நினைவுகள் நிறைந்த வெற்றிடம்

நினைவுகள் நிறைந்த வெற்றிடம், ஜி. மீனாட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 100ரூ. எழுத்ளரும் மங்கையர் மலர் பொறுப்பாசிரியருமான ஜி.மீனாட்சி, சிறுகதை எழுதுவதில் தனக்கென ஒரு தனி பாணியை வைத்துக்கொண்டிருக்கிறார். கதைகளை வீணாக வளர்க்காமல், ரத்தினச் சுருக்கமாக எழுதுவார். அதுவும், நல்ல தமிழில் அமைந்திருக்கும். கதைகளில் நிச்சயம் ஒரு மெசேஜ் இருக்கும். இந்த சிறுகதைத் தொகுதியில் 12 கதைகள் உள்ளன. எல்லா கதைகளிலும் அவருடைய முத்திரைகளாகப் பதிந்துள்ளார். நினைவுகள் நிறைந்த வெற்றிடம் என்ற கதை, புரட்சிகரமானது. நெஞ்சில் அதிர்வுகளை உண்டாக்குகிறது. சிந்திக்க வைக்கிறது. […]

Read more

சுந்தரி

சுந்தரி, வ.ரா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, பக். 256, விலை 150ரூ. தமிழ் வசன நடையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய முன்னோடியும் மணிக்கொடி ஆசிரியருமான வ.ரா. எழுதிய நான்கு நாவல்களில் இதுவும் ஒன்று. சுந்தரி ஓர் அற்புதமான நவ இலக்கிய பொக்கிஷம். எனக்கு இலக்கியப் பிரக்ஞை ஓரளவு உண்டானதாக நான் மதிக்கும் காலத்துக்குப் பின்பு, ஒரே மூச்சாய்ப் படித்து முடித்த நாவல்கள் நாலே நாலுதான். அதில் ஒன்று சுந்தரி என்ற நூலுக்கு முன்னுரை அளித்துள்ள தி.ஐ.ர. குறிப்பிட்டுள்ளார். நாவலில் வரும் அத்தனை பாத்திரங்களும் உயிர் […]

Read more

நதி மூலம்

நதி மூலம் (நாவல்), விட்டல் ராவ், விஜயா பதிப்பகம், பக். 392, விலை 225ரூ. தேச விடுதலைக்கு முன்னும் பின்னுமான நாட்களை, இந்த நாவல் பதிவு செய்கிறது. நீலனோ, காலனோ என்று அந்நாள் ஜனங்கள் சொல்லி நடுங்குமாறு, இந்தியர்களைக் கொன்று குவித்த, லெப்டினென்ட் கர்னல் நீல் துரையின் சிலை அகற்றும் போராட்டம், சைமன் கமிஷன் எதிர்ப்பு மறியல், வாணிவிலாஸ் தியேட்டரில், வள்ளி பரிணயம் நாடகத்தில் மிஸ். ரத்னாபாய், பண்டித ஜவஹர்லால் நேருவைப் பற்றிப் பாடும்போது போலீஸ் தடுப்பது, போன்ற பல சரித்திர நிகழ்வுகளை நாவல் […]

Read more

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள்

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள், ச. சுப்பராவ், பாரதி புத்தகாலயம், பக். 95, விலை 70ரூ. ஆங்கில நாவல்கள் குறித்து, புத்தகம் பேசுது இதழில், நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள், தொகுப்பாக வெளிவந்துள்ளன. திரில்லர் நாவல்களில் தனக்கென்று தனி இடம் பிடித்த, அமெரிக்க எழுத்தாளரான, ராபின் குக் எழுதிய முதல் நாவலே, சிறுநீரகத் திருட்டைப் பற்றிய கோமா. அடுத்து, மருத்துவத் துறையின் மோசடி குறித்து எழுதிய, டெத் பெனிபிட் நாவல். கிரைட்டனின் கதைகளை விவரித்து, தமிழில் விஞ்ஞானக் கதைகள் ஏன் அதிகளவில் வரவில்லை என்ற தன் ஆதங்கத்தையும் […]

Read more

நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம்

நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம், மாதவ் பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ்நாட்டின் பெருமையையும் எடுத்துக்கூறும் புத்தகம் இது. நாம் தமிழர்கள் என்ற முதல் அத்தியாயத்திலேயே, தமிழ்நாடு பற்றிய பல அரிய தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர் ப. இலட்சுமணன். மேல்நாட்டினர் காட்டுவாசிகளாகத் திரிந்த காலத்தில், தமிழன் நாகரிகத்துடன் வாழ்ந்தான் என்பதை மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளாகப் பேச்சு வழக்கத்தில் இருந்து வரும் மொழி தமிழ். இங்கிலாந்து நாட்டு மகாராணி விக்டோரியா, தினமும் காலையில் எழுந்ததும் […]

