அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும், ஜி.எஸ்.எஸ்., விகடன் பிரசுரம், விலை 90ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-284-4.html உலக அதிசயங்கள் ஏழு என்கிறோம். ஆனால் இந்த ஏழு அதிசயங்களைத் தவிர வேறு பல அதிசயங்களும் இருக்கின்றன. அவற்றில் பல மர்மங்களும் புதைந்து கிடக்கின்றன. இப்படிப்பட்ட மர்மங்கள் குறித்து இந்நூல் ஆசிரியர் ஜி.எஸ்.எஸ். சுவைபட எழுதியிருப்பதோடு, மர்மமுடிச்சுகளையும் அவிழ்க்கிறார். நன்றி: தினத்தந்தி.   —- நீதிநூல் களஞ்சியம், கொற்றவை வெளியீடு, விலை 720ரூ. மனிதர்கள் இந்த உலகில் வாழ்வாங்கு வாழ வழிவகைகளைக் […]

Read more

நீரோட்டம் அரசியல் பண்பாடும் பண்பாட்டு அரசியலும்

நீரோட்டம் அரசியல் பண்பாடும் பண்பாட்டு அரசியலும், தொகுப்பு ச. ராஜநாயகம், மக்கள் ஆய்வகம், சென்னை, விலை 190ரூ. பாபா படத்தின் தோல்விக்குக் காரணம் என்ன? சென்னை லயோலா கல்லூரியில் இயங்கிவந்த மக்ள் ஆய்வகம் என்ற அமைப்பின் சார்பில் தேர்தல்களை ஒட்டிக் கருத்துக்கணிப்புகள் எடுப்பது வழக்கம். 2001 சட்டமன்றத் தேர்தல் முதல் 2011 நாடாளுமன்றத் தேர்தல் வரை நடைபெற்ற பல்வேறு தேர்தல்களையொட்டி மக்கள் ஆய்வகம் நிகழ்த்திய கருத்துக்கணிப்புகளின் தொகுப்பாக நீரோட்டம் என்ற தலைப்பில் இந்நூல் வெளியாகி உள்ளது. பேராசிரியர் ச.ராஜநாயகம் தலைமையில் மாணவர்கள்மேற்கொண்ட கள ஆய்வுகள் […]

Read more

சமூகம் வலைத்தளம் பெண்

சமூகம் வலைத்தளம் பெண், தி. பரமேசுவரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 220, விலை 180ரூ. பெண்கள் குறித்தும், தமிழர்களது வாழ்வுரிமை, தேசியம், வரலாறு, மாட்சிமை, பெருமை குறித்தும், முந்தைய, இன்றைய வாழ்வியல் நிலை குறித்தான கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இதில், தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற பிரிவுகளின் கீழ், 32 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றள்ளன. பெண் படைப்பாளிகளின் பங்கு குறித்து முழுவதுமாய் ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியரும், ம.பொ.சி.யின் பேத்தியுமான தி. பரமேசுவரி. கட்டுரைகள் அனைத்தும் கட்டுரையாளரின் சுய கருத்தின் அடிப்படையிலும், […]

Read more

புள்ளிகள் கோடுகள் கோலங்கள்

புள்ளிகள் கோடுகள் கோலங்கள், பாரதி மணி, வம்சி புக்ஸ், பக். 600, விலை 550ரூ. தமிழ் சினிமாவில், முதல்வராக பலமுறை நடித்த பாரதி மணியைப் பற்றிய புத்தகம் இது.ஆனால் நிஜத்தில் முதல்வர்களை காட்டிலும், அதிக பலம் படைத்த அதிகார மையமாக இவர் இருந்ததை, இந்த புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. தொழிலதிபர் பிர்லாவின் செயலர். நாடக சபையின் நிர்வாகி என இவரின் பல்வேறு முகங்களை, புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. இவர் குறித்து சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன் போன்ற பல்வேறு […]

Read more

புதிய எக்ஸைல்

புதிய எக்ஸைல், சாரு நிவேதிதா, கிழக்கு பதிப்பகம், பக். 867, விலை 1000ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-93-5135-191-7.html எழுத்தாளர்களில் கலகக்காரராகவும், கலகக்காரர்களில் எழுத்தாளராகவும் அறியப்பட்ட சாரு நிவேதிதாவின், சமீபத்திய நாவல், புதிய எக்ஸைல். எள்ளலும், துள்ளலும் கொண்ட சாருவின் எழுத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட புனைகதையாக, எக்ஸைல் அமைந்துள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும், மையச் சரடாக பயணப்படும் புனைகதையில் தமிழர்களின் தொன்மையான ஞானமரபு பதிவு செய்யப்பட்டுள்ளது. அகத்தியர், தேரையர், தொல்காப்பியரில் இருந்து துவங்கி, முள்ளி வாய்க்கால் வரை, ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. புல், மரம், […]

