நானா போனதும் தானா வந்ததும்

நானா போனதும் தானா வந்ததும், பாக்கியம் ராமசாமி, வானதி பதிப்பகம், விலை ரூ. 100. ‘சிரிப்பு மருந்து, தினமும் இரண்டுவேளைகள்’ என்னும் குறிப்போடு முப்பத்தெட்டுவிதமான ‘வைத்தியங்கள்!’  போதாக்குறைக்கு தொழில்முறை டாக்டர் ஒருவரே (டாக்டர் என். சுந்தர்) அணிந்துரை தந்திருக்கிறார். ‘சிரிப்பு வைத்திய நிபுணர்’ பாக்கியம் ராமசாமியின் ‘நானா போனதும், தானா வந்ததும்! ’ நூலுக்குத்தான்!  ‘ பாக்கியம் ராமசாமியிடம் உம்மணா மூஞ்சிகூடத் தோற்றுப் போய்விடுவான்’ என்று கல்கி. ராஜேந்திரன் முன்னுரைப்பதை ‘கிராப்பைக் கலைக்க இருநூரு ரூபாயா?’ கட்டுரை ஒன்றே  நிரூபித்து விடுகிறது. ‘தாத்தா’ தம்முடைய […]

Read more

A History of Ancient Tamil Civilization

A History of Ancient Tamil Civilization, ஏ. ராமசாமி, நியு செஞ்சுரி புக் ஹவுஸ், 418, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 053, விலை: ரூ.130. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக மிகுந்த தொல்லியல் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அவற்றுள் கடந்த 30 ஆண்டுகளுக்குள் மிகவும் சிறப்பான பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இரும்பு கால நாகரீகத்தின் காலத்தை கணித்தது மட்டுமல்லாமல், தமிழ் மற்றும் தமிழரின் நாகரிகத்தின் பல பரிமாணங்களை கல்வெட்டியல் மற்றும் நாணயவியல் துறை வல்லுநர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு […]

Read more

தமிழ்நாட்டில் காந்தி

தமிழ்நாட்டில் காந்தி, சந்தியா பதிப்பகம், 77, 53 ஆவது தெரு, 9ஆவது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 83. விலை ரூ. 75 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-8.html சுதந்திரப் போராட்டத்தின்போது 1934 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். தமிழ்நாட்டில் 23.2.1934 முதல் ஒரு மாத காலம் ரெயிலிலும் காரிலும் வண்டியிலும் பயணம் செய்தார். அப்போது காந்தியுடன் சென்றவர்களில், திருச்சியில் பிரபல டாக்டராக இருந்தவரும், பிற்காலத்தில் காங்கிரஸ் மந்திரிசபையில் இடம் பெற்றவருமான டாக்டர் டி.எஸ்.எஸ். […]

Read more

சின்மயி விவகாரம்: மறுபக்கத்தின் குரல்

சின்மயி விவகாரம்: மறுபக்கத்தின் குரல், விமலாதித்த மாமல்லன், சத்ரபதி வெளியீடு, 5/6 CPWD (Old) Qtrs, பெசன்ட் நகர், சென்னை – 90. விலை ரூ.120 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-900-8.html சமூக வலைத்தளங்கள் கடந்த சில ஆண்டுகளில் தமிழில் விவாதங்களின் மொழியை முற்றாக மாற்றியமைத்துவிட்டன. சீரான, தர்க்கபூர்வமான வாதமுறைகள் மறைந்து, குறுக்குவெட்டாக பாய்ந்து செல்லும் வாத முறை இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. பாடகி சின்மயி ட்விட்டரில் தெரிவித்த சில கருத்துகள், அவர் மீது தெரிவிக்கப்பட்ட சில கருத்துகள் எல்லாம், சில […]

Read more

சயாம்-பர்மா மரண ரயில் பாதை

சயாம்-பர்மா மரண ரயில் பாதை, சீ. அருண், விலை ரூ. 130; சயாம் மரண ரயில், சண்முகம், விலை ரூ. 150, தமிழோசை பதிப்பகம், 21/8 கிருஷ்ணா நகர்,   மணியக்காரம்பாளையம் சாலை, கணபதி, கோவை- 641012. ‘கேட்டிருப்பாய் காற்றே’ என்று மனம் கசந்து கண்ணீர் சிந்திய உலகத் தமிழர்களின் அவல வரலாறுகள் ஏராளம். ஆனால் தமிழர்களின் எந்தப் பேரவலமும் உலக வரலாற்றில் எந்த முக்கியத்துவமும் பெறுவதில்லை. நீதிமிக்க சமூகத்தின் பார்வைக்கும் வருவதில்லை. இரண்டாம் உலகப் போரின்போது சயாம்-பர்மா ரயில் பாதை அமைப்பதற்காக கூலிகளாக […]

