அர்த்த சாஸ்திர அறிவுரைகள்

அர்த்த சாஸ்திர அறிவுரைகள், நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன் பேங்க் வெளியீடு, சென்னை, விலை 150ரூ. மன்னனின் பூந்தோட்டம் ஐ.சி.எஸ். அதிகாரியாக இருந்த ஏ.எஸ்.பி. அய்யர் ஆங்கிலத்தில் எழுதி த.நா. சேனாபதியின் தமிழாக்கத்தில் வெளிவந்தது சாணக்கியரும் சந்திரகுப்தனும் என்ற அரிய நூல். முதல் பதிப்பு வெளியாகி முப்பத்தோரு ஆண்டுகளுக்குப் பிறகு 1991 இல்தான் அந்த நூல் இரண்டாம் பதிப்பைக் கண்டிருக்கிறது. ஆங்கில மூலத்தையும் தமிழாக்கத்தையும் பலமுறை படித்து அதில் மனம்தோய்ந்த பட்டுத்தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் நூலின் மீதான […]

Read more

கற்க கசடற விற்க அதற்குத் தக

கற்க கசடற விற்க அதற்குத் தக, பாரதி தம்பி,  விகடன் பிரசுரம், சென்னை, விலை 120ரூ. கற்க கசடற… கற்றபின் நிற்க அதற்குத் தக என்பது வள்ளுவர் காலம். கற்க கசடற கற்றபின் விற்க அதற்குத் தக என்பது கொள்ளையர் காலம். காலத்தை வெறும் கணக்காக மட்டுமல்லாமல், வளர்ச்சிக்குரியதாக மாற்றியது கல்வியும் அதனால் விளைந்த அறிவும்தான். அந்தக் கல்வியும் அறிவும் விலைபோன இந்தக் காலம்தான் மிகமிக மோசமானது. நாட்டின் குடிமகனுக்குக் கல்வியையும் சுகாதாரத்தையும் தருவதில் இருந்து ஓர் அரசாங்கம் என்று தவறியதோ, அன்றே மக்களைப் […]

Read more

ஆளுமைத் திறன் பாதை தெரியுது பார்

ஆளுமைத் திறன் பாதை தெரியுது பார், தந்தி பதிப்பகம் ,சென்னை, விலை 160ரூ. தினத்தந்தியில் மாணவர் ஸ்பெஷல் பகுதியில் பெர்சனாலிட்டியை வளர்த்துக் கொள்வது எப்படி? என்ற தலைப்பில் நெல்லை கவிநேசன் தொடர் கட்டுரை எழுதி வந்தார். இந்தத் தொடர் வாசகர்களிடையே குறிப்பாக மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இப்போது ஆளுமைத்திறன்: பாதை தெரியுது பார் என்ற தலைப்பில் தொகுத்து நூலாக வெளிவந்துள்ளது. இந்தப் புத்தகத்தில் ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி? நல்ல மனப்பாங்கை உருவாக்குவது எப்படி? உணர்வுகளைக் கையாள்வது […]

Read more

மருத்துவ அகராதி

மருத்துவ அகராதி, முனைவர் மு. பொன்வைக்கோ, தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், காஞ்சிபுரம், விலை 800ரூ. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழறிஞர் த.வி. சாம்பசிவம் பிள்ளை மருத்துவ அகராதி ஒன்றை எழுதி வெளியிட்டார். மருத்துவம் பற்றிய சொற்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கம் அளிக்கும் அகராதி அது. நீண்ட காலம் பாடுபட்டு உருவாக்கிய இது, அக்காலத்திலேயே மிகுந்த பாராட்டு பெற்றது. தமிழுக்குப் பெருமை சேர்க்கும் அந்த நூலை, நவீன வடிமைப்புடன், மிக பிரமாண்டமானதாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஒரு உறுப்பாக விளங்கும் “தமிழ்ப் பேராயம்” வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய […]

Read more

தேம்பாவணி

தேம்பாவணி, வீரமாமுனிவர், உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி, விலை 2000ரூ. இத்தாலியைச் சேர்ந்தவரான ஜோசப் பெஸ்கி, 1680ம் ஆண்டு பிறந்தவர். கிறிஸ்தவ தொண்டராக, 1710ல் இந்தியாவுக்கு வந்தார். தமிழின் சிறப்பில் மனதைப் பறிகொடுத்த அவர், தமது 30வது வயதில் தமிழ் கற்கத் தொடங்கினார். தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்து, சிறந்த கவிஞராக உருவானார். தமது பெயரையும் “வீரமாமுனிவர்” என்று மாற்றிக்கொண்டார். தமிழ் எழுத்துக்களுக்கு அழகிய வடிவம் கொடுத்ததில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. அவர் எழுதிய தமிழ்க்காவியம் தேம்பாவணி. மிகப்பெரிய நூல் அது. […]

