சென்னை 1639க்கு முன் பின்

சென்னை 1639க்கு முன் பின், டாக்டர். கு. பகவதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. தமிழகத்தின் தலைநகரான சென்னையைப் பற்றி, அறிந்து கொள்வதில் யாருக்கும் எப்போதும் ஆர்வம்தான். சென்னை, நாட்டின் மற்ற நகரங்களுக்கு இணையாக உருவெடுத்து வருகிறது. ஆனாலும், சென்னையின் வாழ்வியல் வரலாற்றில், 1639 சிறப்பு மிகு ஆண்டு. ஏனெனில், அதுதான் சென்னை பிறந்த ஆண்டு. சின்னஞ்சிறு ஊர்களின் சிதறலாக காணப்பட்ட, சென்னைப் பட்டினத்தின் ஊர்ப்பெயர்கள் காரணப்பெயர்களாக அமைந்துள்ளன. வடசென்னையில் நாணயத் தொழிற்சாலை உருவாக்கும் திட்டத்தின் படி, தங்க நாணயங்கள் அச்சடிப்பதற்காக கட்டடம் உருவாக்கப்பட்டது. […]

Read more

முதலாளி ஆனவர்களின் வெற்றிக்கதை

முதலாளி ஆனவர்களின் வெற்றிக்கதை, பெரிகாம், 37, அசீஸ் மூல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை 6, விலை 80ரூ. தொழில் அதிபர்களாக உயர்ந்தவர்களின் வாழக்கை வரலாற்றைப் படித்துப் பார்த்தால் அந்த வெற்றிக்குப் பின்னால் கடும் உழைப்பு இருப்பது தெரியும். குறைந்த முதலீட்டில் முதலாளி ஆன 23 தொழில் முனைவோரின் வெற்றிக் கதைகள் தொழிலாளி டு முதலாளி என்ற இந்த நூலில் அடங்கியுள்ளன. இந்த வெற்றிக் கதைகளை இளங்குமார் சிங்காரம் விறுவிறுப்புடன் எழுதியுள்ளார். முதலாளியாக உயர விரும்புவோர் படிக்க வேண்டிய புத்தகம்.   —- […]

Read more

இஸ்லாத்தின் ஐந்து தூண்கள்

இஸ்லாத்தின் ஐந்து தூண்கள், கமருன் பப்ளிகேஷன், நெ.7, தனலட்சுமி காலனி முதல் தெரு, சாலிகிராமம், சென்னை 93, விலை 75ரூ. மனிதனிடத்தில் நற்பண்புகள், இறையம்சம், மனிதநேயம் போன்றவற்றை உருவாக்குவதற்காக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலமாக இறைவன் அறிமுகப்படுத்திய இஸ்லாத்தின் ஐந்து தூண்கள் என்றழைக்கப்படும் கலிமா (உறுதிமொழி), தொழுகை, நோக்பு, ஜக்காத் (ஏழை வரி), ஹஜ் ஆகியவை குறித்து பல ஆதார நூல்கள் உதவியுடன் அழகாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார் நூலாசிரியர் அல்ஹாஜ் என். முகம்மது மீரான். மேலும் இந்நூலில் மனிதர்களுக்கு நேர் வழி காட்டும் […]

Read more

திருவள்ளுவர் ஒரு சிறந்த மனோதத்துவ நிபுணர்

திருவள்ளுவர் ஒரு சிறந்த மனோதத்துவ நிபுணர், தி. கலியராஜன், மணிமேகலைப் பதிப்பகம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 105ரூ. திருக்குறளில் மன இயல் உண்மைகளை திருவள்ளுவர் எவ்வாறு குறிப்பிடுகிறார் என்று சான்றுகளுடன் கூறப்பட்டுள்ளது. வெவ்வேறு தலைப்புகளில் 8 கட்டுரைகளின் ஏராளமான தகவல்கள் அடங்கி உள்ளன.   —-   நினைக்க வைக்கும் நிமிடக் கதைகள், அறிவுப் பதிப்பகம், 16(142), ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 155ரூ. சிறுவர் சிறுமியர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்பிப் படிக்கக்கூடிய 100 குட்டிக் […]

Read more

நோய்மனம்

நோய்மனம், கோவி. பால. முருகு, தமிழ்வேந்தன் பதிப்பகம், வடலூர் 607303, பக். 112, விலை 70ரூ. கண்ணில் பட்டு கருத்தில் பதிந்து மனதைவிட்டு அகலாத கருத்தை ஏற்படுத்துபவையே சிறந்த சிறுகதைகள் என்பர் இலக்கிய ஆர்வலர். நூலாசிரியர் நல்ல சிறுகதைகளைப் படைக்க முயற்சித்திருப்பது தெரிகிறது. ஆனால், அதே சமயம், கருத்துத் திணிப்பின் களமாக சிறுகதையை அவர் பயன்படுத்துகிறாரோ என்ற எண்ணத்தை படிப்போர் மனதில் ஏற்படுத்துவதையும் தவிர்க்க முடியவில்லை. திருப்பம் என்ற முதல் சிறுகதையில் தொடங்கி வேட்கை வரையில் கதையை அவசர அவசரமாகக் கூறுவதுபோல இருக்கிறது. கதையைப் […]

