படித்ததும் பிடித்ததும்

படித்ததும் பிடித்ததும், உதயை மு. வீரையன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக். 256, விலை 125ரூ. வாசிப்பின் மீது வாஞ்சை கால ஓட்டத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக்கொள்ள புத்தகங்களை வாசிப்பது வாசகருக்கு மட்டுமல்ல, படைப்பாளருக்கும் அவசியமான ஒன்றே. வாசிப்பென்பது அனைவருக்கும் பொதுவென்றாலும், புத்தக வாசிப்பின் வழியே ஒரு வாசகர் அடைந்த அனுபவம் அவருக்குள்ளேயே தங்கிவிடுகிறது. ஒ ரு படைப்பாளியோ தனக்குள் அந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தை மீண்டும் வாசகருக்கே அனுபவக் கடத்தியாய்த் திருப்பியனுப்பும் வேலையைச் செய்துவிடுகிறார். அப்படியான எழுத்துக்களின் பதிவே உதயை மு. வீரையனின் ‘படித்ததும் […]

Read more

சிந்தனைக் களஞ்சியம்

சிந்தனைக் களஞ்சியம், உ. நீலன், அருள் பதிப்பகம், பக். 248, விலை 130ரூ. தான் படித்து, பார்த்து, பழகிய செய்திகளை எல்லாம் தொகுத்து இந்த நூலைப் படைத்துள்ளார் நூலாசிரியர். நம் நாட்டுத் தலைவர்கள் மகாத்மா காந்தியடிகள் முதல் எம்.ஜி.ஆர். வரையும், வெளிநாட்டு சர்வாதிகாரிகள் ஹிட்லர், முசோலினி, உலகின் தலைசிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீன், உலகப் புகழ் பெற்ற தத்துவஞானி ஓஷோ வரை அனைவரைப் பற்றியும் நாம் அறிந்திராத பல விஷயங்களை இந்நூலின் மூலம் நாம் அறியலாம். உதாரணமாக, சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் ஒருவரான முகமது அலி […]

Read more

தமிழிலக்கிய வகைமைகளும் வாழ்வியல் சிந்தனைகளும்

தமிழிலக்கிய வகைமைகளும் வாழ்வியல் சிந்தனைகளும் (நெய்தல் – 2014), பதிப்பாசிரியர்கள் சு. சதாசிவம், க. கௌசல்யாதேவி, மு. இராசேந்திரன், ஞா. சுஜாதா, க. பூபதி, இல. தங்கராஜ், செம்மூதாய் பதிப்பகம், பக். 556, விலை 400ரூ. பன்னாட்டுக் கருத்தரங்கம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பல ஊர்களிலிருந்தும் நாடுகளிலிருந்தும் ஆய்வு மாணவர்களும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் கலந்துகொண்டு, தமிழிலக்கியவகைமைகள் தொடர்பான வாழ்வியல் சிந்தனைகளை வழங்கியுள்ளனர். இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளில் எதைச் சொல்வது? எதை விடுவது? பா. சம்பத்குமாரின் ‘பெண்மையைப் போற்றும் சங்க இலக்கியம்’ தொடங்கி, க. சதாசிவத்தின் […]

Read more

பல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற இசைப்பாடகர்கள்

பல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற இசைப்பாடகர்கள், எஸ்.எஸ். பாரத்வாஜ், மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 204, விலை 175ரூ. ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார் போன்ற சமயாச்சாரியார்களில் தொடங்கி, தேவார மூவர், மணிவாசகர், பன்னிரு ஆழ்வார்கள், தியாகராஜர் முதலான மும்மூர்த்திகள், தமிழிசை மூவர், தாயுமானவர், அருணகிரிநாதர், பட்டினத்தார், திருமூலர் போன்ற 43 அருளாளர்கள் பிறந்த காலம், அவர்களின் தீவிரமான தெய்வ பக்தி, வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள், சுருக்கமான வரலாறு, அவர்கள் இயற்றிய நூல்கள் போன்றவை இந்நூலில் சிறப்பாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றோடு நின்றுவிடாமல், அவர்கள் இயற்றிய […]

Read more

சக்கர வியூகம்

சக்கர வியூகம் (சிறுகதைகள்), ஐயப்பன் கிருஷ்ணன், அகநாழிகை பதிப்பகம், பக். 96, விலை 80ரூ. இருபெரும் இதிகாசங்களாகிய இராமாயணம் மகாபாரதம் கதைகளை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. பிரமிப்பைத் தருகின்றவை. எண்ணற்ற கதை மாந்தர்களைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு பாத்திரப் படைப்புக்கும் முக்கியத்துவம் தரப்பட்ட இவற்றைக் கட்டுரைகளாகச் சொல்லிச் செல்வது ஒரு வகை உத்தி. கதையாகச் சொல்லிச் செல்வது இன்னொரு வகை. இதிகாசக் கதையை மீட்டுருவாக்கம் செய்கையில் பலமான பின்புலத்தின் இழையிலிருந்து விலகாதிருக்க வேண்டிய நிர்பாந்தம், சுவை குன்றாமல் சொல்ல வேண்டிய அவசியம், சறுக்கிவிடாமல் கத்தி […]

