வாலிப வாலி

வாலிப வாலி, நெல்லை ஜெயந்தா, பக். 372, வாலி பதிப்பகம், 12/28, சௌந்தர்ராஜன் தெரு, தி.நகர், சென்னை – 17, விலை ரூ. 250 82 வாரங்களாக சென்னை பொதிகை தொலைக்காட்சியில் கவிஞர் வாலியுடன் நிகழ்த்திய நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். தமிழ் சினிமாவின் வரலாற்றினை வாலியின் மனப்பெட்டகத்தில் இருந்து அள்ளி எடுத்துத் தந்திருக்கிறார்கள். திரை உலகின் ஒவ்வொரு அங்குலத்தையும் வாலியின் வாக்கு அளந்து வைக்கிறது. நம் கண்முன் நான்கு தலைமுறையைத் தாண்டியும் அவரது திரைத்தமிழ் வெள்ளமாய் ஓடிவருவதை ஒவ்வொரு நேர்காணலின்போதும் ரசிக்க முடிகிறது. நான் […]

Read more

எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு

எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு, ம.பொ. சிவஞானம், பக்கம் 160, பூங்கொடி பதிப்பகம், சென்னை – 4. விலை ரூ. 60 ‘செங்கோல்’ வார இதழில் ம.பொ.சிவஞானம் ‘நானறிந்த கலைஞர்கள்’ என்ற தலைப்பில் எழுதிய தொடரின் நூல்வடிவம் இது. எம்.ஆர். ராதா, என்.எஸ். கிருஷ்ணன், கே.ஆர். ராமசாமி போன்ற கலைஞர்களைப் பற்றிக் குறைவாகவும், மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பற்றிய தகவல்கள் அதிகமாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு நடிகர் என்ற முறையிலும், ஓர் அரசியல்வாதி என்ற முறையிலும், நல்ல மனிதர் என்கிற முறையிலும் எம்.ஜி.ஆரின் நற்பண்புகளை மிகவும் சுவையாக விவரித்துச் […]

Read more

பாஷாவும் நானும்

பாஷாவும் நானும், வெளியிட்டோர்: வெஸ்ட்லேண்ட், வெங்கட் டவர், 165, பூந்தமல்லி ஐரோடு, மதுரவாயல், சென்னை – 95. விலை ரூ. 125 ரஜினிகாந்த்தின் திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல்கல் “பாட்ஷா.” அவர் ஒரு சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, வசூல் சக்ரவர்த்தி என்று எடுத்துக்காட்டிய படம். ரஜினி நடித்த பாட்ஷா, அண்ணாமலை, வீரா ஆகிய படங்களை டைரக்ட் செய்தவர் சுரேஷ்கிருஷ்ணா. பாட்ஷா படமாகும்போது நடந்த சுவையான சம்பவங்கள், படப்பிடிப்பில் ரஜினி காட்டிய ஆர்வம், படத்தில் செய்யப்பட்ட மாறுதல்கள்… இவைகளை எல்லாம் கதைபோல் எழுதியிருக்கிறார்கள், சுரேஷ் […]

Read more

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி…

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி…, முனைவர் அ.அய்யூப், நவமணி பதிப்பகம், 44, எல்டாம்ஸ் ரோடு, சென்னை – 18. விலை ரூ. 90 “இந்தியா முன்னேற வேண்டுமானால் கனவு காணவேண்டும்” என்றார், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம். நாம் எதை எண்ணி கடுமையாக உழைக்கிறோமோ, அத்துறையில் நமக்கு வெற்றி நிச்சயம் என்கிறார், முனைவர் அ.அய்யூப். சாதாரண நிலையில் இருந்த பல தொழில் அதிபர்கள், பிரமுகர்கள் எப்படி உழைப்பால் உயர்ந்தார்கள், வாழ்க்கையில் வெற்றி பெற்றார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறார். அதிர்ஷ்டம் இருந்தால்தான் முன்னேறலாம் என்று நினைப்பது தவறு […]

Read more

மணி மணி மணி! பணத்தை பெருக்கும் வழிமுறைகள்

கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜன், டாக்டர் என். ஸ்ரீதரன், கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு,  தி.நகர், சென்னை – 17. விலை ரூ. 70 ஈரோட்டில் பிறந்த கணிதமேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாறு. ராமானுஜன் வாழ்வில் நடைபெற்ற சுவையான, முக்கிய சம்பவங்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. 33 வயதே வாழ்ந்த இந்த வாலிபரின் கண்டுபிடிப்புகள், கணக்கியலில் புரட்சியை, மறுமலர்ச்சியை நேரடியாக ஏற்படுத்தி உள்ளது. தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டிய வரலாறு.   —   துளிர்க்கும், இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், 13, […]

Read more

நடந்தது நடந்தபடி… (ஒரு ஐ.ஏ.எஸ். அலுவலர் நடந்துவந்த பாதை)

