பாரதியார் ஆய்வுக்கோவை

பாரதியார் ஆய்வுக்கோவை, கங்கை புத்தகநிலையம், சென்னை, விலை 250ரூ. நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் என்ற கொள்கையோடு உய்வகை காட்டும் உயர் தமிழுக்குப் புதுநெறி காட்டிய இருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற தமிழ்க்கவிஞர் மகாகவி பாரதியார். அவரது 125வது பிறந்த நாள் விழாவையொட்டிச் சிறப்பு வெளியீடாக வந்தது இந்த நூல். இதில் 80 அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. பாரதியாருடைய படைப்புகளைப்பற்றி மதிப்பீடாகக் கட்டுரைகள் அமைந்துள்ளன. அவரது கவித்திறம், உரைத்திறம், உவமைநலம், கற்பனை வளம், அணிநயம், பாரதியாரின் வரலாறு, வாழ்வியல் அனுபவங்கள், அவரது அரசியல், ஆன்மிக, […]

Read more

அயல் பசி

அயல் பசி, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-356-7.html உலகம் முழுவதும் பரவியிருக்கும் பலவகையான உணவு கலாசாரங்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஷாநவாஸ். நன்றி: தினத்தந்தி, 14/1/2015.   —- டாக்டர் உ.வே.சா. வாழ்க்கையும் தொண்டும், அமராவதி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. தமிழிலக்கியக் கருவூலங்களை, அரும்பாடுபட்டு, அலைந்து திரிந்து, தேடிக் கண்டுபிடித்து நுணுகி ஆராய்ந்து அச்சேற்றிப் பதிப்பித்த டாக்டர் உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாற்று சுருக்கத்தையும், குறிப்பிடத்தக்க தொண்டுகளையும், முக்கிய நிகழ்வுகளையும் தொகுத்தளித்திருக்கிறார் […]

Read more

எழுத்து இதழ்த் தொகுப்பு

எழுத்து இதழ்த் தொகுப்பு, சி.சு.செல்லப்பா படைப்புகள், தொகுப்பு கி.அ. சச்சிதானந்தன், சந்தியா பதிப்பகம், சென்னை. முன்னோடியின் முகம் தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவர் சி.சு.செல்லப்பா. தன் வாழ்நாள் முழுவதையும், இலக்கியத்துக்காகச் செலவிட்டார். அவர் நடத்தி வந்த எழுத்து இதழைச் சிற்றிதழ்களின் முன்னோடி எனச் சொல்லலாம். எழுத்து இதழைத் தொடர்ந்து தான் அதன் மூலம் அறிமுகமானவர்களால், நடை, பிரக்ஞை, கசடதபற, யாத்ரா போன்ற இதழ்கள் தமிழ் இலக்கியத்துக்காக மலர்ந்தன. க.நா. சுப்ரமண்யத்தின் சமகாலத்தவரும் அவரின் நேர் எதிர் இலக்கியக் கோட்பாட்டாளராகவும் சி.சு.செ. இருந்தார். க.நா.சு-வும் […]

Read more

மகளிர் மகிமை

மகளிர் மகிமை, பி. முஹம்மது சல்தான் ஃபாஜில் தேவ்பந்தி, பி.எம். கலிலூர் ரஹ்மான் மன்பஈ, அமானத் அறக்கட்டளை, சென்னை, பக். 384, விலை 140ரூ. ஆண் பெண் இரு பாலரும் ஒன்றாகப் பேசுவதிலும், பழகுவதிலும் எப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். இரு பாலருக்கும் உள்ள ஒழுக்க முறைகள் என்ன – என்பன போன்ற விஷயங்கள் எல்லா சமயங்களிலும் வரையறுக்கப்பட்டுள்ளன. முன்பு இவை முறையாக போதிக்கப்பட்ட கடைபிடிக்கப்பட்டால், பாலியல் குற்றங்கள் என்பது நாட்டில் மிக மிகக் குறைவானதாகவே இருந்தன. இன்றோ இக்குற்றங்கள் பல்கி பெருகி சர்வசாதாரண […]

Read more

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா, திருநின்றவூர் தி. சந்தானகிருஷ்ணன், நிழல் வெளியீடு, சென்னை, பக். 140, விலை 150ரூ. தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தவர் டி.எஸ். பாலையா. கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பன்முகத்திறன் கொண்ட டி.எஸ். பாலையாவுக்கு இதுவரை ஒரு நிறைவான நூல் இல்லை. அந்தக் குறையை தீர்த்துவைத்திருக்கிறது இந்நூல். பாலையா நடித்திருக்கும் அனைத்துப் படங்களையும் கால வரிசைப்படுத்தித் தந்திருப்பது சினிமா ஆய்வாளர்களுக்கு உதவும் பணி. பாலையாவின் ஆரம்பகால படங்களின் பிரதி எதுவும் கிட்டாத […]

