எரியும் பூந்தோட்டம்

எரியும் பூந்தோட்டம், தெலுங்குமூலம் சலீம், தமிழில் சாந்தா தத், சாகித்ய அகாடமி வெளியீடு, பக். 256, விலை 145ரூ. நடைமுறை வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை, விஞ்ஞானப் பூர்வமாய் அணுகும் வித்தியாசமான பார்வை கொண்டவை, சலீம் படைப்புகள். எய்ட்ஸ் எனும் கொடிய நோய் குறித்தும், அது தொடர்பான சமூகப் பார்வை மற்றும் பிரச்னைகள் குறித்தும், சுவாரசியமிகு ஆய்வு ஒன்றை முன்வைத்துள்ள நாவல் இது. இரண்டு குடும்பங்கள். ஒன்று மத்தியதரவர்க்கம். இன்னொன்று அடித்தட்டு வர்க்கம். இரு குடும்பங்களுமே, எய்ட்சால் பாதிக்கப்பட்டவை. எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் இதயம் உண்டு எனும் […]

Read more

சென்று வா உறவே சென்று வா

சென்று வா உறவே சென்று வா, ஜே பி ரூபன் பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. இது புதுமாரியான புதினம். இரண்டே இரண்டு பாத்திரங்கள். தமிழமுதன் வதனா. இருவரும் உயிருக்குயிராய் காதலிக்கிறார்கள். இறுதியில் சென்று வா உறவே சென்று வா என்று காதலிக்கு விடை கொடுக்கும் தமிழமுதன் கண்ணீரோடு பிரிந்துவிடுகிறான். இந்தக் காதல் தொடரில் இலக்கியம், அறிவியல், பொதுவுடமை, தத்துவம், புராணம், வரலாறு என பல செய்திகளையும் கவிஞர் தியாரூ கலந்து கொடுத்திருப்பது நூலுக்கு சுவை சேர்க்கிறது. காதலைப் பற்றி நிறைய கதைகள் வெளியாகி இருக்கலாம். […]

Read more

சரசோதிமாலை எனும் காலக்கணிதம் (கி.பி. 1310)

சரசோதிமாலை எனும் காலக்கணிதம் (கி.பி. 1310), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, விலை 140ரூ. சரசோதிமாலையென்னும் இவ்வரிய சோதிடத்தின் ஒரு நிறை களஞ்சியம். ஒருவன், சாதாரணக் குடிமகனாயினும் மன்னனாயினும் அவனுக்கு இகம் பரம் ஆகிய இரண்டுக்கும் வேண்டப்படும் சோதிட நியதிகள் நிறைந்து விளங்குகின்றன. அதனால் எல்லார்க்கும் வேண்டப்படும் சோதிட விஷயங்கள் யாவும் பொதிந்துள்ளது இந்நூலின் சிறப்பு. சரசோதிமாலையின் பாடல்கள் பலவகை விருத்தப்பாக்கள் ஆனவை. அதனால், தமிழில் ஆற்றல் பெற்றவர்களே உரையின்றி இந்நூலை படித்து பயன்பெற முடியும். இக்காலத்தில் இதன் மூலத்தை மாத்திரம் படித்து எல்லோரும் […]

Read more

காவிரி நாடன் காதலி

காவிரி நாடன் காதலி, கன்னரதேவன், முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோவில், விலை 300ரூ. இந்த சரித்திர நாவலை எழுதி முடிக்க எனக்கு 35 ஆண்டுகள் பிடித்தன என்கிறார் நூலாசிரியர் தமிழுலகன். ஆதித்த சோழர் வரலாற்றையும், கன்னரதேவன் வரலாற்றையும் அடிப்படையாக வைத்து இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. ஏராளமான கதாபாத்திரங்கள். எனினும் கதையை குழப்பம் இன்றி விறுவிறுப்பாக எழுதியுள்ளார். தமிழ் உணர்வைத் தூண்டும் நாவல். நன்றி: தினத்தந்தி, 23/9/2015.   —- கற்றபின் நிற்க, கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர், தமிழ்மணி புத்தகப்பண்ணை, விலை 200ரூ. நம் மொழியில் இல்லாத நற்சிந்தனைகள் […]

Read more

சோபியின் உலகம்

சோபியின் உலகம், தமிழில் ஆர். சிவகுமார், காலச்சுவடு பதிப்பகம். மகளுக்கு தந்தையின் பிறந்த நாள் பரிசு நார்வே மொழியில் யோஸ்டைன் கார்டர் எழுதி, ஆங்கிலத்துக்கு வந்து, தமிழில் ஆர்.சிவகுமார் மொழியாக்கம் செய்து, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள, சோபியின் உலகம் என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். நாவல் 19955ல் வெளியானபோது, பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது. ஆங்கிலத்தில், திரைப்படமாகவும் வந்துள்ளது. தமிழ் மொழிபெயர்ப்புக்காக, இந்த ஆண்டின் தமிழ் பேராய விருதைப் பெற்றுள்ளது. நார்வே நாட்டில் நடக்கும் இந்த கதையின் நாயகி சோபி. அவரது […]