Read more

வெற்றிப் படிக்கட்டு (பாகம்1, 2)

வெற்றிப் படிக்கட்டு (பாகம்1, 2), ஹெச். வசந்தகுமார், வெற்றி பவுண்டேஷன் மற்றும் வசந்த் அண்ட் கோ, சென்னை, பக். 194, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-223-1.html வசந்த் டிவி ஆசிரியர் வழங்கி வந்த, சுயமுன்னேற்றம் தொடர்பான சொற்பொழிவுகள், இரண்டு புத்தகங்களாக வெளிவந்துள்ளன. முதல் பாகத்தில், 50 கட்டுரைகள் இடம்பெற்றன. இரண்டாம் பாகத்தில் 76 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. சின்ன கோடு-பெரியகோடு தத்துவத்தைக் கூறி அதற்கு, வாழ்க்கையில் ஒருவன் பெரியவனாக விரும்பினால், அவன் மற்றவரை மறைக்காமல், அழிக்காமல் தன் […]

Read more

ஓர்மை வெளி

ஓர்மை வெளி, பேராசிரியர் வீ. அரசு மணிவிழாக் கட்டுரைகள், தொகுப்பாளர்கள் இரா. சினிவாசன், பா. மதுகேசுவரன், அ. சதீஷ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 576, விலை 560ரூ. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் பணியாற்றிய பேராசிரியர் வீ. அரசவின் பணி நிறைவையொட்டி, அவரிடம் பயின்ற மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. ‘ஓர்மை’ என்பதை ஆங்கிலத்தில் (Consciousness) என்று தமிழில் மொழியாக்கம் செய்யலாம். ‘ஒர்மை வெளி’ என்பதை A Space for consciousness என்று மொழியாக்கம் […]

Read more

கலீல் கிப்ரானின் காதல் கதை

கலீல் கிப்ரானின் காதல் கதை, ராஜ்ஜா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. நீங்கள் மாதந்தோறும், 300 ரூபாய் செலவில் புத்தகங்கள் வாங்குகிறீர்கள். அந்த ரசீதை அரசிடம் கொடுத்தால், உங்களுக்குப் பணம் திரும்பக் கிடைத்துவிடும் என்றால் எப்படியிருக்கும்? ஹாலந்து நாட்டின் அரசு ஊழியர்களுக்கு, இப்படியொரு சலுகை வழங்கப்படுகிறது. தங்கள் நாட்டு மக்கள், படிப்பதில் ஆர்வம் குன்றாதிருக்க, புத்தக பதிப்பாளர்களுக்கு அவற்றை அச்சிட வேண்டிய காகிதத்தை, மிகக் குறைந்த விலைக்கு அளிக்கிறது. புத்தக விலையை ஏற்ற வேண்டிய அவசியமே அங்கு இல்லை. இப்படி […]

Read more

கண்ணகி அம்மன் வழிபாடு

கண்ணகி அம்மன் வழிபாடு, பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 130ரூ. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கற்புக்கரசி கண்ணகி இறுதியில் தெய்வநிலை பெற்றாள். கேரள மாநிலம் மங்கல தேவி மலையில் சேரன் செங்குட்டுவன் கண்ணகி தேவி கோவிலைக் கட்டினான். மேலும் இதுபோல பல்வேறு பெயர்களில் கண்ணகி கோவில்கள் உள்ளன. இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள இனத்தவரால் கண்ணகி வழிபாடு மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கேரளாவிலும் ‘பகவதி’ என்று பயபக்தியோடு வணங்கப்படுகிறாள். இதேபோல் தமிழகத்திலும், ‘பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு’ என்று கூறுகின்ற இந்த நூலாசிரியர் […]

Read more

பூவின் இதழ்கள்

பூவின் இதழ்கள், த.கணேசன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 130ரூ. 50 விதமான கட்டுரைகளின் தொகுப்புநூல். இந்நூலின் ஆசிரியர் த.கணேசன், வானொலியில் பணியாற்றியபோது கிடைத்த அனுபவங்களை உண்மைச் சம்பவங்களை, கட்டுரை வடிவில் தந்துள்ளார். 35 ஆண்டுகால வானொலி வாழ்க்கையில் அவர் சந்தித்த மாமனிதர்களையும், மனித நேய நிகழ்வுகளையும், சுவையோடு ஒவ்கொன்றையும் ஒரு சிறுகதைப் பாங்குடன் எழுதியுள்ளார். இக்கட்டுரைகளைப் படிக்கும்போது மானுடத்தின் பல்வேறு முகங்களையும் தரிசிக்க முடிகிறது. ஊடகத் துறையில் பணியாற்ற வேண்டும். பயிற்சி பெறவேண்டும் என்போர்க்கு இது ஒரு வழிகாட்டி நூல். நன்றி: தினத்தந்தி, […]

Read more
1 29 30 31 32 33 88