Read more

வேடிக்கை வினோதக் கதைகள்

வேடிக்கை வினோதக் கதைகள், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சன்னை 17, விலை 350ரூ. பெரியவர்களுக்கு கவுசிகள் என்ற பெயரிலும், சிறுவர்களுக்கு வாண்டு மாமா என்ற பெயரிலும் கதை எழுதும் வி.கே. மூர்த்தி,இப்போது சிறுவர்களுக்காக பெரிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ராஜா ராணி கதைகள், மந்திராவாதிக் கதைகள், மர்மக் கதைகள், சிரிக்க வைக்கும் கதைகள் இப்படி பலதரப்பட்ட கதைகள் இதில் உள்ளன. மொத்தம் 50க்கும் மேற்பட்ட கதைகள், சுவையும், விறுவிறுப்பும் மிக்க கதைகள். சிறுவர் சிறுமிகள் கையில் எடுத்தால், படித்து […]

Read more

வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள்,வையவன், தாரிணி பதிப்பகம், பக். 418, விலை 450ரூ. சிறுகதை என்ற இலக்கிய முயற்சி, எதிர் காலத்தில் எங்கே இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கும் நேரத்தில், வெளிவந்திருக்கிறது இந்த சிறுகதை தொகுப்பு. ஆசிரியர் அரை நூற்றாண்டுக்கும் மேலாய் தமிழ்ச் சிறுகதைகள் உலகில் தனி முத்திரை பதித்தவர் என்று போற்றப்படுபவர். 418 பக்கங்களில் 80 சிறுகதைகள் அடங்கிய இந்த பிரம்மாண்டமான தொகுப்பு சிறுகதைப் பிரியர்களுக்குக் கொடுத்த விருந்து என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு கதையுமே படித்து ரசிக்க வேண்டியவை. -மயிலை சிவா.   —- […]

Read more

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-181-7.html சிறந்த தமிழ்ச் சிறுகதைகளைக் கொண்ட நூல் ஒன்றை எழுத்தாளர் தமிழ்மகன் உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு சிறுகதை வீதம் 13 சிறுகதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. மகாகவி பாரதியார், வ.வே.சு. அய்யர், புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், சுஜாத உள்பட 13 எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. தேர்வு செய்யப்பட்டவை சிறந்த கதைகள்தான். ஆயினும், பத்தாண்டுக்கு […]

Read more

கனவுகள்

கனவுகள் (ஒரிய மொழி சிறுகதைகள்), சந்திரசேகர் ராத்,ரா. குமரவேலன், சாகித்யஅகடமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 400, விலை 190ரூ. பேராசிரியர் சந்திரசேகர் ராத், ஒரிய மொழி எழுத்தாளர்களில் மிகச் சிறந்த ஒருவராகக் கருதப்படுபவர். அவர் ஒரு நாவலாசிரியரும், நல்ல கவிஞரும் கூட. அவர் எபதிய நூற்றுக்கணக்கான சிறுகதைகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படும் 25 சிறுகதைகளை மொழிபெயர்த்து தொகுத்திருக்கின்றனர். இவற்றில் சாமூவேல் பாதிரியாரின் கதை, உள்ளத்தை உருக்குவதாய் இருக்கிறது. அனாதை ஆசிரமத்தை நிர்வகிக்க அவர் படும்பாடு, தியாகம் ஆகியவை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. […]

Read more

வேதாளம் கேட்காத கேள்விகள்

வேதாளம் கேட்காத கேள்விகள், சாகித்ய அகாதெமி, சென்னை, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 85ரூ. தேர்வறையில் மாணவனின் மனநிலையின் வழியே நாட்டு நடப்புகளை விவரிக்கும் புதுமையான நூல் வேதாளம் கேட்காத கேள்விகள். எழுத்தாளர் சுனில் மலையாளத்தில் எழுதிய விக்ரமாதித்யம் என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே இந்நூல். முனைவர் த.விஷ்ணுகுமாரன், நூலாசிரியரின் நோக்கம் சிதையாமல் அழகாக மொழி பெயர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 13/11/2013.   —-   அறியப்படாத தமிழ் உலகம், பா. இளமாறன் சிவக்குமார் கோ. கணேஷ் பல்வேறு […]

Read more
1 64 65 66 67 68 80