துருவ நட்சத்திரம்

துருவ நட்சத்திரம், லலிதாராம், சொல்வனப் பதிப்பகம், பெங்களூர், பக். 224, விலை 150ரூ. இசை தொடர்பான தரமான கட்டுரைகளை வெளியிடுவதில், சொல்வனம் இணைய இதழின் பங்கு மகத்தானது. இசை நுட்பம் குறித்த தேர்ந்த புரிதலும், அதை சுவாரசியமாகச் சொல்வதிலும் நேர்த்தி பெற்ற எபத்தாளர் லலிதாராம். லயம் என்ற தலைப்பில் சொல்வனத்தில், அவர் எழுதிய மிருதங்கம் தொடர்பான இசைக்கட்டுரைகளும், பழனி சுப்ரமணிய பிள்ளை குறித்த மேலும் பல அரிய விஷயங்களும் சேர்ந்து, உருவாகியிருக்கிறது இந்த புத்தகம். இது பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறாக மட்டுமில்லாமல், […]

Read more

வர்ணசாகரம்

வர்ணசாகரம், சங்கீத கலாநிதி டி.கே.கோவிந்த ராவ், கானமந்திர் பப்ளிகேஷன்ஸ், பக். 444, விலை 500ரூ. வர்ணசாகரம் என்னும் பெயருக்கேற்றாற்போல் இந்த நூல், வர்ணங்களின் கடலாகத் திகழ்கிறது. இந்த தொகுப்பில் 216 ஆதிதாள தான வர்ணங்கள், 74 அட தான தான வர்ணங்கள், ஏனைய தாளங்களில் அமைந்த 23 தான வர்ணங்கள், ஆறு ராகமாலிகை வர்ணங்கள் என, மொத்தம் 415 வர்ணங்கள் இடம் பெற்றுள்ன. இவற்றைத் தொகுத்தவர், சங்கீத கலாநிதி, டி.கே. கோவிந்த ராவ். கி.பி. 17ம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை, இசை வாணர்கள் […]

Read more

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை), தொகுப்பும் உரையும் – ந. முருகேச பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், சென்னை, பக். 284, விலை 215ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-349-5.html சங்ககாலம் என்பது புனைவானது. சமயவாதிகளால் இட்டுக்கட்டப்பட்டதுதான் மதுரைத் தமிழ்ச் சங்கம் என்றெல்லாம் கருதும் சில ஆய்வாளர்களின் கருத்துகளை மறுத்து, ஆதாரங்களுடன் பல உண்மைகளை முன்வைக்கிறது தொகுப்புரை. சங்க காலத்தில் நூற்றுக்கணக்கான பெண் கவிஞர்கள் இருந்திருக்க வேண்டும் என்றும், தொகுப்பாளரின் […]

Read more

விடையபுரம் கடவுள் மறுப்பின் தொடக்கப்பள்ளி

விடையபுரம் கடவுள் மறுப்பின் தொடக்கப்பள்ளி, சுந்தரபுத்தன், நடப்பு வெளியீடு, சென்னை, பக். 96, விலை 60ரூ. விடையபுரம் பகுத்தறிவுப் பயிற்சிப் பள்ளியில்தான், தந்தை பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கைக்கான முழக்கத்தை முறைப்படி அறிவித்தார் என்கிறது இந்நூல். இப்பயிற்சிப் பள்ளியில் பெரியார் ஆற்றிய பேருரைகள் மற்றும் அவரது வேறு சில பேச்சுக்களின் தொகுப்பே இந்நூல். பெரியாரின் தொண்டரான ஒளிச்செங்கே தரப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. பெரியார் தொடர்பாக வேறு எங்கும் அறியமுடியாத பல தகவல்களும் பதிவுகளும் இடம்பெற்றிருப்பது இந்நூலின் சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: […]

Read more

தருமபுரி இளவரசன் படுகொலை

தருமபுரி இளவரசன் படுகொலை, எம். துரைராஜ், அம்பேத்கர் புரட்சி முன்னணி வெளியீடு, சென்னை, விலை 100ரூ. தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சம்பவம், தர்மபுரி இளவரசன் திவ்யா காதல். அதன்பின் ஏற்பட்ட கலவரம். மரணம். இளவரசன் மரணம் தற்கொலை அல்ல, படுகொலை என்று பேசும் இந்த நூல், அதற்கான பல ஆதாரங்களை முன்வைக்கிறது. இளவரசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இல்லை. புகை பிடிக்கும் பழக்கமும் இல்லை. ஆனால் காவல் துறை, இளவரசனின் அருகில் மதுபாட்டில்கள், சிகரெட்டுகள் இருந்ததாக கூறியிருக்கிறது. இளவரசன் குர்லா விரைவு ரயிலின் […]

