தாயும் ஆனவன்

தாயும் ஆனவன், சுசீலா, ஜீஜீ எண்டர்பிரைசஸ், விலை 120ரூ. சிவாஜிகணேசனும், எம்.ஆர்.ராதாவும் இணைந்து நடித்த “பாகப்பிரிவினை” , “பாவமன்னிப்பு” ஆகிய திரைப்படங்களை யாரும் மறந்திருக்க முடியாது. அதில் வரும் வசனங்கள், ரசிகர்களின் செவிகளில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்தப் படங்களுக்கு வசனம் எழுதியவர் சோலைமலை. அவருடைய மகள் சுசீலா சோலைமலைதான் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். இப்புத்கத்தில் தாயும் ஆனவன், பந்தயம், காரடையான் நோன்பு, ஏய் என்ற நான்கு குறு நாவல்கள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் உரையாடல்கள் மூலமே கதையை நகர்த்திச் செல்கிறார் சுசீலா. படிக்கும்போது, அவருடைய […]

Read more

மாற்றம்

மாற்றம், மோ – யான், தமிழில் பயணி, காலச்சுவடு பதிப்பகம், பக். 87, விலை 80ரூ. மாற்றம் என்ற இந்தப் படைப்பு, நாவல் வடிவில் எழுதப்பட்ட சுயசரிதை, நாயகனின் பள்ளிப்பருவ வாழ்க்கையில் துவங்குகிறது கதை. நாயகன் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் வாழ்க்கையின் போக்கில் பயணித்து, எங்கெங்கோ அலைந்து, இலக்கியவாதியாகி, அவனுடைய கதை சினிமாவாக எடுக்கப்பட்டு, பிரபலமாகி கடைசி அத்தியாயத்தில் அதே கிராமத்துக்கு வந்து சேர்வதுடன், கதை முடிகிறது. நூலின் இடையிடையே பழமொழிகள், தத்துவங்கள் போகிறபோக்கில் இரைந்து கிடக்கின்றன. சீன வழக்குமொழி நடையில் எழுதப்பட்டிருப்பது சுவையாக […]

Read more

சீதாவின் பதி

சீதாவின் பதி, யத்தனபூடி, சுலோசனா ராணி, தமிழில் கவுரி கிருபானந்தன், வானவில் புத்தகாலயம், பக். 312, விலை 250ரூ. இல்லற வட்டத்திற்க வெளியில், ஒரு பெண் சிநேகிதியை தேடிக்கொள்ளும் கணவன்மார்கள், எத்தனை அவஸ்தைகளுக்கு ஆளாகின்றனர் என்பதைச் சொல்லும் நாவல் இது. வித்யாபதி, இந்திரா ஆகியோர், ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர். சூழ்நிலையால், பெற்றோர் நிச்சயித்த சீதாவை மணம்புரிகிறான் வித்யாபதி. ஆனால், வித்யாபதியால் இந்திராவை மறக்க முடியவில்லை. இந்திராவாலும் வித்யாபதியை மறக்க முடியவில்லை. சீதா, தான் கணவனின் முதல் காதலைப் பற்றி, திருமணம் ஆன அன்றே தெரிந்து […]

Read more

அம்ருதா

அம்ருதா, திவாகர், பழனியப்பா பிரதர்ஸ், பக். 448, விலை 335ரூ. ஒரு சித்ரா பவுர்ணமியின் அடுத்த பத்து நாளின் நிகழ்வுகளைச் சித்தரித்து குலோத்துங்க சோழனின் வரலாற்றை ஒட்டிய புதினம் இது. என்றாலும் சோழர் காலத்திய முந்தைய வரலாற்று நிகழ்வுகள் பலவும் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. இக்கதை நிகழ்வின் காலம் கி.பி. 1070. கதை நாயகி, அம்தா ஒரு கற்பனை கதாபாத்திரமே. காம்போஜ தேசத்துப் பேரழகி அம்ருதா. தேச ஜாதகத்தின் படி வரவிருக்கும் ஒரு பிரளயத்தையே நிவர்த்திக்கக்கூடிய அவளது சாதகமான ஜாதகத்தின் காரணமாக, சோழ மன்னன் […]

Read more

லாக்கப்

லாக்கப், சந்திரகுமார் (ஆட்டோ சந்திரன்), டிஸ்கவரி புக் பேலஸ். அன்றாட பிரச்னைக்கு கிடைத்த வரவேற்பு! ஆட்டோ சந்திரன் என்ற சந்திரகுமார் எழுதிய லாக்கப் என்ற நாவலை படித்தேன். டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டு உள்ளது. கோவையை சேர்ந்த ஒரு இளைஞன் வேலைக்காக, பல்வேறு இடங்களுக்குச் செல்கிறார். 20வது வயதில், ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள, நெடுஞ்சாலை உணவகத்தில் வேலைக்கு சேர்கிறார். ஒரு நாள், அவர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்கின்றனர். கைதுக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. காவல் நிலையத்தில், திருட்டுக் குற்றம் […]

