மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பூம்புகார் பதிப்பகம், விலை 250ரூ. எழுத்தாளர், பேச்சாளர், இதழ் ஆசிரியர், தொழிலாளர்களின் தோழர் என்பன போன்ற பன்முகம் கொண்டவர், திரு.வி.க. என்று அழைக்கப்பட்ட திரு.வி. கல்யாணசுந்தரனார். காந்தியடிகள் மீதும், அவரது கொள்கைகள் மீதும் அளப்பரிய அன்பும், பிடிப்பும் கொண்டவர். அவர் எழுதிய, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற நூல் மிகவும் பிரசித்தி பெற்று நூலாகும். அது இப்போது புதிய கட்டமைப்புடன் வெளிவந்துள்ளது. மனிதன் எத்தகைய வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதையும், மனித வாழ்வுக்குப் பேரிலக்கியமாக வாழ்ந்த காந்தியடிகளின் வாழ்க்கை முறையையும் […]

Read more

வரலாற்றில் எம்.ஜி.ஆர்.

வரலாற்றில் எம்.ஜி.ஆர்., வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 784, விலை 500ரூ. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் பொதுவாழ்கையைப் பற்றி புரிதலை இன்றைய தலைமுறையினருக்கு நுட்பமாக எடுத்துச் சொல்லும் தொகுப்பு நூல் இது. கலைத்துறையிலும், அரசியல் வாழ்விலும் எம்.ஜி.ஆர். ஆற்றிய செயற்கரிய பணியை அவரோடு பழகியவர்கள் எழுத்தில் சொல்வது படிக்கப் படிக்க புதுமை. சிவாஜி, ம.பொ.சி., பழதுநெடுமாறன், கண்ணதாசன், சோ, சோலை, எம்.ஆர். ராதா, டைரக்டர் ஸ்ரீதர், நீதியரசர் இஸ்மாயில், மணியன், வாலி, பானுமதி என்று அவரோடு அன்பாக இருந்தவர்கள் பலரின் அரிய கருத்துக்களை […]

Read more

காமராஜ் புதிரா? புதையலா?

காமராஜ் புதிரா? புதையலா?, எஸ்.பி. கணேசன், காமராஜ் விழிப்புணர்வு மையம், பக். 193, விலை 70ரூ. பெருந்தலைவர் காமராஜரின் வாழ்வு, அவரின் சாதனை, வாழ்க்கை நிகழ்வுகள், அறிவுரைகள் ஆகியவற்றை இளந்தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லி, புரிந்தவர்களுக்கு அவர் புதிராகவும், புரிந்தவர்களுக்கு அவர் புதையலாகவும் இருப்பதை நல்ல விளக்கங்களுடன் தந்திருப்பது சிறப்பு. மற்ற தலைவர்கள்போல் அவர் தலைவர் மட்டுமல்ல, நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழ இறைவன் அனுப்பி வைத்த தவப்புதல்வன் என்கிறார் நூலாசிரியர். அதாவது காமராஜரை கல்வி, அணைக்கட்டுகள், மின்சாரம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றை இத்தமிழ்மக்களுக்கு வழங்க […]

Read more

விகடன் மேடை

விகடன் மேடை, விகடன் பிரசுரம், விலை 435ரூ. விகடன் மேடையில் வாசகர்களின் கேள்விகளுக்கு பிரபலங்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள் இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. அரசியல், சினிமா, சமூகம், எழுத்து போன்ற துறைகளில் பிரபலமானவர்கள், வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் சுவையாகவும்,சிந்தனைக்க விருந்தாகவும் அமைந்துள்ளன. நடிகர் கமல்ஹாசன் தொடங்கி டிராபிக் ராமசாமி வரை 40 பேர்களின் பதில் உரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், பழ. நெடுமாறன், வைகோ, மு.க. ஸ்டாலின், திருமாவளவன், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், கவிஞர்கள் வைரமுத்து, வாலி […]

Read more

அன்னை தெரசா

அன்னை தெரசா, பா. தீனதயாளன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 125ரூ. ஏழைகள் நிலவில் இருந்தால், அங்கும் சென்று அவர்களுக்குச் சேவை செய்யத்தயார் என்று சொன்னவர் அன்னை தெரசா. அதற்காகவே வாழ்வின் வசந்தங்களை எல்லாம் துறந்துவிட்டு, வாடிய மக்களுக்காக உழைத்த தெரசாவின் வாழ்க்கை வரலாற்று நூல். தெரசா மேற்கொண்ட சேவைப் பயணம் என்பது, சுகமான ராஜபாட்டை அல்ல. கடுமையான முள்வழிப்பாதை. அந்தப் பாதையில் அவர் எதிர்கொண்ட சவால்கள் அநேகம். துயரங்கள் அதிகம். அவற்றை எல்லாம் தாண்டித்தான், பிரம்மாண்டமான மிஷனரியைக் கட்டமைத்தார். அதைவிட முக்கியமாக, ஏழை மக்களின் […]

