ஆழி பெரிது

ஆழி பெரிது, அரவிந்தன் நீலகண்டன், மதி நிலையம், சென்னை, பக். 288, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-237-2.html சோமபானம் என்பது எந்தவகை பானம்? சிந்துவெளி நாகரிகம், வேத காலம் துவங்கி இன்று வரை இடையுறாத பண்பாட்டு தொடர்ச்சி கொண்டவை, இந்து மதமும் இந்து கலாச்சாரமும். அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள ஆழி பெரிது என்ற நூல் இந்து பண்பாட்டின் பல்வேறு அம்சங்களையும் வரலாற்றுப் புதிர்களையும், சர்ச்சைக்குரிய விஷயங்களையும், அறிவு பூர்வமாகவும் அதேநேரம், மிக சுவாரசியமாகவும் முன்வைக்கிறது. தமிழ் பேப்பர் […]

Read more

கம்பனைத் தேடி

கம்பனைத் தேடி, சாலமன் பாப்பையா, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 256, விலை 175ரூ. பிர்மஸ்ரீ வாசுதேவ் கோவிந்தாச்சார்யா, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா உள்பட 9 பேரின் படைப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கம்பனில் சட்டம் என்ற கட்டுரை, ராம காவியத்தில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள் நிகழ்த்திய சூழ்ச்சிகள் எந்தெந்த குற்றப் பிரிவுகளில் வருகின்றன? தசரதன் கைகேயிக்குக் கொடுத்த வாய்மொழி ஒப்பந்தம் சட்டப்படி செல்லுபடியாகுமா? கம்பனின் படைப்பில், தசரதனின் காலத்திலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்த விதம் போன்றவற்றை விளக்கி நம்மை வியக்க […]

Read more

கானுயிர் ஒளிப்படக் கலைஞர்கள்

கானுயிர் ஒளிப்படக் கலைஞர்கள், பெஸ்ட் போட்டோ கிராபி டுடே, பக். 196,விலை 200ரூ. புகைப்பட கலைஞர்களுக்கு உதவும் வகையில், தமிழில் வெளிவரும் பெஸ்ட் போட்டோகிராபி டுடே குழுமத்தில் இருந்து வந்துள்ள புதினம்தான், இந்த நூல். வைல்டு லைப் போட்டோகிராபி எனப்படும் கானுயிர் புகைப்பட கலை, தற்போது அதிகம் பேசப்படும் ஒரு அற்புதமான புகைப்பட கலை. தங்களின் மனதிருப்திக்காக, பெரும்பாலும் இவர்கள் படம் எடுத்தாலும், சுற்றுச்சூழலுக்கு இவர்களின் பங்களிப்பு பெரிதாக இருக்கிறது. இவர்களுக்குள் ஒரு அறிமுகமும், தொடர்பும் இல்லாத நிலை இருப்பதால், வீண் அலைச்சல், செலவு […]

Read more

நெல்லை வட்டார வழக்குச் சொல் தொகை

நெல்லை வட்டார வழக்குச் சொல் தொகை, வெள்உவன், தமிழினி, சென்னை, விலை 80ரூ. பண்பாட்டை அறிய உதவும் சொற்கள் மொழி என்றாலே பேசு எனப் பொருள் கொள்ளலாம். ஆனால் இன்று மொழி, பேச்சு, எழுத்து என இரு வடிவங்களில் வெளிப்படுகிறது. எழுத்து வடிவத்திற்குச் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் பேச்சுக்கு எல்லைகள் இல்லை ஆக பேச்சு வடிவத்தில் மொழி அதன் அத்தனை சாத்தியங்களையும் கண்டடைய முயலும். ஒவ்வொரு பகுதிக்கும் தமிழ் ஒரு தனித்த மொழி வெள்ப்பாட்டைக் கொண்டுள்ளது. அதை வட்டார வழக்கு என்கிறோம். இவ்வட்டார […]

Read more

பறவைகளும் சிறகுகளும்

பறவைகளும் சிறகுகளும், பாஸ்கர் சக்தி, கயன் கவின் புக்ஸ், சென்னை, பக். 152, விலை 110ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-865-9.html பெண்கள் பறவைகளாக… தேடல் சிறகுகளாக… நீ உன் சொந்த விஷயத்தை எழுதலாம். ஆனால் உன் எழுத்து அதை ஒரு பொது அனுபவமாக மாற்ற வேண்டும்.  இல்லாவிடில் அது வெறும் சுயபுராணமாகிவிடும் என்ற எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப பாஸ்கர்சக்தியின் அனுபவம் பொது அனுபவமாக மாறும் மந்திரம்தான் இக்கட்டுரைகளின் சிறப்பும். இயல்பான வாழ்க்கையைப் பதிவு செய்யும் கட்டுரைகள் […]

