சின்ன அண்ணி

சின்ன அண்ணி, தேவி வெளியீடு, விலை 140ரூ. இயல்பான ஏழைகளின் வாழ்க்கை, வாழ்க்கையின் அன்றாடப் பிரச்சினைகள், பாத்திரப் படைப்புகள், வர்ணனைகள், வட்டார வழக்குகளைப் புகுத்தி, அந்த மண்ணுக்குரிய மேன்மைகள், மென்மைகளை கதாபாத்திரம் மூலம் வாசகர் நெஞ்சில் பதிய வைக்கும் எழுத்தாளர் உமா கல்யாணி, அருமையான நாவலை படைத்திருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.   —- இது சக்சஸ் மந்திரம் அல்ல, சித்தார்த்தன் சுந்தரம், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 85ரூ. தொழிலில் வெற்றி பெற கடின உழைப்பு தவிர்த்து வேறு சில காரணிகளும் தேவை என்பதை […]

Read more

இதய சூத்திரம்

இதய சூத்திரம், ஓஷோ, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. உலகப் புகழ்பெற்ற ஆன்மிகக் குருவாகத் திகழ்ந்தவர் ஓஷோ. மனித குலத்தின் விழிப்புணர்வுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். தன்னைக் கொண்டறிதலும், தியானமும் கொண்ட புதிய முறையை அறிமுகப்படுத்தியவர். அவரது இதய சூத்திரம் என்ற நூலைத் தமிழில் சுவாமி சின்மானந்த் மொழிபெயர்த்துள்ளார். ஆன்மிக அன்பர்களின் இதயம் கவரும் நூல். நன்றி: தினத்தந்தி, 20/1/2016.   —- குருசேத்திரக் குடும்பங்கள், ஜோதிர்லதா கிரிஜா, பூம்புகார் பதிப்பகம், விலை 145ரு. இருவேறு பொருளாதார நிலையில் வாழும் இரு குடும்பங்களின் வாழ்வை […]

Read more

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம், தமிழில் கார்த்திகை பாண்டியன், எதிர் பதிப்பகம். ஒரு முகமூடிக்குப் பின்னால் ஜப்பான் மொழியில், ‘யுகுயோ மிசிமா’ எழுதி, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பின் தமிழில், ‘ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்’ என வெளியான நாவலை, சமீபத்தில் படித்தேன். கார்த்திகை பாண்டியன் மொழியாக்கம் செய்த இந்த நாவலை, எதிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சமூகத்தில் ஆண், பெண் என்ற இரு இனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் உள்ளது. மூன்றாம் பாலினத்துக்கு உரிய அங்கீகாரம் இல்லை. நாவல் ஆசிரியர் யுகுயோ மிசிமாவுக்கும் இதுபோன்ற பிரச்னை […]

Read more

ஒரு பிடி மண்

ஒரு பிடி மண், ஸ்ரீதர், விஜயா பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. கல்யாண பரிசு மூலம் தமிழ்த் திரை உலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் ஸ்ரீதர். 1965ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் யுத்தம் மூண்டபோது மக்களுக்கு வீரத்தையும், தேசபக்தியையும் உண்டாக்கும் வகையில் ஒரு திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டார். அதற்காக அவர் எழுதிய கதைதான் ‘‘ஒரு பிடி மண்’’. இப்படத்தில் சிவாஜிகணேசன், முத்துராமன், ஏவி.எம்.ராஜன், கே.ஆர்.விஜயா, பாரதி ஆகியோர் நடிக்க இருந்தனர். இந்த நிலையில் திடீரென்று இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு, யுத்தம் நிறுத்தப்பட்டது. அதனால், […]

Read more

முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம்

முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. இலங்கையைச் சேர்ந்த கே.எஸ். சிவகுமாரன் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு இடங்களில் நடந்த உலகப் பட விழாக்களில் பங்கு கொண்டு அங்கு திரையிடப்பட்ட சிறந்த படங்களை பார்த்து ரசித்தவர். அவர் தமது அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் எழுதியுள்ளா புத்தகம் இது. உலகப் பட விழாக்களில் பாராட்டப்பட்ட சிவகுமார், ராதா நடித்த ‘மறுபக்கம்’, கமல்ஹாசன், ரேவதி நடித்த ‘மகளிர் மட்டும்’, அஜித், தேவையாணி நடித்த ‘காதல் கோட்டை’ ஆகிய தமிழ் படங்கள் […]

