டோக்கன் நம்பர் – 18

டோக்கன் நம்பர் – 18, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 160, விலை 100ரூ. திருச்சி மாவட்டத்தில், தனித் திறமையுடன் சிறுகதைகளை எழுதும் எழுத்தாளர்கள் பலர் இருந்தாலும், அவர்களில் 10பேரின் மிகச் சிறந்த சிறுகதைகள் தலா இரண்டாக மொத்தம் 20 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதைகயும் ஒவ்வொரு தளத்தில் பயணிக்கின்றன. இவை கதைகள் என்பதைவிட மனித வாழ்க்கையின் எதார்த்தங்கள் என்று கூறுவது மிகைப் பொருத்தமானது. ஒவ்வொரு எழுத்தாளர்களின் கதை தொடக்கத்திலும், அவர்களைப் பற்றிய சிறப்புகள் சிறு குறிப்புகளாகத் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் கதையான […]

Read more

தம்பலா

தம்பலா, பாரதிவசந்தன், மேன்மை வெளியீடு, விலை 150ரூ. புதுவை எழுத்தாளர் பாரதிவசந்தன் எழுதிய “தம்பலா” சிறுகதைக்கு, ஒரு தனிச்சிறப்பு உண்டு. இக்கதை தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மூன்று மொழிகளில் ஒரே புத்தகமாக வெளிவந்துள்ளது. எனவே ‘மூன்று மொழிகளில் வெளிவரும் தமிழின் முதல் சிறுகதை’ என்ற சிறப்பை ‘தம்பலா’ பெற்றுள்ளது. தீண்டாமைக்கும், சாதி வெறிக்கும் எதிராக இக்கதையை எழுதியிருக்கிறார், பாரதி வசந்தன். வேகமான நடை, அருமையான வர்ணனைகள். தற்கால தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சிறந்த கதை இது. நன்றி:தினத்தந்தி, 20/4/2016.   —- தெருவோரங்கள், […]

Read more

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள், ப்ரியா பாலு, கண்ணப்பன் பதிப்பகம், விலை 400ரூ. விக்கிரமாதித்தன் கதைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது வேதாளமும், விக்கிரமாதித்தனும் பங்கு கொண்ட கதைகளாகும். மன்னன் எப்படி நீதி செலுத்த வேண்டும்? மக்களை எப்படிக் காக்க வேண்டும் என்ற கருத்துகளை விக்கிரமாதித்தன் கதைகள் எடுத்துச் சொல்கின்றன. மேலும் வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்குகின்றன. நன்னெறிகளை கதாபாத்திரங்கள் மூலம் எடுத்துரைக்கின்றன. இந்தக் கதைகள் மந்திரங்கள், தந்திரங்கள், மாயாஜாலங்கள் நிறைந்தவை. அத்தகைய கதைகளை எழுத்தாளர் ப்ரியா பாலு குழந்தைகளுக்கு புரியும் வகையில் எளிமையாகவும், சுவையாகவும் எழுதியுள்ளார். நன்றி: […]

Read more

வளமான வாழ்வு பெற மந்திரங்கள்

வளமான வாழ்வு பெற மந்திரங்கள், ஆபஸ்தம்பன், அழகு பதிப்பகம், விலை 45ரூ. வாணிபம், தொழில் விவசாயம், வழக்குகளில் வெற்றி பெற வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பலன்களையும் பெறுவதற்கு துணை நிற்கும் 112 மந்திரங்கள் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 13/4/2016.     —- யோக வாசிஷ்டம் ஞானத்தின் நுழைவாயில், சிவராமகிருஷ்ண சர்மா, நர்மதா பதிப்பகம், விலை 125ரூ. ஆத்ம தத்துவத்தை விரிவாகச் சொல்லும் நூல். சிறு சிறு கதைகள் மூலம் மிகப்பெரிய ரகசியங்களை தெளிவாக விளக்கப்பட்டுள்ளதால் ஆர்வமாக படித்தால் எளிதில் விளங்கும் வகையில் […]

Read more

இசைப்பாட்டு இலக்கியம்

இசைப்பாட்டு இலக்கியம், கி. கோவிந்தராசு, வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 100ரூ. திரையிசைப் பாடல்களும் இலக்கியச் சுவையுடையவையே என்று நிறுவும் நூல். பஞ்சு அருணாசலம், கங்கை அமரன், டி. ராஜேந்தர் ஆகியோர் பாடல்கள் வழி இதை நிரூபித்திருப்பது சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.   —- ஊமையின் பேச்சு, ந. வேலுசாமி, அருளகம் வெளியீடு, பக். 224, விலை 150ரூ. ந. வேலுசாமி எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. ரத்தமும் சதையுமான உறவுகளை உணர்வு பூர்வமாக சித்தரித்துள்ளன இக்கதைகள். -இரா. மணிகண்டன். […]

