வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம்

வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம், காவ்யா, சென்னை, விலை 1400ரூ. கவிதை, உரைநடை, சினிமா பாடல், நாவல் என அனைத்து துறையிலும் தனக்கென தனி நடை வகுத்துக் கொண்டு இலக்கிய வானில் உச்சத்தைத் தொட்டவர் கவிபேரரசு வைரமுத்து. ஆண் பெண், சிறியோர் பெரியோர், படித்தோர்-பாமரர், உள்நாட்டினர்-வெளிநாட்டினர் என அனைத்துத் தமிழர்களும் உச்சி முகர்ந்து பாராட்டும் உன்னத கவிஞர் அவர். அவரது படைப்புகளை ஆய்வு செய்து எண்ணற்றோர் பி.எச்.டி. மற்றும் எம்.பில். பட்டங்களைப் பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 300 பி.எச்டி ஆய்வேடுகளும் 700க்கும் மேலாக எம்.பில். ஆய்வேடுகளும் […]

Read more

ஜெயகாந்தன் கதைகள்

ஜெயகாந்தன் கதைகள், தொகுப்பாசிரியர் என். ராம், வனிதா ராம், விகடன் பிரசுரம், சென்னை, 2, பக். 368, விலை 350ரூ. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களின் சார்பாக இலக்கியத்தில் எழுந்த முதல் குரல் ஜெயகாந்தனுடையது. வணிகப் பத்திரிகைகளும் நல்ல படைப்பும் ஒரு புள்ளியில் இணைய முடியும் என்பதை மெய்ப்பித்தவர். அவர் ஆனந்த விகடன் இதழில் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதிய சிறுகதை, குறுநாவல், முழுநாவல் என கலந்து 17 கதைகள் கொண்ட தொகுப்பாக வெளிவந்திருக்கிறது இந்நூல். வெளிவந்த காலத்தில் வாசகர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பிரளயம், […]

Read more

தமிழில் பில்கணீயம்,

தமிழில் பில்கணீயம், மணிக்கொடி எழுத்தாளர்கள் பாரதிதாசன், தொகுப்பும் பதிப்பும் – ய. மணிகண்டன், சந்தியா பதிப்பகம், சென்னை, பக். 104, விலை 80ரூ. வடமொழியிலிருந்து பல காவியங்கள், கதைகள், பல தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் வழங்குகின்றன. அவ்வாறு வழங்கும் இலக்கியப் படைப்புகளுள் ஒன்றுதான் பில்கணீயம். இச்சொல் பரவலாக அறியப்பட்டதற்குக் காரணம் பாரதிதாசன்தான் என்பர். பில்ஹணீயம் என்ற வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்ட அவரது குறுங்காவியம்தான் புரட்சிக்கவி. ஆனால் இக்கதை பாரதிதாசனுக்கு முன்னும் பின்னும் பல இலக்கிய வடிவங்களில் வெளிவந்துள்ளன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் […]

Read more

அண்ணாவின் ஆங்கிலக் கட்டுரைகள்

அண்ணாவின் ஆங்கிலக் கட்டுரைகள், திரு.வி.க. நிலையம் பதிப்பகம், வேலூர், விலை 250ரூ. தமிழைப்போலவே ஆங்கிலத்திலும் வல்லவர், பேரறிஞர் அண்ணா. அவர் ஹோம் லேண்ட் என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழ் நடத்தினார். அதில் 1957 முதல் 1961 வரை அவர் எழுதிய கட்டுரைகள் The Dawn (விடியல்) என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து, புத்தகமாகக் கொண்டு வந்துள்ளவர் வேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.ஜி.வேதாச்சலம். திராவிட நாடு பத்திரிகையில், தம்பிக்கு அண்ணா எழுதிய கடிதங்கள் புகழ் பெற்றவை. அதுபோன்ற கடிதங்கள் இந்த […]

Read more

அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா, இதயா ஏகராஜ், மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 70ரூ. எழுத்தையும், பேச்சையும் மக்களின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தி தமிழகத்தை முன்னேற்ற பாடுபட்ட அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று நூல். அறிஞர், பேரறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், நாடகாசிரியர், திரைக்கதையாசிரியர், நடிகர், சென்னை மாகாணமாய் இருந்ததை தமிழ்நாடு என மாற்றியவர், முதல் அமைச்சர் இவ்வாறு பல்வேறு திறன்களை வெளிப்படுத்தி வெற்றிகரமாய் வாழ்ந்த நூற்றாண்டுகள் கடந்தும், இன்றும் உலகத் தமிழர்களின் சிந்தனைச் சிற்பி, அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை அருமையாக தொகுத்தளித்ததிருக்கிறார் இதயா ஏகராஜ். நன்றி: தினத்தந்தி, 30/7/2014. […]