Read more

மாற்றங்களை ஏற்போம்

மாற்றங்களை ஏற்போம், மனிதத் தேனீ பதிப்பகம், விலை 50ரூ. புகழ்பெற்ற பேச்சாளரான மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் ஆற்றிய முக்கிய சொற்பொழிவுகளின் சுருக்கங்கள் அடங்கிய புத்தகம். சொற்பொழிவுகளின் இடையே தமிழ்நாட்டின் சிறப்புகள், அவ்வையார், கம்பர், பாரதியார், வ.உ.சிதம்பரனார், காமராஜ், சி.பா. ஆதித்தனார், கருமுத்து தியாகராச செட்டியார் போன்ற சான்றோர்களின் சாதனைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 30/4/2014.   —- குதிப்பு மீன் போனது எங்கே?, நிகழ்காலம் தமிழ்நாட்டில் பருவ நிலைமாற்றம், பொன். தனசேகரன், கார்த்திலியா வெளியீடு. பருவநிலை மாற்றத்தால் தமிழகத்தில் […]

Read more

சார்வாகன் கதைகள்

சார்வாகன் கதைகள், சார்வாகன், நற்றிணை பதிப்பகம், சென்னை, பக். 544, விலை 400ரூ. சார்வாகனின் 41 சிறுகதைகளும், 3 குறுநாவல்களும் கொண்ட தொகுப்பு. சார்வாகன் எழுத்தாளர் மட்டுமல்ல. தொழுநோயாளிகளின் உடல் ஊனங்களைச் சீராக்கும் அறுவைச்சிகிச்சைத் துறையில் உலகப் புகழ்பெற்ற மருத்துவரும் ஆவார். இந்த சேவைக்காக பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். இவரின் எழுத்து வன்மை தொடர்பாக அசோகமித்திரன், மருத்துவர்கள் மகத்தான எழுத்தாளர்களாக விளங்குவதற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. ஆண்டன் செகாவ், ஏ.ஜே.கிரானின், சாமர் செட் மாம் எனத் தொடங்கி சார்வாகன் வரை கூறலாம் என்று கூறியுள்ளார். […]

Read more

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவின் அமுதமொழிகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவின் அமுதமொழிகள், இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9. ஒரு காலகட்டத்தில் தமிழக மக்களுக்கு யாரும் எந்த உதவியும் இலவசமாகத் தர வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது. தமிழக மக்கள் யாரிடத்திலேயும் கையை நீட்டிப் பெறுகின்ற நிலை இருக்கக்கூடாது. அதை எனது வாழ்நாளில் நான் காண வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அதுதான் என் லட்சியம். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இது போன்ற பல்வேறு உணர்ச்சிமயமான கருத்துகளைத் தொகுத்து தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுதமொழிகள் என்ற நூலாகத் தமிழக […]

Read more

சிலம்புச்சாலை

சிலம்புச்சாலை, சுப்ர.பாலன், வானதி பதிப்பகம், சென்னை, பக். 156, விலை 100ரூ. கல்கி வார இதழில் தொடராக வெளிவந்ததின் நூல் வடிவம். தமிழ் இலக்கியத்தின் புதுமைக் காவியமான சிலப்பதிகாரத்தை புதிய ஆய்வுச் சாலையில் எடுத்துச்சென்றிருக்கிறார் சுப்ர. பாலன். புகார் நகரை பூம்புகாராகக் காணும் நூலாசிரியர். கோவலன், கண்ணகி கால அந்தப் புராதன நகரம், இப்போது களையிழந்து போனதை கனத்த மனதுடன் விளக்குகிறார். கோவலன், கண்ணகி தடம் பதித்த மற்ற இடங்களான ஸ்ரீரங்கம், உறையூர், கொடும்பாளூர் என ஒவ்வோர் ஊரையும் விவரிக்கும் ஆசிரியர், அந்தந்த இடங்களின் […]

Read more

வாழ்க்கை ஒரு பலப்பரீட்சை

வாழ்க்கை ஒரு பலப்பரீட்சை, அந்தோன் செகாவ், தமிழில் ச. சுப்பராவ், பாரதி புக் ஹவுஸ், மதுரை, பக். 320, வலை 250ரூ. அந்தோன் செகாவ், ரஷ்ய சிறுகதை சக்ரவர்த்தி. சிறுகதைகளைக் காட்டிலும் சற்று நீளமானதும், நாவல்களைக் காட்டிலும் சற்று சிறியதுமான, பலப்பரீட்சை மற்றும் வாழ்க்கை எனும் இரு குறு நாவல்களை ஒரே தொகுப்பாக வெளியிட்டிருக்கின்றனர். மத்திய தர வர்க்கத்தினரைப் புறக்கணித்து, உழைப்பாளி மக்களோடு வாழச்சென்று, அங்கு குறுகிய கண்ணோட்டங்களின் மோசமான விளைவுகளை மன ரீதியால் எதிர்கொள்ள நேரிடும் ஒரு கலகக்கார இளைஞனின் கதைதான் வாழ்க்கை. […]

Read more
1 42 43 44 45 46 63