Read more

எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்

எவராலும் கற்பனை செய்ய முடியாத நான், தொகுப்பு ஷோபாசக்தி, கருப்புப் பிரதிகள், சென்னை, விலை 140ரூ. ஈழம் பேசிப் பேசி மாளாத நிலம். அதன் கடந்தகாலச் சோகங்களையும் தவறுகளையும் வெளிப்படையாகப் பேசுவதன் மூலமாக எதிர்கால அரசியல் தெளிவுக்கு இட்டு நிரப்புபவையாக சிலரது படைப்புகள் மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட நான்கு ஆளுமைகளைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார் ஷோபாசக்தி. கவிஞர் கருணாகரனும் தமிழ்க்கவியும் தமிழ் தேசியம் சார்ந்த ஆதரவு தளத்தில் இயங்கியவர்கள். புலிகள் இயக்கத்துடன் கடந்த காலத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள். பழ. ரிச்சர்ட், இடது சாரியாக அறியப்பட்டவர். […]

Read more

பள்ளிப்பருவம்

பள்ளிப்பருவம், தொகுப்பு ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 80ரூ. பள்ளியில் ஒரே பாடத்திட்டத்தைக் கற்றாலும் கற்றல் அனுபவம் அனைவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பள்ளி அனுபவங்கள் இருக்கின்றன. அதனாலேயே பள்ளிப்பருவம் குறித்த அனுபவப் பகிர்தல்கள் எப்போதுமே சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கின்றன. ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி, அ.ராமசாமி, இமையம், பேராசிரியர் கல்யாணி, க. பஞ்சாங்கம் ஆகிய ஆறு ஆளுமைகள் தங்களது பள்ளிப்பருவம் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்தநூல். இவர்களின் அனுபவம் அந்தக் காலத்தில் நிலவிய சமூக, […]

Read more

மகனுக்கு மடல்

மகனுக்கு மடல், மருத்துவர் நா. ஜெயராமன், அபெகா வெளியீடுதி , புதுக்கோட்டை, விலை 80ரூ. சொல்லப்பட வேண்டிய நன்றிகள் மகனுக்கு மடல் எனும் இந்தப் புத்தகம் புதுக்கோட்டையைச் சேர்ந்த பல் மருத்துவர் நா. ஜெயராமன் ஹாங்காங்கில் படிக்கும் தன் மகள் ஜெயகுமாருக்கு எழுதிய நான்கு கடிதங்கள். ஜெயகுமார் எழுதிய ஒரு கடிதம் என்று ஐந்து கடிதங்களைக் கொண்டது. உயர்கல்வி என்ற நீண்ட கடிதத்தில் பெற்றோரும் பிள்ளைகளும் சொல்லிக்கொள்ள வேண்டிய நன்றி குறித்து இடம் பெற்றிருக்கும் உரையாடல்கள் மிகவும் முக்கியமானவை. குடும்ப வாழ்வில் உறவுகளைச் செம்மைப்படுத்திக் […]

Read more

கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி

கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி, மு. ஸ்ரீனிவாஸன், சேகர் பதிப்பகம், பக். 440, விலை 350ரூ. தீவிரவாதம் மிதவாதம் 1950களிலிருந்து பல்வேறு இதழ்கில் எழுதிய படைப்புகளோடு புதிதாய் எழுதிய கட்டுரைகளையும் திரட்டி வெளிவருகிறது மு. ஸ்ரீனிவாசஸனின் கலை இலக்கிய வரலாறு மஞ்சரி. இதில் வரலாறு, கலை சார்ந்த அறிஞர்கள் பற்றிய குறிப்புகளும், கதைகளும், கட்டுரைகளும், கவிதைகளுமாக பெருமளவில் இடம் பெற்றிருக்கின்றன. இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்திராத, அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஆளுமைகள் பற்றிய அருந்தொகுப்பாக உள்ளது இத்தொகுப்பு நூல். மொழிபெயர்ப்பாளர் பெ.நா. அப்புசுவாமியின் […]

Read more

வ.உ.சி. நூல் திரட்டு

வ.உ.சி. நூல் திரட்டு, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கவிதைகள், தொகுப்பாசிரியர் வீ. அரசு, புலமைப் பித்தன் பதிப்பகம். பொருளும் மனமும் குன்றிடினும் யான் குன்றேன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை எழுதிய கவிதைகள், அவருடைய உரை ஆகியவற்றை, சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் வீ. அரசு தொகுத்துள்ள வ.உ.சி. நூல் திரட்டு என்ற நூலை படித்தேன். புலமைப் பித்தன் பதிப்பகம், அந்த நூலை வெளியிட்டுள்ளது. பிறப்பு, வளர்ப்பு, வக்கீல் தொழில், சுதந்திர போராட்டம், கப்பல் கம்பெனி நடத்தியது என, வ.உ.சி. எழுதி, […]

Read more
1 37 38 39 40 41 63