கே முன்னோடியாகத் திகழ்பவர்கள் ஐரோப்பியர்கள். அவர்கள் அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் என்ற சினிமா நகரை உருவாக்கி, பல ஸ்டுடியோக்களை அமைத்து, படங்களை தயாரித்தனர். ஹாலிவுட் அளித்த நடிகர் – நடிகைகள் உலகப்புகழ் பெற்று விளங்கினர். அவர்களில் சார்லி சாப்ளின், மார்லன் பிராண்டோ, மார்லின் மன்றோ, எலிசபெத் டெய்லர், புரூஸ் லீ, ஜாக்கிசான் உள்பட 30க்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறுகள் இந்த […]

Read more

ஓர்மை வெளி

ஓர்மை வெளி, பேராசிரியர் வீ. அரசு மணிவிழா கட்டுரைகள் தொகுப்பு நூல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 576, விலை 560ரூ. முதல் முன்னோடி நூல்; புதுவரவு தமிழியியலின் பல்வேறு பொருண்மைகளின் சங்கமே, இந்த நூல். சென்னை பல்கலை பேராசிரியர் வீ. அரசிடம், ஆய்வு செய்த, பல ஆய்வாளர்களது பல்வேறு ஆய்வு பொருண்மை குறித்த, 85 கட்டுரைகளும், பேராசிரியரது தன் விவரக் குறிப்பு குறித்த ஒரு கட்டுரையும் ஆக, 86 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது இந்த நூல். பழந்தமிழ் இலக்கியம், இலக்கணம், இக்கால இலக்கியம், […]

Read more

இலங்கை பிளந்து கிடக்கும் தீவு

இலங்கை பிளந்து கிடக்கும் தீவு, சமந்த் சுப்பிரமணியன், தமிழில் கே. ஜி. ஜவர்லால், கிழக்கு பதிப்பகம், பக். 200, விலை 160ரூ. ஒரு இனப்போரின் நிஜக்கதை ஒரு பத்திரிகையாளரான சமந்த் சுப்பிரமணியனின் பயணக் கட்டுரையாக விரிவடையும் இந்த நூல், கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக நடந்த முடிந்த ஒரு இனப்போரின் நிஜக் கதைகளை சொல்கிறது. போருக்கு பிந்தைய தமிழர்களின் வாழ்க்கை, ராணுவ நெருக்கடிகளில் கதைகள் துவங்கி, போரின் துவக்க காலங்களையும் கூறுகிறது. போரால் பாதிக்கப்பட்டோர், ராணுவத்தினர், ராணுவத்தில் ஜெனரலாக பணியாற்றிய தமிழர், விடுதலை புலிகள், புலி […]

Read more

எதிர்க்குரல் எதிர்க்குரலாளர்கள்

எதிர்க்குரல் எதிர்க்குரலாளர்கள், காவ்யா, சென்னை, விலை 350ரூ. ஒடுக்கப்படுவதும், அடக்கப்படுவதும் எல்லை மீறும்போதுதான் எதிர்க்குரலாளர்கள் தோன்றுகிறார்கள். அத்தகைய சமூகப் புரட்சியாளர்களான மகாத்மா காந்தி, அம்பேத்கார், மாசேதுங், நெல்சன் மண்டேலா, பெரியார், லெனின், சேகுவாரா போன்றவர்களின் கருத்துகளில் காணப்படும் ஒற்றுமைப் பண்புகளை இந்த நூல் ஆராய்கிறது. அதோடு அந்தச் சமூகப் புரட்சியாளர்களின் குரலோடு, புதுச்சேரி ஹைக்கூ (துளிப்பா) கவிதைகளின் பாடுபொருள் ஒத்துப்போவதை முனைவர் கு. தேன்மொழி இந்த நூலில் மிக விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 22/4/2015.   —- சங்கத் தொன்மம், கெ. […]

Read more

வா. மு. சேதுராமனின் தமிழ்ப்பணி

வா. மு. சேதுராமனின் தமிழ்ப்பணி, சேதுச்செல்வி பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு, உயர் கல்வி பயின்று, முனைவர் பட்டம் பெற்றவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன். அண்மையில் 80 வயது நிறைந்து, முத்து விழா கொண்டாடியவர். வாழ்நாளில் கணிசமான பகுதியை வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, தமிழின் பெருமையை பரப்பி வருகிறவர். கவிதை, உரைநடை, சொற்பொழிவு என்று பல துறைகளில் தமிழ்ப்பணியாற்றி வருகிற பெருங்கவிக்கோவின் தமிழ்த்தொண்டினை வா.மு. சேதுராமனின் தமிழ்ப்பணி என்ற தலைப்பில் ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் ச. குணா. அந்த […]