Read more

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே, நா. முத்துநிலவன், அகரம் வெளியீடு, தஞ்சாவூர், பக். 156, விலை 120ரூ. விடுதலைபெற்று 68 ஆண்டுகள் ஆனபின்னும் சுயசிந்தனைக்கான கல்வி இன்னும் எமது மக்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை என் 34 ஆண்டுக்காலக் கற்பித்தல் அனுபவத்தில் கண்டேன் என்கிற சுயவிமர்சனத்தோடு இந்த ஆழமான சிந்தனைகளுக்குரிய நூலை வெளியிட்டிருக்கிறார் நா. முத்துநிலவன். நடுத்தர வர்க்கத்தின் ஆடம்பரத்தில் கல்வுயும் அகப்பட்டுத் தவிக்கிறதே? என்கிற ஆதங்கத்தொடு பழுத்த அனுபவமுள்ள ஒரு ஆசிரியரே கேள்வியெழுப்புவது வேதனைக்குரியதுதான். மறுவாசிப்புக்கு உட்படுத்திச் சொல்லித் தரப்படவேண்டிய பல நூறு […]

Read more

எழுச்சி பெறு யுவனே

எழுச்சி பெறு யுவனே, சுவாமி விமூர்த்தானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியீடு, சென்னை, பக். 334, விலை 125ரூ. ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தமிழ் இதழான, ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியாகி, வாசகர்களின் பெரும் பாராட்டைப் பெற்ற, 58 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இளைஞர் சக்திக்கு வலுவூட்ட, நம்மிடையே சாதித்த, சாதித்துக் கொண்டிருக்கும் வெற்றியாளர்களின் அனுபவங்களே, இந்த நூல். முதல் கட்டுரையிலேயே, டாக்டர் அப்துல் கலாம் இந்த நாட்டின், 54 கோடி இளைஞர்கள் எழுச்சி பெற, மணியான யோசனைகளை தருகிறார். அனைத்து கட்டுரைகளுமே சாதிக்க துடிக்கும் […]

Read more

அறிந்தும் அறியாமலும்

அறிந்தும் அறியாமலும், வானவில் வெளியீடு, சென்னை, விலை 190ரூ. பேராசிரியரும், சொற்பொழிவாளருமான சுப. வீரபாண்டியன் எழுதி இணைய தளத்தில் 33 வாரங்கள் வெளியான தொடர், அறிந்தும் அறியாமலும் என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இன்றைய நம் இளைஞர்களின் கணிப்பொறி அறிவும், தொழில் நுட்ப அறிவும் நம்மை வியக்கவைக்கின்றன. இத்தகைய இளைஞர்களி இலக்கியம், தத்துவம், அரசியல் போன்ற துறைகளைப் பற்றி சிறிதும் அறியாமல் இருக்கிறார்கள். இதற்கு ஒரு தலைமுறை இடைவெளியே காரணம் என்று கூறும் ஆசிரியர், முதியவர்களின் பட்டறிவும், இளைஞர்களின் செயல் திறனும் இணையும் புள்ளியில் […]

Read more

தெய்வத்தமிழ்

தெய்வத்தமிழ், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. உலகத்தை வெறுப்பது ஆன்மிகம் அல்ல, உலகத்தை அறிந்துகொண்டு, அதற்குள் வாழ்ந்து, தங்களையும், உலகத்தையும், ஒருசேர வளர்த்துக் கொள்வதே ஆன்மிகம் என்ற குன்றக்குடி அடிகளாரின் கருத்தியலின் ஒளியில் ஆன்மாவின் – உயிரின் – தரத்தை மேம்படுத்தும் கட்டுரைகள் இந்நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இக்காலத்திலே மனிதன் மன அழுத்தத்திலும், கவலையிலும் சிக்கித் தவிக்கிறான். புற வளர்ச்சியில் இமாலய உச்சியைத் தொட்டிருந்தாலும், அக உலகில் மயக்கத்திலும், கலக்கத்திலும், குழப்பத்திலும், நடுக்கத்திலும் அகப்பட்டு, அல்லற்பட்டு, ஆற்றாது, அழுது புலம்புகிறான். […]

Read more

இங்கே நிம்மதி

இங்கே நிம்மதி, என். கணேசன், பிளாக்ஹோல்மீடியா, சென்னை, பக். 160, விலை 130ரூ. ஆழ்மன சக்தி, ஆன்மிகம், சுயமுன்னேற்றம், வாழ்வியல், நாவல்கள், சிறுகதைகள் என்று இவரது படைப்புகள் முக்கியத்துவம் பெற்றவை. இவற்றில் சில இலக்கியச் சிந்தனை உட்பட பல பரிசுகளைப் பெற்றுள்ளவை. அந்த வகையில் இந்நூலில், ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் வரும் எல்லாப் பிரச்னைகளையும், சுமார் 42 கட்டுரைகளில் பிரித்துக் காட்டி, இவற்றுக்கு தீர்வு காண்பது எப்படி என்பதையும் மிக எளிமையாக விளக்கியுள்ளார் ஆசிரியர். முல்லா, ஜென், புராண சம்பவங்கள்… […]

Read more
1 28 29 30 31 32 88