Read more

பிணங்களின் முகங்கள்

பிணங்களின் முகங்கள் (நாவல்), சுப்ரபாரதிமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 248, விலை 200ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024698.html பனியன் கம்பெனிக்குப் போற பசங்க, எங்க கபடம் இல்லாம இருக்காங்க… என்று கேட்கிறாள் ஒரு தாய். படிக்கப் போக வேண்டிய வயதில் பணிக்குச் சென்று அல்லல்படும், டீன்-ஏஜ் பையன்களைப் பற்றிச் சொல்லும் நாவல் இது. பள்ளி நாட்களின் நினைவுகளோடும், விடுமுறைக்கால கனவுகளோடும் உலாவும் பிஞ்சுகளின் மனதையும், உடலையும், பல தனியார் தொழில் நிறுவனங்கள் காவு […]

Read more

வடலிமரம்

வடலிமரம், ஐரேனிபுரம் பால்ராசய்யா, முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோவில், பக். 124, விலை 80ரூ. பனைமரத்தின் விடலைப் பருவத்தை வடலிமரம் எனக்கூறுவது உண்டு. அதே விடலைப் பருவத்தை ஒத்த இருவரின் காதலில், அந்த மரத்தையும் காட்சிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். சாதியைக் காரணம் காட்டி காதலைப் பிரிக்கிறார் கதை நாயகனின் தந்தை. இதனால் மதுவுக்கு அடிமையாகும் நாயகனை நல்வழிப்படுத்தும் முயற்சியாக காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். கர்ப்பமுற்ற நிலையில் நாயகி காதலனை ஏற்கிறாளா அல்லது மறுக்கிறாளா என்பதை திரைப்பட பாணியில் காட்சியாக எழுதியுள்ளார் நூலாசிரியர். இடையிடையே காதலை, கவிதையாக தர […]

Read more

வரலாறு படைத்த தமிழ்ப் புதினங்கள்

வரலாறு படைத்த தமிழ்ப் புதினங்கள், கண்ணகி கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், தஞ்சை, விலை 500ரூ. தமிழில் புகழ் பெற்று விளங்கும் நாவல்கள் பற்றி, ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். கல்கியின் சிவகாமியின் சபதம், டாக்டர் மு. வரதராசனாரின் அகல் விளக்கு, அகிலனின் நெஞ்சின் அலைகள், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், தி. ஜானகிராமனின் மோகமுள் உள்பட 89 நாவல்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. சிவகாமியின் சபதம் நாவலை 4 பேர்கள் 4 கோணங்களில் ஆராய்ந்துள்ளனர். […]

Read more

நல்ல நிலம்

நல்ல நிலம், பாவை சந்திரன், கண்மணி கிரியேட்டிங் வேவ்ஸ், சென்னை, விலை 600ரூ. இது கடலோர கிராமங்களின் கதை! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023772.html கீழ்த்தஞ்சை மாவட்டத்தின் கடலோரம் அமைந்துள்ள இலுப்பூர், மங்கலம் ஆகிய கிராமங்களின் எளிய மக்களைப் பற்றியது இந்த நாவல். கி.பி. 1895 – 1896ல் துவங்கிய, நூறு ஆண்டுகளை நாவல் கடக்கிறது. யூனியன் ஆட்சியில் வாழ்ந்த மக்களின் எல்லைப்புறத்தில், பிரெஞ்சு ஆட்சி நடந்து கொண்டு இருந்த சூழ்நிலையில், நாவல் துவங்குகிறது. நாவலின் நாயகி காமு என்னும் […]

Read more

சக்கை

சக்கை, கலைச்செல்வி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 236, விலை 180ரூ. ஜல்லி உடைக்கும் கூலித் தொழிலாளிகளின் கண்ணீர்க் கதைதான் இந்த நாவல். நூலாசிரியரின் முதல் நாவல் இது. வறுக்கும் உச்சிவெயிலில் கல்லுடைத்து வாங்கும் சொற்ப கூலியில் கஷ்ட ஜீவனம் நடத்தும் ராசப்பனின் குடும்பம் கதையில் மையமாகிறது. முக்காலும் ஒரு குடும்பத்தைச் சுற்றிச் செல்லும் நாவலில், வருத்தும் வறுமை, இழவு, இழிவு, வஞ்சகம், நோய், மனவலிகள் என்பதாக ஓடுகிறது கதை. அதற்குள்ளும் காதல், கல்யாணம், சடங்கு, சம்பிரதாயம், மான, மரியாதை, வைராக்கியம், வீரியம் […]

Read more
1 33 34 35 36 37 66