சீர்திருத்தச் செம்மல் இராமானுஜர்

சீர்திருத்தச் செம்மல் இராமானுஜர், கவிஞர் இளங்கண்ணன், ராமையா பதிப்பகம், பக். 320, விலை 160ரூ. ‘அந்தணரானாலும் அன்பால் அனைவரையும்/சாந்தமாய்க் கொண்டநல் ஆத்திர தாரியம்/சீரார் இராமானுசர்த் தொண்டைச் சிந்தை கொள்/ஓராயிரத் தாண்டாம் வாழ்த்து’ என்னும் வாழ்த்துடன் துவங்கும் நூலாசிரியர், 36 தலைப்புகளில், ராமானுஜரின் வரலாற்றை சிறுசிறு தலைப்புகளில், தக்க திருக்குறள் மேற்கோள்களுடன், வைணவச் சுவை குன்றாமல் திறம்படத் தந்துள்ளார். ‘அங்கத்தில் பஞ்ச சம்ஸ்காரம் தரித்தவரே அய்யங்கார். அது சாதியன்று (பக். 75). ஒருவன் தன் சமயத்தில் குற்றங்களைக் கண்டுபிடித்துத் தூற்றுவது மிகவும் கீழ்த்தரமான செயல் (பக். […]

Read more

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன், புலவர் செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், பக். 212, விலை 120ரூ. கழிவுநீர் வடிகால இணைப்பிற்குக் கூட, வார்டு கவுன்சிலருக்குக் கமிஷன் தர வேண்டியுள்ளது என்கிறார், பழ. கருப்பையா. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஊடுருவியிருக்கும் ஊழலைப் பற்றி, அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கும் தீய உறவைப் பற்றி அவர் பேசுகிறார். இதற்கெல்லாம் தீர்வு இருக்கிறதா? அவருக்கு, ப. சுப்பராயன் வரலாற்றைப் பரிந்துரைக்கிறோம். சட்டசபை உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர், மாநில அமைச்சர். மாநில முதன்மை அமைச்சர், அரசியல் […]

Read more

மறக்க முடியாத மாமனிதர் அன்புக்குரிய ஐ.மா.பா.

மறக்க முடியாத மாமனிதர் அன்புக்குரிய ஐ.மா.பா., எஸ். கணேசன், சண்முகம் பதிப்பகம், பக். 152, விலை 100ரூ. புராதன, வரலாற்றுச் சிறப்பு மிக்க பழமை வாய்ந்த, மதுரை மாநகரம் எண்ணற்ற தியாக சீலர்களை தந்துள்ளது. அவர்களில் ஒருவர், ‘ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்’எனபவம், தோழர் ஐ.மா.பா., எனவும் அழைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதி. சுதந்திர போராட்ட வீரர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர் என, பன்முகத் திறமை கொண்ட அவரை பற்றி, அனைத்து தகவல்களும் ஒருங்கே இடம் பெற்றிருக்கின்றன இந்த நூலில். அவரது […]

Read more

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார், பா.சு.ரமணன், சூரியன் பதிப்பகம், பக். 191, விலை 150ரூ. யோகி பற்றிய முழுமையான வரலாற்று நூல்! விசிறி சாமியார், கொட்டாங்குச்சி சாமியார், சிகரெட் சாமியார் என, சுட்டப்பட்டு, பின் ஞானியாகப் போற்றப்பட்டவர், யோகி ராம்சுரத்குமார். உ.பி. மாநிலத்தில், நர்தரா எனும் குக்கிராமத்தில், 1918ம் ஆண்டு, டிசம்பர் 1ம் தேதி, ராம்சுரத் குன்வர் பிறந்தார். ‘சுரத்’ எனும் சமஸ்கிருத சொல்லுக்கு, அர்ப்பணிப்பு என்ற பொருள் உண்டு. அந்த வகையில், ராமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குமரனாக வளர்ந்த ராம்சுரத் குன்வர், இளமையிலேயே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு, […]

Read more

எஸ்.எஸ்.போத்தையா கரிசக்காடு

எஸ்.எஸ்.போத்தையா கரிசக்காடு, பா. செயப்பிரகாசம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 188, விலை 140ரூ. மொத்தம் 900 சொலவடைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார் எஸ்.எஸ். போத்தையா, அதை அகர வரிசைப்படுத்தி அழகாகப் பதிப்பித்துள்ளார் பா. செயப்பிரகாசம். பழமொழிகள் எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்தாமல், சொலவடைகள் எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்துவதற்கான விளக்கத்தை இந்த நூல் தெரிவிக்கிறது. மக்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் முதலானவையும், கம்பளத்தார் குறித்த வரலாறும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. டைரி எழுதும் பழக்கத்தைக் கொண்டிருந்த போத்தையாவின் டைரிக் குறிப்புகளும், அவர் பயணித்த ஊர்களின் காட்சிகளும் படங்களுடன் […]