Read more

உண்மை

உண்மை, கே.எஸ். நாகராஜன் ராஜா, கிரி டிரேடிங் ஏஜென்சிஸ், விலை 120ரூ. ஷீரடி பாபாவின் ஜீவசமாதி இருக்கும் இடத்தையும், கர்ம வினையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்ற நிலையையும், பரமாத்மா அனைத்து விஷயங்களுக்கும் சாட்சியாக இருக்கிறார் என்ற தகவல்களுடன், பாதாள புவனேஷ்வர், காமாக்யா, கைலாஷ் – மானசரோவர் போன்ற பல ஆன்மிக தலங்களிலும் நூலாசிரியர் பெற்ற அனுபவங்களும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 9/12/2015.   —- சிந்திப்போமா?, ஆ. சூசைமாணிக்கம், வாசன் பிரதர்ஸ் வெளியீடு, விலை 50ரூ. ஒழுக்க நெறிகளை வலியுறுத்துவதுடன், அனைவரும் […]

Read more

எம்.ஜி.ஆர். மதித்த முதலாளி

எம்.ஜி.ஆர். மதித்த முதலாளி, விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 100ரூ. திரைப்படத்துறையில் முத்திரை பதித்து முன்னேற்றம் கண்ட நாகிரெட்டியின் வாழ்க்கை வரலாற்று நூல். அவருடைய மகன் விஸ்வம் இந்நூலை எழுதியிருக்கிறார். தினமணி கதிரில் இது தொடராக வெளிவந்தது. திரைப்படத் தயாரிப்புத் தொழிலின் நிதிநிலை ஒரு சமயம் மிகவும் மோசமாக இருந்தது. அப்போது, விஜயா வாகினி ஸ்டுடியோ அதிபரான நாகிரெட்டி, தமது ஸ்டியோவில் படம் பிடித்த தயாரிப்பாளர்களை அழைத்து அவர்களிடம் ஏற்கெனவே தான் ஸ்டுடியோ கட்டணமாகப் பெற்ற தொகையில், ஒரு பகுதியைத் திருப்பிக் கொடுத்த சம்பவம் […]

Read more

சாவித்திரி கலைகளில் ஓவியம்

சாவித்திரி கலைகளில் ஓவியம், நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா, தோழமை வெளியீடு, பக்.270, விலை 250ரூ. மதுவால் சரிந்த அழகு சாம்ராஜ்யம்! இப்போது மட்டுமல்ல, அப்போதும் தமிழ் சினிமா என்பது ஆண்களால் ஆளப்படும் உலகம்தான். கதாநாயகர்களை திருவுருக்களாகவும், நாயகியரை அழகு பதுமைகளாகவும் பார்க்கும் செல்லுலாயிட் சிற்பம். இப்பேதைவிட, 60 ஆண்டுகளுக்கு முன்னால், நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அப்போதும் கதாநாயகர்களே, சினிமா உலகை ஆண்டு கொண்டிருந்தனர். ஏறக்குறைய முடிசூடா மன்னர்களைப்போல. அதனால் உச்ச நடிகர்களோடு நடிக்க பெரும் போட்டியே நடக்கும். கதாநாயகன் தாத்தாவின் வயதில் இருந்தாலும், அவரோடு […]

Read more

காலத்தை வென்ற கலாம்

காலத்தை வென்ற கலாம், செயின்ட் பிரிட்டோ கல்விக் குழுமம் வெளியீடு, சென்னை, விலை 70ரூ. மறைந்த மாமனிதர் அப்துல் கலாம் பற்றி நிறைய புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளன. சென்னை செயின்ட் பிரிட்டோ கல்விக்குழுமம், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களில் அங்கம் வகிக்கும் டாக்டர் சா.சேவியர் அல்போன்ஸ் எழுதிய காலத்தை வென்ற கலாம் என்ற புத்தகம் குறிப்பிடத்தக்கதாகும். கலாம், திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்தவர். அந்த முறையில் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றவர் டாக்டர் சா.சேவியர் அல்போன்ஸ். […]

Read more

பல நூற்றாண்டுகளாகப் புகழ் பெற்ற இசைபாடகர்கள்

பல நூற்றாண்டுகளாகப் புகழ் பெற்ற இசைபாடகர்கள், எஸ்.எஸ். பாரத்வாஜ், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 175ரூ. ஆச்சாரியார்கள், சித்தர்கள், ஆழ்வார்கள், சங்கீத மூர்த்திகள் போன்ற அருள் பெற்ற மகான்கள் தங்கள் அனுபவங்களைப் பாடல்களாக, பிரபந்தங்களாக, விருத்தங்களாக, கீர்த்தனைகளாக வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களில் புகழ்பெற்ற ஆதி சங்கரர், சமயக் குரவர்கள், ஆழ்வார்கள் தொடங்கி புரந்தரதாஸர் அருணாசலக் கவிராயர், வள்ளலார், திருமூலர், தாயுமானவர், அவ்வையார் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றையும், அதோடு அவர்கள் எழுதிய பாடல் வரிகளையும் சொல்லி கோவை எஸ்.எஸ். பாரத்வாஜ் நம்மை வியக்க வைக்கிறார். நன்றி: தினத்தந்தி, […]

Read more
1 24 25 26 27 28 46