Read more

மெய்நிகரி

மெய்நிகரி, கபிலன் வைரமுத்து, கிழக்கு பதிப்பகம், பக். 152, விலை 125ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/meinigari.html முதன்முறையாக, தொலைக்காட்சி ஊடகத்தில் நடைபெறும் கதை சூழலை கொண்ட நாவல் என்ற அறிமுகத்தோடு, இந்த நூல் பரிச்சயமாகிறது. ஆங்கில சொற்களுக்கு தமிழில் பெயர் சூட்டுதல் ஒரு கலை. ஆசிரியருக்கு அது கைவரப் பெற்றிருக்கிறது. தொலைக்காட்சி படத் தொகுப்பாளர், டெரன்ஸ் பாலின் அனுபவங்களில் கதை நாயகனும், தன் அனுபவங்களைக் காட்சித் தொகுப்பாக ஆவணப்படுத்தி வைத்திருக்கிறான். இரண்டு ஆண்டுகளாக சேகரித்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ள முக்கிய […]

Read more

தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம் 1. அரசமரம்

தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம் 1. அரசமரம், இரா.பஞ்சவர்ணம், தாவர தகவல் மையம், பக். 180, விலை 150ரூ. தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம் எனும் பொதுத்தலைப்பில் ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு நூல் என்ற அடிப்படையில், முதலாவதாக அரசமரம் பற்றி தொகுத்தளிக்கப்பட்டுள்ளது இந்த நூல். அரச மரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய ஆய்வுக் களஞ்சியமாக வந்திருக்கிறது. அரச மரம் குறித்தான தாவர விளக்கம், தமிழ் பெயர் (அரசு, ஆலம்) ஆங்கில பெயர் (சேக்ரட் பிக்), தாவர பெயர் (பைகஸ் ரிலிஜியோசா), வழக்கத்திலுள்ள இதர தமிழ் பெயர்கள், […]

Read more

மகடூஉ முன்னிலை பெண் புலவர் களஞ்சியம்

மகடூஉ முன்னிலை பெண் புலவர் களஞ்சியம், தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம், அமைந்தகரை, பக். 704, விலை 300ரூ. கைம்பெண் நோன்பின் கடுமையை விட உடன்கட்டை ஏறுதல் உயர்ந்ததோ? சங்ககாலத்தில், கற்றவராகவும், கவிஞராகவும், காதல் சமத்துவம் உடையவராகவும் பெண்கள் இருந்தனர் என்பதை, பல அகச்சான்றுகளோடு நிறுவுகிறார், நூலாசிரியர் தாயம்மாள் அறவாணன். சங்ககால மகளிர், அனைத்து நிலையிலும் முன்னிலைப்படுத்தப்பட்டனர் என்பதற்கு, நூலின் தலைப்பே, கட்டியம் கூறுகிறது. பிற்காலத்து பெண்டிர் கல்வி கற்பது மறுக்கப்பட்ட சூழலில், சங்ககாலப் பெண்டிர், ஒரு தடையும் இல்லாமல், ஆணுயக்கு நிகராக கற்றிருந்தனர். பொருளாதார […]

Read more

மகாபாரதம்

மகாபாரதம், பிரபஞ்சன், நற்றிணை பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. அரசியல் கற்க வேண்டியவர்கள் முதலில் படிக்க வேண்டிய பாடம் கல்கி வார இதழில், 58 வாரங்களாக, எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய, மகாபாரதத்தை சமீபத்தில் படித்தேன். நற்றிணை பதிப்பகம் அதைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. ராஜாஜி முதல், மகாபாரதத்தை தமிழில் பலர் கொடுத்துள்ளனர். ஆனால் பிரபஞ்சன் அளித்துள்ள மகாபாரதம், பெரும் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. சுயசரிதை நூல்களுக்கு, அடிப்படை மகாபாரதம். வியாசர் தன் பேரப்பிள்ளைகளோடு இருந்ததை, தன் சுயசரிதையாக எழுதியது தான் மகாபாரதம். சிறு வயதில், கிராமங்களில் கூறப்பட்ட, […]

Read more

நமது பாரம்பரிய இசை

நமது பாரம்பரிய இசை, தொகுப்பாசிரியர்-சித்தார்த்தன், பண்மொழிப் பதிப்பகம், பக். 120, விலை 60ரூ. இந்த நூல் கர்நாடக, இந்துஸ்தானி, பண் இசையின் இலக்கணத்தை விவரிக்கிறது. கோவிந்த தீட்சிதர், வேங்கடமி இருவரின் மேளகர்த்தா முறையில் ராகப் பெயர்களும், அவற்றின் ஜன்ய ராகங்களும், ஆராகண, அவரோகண வரிசைகளும் இதில் விரிவாக இடம் பெற்றுள்ளன. கர்நாடக, இந்துஸ்தானி இசையின் சமஸ்வரஸ்தான ராகங்கள், தமிழ்ப் பண்களுக்க இணையான ராகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் 103 பண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. நமது பாரம்பரிய இசை என்ற தலைப்பில், தொகுப்பாசிரியர் எழுதியுள்ள முன்னுரை, இரண்டாயிரம் […]

Read more
1 36 37 38 39 40 63