Read more

நிலவொளி எனும் இரகசிய துணை

நிலவொளி எனும் இரகசிய துணை, கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும், அடையாளம், புத்தாநத்தம், விலை 200ரூ. தமிழ்ப் படைப்புலகத்தைப் பொறுத்தவரை 1990களில் மிகவும் முக்கியமான காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் சிக்கலான இலக்கிய, தத்துவக் கருத்தாக்கங்களையும் உரையாடக்கூடிய மொழியில் அறிமுகம் செய்த எம்.டி. முத்துக்குமாரசாமி முக்கியமானவர். இவரது சிறுகதைகள் அக்காலத்தில் தேக்கமடைந்திருந்த தமிழ் நவீனச் சிறுகதை மொழியைப் பரிசீலிக்கத் தூண்டியவை. அவர் சமீப காலத்தில் தனது வலைப்பூவில் எழுதிய கட்டுரைகளின் தொகுதி இது. தமிழில் மொத்தை மொத்தையாக சீரியதும் சிறப்பும் இரண்டும்கெட்டானும் மோசமானதுமாகப் படைப்புகளைக் கலந்துகட்டிப் […]

Read more

தி.க.சி. என்றொரு தோழமை

தி.க.சி. என்றொரு தோழமை, தொகுப்பாசிரியர் கழனியூரன், காவ்யா, பக். 274, விலை 250ரூ. தி.க.சி. என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட திருநெல்வேலி கணபதியப்பன் சிவசங்கரன் வசியப்படுத்தாத, அவரிடம் வசியப்படுத்தாத, அவரிடம் வசப்படாத இலக்கிய உலக ஆளுமைகள், வெகு குறைவு. எழுதத் தொடங்கும் எல்லார் மீதும் அவர் பாராட்டு மழை பொழிந்தார். அந்தப் பாராட்டு மழையை உரமாக்கிக் கொண்டு இலக்கிய உலகில் வாழ்ந்து செழித்தவர்கள் பலர். அவ்வாறு தி.க.சி.யால் உரம் பெற்ற பலரும், அவர் மறைந்துவிட்டார் என்ற உடன், தாமே முன்வந்து தமது நினைவலைகளை எழுத்தில் வடித்திருக்கின்றனர். […]

Read more

எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு

எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு, தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, பக். 288, விலை 180ரூ. பொதுவுடைமை இயக்கத் தலைவர் நல்லகண்ணுவின் உயர்ந்த பண்புகளையும் ஆளுமைத் திறனையும், போராட்ட வாழ்க்கையையும் எல்லாரும் அறிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்டிருக்கும் நூல். அவருடன் பழகியவர்கள், போராட்டங்களில் பங்கேற்றவர்கள், சிறையில் உடனிருந்தவர்கள், அவரைப் பற்றி எழுதிய கட்டுரைகள், கவிதைகள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. நல்ல கண்ணுவின் துணைவியார் ரஞ்சிதம் நல்லகண்ணுவுடனான நேர்காணலும் இடம்பெற்றிருக்கிறது. பொது வாழ்க்கையில் மட்டுமின்றி, தனி வாழ்க்கையிலும் எவ்வாறு ஒரு புரட்சிகரமான தோழராகவே […]

Read more

பேசாத பேச்செல்லாம்

பேசாத பேச்செல்லாம், ப்ரியா தம்பி, விகடன் வெளியீடு, சென்னை, விலை 170ரூ.     To buy this Tamil book : https://www.nhm.in/shop/100-00-0002-459-6.html உனது எழுத்தை எனது மொழியில் நீயே எழுது – என்றார் கவிஞர் இன்குலாப். ஆண்கள், பெண் வேடமிட்டு எழுதிய எழுத்துகளில் கழிவிரக்கமும், உங்களுக்கு ஆதரவாக நான் என்ற வீண் ஜம்பமும்தான் வெளிப்பட்டது. இதையே பெரியார், பெண்களுக்காக ஆண் பாடுபடுவதாகச் சொல்வது எலிகளுக்காகப் பூனைகள் பாடுபடுவதாகச் சொல்வதைப்போல் என்றார். அடக்கப்பட்ட சமூகமே அவர்களது பிரச்னையை எழுத, பேச, போராடப் புறப்பட்டதுதான் […]

Read more

ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு சிறப்பு மலர் 2015

ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு சிறப்பு மலர் 2015, குமுதம் வெளியீடு, சென்னை, பக். 274. கிருஷ்ணன் மணியம், மாநாட்டுத் தலைவரான டத்தோஸ்ரீ உத்தமா ச. சாமுவேலு பற்றி எழுதியுள்ள தமிழ்மொழிக் காதலர் கட்டுரை, அவர் தமிழ் மொழி மீது கொண்ட தணியாத தமிழ்க் காதலையும், இளம் வயதிலிருந்து அவர் கடந்து வந்த கரடு முரடான சவால்கள் நிறைந்த பாதைகளையும் விவரிக்கிறது. இதுவரை நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை ஒரு மீள் பார்வை செய்துள்ளார் சு. இராசாராம். மலேசியாவில் தமிழ்க் கல்வி அன்றும் […]

Read more
1 27 28 29 30 31 88