Read more

விகடன் இயர்புக் 2013

விகடன் இயர்புக் 2013, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 2. விலை ரூ. 125 இது போட்டிகள் நிறைந்த உலகம். இதில் கல்வியும் அறிவும் ஒரு சேரப் பெற்ற மனிதனே வெற்றிபெற முடியும். கல்வியையும் பட்டங்களையும் கொடுக்கும் கல்லூரிகள், அறிவைக் கொடுக்கிறதா என்பது கேள்விக்குறி. இந்த நிலையில், அறிவு ஆயுதத்தை விகடன் பிரசுரம் தயாரித்துள்ளது; ஆண்டுதோறும் தயாரிக்கவும் உள்ளது. ‘புறத்தை அறிந்துகொள்ளப் பயன்படுவது தகவல். தன் அகத்தை ஆராய்ந்து தெளிவதற்கு முற்படுவது அறிவு. வாழ்வின் இருப்பை விளங்கிக்கொள்ள வழிவகுப்பது ஞானம்’ என்று, […]

Read more

இருட்டிலிருந்து வெளிச்சம்

இருட்டிலிருந்து வெளிச்சம், அசோகமித்திரன், நற்றிணை பதிப்பகம், புதிய எண்: 243, ஏ. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005. விலை ரூ. 240 சினிமா தொடர்பாக அசோகமித்திரன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இவை வெறும் சினிமா விமர்சனங்களோ, அல்லது திரையுலகம் சம்பந்தமான தகவல் குறிப்புகளோ அல்ல. ஒரு எழுத்தாளன் இந்த பிரமாண்டமான கலையில் எதிர்கொண்ட சில அந்தரங்க தருணங்களைப் பற்றியது இந்த நூல். அந்த தருணங்கள் ஒரு எழுத்தாளனின் நுட்பமான மனதிற்கு மட்டுமே தட்டுப்படுபவை. சினிமாவைப் பொறுத்தவரை நமக்கு முன்னே கடந்து […]

Read more

தமிழ் மக்கள் வரலாறு – சோழப் பேரரசின் காலம்

தமிழ் மக்கள் வரலாறு – சோழப் பேரரசின் காலம், க.ப. அறவாணன், வெளியீடு: தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை – 600 029. விலை ரூ. 250 கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, தி.வை.சதாசிவ பண்டாரத்தா, கே.கே.பிள்ளை – ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் சோழர் பேரரசு பற்றிய முதன்மை வரலாற்றை எழுதியதில் முக்கியமானவர்கள். இதில், பெரும்பாலும் சோழ அரசர்களின் வரலாறு முழுமையாகவும், சோழர்காலச் சமூக வரலாறு சற்றே குறைவாகவும் இருக்கும். மன்னர்களின் வரலாற்றைவிட, மக்களின் வரலாற்றைச் சொல்வதே உண்மையான வரலாறாக இருக்க […]

Read more

அஞ்ஞாடி

அஞ்ஞாடி, பூமணி, பக்கங்கள் 1066, வெளியீடு: க்ரியா, பி-37, கிரவுண்ட் ஃப்ளோர், 5வது குறுக்குத் தெரு, யுனிவர்சிட்டி காலனி, பாலவாக்கம், சென்னை – 41. விலை ரூ. 925 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-208-0.html தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் வரிசையில், கம்பீரமான ஓர் ஆசனத்தைப் பூமணிக்குத் தந்து இருக்கிறது ‘அஞ்ஞாடி’. ஆண்டி, மாரி என்ற இருவர் இடையே முகிழும் நட்பு தலைமுறை தலைமுறையாகத் தொடரும் கதை… அதனூடே கடக்கும் வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள்… இவைதான் ‘அஞ்ஞாடி’. […]

Read more

உயிர்ச்சொல்

உயிர்ச்சொல், கபிலன் வைரமுத்து, பக்கம் 200, கிழக்கு பதிப்பகம், சென்னை – 14. விலை ரூ. 150 To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-207-2.html நீண்ட நாட்களாக குழந்தையில்லாமல் ஏங்கித் தவித்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் மன உளைச்சல்களையும் அதிலிருந்து அவள் மீண்டதையும் உணர்வுபூர்வமாகச் சொல்லும் நாவல். அவளுடைய கணவன் ஊடகத்துறையில் செயல்படக்கூடியவன், அவனுடைய நண்பர்கள் நாட்டின் ஊழல் அரசியலை முடிவுக்குக் கொண்டுவர முயல்கிறார்கள். இணையதளங்கள் மூலமாகவும், கண்காட்சிகள் மூலமாகவும் மக்கள் விழிப்புணர்வு பெற வைக்கப் பாடுபடுகிறார்கள். […]

Read more
1 2 3 4 5 16