கடலோரக் கவிச்சோலை

கடலோரக் கவிச்சோலை, அருள்திரு. ஸ்டீபன் கோமஸ், சமூக சமய ஆய்வுக் கழகம், வலம்புரி நாதம் வெளியீடு, வீரபாண்டியன்பட்டினம், விலை 500ரூ. மீனவர்கள், பரதவர்கள் என சமகாலத்தில் அழைக்கப்படும் மக்கள் வரலாற்று நூல்களாலும் பொது சமூகத்தாலும் வஞ்சிக்கப்பட்டவர்கள். அவர்கள் வரலாற்றில் இழந்த இடத்தை மீட்கும் சொற்பமான முயற்சிகளில் ஒன்றுதான் இந்த நூல். 17ஆம் நூற்றாண்டு முதல் பரதவ சமூகத்தினர் பங்களித்த சந்தப் பாட்டுகள், கவிதைகள், கட்டுரைகளை இரண்டு பாகங்களாக 2000 பக்கங்களுடைய நூலாகத் தொகுத்தளித்திருக்கிறார்கள். தங்களின் வரலாற்றுப் பெருமை, நம்பிக்கைகள், தொழில், சமூகம் குறித்த சித்திரத்தைக் […]

Read more

மேடை நமதே

மேடை நமதே, ம.ஸ்டிபன் மிக்கேல் ராஜ், சாரல் பதிப்பகம், சிவங்கை மாவட்டம், விலை 20ரூ. சமயக்குரவர் நால்வர் யார்? பஞ்ச தந்திரம் எவை? ஐம்பெரும் காப்பியங்கள் எவை? சப்தஸ்வரங்கள் என்றால் என்ன? என பல்வேறு தகவல்கள் தொகுக்கப்பட்ட நூலாகும். வினாடி வினா போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கும், பொது அறிவு பெற விரும்புபவர்களும் இந்த நூல் பயனுள்ள வகையில் இருக்கும். நன்றி: தினத்தந்தி. 8/10/2014.   —- போலி மத சார்பின்மை, ஆதித்யா பதிப்பகம், நெல்லை மாவட்டம், விலை 100ரூ. மத சார்பின்மை பற்றி புதிய […]

Read more

ரகசியமாய் ஒரு ரகசியம்

ரகசியமாய் ஒரு ரகசியம், ஓஷோ, தமிழில் சிவாமி சியாமானந்த், கவிதா பதிப்பகம், சென்னை, பக். 992, விலை 600ரூ. ஓஷோ, தனது பக்தர்களிடம் ஆற்றிய உரைகயின் தொகுப்பாக வெளிவந்துள்ள மற்றும் ஒரு நூல். தியானம் செய்வது எப்படி? துறவறம் என்பது அவசியம்தானா? காமம் என்றால் என்ன? சுய இன்பம் அனுபவிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதுதானா? என்பது போன்ற பலதரப்பட்ட விஷயங்களை அப்பட்டமாக அலசி இருக்கிறார். இடையிடையே ருசிகரமான சிறுகதைகள், புத்தர், போதிதர்மர், குரு லூத் சூ போன்றவர்களின் மேற்கோள்கள் ஆகியவற்றைக் கூறி படிக்க ஆவலைத் தூண்டுகிறார். ஓஷோவே […]

Read more

இனி ஒரு வலியில்லா பயணம்

இனி ஒரு வலியில்லா பயணம், விஜயஸ்ரீமகாதேவன், சூரியா கம்யூனிகேஷன், பக். 56, விலை 50ரூ. நோயின் தாக்கம் முற்றிய நிலையில், ஒன்றும் செய்ய முடியாது என டாக்டர் கைவிரித்து விடுகின்றனர். நோயின் தாக்கத்தால் ஏற்படும் வலியாலும், உறவுகள் புறக்கணிப்பால் மனரீதியான பாதிப்பாலும், மரண நாட்களை பொங்கும் துன்பத்த்லும் நோயாளிகள் துவண்டுவிடுகின்றனர். அத்தகையோருக்கு, மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த நிலையில் அன்பு, ஆதரவு, அரவணைப்பு என்ற வலி தணிப்பு சிகிச்சை பாலியேட்டிவ் கேர் தேவை. மேலை நாடுகளில் இந்த வகை சிகிச்சை முறை பிரபலம் என்றாலும், நம் […]

Read more

தமிழர் வாழ்வில் தகவலியல்

தமிழர் வாழ்வில் தகவலியல், வெ. நல்லதம்பி, வையவி பதிப்பகம், பக். 104, விலை 100ரூ தமிழர் வாழ்வில் தகவலியல் செயல்பாடு பற்றிய வழிமுறைகளை பற்றி ஆராய்கிறது இந்த நூல். பழந்தமிழ் இலக்கியங்கள், தகவல்களை பயன்படுத்தியுள்ள விதம் குறித்து விரிவாக பேசுகிறது. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வெட்ப மொழிவதாம் சொல் என்ற குறளை, தகவலியல் சார்ந்து மிகவும் நுட்பமாக விளக்கியுள்ளார். இது ஓர் உதாரணம்தான். இதுபோல் பழந்தமிழ் இலக்கியங்களில் தகவல் சார்ந்தும், அவற்றை வெளிப்படுத்திய விதம் சார்ந்தும் நுட்பமாக அணுகிய விவரிப்புகள் புத்தகத்தில் பரந்து […]