Read more

அண்ணா அருமை அண்ணா

அண்ணா அருமை அண்ணா, ஜி. விசுவநாதன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 90ரூ. பள்ளிக்கூட மாணவர் பருவத்தில் இருந்தே அறிஞர் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, கல்லூரி படிப்பின்போது அவரோடு அடிக்கடி அளவளாவும் வாய்ப்பைப் பெற்று 26 வயதிலேயே அண்ணாவால் பாராளுமன்ற உறுப்பினராக அனுப்பப்பட்டு, தொடர்ந்து சட்டசபை உறுப்பினர், அமைச்சர் என்று அரசியலில் நிறைய முத்திரைகளை பதிப்பித்தவர் வி.ஐ.டி.பல்கலைக்கழக நிறுவனர் வேந்தர் ஜி. விஸ்வநாதன். அண்ணாவை தொடர்ந்து கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று 4 முதல் அமைச்சர்களுடன் அரசியல் பணியாற்றிய ஜி. விஸ்வநாதன், அண்ணா பற்றி முழுமையாக […]

Read more

நேரு குடும்ப வரலாறு

நேரு குடும்ப வரலாறு, முஹம்மத் யூனுஸ், விகடன் பிரசுரம், விலை 210ரூ. பொது வாழ்க்கையில், குறிப்பாக அரசியலில் மனிதர்கள் எப்படி சந்தர்ப்பவாதிகளாகி, சுயநலம் பேணி, நாட்டையும் மக்களையும் மறந்து, மாறி விடுகின்றனர் என்றும், உண்மை நண்பர்கள், பகைவர்கள் எப்படி செயல்பட்டனர் என்றும் ஒரு 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் பல முக்கிய முடிவுகள் எப்படி விளைந்தன என்றும் சுவைபட கூறுகிறது இந்த நூல். நான்கு பகுதிகளாக இந்நூல் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக காந்தீய கொள்கைகளை, சுதந்திரப்போராட்டம் – அதற்காக ஏற்பட்ட இன்னல்களை, இடர்களை தெளிவாக்குகிறது. […]

Read more

தி ஆட்டோபயாகிராபி ஆப் பஸ்டர் கீட்டன்

தி ஆட்டோபயாகிராபி ஆப் பஸ்டர் கீட்டன், ஆலன் ரமோன் கிளின்ட்டன். மவுனப் படங்களின் சகாப்தம் சமீபத்தில் நான் படித்த நூல்களில் என்னை மிகவும் பாதித்த அற்புதமான நூல், பஸ்டர் கீட்டனின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஆலன் ரமோன் கிளின்ட்டன் என்பவர் எழுதிய ‘தி ஆட்டோபயாகிராபி ஆப் பஸ்டர் கீட்டன்!’ கடந்த 1920களில் அமெரிக்காவின் மவுனப் படங்கள், உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பார்க்கப்படுகின்றன. அந்த காலகட்டத்தில் பெரும் புகழ் பெற்ற முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் கீட்டன். உலகப் போரால் தங்களது வாழ்க்கையை இழந்து வெறுப்பிலும் வேதனையிலும் […]

Read more

இரண்டாம் புத்தர்

இரண்டாம் புத்தர், சொ. முத்துக்குமார், வனிதா பதிப்பகம், பக். 120, விலை 60ரூ. நம் நாட்டுக்காக, சமுதாயத்திற்காக, விடுதலைக்காகப் பாடுபட்டவர்களின் தொண்டினை, அப்பா, மகன், மகள் ஆகியோரின் உரையாடல்கள் வழி சின்னஞ்சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அறிந்து கொள்ளச் செய்துள்ளார் ஆசிரியர். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 4/1/2016.   —- எளிமையின் சிகரம் எங்கள் நல்லக்கண்ணு, கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 288, விலை 180ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024665.html எளிமை, தியாகம், கறைபடாத வாழ்க்கை […]

Read more

பத்துப்பாட்டு பொருளடைவு

பத்துப்பாட்டு பொருளடைவு, ச.பொ.சீனிவாசன், சேகர் பதிப்பகம், விலை 350ரூ. தமிழின் உயிர்நிலை இலக்கியங்களாக திகழ்வன சங்க இலக்கியங்கள். தமிர் மொழிக்கு செம்மொழி தகுதியையும், நிலைபேற்றையும் பெற்றுத்தந்த பெருமை, சங்க இலக்கியங்களுக்கு உண்டு. சங்க இலக்கியங்களை பொதுவான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்த அதிகமான நூல்கள் வெளிவந்துள்ளன. அவை போதுமானதாக இல்லை. தவிர, சொல்லடைவுகள், சொல், பொருள், வருமிடம் இலக்கணக் குறிப்பு இவற்றோடு நின்றுவிடுகின்றன. இத்தகைய தரவுகளின் தேவையை மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ள நூல்தான் “பத்துப்பாட்டு – பொருளடைவு” என்னும் ஆய்வு நூல். நன்றி: தினத்தந்தி, […]

Read more
1 23 24 25 26 27 46