Read more

தமிழர் நெல்

தமிழர் நெல், ஓம் பதிப்பகம், சென்னை, பக். 64, விலை 60ரூ. தமிழர்களின் உணவு, கலாச்சாரம், விழாக்கள் போன்ற அனைத்திலும் நெல்லும் அரிசியும் ஒன்றாகக் கலந்திருப்பதைத் தவிர்க்க முடியாது. பாரம்பரியமான அந்த அரிசி அன்று நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதாய் இருந்தது. இன்று சர்க்கரை வியாதி உள்ளிட்ட பல வியாதிகளுக்குக் காரணமாகிவிட்டது. அதற்குக் காரணம். இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள்தான். இவற்றால் நம் பாரம்பரிய அரிசியின் தன்மைகெட்டு, நோய்க்கான இடமாக இக்கால அரிசி மாறிவருவதைச் சுட்டிக்காட்டுவதோடு, இன்றும் நம்மிடம் உள்ள பாரம்பரிய அரிசிகள் எவை, […]

Read more

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள், ரமணன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 115ரூ. தராசுத் தட்டில் நேருவின் பதினெட்டு ஆண்டுகால ஆட்சியை நிறுத்திப் பார்க்கும் முயற்சி இது. புத்தகத்தின் சிறப்பான பகுதிகள் சில – சட்டமேதை அம்பேத்கர் மொழிவாரி மாநிலம் என்ற பதத்துக்கு ஒரு மாநிலத்துக்கு ஒரு மொழி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கவனியுங்கள். ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் இல்லை. அதாவது பிரிக்கப்படும் பகுதியில் பல மொழிகள் இருந்தாலும் ஆட்சியின் நிர்வாக வசதிக்காக அவற்றில் ஒரு […]

Read more

இந்த விநாடி

இந்த விநாடி, நாகூர் ரூமி, சிக்ஸ்த்சென்ஸ், சென்னை, பக். 200, விலை 150ரூ. கவிஞர் நாகூர் ரூமியின் இந்தப் புத்தகம், சுய முன்னேற்றம் வகை புத்தகம் அல்ல, சுயத்தை மீட்டெடுக்கும் புத்தகம். எட்டு அத்தியாயத்திலும் எட்டு எளிய விஷயத்தை நமக்கு அவர் அறிமுகப்படுத்துகிறார். அவை நமக்கு வெளியே இருப்பவை அல்ல. நமக்கு உள்ளே இருப்பவை. நம் உடலையும், மனதையும் சீரமைத்துக் கொள்வதற்கான எளிய வழி முறைகள். நம் பழக்க வழக்கங்களால், நம்பிக்கைகளால் விலகிச் சென்ற பாதையிலிருந்து, வழி தவறிய பாதையிலிருந்து அழைத்து சரியான பாதை […]

Read more

பாரதியும் தேசியத் தலைவர்களும்,

பாரதியும் தேசியத் தலைவர்களும், சு. சுப்புராமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், சென்னை, பக். 74, விலை 65ரூ. மகாகவி பாரதிக்கு காந்தியடிகைள், வ.உ.சி., அரவிந்தர், திலகர், நெல்லையப்பர், பாரதிதாசன், வ.வே.சு. அய்யர் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களுடன் இருந்த உறவுகளையும், வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களையும் தனித்தனி கட்டுரைகளாக விரிவாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர். சுவாமி விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாவை சந்தித்த பிறகு பாரதி வாழ்வில் ஏற்பட்ட மனமாற்றம், இந்தியா பத்திரிகையை நடத்துவதற்காக பாரதியார் பட்ட துயரங்கள் மற்றும் பாரதியாரின் தந்தை சின்னச்சாமி […]

Read more

நல்லா எழுதுங்க நல்லதையே எழுதுங்க

நல்லா எழுதுங்க நல்லதையே எழுதுங்க, பி.ஆர். ஜெயராஜன், ஸ்ரீ பதி ராஜன் பப்ளிஷர்ஸ், சேலம், பக். 144, விலை 75ரூ. நமது வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் சில பழமொழிகளுக்கான விளக்கங்கள், பிறருக்குத் தொந்தரவு கொடுக்காமல் எவ்வாறு செயல்படுவது, ஒட்டுக் கேட்பதால் ஏற்படும் விபரீதம், பொதுத் துறையில் பணியிலிருக்கும் அரசு ஊழியரின் அசாதாரண செயல்கள், மனைவியின் மொழியைக் கணவர் புரிந்து கொள்வது எப்படி, மனைவியின் கொடுமையிலிருந்து கணவனைக் காப்பதற்கான சட்டங்களின் அவசியம், கடன் அட்டை வங்கியிலிருந்து அனுப்பப்படும்போது, அந்த அட்டை அடங்கிய உறை நன்கு மூடி […]

Read more
1 31 32 33 34 35 88