Read more

கண்ணன் கதைகள்

கண்ணன் கதைகள், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை, பக். 134, விலை 130ரூ. கண்ணன் கதைகள் என்றாலே, கரும்பு தின்கிற மாதிரிதான். கரும்பை எங்கே கடித்தாலும் இனிக்கும். கண்ணன் கதைகளில் எதைப் படித்தாலும் மகிழ்வும், பரவசமும் கூடும். இந்த நூலில் 26 கதைகள் கண்ணன் பெருமை பேசுகின்றன. முதல் கதை, அந்த மூன்று கத்திகள். அதிலேயே, உத்தமங்க மகரிஷிக்கு மனிதரின் இனவேற்றுமை, உயர்வு தாழ்வு காண்பது தவறு என்று கண்ணபிரான் பாடம் நடத்துகிறார். அவருக்கு மட்டுமல்ல, உலகோர் அனைவருக்கும்தான். பாண்டவரை அழிக்க, […]

Read more

உலகத் தகவல் களஞ்சியம் 100

உலகத் தகவல் களஞ்சியம் 100, பூங்கொடி பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. நமக்கு ஆச்சரியம் தரும் தகவல்கள், விசித்திரமான தகவல்கள், பயனுள்ள தகவல்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை சிரமப்பட்டுத் தொகுத்துத் தந்திருக்கிறார் மனோஸ். பூமிக்கு வரும் ஆபத்து, மிதக்கும் விமான நிலையம், தனியாகக் கடலைக் கடந்த பெண், நாளிதழ் இல்லாத நாடு, இந்தியாவின் ஒரே பெண் சுல்தான் இப்படி ஏராளமான தகவல்கள். உலகின் முதல் பெண் டாக்டர் பற்றிய தகவல் மிகவும் ஆச்சரியத்தைத் தருகிறது. ஆண்கள் மட்டுமே டாக்டர்களாக இருந்த கால கட்டத்தில் (1800ம் […]

Read more

துரோகம் வெட்கமறியாது

துரோகம் வெட்கமறியாது, தெ. சுந்தரமகாலிங்கம், வெண்ணிலா பதிப்பகம், விருதுநகர், பக். 176, விலை 140ரூ. சிற்றிதழ்கள், இலக்கிய மாத இதழ்கள், தினசரிகள் என்று ஒன்றுவிடாமல், கலை, இலக்கிய, சமூகம் சார்ந்த கட்டுரைகளுக்கு நூலாசிரியர் ஆற்றிய எதிர்வினைகளின் தொகுப்பே இந்நூல். குறிப்பாக தீராநதி, உயிர்மை, காலச்சுவடு இதழ்களில் இவரது எதிர்வினைகள் அதிக கவனம் பெற்றிருக்கின்றன. தமிழ் எழுத்துரு குறித்த ஜெயமோகனின் கட்டுரைக்கு எழுதப்பட்ட எதிர்வினை, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக என்.ராம் அளித்த பேட்டிக்கான எதிர்வினைகள், கலைஞர் கருணாநிதியின் அரசியல் துரோக நிகழ்வுகள், முல்லை பெரியாறு, […]

Read more

நடிகர் திலகம் சிவாஜி

நடிகர் திலகம் சிவாஜி, கே. சந்திரசேகரன், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 275ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-806-2.html நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து பல்வேறு கவிஞர்கள் எழுதிய கவிதைகள், அவருடன் பழகியவர்கள் அவர் குறித்து எழுதியவை என எல்லாவற்றையும் தொகுத்துத் தருகிறது நூல். சிவாஜி கணேசனின் அரிய புகைப்படங்கள் பலவும் நூலில் உண்டு. அவர் எத்தனை பேரை கவர்ந்த நடிகர் என உணரவைக்கும் நூல். -கவின்மலர். நன்றி: இந்தியா டுடே, 30/7/2014.   —- கசடறக் கற்க […]

Read more

தி மியூசிக் ஸ்கூல்

தி மியூசிக் ஸ்கூல், செழியன், தி மியூசிக் ஸ்கூல் பப்ளிகேஷன்ஸ், சென்னை 33. The Music School எளிமையான, குழப்பம் இல்லாத தமிழ் நடை. வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுப்பதுபோலவே எழுதப்பட்ட வடிவமைப்பு.உதாரணத்துக்கு ஒரு பகுதி இதோ- இது வெறுமனே தொடர்ச்சியாக வாசிக்கிற புத்தகம் அல்ல. இதில் இருக்கிற பல விஷயங்களுடன் நீங்கள் இணைந்து பயிற்சி செய்ய வேண்டும். கண்களால் பார்த்து இந்தப் பாடங்களை நினைவில் வைத்துக்கொண்டால் மட்டும் போதாது. பாடத்தை வாசிக்கும்போது, எப்போதும் அருகில் பென்சில் வைத்திருங்கள். முக்கியமான விஷயத்தை அடிக்கோடு இடுவதற்கு […]

Read more
1 41 42 43 44 45 63