Read more

நோக்கு நூல்கள்-மரபும் புதுமையும்

நோக்கு நூல்கள்-மரபும் புதுமையும், இரா. பன்னிருகை வடிவேலன், தமிழாய்வு மன்றம், பக். 104, விலை 100ரூ. ஐந்து ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த நூலில், ஆங்கில ஆய்வுக் கட்டுரை ஒன்றும் உள்ளது. நோக்கு நூல்கள் என, நிகண்டுகளைச் சுட்டிக் காட்டும் இந்த நூல், நிகண்டுகளின் பழைமையையும், அகராதியியலின் புதுமையையும் ஆய்வு நோக்கில் வெளிப்படுத்துகிறது. ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு, நிரரர் நிகண்டு, சிந்தாமணி நிகண்டு எனும் மூன்று நிகண்டுகளை இந்த நூல் அறிமுகம் செய்கிறது. அகராதியியலின் எதிர்காலம் கணினிக்குள் அடங்கியிருக்கிறது எனும் உண்மையையும், கணினியில் நூலடைவு […]

Read more

காந்தியத் தாயத்து

காந்தியத் தாயத்து, நேசம் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி, உலக மக்கள் இனத்துக்காக வழிகாட்டிய கருணை வள்ளல். சத்தியம், அன்பு, அகிம்சை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் மனப்பாங்கு, எளிமை போன்றவற்றை தன் வாழ்நாள் முழுவதற்குமான நெறிகளாக்கி வாழ்ந்து காட்டிய மனிதப் புனிதர் அவர். காந்தியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை, முனைவர் சுந்தர ஆவுடையப்பன், எளிமையே இனிமை, கோபம் வராத மேன்மை, காந்தியக் கருணை போன்ற 31 தலைப்புகளில் மொழிந்துள்ளார். உலகில் அமைதி, ஊரில் அமைதி, உள்ளத்தில் அமைதி […]

Read more

புத்தகம் போற்றுதும்

புத்தகம் போற்றுதும், கவிஞர் இரா.ரவி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. ஞாயிறு போற்றுதும், திங்கள் போற்றுதும் என்ற வரிசையில் தற்போது வித்தியாசமான தலைப்பான புத்தகம் போற்றுதும் என்ற தலைப்புடன் 50 நூல்கள் மற்றும் நாவல்களை நூலாசிரியர் விமர்சனங்களாக எழுதி தொகுத்துள்ளார். இதில் எழுத்தாளரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வெ. இறையன்பு எழுதிய அவ்வுலகம் என்ற நாவலை விமர்சனம் செய்யும்போது இறந்தவர்களின் நெற்றியின் மீது ஐந்து ரூபாய் நாணயம் என்ற மூடப்பழக்கத்தை, தனக்குரிய பாணியில் நூலாசிரியர் சாடியுள்ளதையும் சுவைப்பட விமர்சனம் செய்துள்ளார். எனக்குச் சாவு […]

Read more

வாலி 100

வாலி 100, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், சென்னை, பக். 212, விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-8.html தலைமுறைகளைக் கடந்தும் ஜெயித்த திரையுலக ஜாம்பவான் வாலி பற்றிய 100 சுவையான செய்திகளின் தொகுப்பு. இவை செய்திகளல்ல. ஒவ்வொன்றும் ஒரு பதிவு. அடுத்த தலைமுறையினருக்கு வாலி பற்றிய ஒரு பாடம். வாலியின் துணிவு, நன்றி உணர்வு, நட்பு, நகைச்சுவை, எளிமை, ஈகோ இல்லாத மனம், யாருக்கும் தலைவணங்கா மாண்பு, தீராத தேடல், அவரது பட்டறிவு என்ற வாலியைச் சுற்றி […]

Read more

உ.வே.சா.வின் உரைநடை நூல்கள்

உ.வே.சா.வின் உரைநடை நூல்கள், உ.வே.சாமிநாத அய்யர் நூலகம் வெளியீட்டகம். அடமானத்தில் சங்கராபரணம் உ.வே.சாமிநாத அய்யர் நூலகம் வெளியிட்ட, உ.வே.சா.வின் உரைநடை நூல்கள் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். கடந்த சில ஆண்டுகளாக, இந்நூலின் மறுபதிப்பு வெளியாகவில்லை என்பது கவலைக்குரியது. இன்றைய இளைய சமூகத்துக்கு, இந்த நூல் அரிய பொக்கிஷம். தஞ்சைப் பகுதியில் வாழ்ந்தவர் சங்கராபரணம் நரசய்யா. சங்கராபரணம் ராகத்தில் வல்லமை பெற்றவர். பண நெருக்கடி ஏற்படவே, செல்வந்தராக இருந்த, கபிஸ்தலம் மூப்பனாரிடம் கடன் கேட்கிறார் (தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜி.கே. வாசனின் மூதாதையர்கள்). கடனுக்காக, […]

Read more
1 39 40 41 42 43 63