Read more

சப்தமில்லாத சப்தம்

சப்தமில்லாத சப்தம், ஓஷோ, தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 312, விலை 200ரூ. புராதன இசையைத்தான் சப்தமில்லாத சப்தம் என்கிறார் ஓஷோ. அது நம்மைச் சூழ்ந்துதான் இருக்கிறது. ஆனால் அதை நம்மால் உணர முடியாது. அதைக் கேட்டுணரும் முயற்சிதான் தியானம் என்கிறார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.   —– சிந்திக்க வைக்கும் சிறுவர் கதைகள், சுப்ரபாரதி மணியன், விஜயா பதிப்பகம், பக். 64, விலை 30ரூ. இன்பச் சுற்றுலா உள்ளிட்ட 11 சிறுகதைகளின் தொகுப்பு. சின்னஞ்சிறுகதைகள் மூலம் மாணவர்களுக்கு ஆதிவாசிகள். […]

Read more

100 சிறுதானிய சமையல் 1

100 சிறுதானிய சமையல் 1, எஸ். மல்லிகா பத்ரிநாத், பிரதீப் எண்டர்பிரைசஸ், பக். 107, விலை 100ரூ. கம்பையும் கேழ்வரகையும் கொண்டு 100 வகையான உடல் ஆரோக்கியமிக்க சமையலைத் தந்துள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.   —- டோக்கன் நம்பர் 18, தொகுப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன், இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 106, விலை 100ரூ. திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் மிகச் சிறந்த 20 கதைகளைத் தேர்வு செய்து நூலாகத் தந்துள்ளார்கள். மனித வாழ்வின் யதார்த்தத்தை பதிவு செய்யும் கதைகளே இவற்றில் […]

Read more

இயக்குனர் கே. சோமு : நாம் பெற்ற செல்வம்

இயக்குனர் கே. சோமு : நாம் பெற்ற செல்வம், விஸ்வபாரதி, காவ்யா, விலை 180ரூ. குறைந்த செலவில் சிறந்த படங்களை எடுத்தவர் டைரக்டர் கே. சோமு. சம்பூர் ராமாயணம், பாவை விளக்கு, மக்களைப் பெற்ற மகராசி, நான் பெற்ற செல்வம் ஆகியவை, சிவாஜிகணேசன் நடித்து சோமு இயக்கியவை. குறிப்பாக, “மக்களைப் பெற்ற மகராசி” திரைப்பட வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்ற படம். சிம்மக்குரலில் இயல்பாக பேசி நடித்து வந்த சிவாஜி கணேசன் இப்படத்தில் கொங்கு நாட்டு மக்கள் பேசுகிற பாணியில் பேசி நடித்தார். வட்டார […]

Read more

வேந்தன் சிறுகதைகள்

வேந்தன் சிறுகதைகள், வேந்தன், பண்மொழி பதிப்பகம், பக். 200, விலை 150ரூ. தமிழ் இலக்கிய வரலாற்றில், இடதுசாரி சிந்தனையாளர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் சாதாரண தொழிலாளியாக இருந்து, தன் பார்வையை சிறுகதைகளாக செதுக்கியவர்களில் பி.டி.சிரிலும் ஒருவர். வேந்தன் என்ற புனைப்பெயரில் அவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. மனிதநேயத்துடன் சாதாரண மனிதர்களை பற்றியும், தன்னை சுற்றிய நிகழ்வுகளையும் கதைக் கருவாக கொண்டு எழுதியுள்ளார். சாதாரண நிகழ்வும், அன்றாட வாழ்க்கையின் பாதிப்பும் அற்புதமான கதைகளாக நம்முன் உருவெடுத்து நிற்கின்றன. பொருளாதார ஏற்றத்தாழ்வையும், உழைக்கும் வர்க்கம் […]

Read more

வங்கமொழிச் சிறுகதைகள்,

வங்கமொழிச் சிறுகதைகள், தொகுப்பு 3, தொகுப்பாசிரியர் அஷ்ருகுமார் சிக்தார், தமிழில் பெ. பானுமதி, சாகித்திய அகாதெமி, பக். 576, விலை 400ரூ. மொத்தம் 28 சிறுகதைகள். மேற்கு வங்கத்தின் ரத்தமும் சதையுமாக! இந்தக் கதைகள் வங்காளிகளின் வாழ்க்கையை விரிவாகவும் ஆழமுமாகக் காட்டுகிறது. மேற்கு வங்க மாநிலம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாகவே இருந்துள்ளது. இங்கே மாவோயிஸ்டுகளும் இருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகளுக்கு மாற்றுக்கருத்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். இங்கும் நகரம் இருக்கிறது. படிப்பறிவில்லாத கிராம மக்களும் இருக்கிறார்கள். இந்தத் தொகுப்பின் சில கதைகள் பொதுத்தன்மை கொண்டிருந்தாலும் […]

Read more
1 35 36 37 38 39 80