Read more

அளவீடற்ற மனம்

அளவீடற்ற மனம், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 225ரூ. தத்துவ மேதை ஜே. கிருஷ்ண மூர்த்தி டெல்லி, கல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய இடங்களில் அக்டோபர் 1982 – ஜனவரி 1983க்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகளின் தொகுப்பு. அவரது ஆங்கில உரையைத் தமிழில் எம்.ராஜேஸ்வரி மொழிபெயர்த்துள்ளார். குழப்பத்திற்கான அடிப்படைக் காரணம், ஒழுங்கின்மை என்றால் என்ன? துக்கத்தைப் போக்குவது எப்படி? என்பன போன்ற கேள்விகளுக்கு அவருக்கே உரித்தான பாணியில் பதில் சொல்கிறார். மேலும் நெஞ்சத்துள் இருக்கும் மனம் எனும் அருமையான கண்ணோட்டத்தையும் அவர் நமக்கு […]

Read more

சேதுபதியின் சேவைக்காரன்

சேதுபதியின் சேவைக்காரன், காவ்யா, சென்னை, விலை 350ரூ. ராமநாதபுரம் என்ற சேது சீமையை ஆண்டவர்கள் சேதுபதிகள். அவர்கள் வரலாற்றில் நடந்த போதைக் களமாகக் கொண்டு இந்த நாவலை க.மனோகரன் எழுதியுள்ளார். சடையக்கத்தேவர் காலத்தில் மதுரை மன்னர் திருமலை நாயக்கரின் படைகள் ராமநாதபுரத்தைத் தாக்கும்போது நடக்கும் போரில் இருந்து கதை தொடங்குகிறது. அதே மதுரையை மைசூர் தளபதி முற்றுகையிட்டபோது, சேதுபதி விஜய ரெகுநாத தேவரின் உதவியை திருமலை நாயக்கரின் நாடினான். அதன் விளைவாக நடந்த மூக்கறுப்பு போர் வரை கதை நீள்கிறது. சேதுபதி மன்னர்கள் மாவீரர்களாகத் […]

Read more

சொப்பன சுந்தரி

சொப்பன சுந்தரி, வானவில் புத்தகாலயம், சென்னை, விலை 299ரூ. பிரபல தெலுங் எழுத்தாளர் யத்தனபூடி சுலோச்சனா ராணி எழுதிய நாவல். தமிழில் கவுரிகிருபானந்தன் மொழிபெயர்த்துள்ளார். சேற்றில் பிறந்த செந்தாமரை மேனகா, தாயின் வாழ்க்கையில் நடந்த தடுமாற்றத்தால் சமுதாயம் அவர்களை மதிப்புக் குறைவாக நடத்துகிறது. மேனகா எதிர்பாராதவிதமாக நடிகையாகி விடுகிறாள். அவள் மனதார விரும்பிய ஹரி கிருஷ்ணாவுக்கும் ரேகாவுக்கும் திருமணம் நடக்கிறது. இந்த நிலையில் ரேகா இறந்து போகிறாள். ஹரி கிருஷ்ணன் மீது கொலை குற்றம் சாட்டப்படுகிறது. திகில்களும், திருப்பங்களும் நிறைந்த கதை. முடிவு என்னவாக […]

Read more

மிளிர்கல்

மிளிர்கல், ஞாநி, பொன்னுலகம் பதிப்பகம். கார்ப்பரேட் நிறுவனத்தோடு காப்பியத்தின் பயணம் பொன்னுலகம் பதிப்பகம் வெளியிட்டுள்ள, இரா.முருகவேள் எழுத்திய, மிளிர்கல் என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். கண்ணகியை மையமாகக் கொண்ட கதை. கண்ணகி குறித்து, சோழ மண்டலம், பாண்டிய மண்டலம் என பகுதிக்கு ஏற்றவாறும், வணிகர்கள், மீனவர்கள் என, இனத்துக்குத் தக்கவாறும் கருத்துக்கள் நிலவுகின்றன.அந்த கருத்துக்களை எல்லாம் திரட்டி, ஒருமுகப்படுத்தும் புதிய முயற்சியில், பெண் ஆய்வாளர் ஒருவர் செல்கிறார். அவருடன் நவரத்தின கல் ஆய்வாளரும் செல்கிறார். இவர்கள் பற்றியதுதான் கதை. கண்ணகியைத் தேடி செல்லும் இவர்கள், […]

Read more

ஜெயந்தி சங்கர் நாவல்கள்

ஜெயந்தி சங்கர் நாவல்கள், ஜெயந்தி சங்கர், காவ்யா, சென்னை, பக். 1014, விலை 1000ரூ. மலேசிய, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களிடம் பணம் இருக்கும். படைப்பாற்றல் இருக்காது என்ற சில இலக்கியவாதிகளின் கருத்து, ஜெயந்தி சங்கரின் திரிந்தலையும் திணைகள் என்ற நாவலைப் படித்தால் உடைந்துபோகும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருதுபெற்ற இந்த நாவல், தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் புலம்பெயர்ந்தும் வாழும் பல பெண்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டது. அவர்களது மனப்புண்களைக் காட்டிச் செல்வதோடு, வாசனையும் வலிகொள்ளச் செய்ய, கதாபாத்திரங்களை இன்னும்கொஞ்சம் கூடுதலாகப் பேசவிட்டிருக்கலாம். அல்லது வலியின் அடியாழத்துக்கு […]

Read more
1 32 33 34 35 36 66