நடந்தது நடந்தபடி… (ஒரு ஐ.ஏ.எஸ். அலுவலர் நடந்துவந்த பாதை), ஏ.எம். சுவாமிநாதன், நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை – 17. விலை ரூ. 100 ஆதாயம் தேடுவோரும் ஆள்காட்டிகளும் அதிகார வர்க்கத்தில் அதிகமாகிப்போன இந்தக் காலகட்டத்தில் இப்படி ஒரு புத்தகம் வந்துள்ளது. ஐ.ஏ.எஸ். என்ற உயரிய பொறுப்பை தனக்கான கௌரவமாகக் கருதாமல், மக்களுக்குச் சேவை செய்யக் கிடைத்த வாய்ப்பாகக் கருதிச் செயல்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஏ.எம். சுவாமிநாதன். தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று சொல்லாமல், ஐ.ஏ.எஸ். அலுவலர் என்றவர். […]

Read more

உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள்

உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள், அஜன் பிராம், பக். 304, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை – 17. விலை ரூ. 150 இந்நூலின் ஆசிரியர் தனது பிரசங்கத்தின்போது கூறிய கதைகளின் தொகுப்புதான் இந்நூல். ஒவ்வொரு கதையும் நமது நிஜவாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இக்கட்டான நேரத்தில் எதுவும் செய்வதற்கில்லை என்ற நிலை வந்தால் பேசாமல் அமைதியாக இருந்துவிடு. இதனால் உயிரையே காக்கும் அறிவுத் திறம் உனக்கு ஏற்படும் என்று ஆதாரத்துடன் ஒரு கதையில் விளக்குகிறார் அஜன் பிராம். நமது இளமைக் காலத்திலேயே அதிகம் பேசாமல் […]

Read more

ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம்

ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம், திருச்சி வேலுசாமி, தொகுப்பு: பா. ஏகலைவன், பேட்ரிஷியா பதிப்பகம், 2/40 பி, இரண்டாவது தளம், ராம் நகர், நங்கநல்லூர், சென்னை – 61. விலை ரூ. 200 அந்தத் துன்பச் சம்பவம் நிகழ்ந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், உண்மைக் குற்றவாளிகள் யார் என்று முழுமையாகத் தெரியவில்லை. இந்தியப் பிரதமர் நாற்காலியில் இருந்த ராஜீவ் காந்தியின் பச்சைப் படுகொலையில்கூட இத்தகைய மெத்தனமான விசாரணை நடத்த முடியுமானால் சாமான்யனின் மரணத்தில் சட்டத்தின் ஆட்சி என்பது பல முக்கியமான நிகழ்வுகளில் தனி மனிதர்களின் […]

Read more

2012 சிறந்த 10 புத்தகங்கள் – ஜெயமோகன்

2012 சிறந்த 10 புத்தகங்கள் – ஜெயமோகன் சரிவிகித உணவு பற்றி நாம் ஐந்தாம் வகுப்பிலேயே வாசிக்க ஆரம்பித்திருப்போம். எல்லா சத்துகளும் அடங்கிய உணவுதான் உடல்நலத்துக்கு நல்லது. ஏதேனும் ஒரு சத்து மிகையாக இருந்தாலும், குறைந்தாலும்… நோயையே உருவாக்கும். வாசிப்பிலும் அப்படி ஒரு சரிவிகித நிலை வேண்டும். எல்லா அறிவுத்தளங்களிலும் முக்கியமான நூல்களை வாசிப்பதுதான் அவசியமானது. அதுவே சமநிலை கொண்ட முழுமையான நோக்கை உருவாக்கும். நாக்கின் சுவை கருதி உண்பது எப்படி நோயை அளிக்குமோ, அப்படித்தான் வாசிப்பின் சுவை மட்டுமே கருதி வாசிப்பதும். தமிழில் […]

Read more

உலகம் அழியுமா? ஏன்? எப்போது? எப்படி?

உலகம் அழியுமா? ஏன்? எப்போது? எப்படி?, பி.எம். கலீலுர் ரஹ்மான் மன்பஈ, ஸலா பப்ளிகேஷன், 21/10, 4-வது தெரு, மந்தைவெளி பாக்கம், சென்னை – 28. விலை ரூ. 100 உலக அழிவு குறித்து அன்றும் இன்றும் வெளியான சுவையான திகிலூட்டும் பல்வேறு செய்திகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக – விஞ்ஞானிகள், வான்கலை வல்லுநர்கள், புவியியல் அறிஞர்கள், கடல் ஆராய்ச்சியாளர்கள், ஜோதிடர்கள் அனைத்து மத தீர்க்க தரிசிகள், ஞானிகள், நாஸ்டர்டாம், சாக்ரடீஸ் போன்ற முற்கால தத்துவவாதிகள்… என்று பலரும் பல்வேறு காலகட்டங்களில் கூறிய காரணங்களை எல்லாம் தேடிப் பிடித்து, அதற்குரிய […]

Read more
1 2 3 4 5 6 16