Read more

லட்சுமி என்னும் பயணி

லட்சுமி என்னும் பயணி, லட்சுமி அம்மா, மைத்ரி புக்ஸ், விலை 180ரூ. சிறு வயதிலேயே குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, பதின்ம பருவத்தில் வேலைக்கு சென்று, தொழிற்சங்கத்தில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு போராட்டவாதியாக வாழ்ந்து வரும் லட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் இது. மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி என்று தனது போராட்ட தளத்தை விரிவாக்கிய லட்சுமி, குழந்தை பருவம் முதல் அன்றாடம் எதிர் கொண்ட சோதனைகள், வேதனைகளை நெஞ்சை தொடும்படி வடித்திருக்கிறார். போராட்டம், அரசியல், உழைப்பு என பொதுவாழ்வில் ஈடுபடும் […]

Read more

பிராஜக்ட்

பிராஜக்ட், ஜீவா புத்தக நிலையம், விலை 200ரூ. மர்ம நாவல் என்ற குறிப்புடன் இந்த நூல் வெளிவந்துள்ளது. நாவலை எழுதியவர் பெயர் கவா கம்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபற்றி, அணிந்துரையில் “திருக்குறள் பாராயணம்” அமைப்பின் தலைவர் புதேரி தானப்பன் கூறுகிறார்- “இந்த நூலின் ஆசிரியர் ‘கவாகம்ஸ்’ ஸா? இப்படியும் ஒரு பெயரா? இவர் ஆணா, பெண்ணா? நாவல் முழுவதும் ஆங்கிலச் சொற்கள் நிரம்பி வழிகின்றன…” இவ்வாறு தானப்பன் கூறினாலும் நாவல் சிறப்பானது என்று பாராட்டவும் செய்திருக்கிறார். என்ஜீனியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழு நேர […]

Read more

ஆபரேஷன் நோவா

ஆபரேஷன் நோவா, தமிழ் மகன், உயிர்மை பதிப்பகம், விலை 150ரூ. விஞ்ஞானப் பின்னணியில் பிரபல எழுத்தாளர் தமிழ் மகன் எழுதிய நாவல். பூமி இரண்டாகப் பிளந்து உருகி ஓடப் போவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதனால், உலக மேம்பாட்டுக் குழுவினர் கூடி, இன்னொரு கோளில் மனிதர்களை குடியேற்றி, இயன்றவரை மனித குலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. வில்லன் ஒருவன் குறுக்கே வருகிறான். இப்படி விறுவிறுப்பாகச் செல்கிறது கதை. விஞ்ஞானத்தைப் பின்னணியாகக் கொண்ட சினிமாப்படங்கள் ஆங்கிலத்தில் ஏராளமாக வந்திருக்கின்றன. கற்பனைக்கும் […]

Read more

பறந்து மறையும் கடல் நாகம்

பறந்து மறையும் கடல் நாகம், ஜெயந்தி சங்கர், காவ்யா, விலை 1000ரூ. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கன்பியூஷியஸ் வகுத்தளித்த கோட்பாட்டின் கீழ் மூதாதையர் வழிபாடு, பெற்றோரை மதித்துப் பேணிக் காத்தல், ஆண் வாரிசுகளை உருவாக்குதல் போன்ற மூன்று முக்கிய அலகுகளைச் சுற்றி உருவானதே சீனக் கலாசாரம். அத்தகைய சீனக் கலாசாரம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். தமிழர் பண்பாட்டுடன் சீனப் பண்பாடு பல வகைகளில் ஒத்துப் போகிறது. இது குறித்தும், சீனப் பெண்களின் குடும்ப வாழ்க்கை, அவர்களின் அடிமைத்தனம், சமூக சிக்கல்கள், […]

Read more

மௌனத்தின் சாட்சியங்கள்

மௌனத்தின் சாட்சியங்கள், சம்சுதீன் ஹீரா, பொன்னுலகம் பதிப்பகம், விலை 350ரூ. கலவரத்தின் சாட்சியங்கள் சென்னையில் உள்ள வாசகசாலை அமைப்பின் இலக்கியப் பரிசு பெற்ற நாவல். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் அகம் புறம் இரண்டையும் விலாவாரியாகப் பேசுகிறது. யாசர் என்றொரு அப்பாவி மனிதன் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைதாகி செய்யாத குற்றத்துக்குத் தண்டனை அனுபவித்து விடுதலையாகி சென்னை நோக்கி ரயிலில் செல்கிறான். அந்த பயணத்தில் அவன் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதே இந்நாவல். குண்டுவெடிப்புக்கு முன்னால் அதற்கான சூழல் உருவான விவரங்களை நாவலாசிரியர் சம்சுதீன் ஹீரா உள்விவகாரங்களைத் […]

Read more
1 29 30 31 32 33 66