Read more

ஜெகாதா குறுநாவல்கள்

ஜெகாதா குறுநாவல்கள், ஜெகாதா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 608, விலை 380ரூ. ஜெயகாந்தனை துரோணராக வரித்துக்கொண்ட ஜெகாதா (ஜெயகாந்தன்தாசன்) என்ற ஏகலைவன், வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறி உச்சியைத் தொட்டிருக்கிறார். ஜெகாதாவின், 18 நீள் கதைகளைக் கொண்ட தொகுதி இது. ‘அவ்வளவு பெய்த மழையிலும் நிலவு நனையாமல் பளீரிடுவதைப் பார்த்தாள். ஒளியேற்றிய கற்கண்டுக் கட்டிகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன’ என்பது போன்ற வர்ணனைகள் நம்மை, உற்சாகப்படுத்துகின்றன. ராமேஸ்வரம் சங்கு குளித் தொழிலாளர் பிரச்னைகளைச் சித்தரிக்கும், ‘சமுத்திர குமாரர்கள்’, கந்து வட்டிக்குக் கடன் […]

Read more

காடோடி

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 காடோடி, நக்கீரன், அடையாளம், விலை 270ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024312.html தமிழில் கவனம் பெற்றுவரும் பசுமை இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க படைப்பாக்க முயற்சி ‘காடோடி’. உலகின் பழமையான, பிரம்மாண்டமான போர்னியோ காடுகளில் பணிபுரிந்த எழுத்தாளர் நக்கீரன், காடுகளைப் பற்றி நமக்கென்ன தெரியும் என்ற கேள்வியை நாவல் மூலம் எழுப்புகிறார். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

எங்கதெ

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 எங்கதெ, இமையம், க்ரியா, விலை 110ரூ. இந்த ஆண்டு அதிகம் பேரால் படிக்கப்பட்டு, பரவலாகப் பேசப்பட்ட நாவல் இது. விளிம்புநிலை மக்களின் வாழ்வை யதார்த்தமான சித்திரங்களாக முன்வைப்பதில் தேர்ந்தவரான இமையம், இந்த நூலில் ஓர் ஆணின் மன அவசத்தைப் புனைகதையாக்கியிருக்கிறார். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

பாக்ஸ்

  கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 பாக்ஸ் கதை புத்தகம், ஷோபா ஷக்தி, கருப்புப் பிரதிகள் வெளியீடு, விலை 200ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024980.html ஈழத் தமிழர் போராட்டத்தின் இலக்கிய சாட்சி ஷோபா சக்தி. ‘கொரில்லா’, ‘ம்’ நாவல்களைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் எழுதி வெளியான நாவல் இது. விறுவிறுப்பான உரைநடையில் எழுதப்பட்ட போரைப் பற்றிய கலாபூர்வமான பதிவு. நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

சவீதா நாவல்கள்

சவீதா நாவல்கள், சவீதா, நன்னூல் அகம், பக். 1264, விலை 800ரூ. சுகமான வாசிப்பு அனுபவம் தரும் சவீதா ஒரு அபூர்வமான எழுத்துச் சிற்பி. உளி எடுத்துக் கொஞ்சம், கொஞ்சமாகச் செதுக்குவதுபோல், சொற்களைச் செதுக்கும் ஒரு அபூர்வக் கலைஞன், நிலவின் பாலில் குளிப்பதைப்போலவும், நிர்மலத் தென்றலில் குறிப்பதைப்போலவும், சுகம் தரும் வார்த்தைகளை வர்ணனைகளில் கொண்டு வரும் மாயாவி சுவீதா. இந்தத் தொகுதியில் உள்ள, 18 நாவல்களும், சுகமான வாசிப்பு அனுபவத்தைத் தரும். ‘மலைச் சிகரங்கள் மேகங்களால் கூர் மழுங்கி இருந்தன. மூடுபனி, யூகலிப்டஸ் மரங்களுக்கு […]

Read more
1 30 31 32 33 34 66