கிருதயுகம்

கிருதயுகம், பேராசிரியர் ந. வேலுசாமி, விலை 250ரூ. சேலம், நாமக்கல் பகுதியில் வாழும் ஒரு சமூகத்தினரின் கலாச்சாரம், பொருளாதாரம், பழக்க வழக்கங்கள் இவற்றை அடிப்படையாக வைத்து இந்த நாவலை எழுதியுள்ளார், பேராசிரியர் ந. வேலுசாமி. வட்டார வழக்கில் எழுதுவது கடினம். அதை வெகு இயல்பாக எழுதியுள்ளார். ஆசரியருக்கு இது முதல் நாவல் என்பதை நம்ம முடியவில்லை. நிறைய நாவல்கள் எழுதி பக்குவப்பட்டவரின் படைப்பு என்று சொல்லத்தக்க வகையில் நாவல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 6/4/2016.   —- ஸ்ரீகந்தபுராணம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 45ரூ. […]

Read more

பேருந்து

பேருந்து, ஹரணி, கே.ஜி. பப்ளிகேஷன்ஸ், பக். 120, விலை 120ரூ. தன் பயண வாழ்வின் ஒரு பகுதியாக அன்றாட வாழ்வில் அலையும் மக்களின் அவலங்களை மனிதமன ஓட்டங்களை நாவலாக பதிவு செய்துள்ளார். நன்றி: குமுதம், 28/3/2016.   —- டிஜிட்டல் வாழ்க்கை, பத்மினி பட்டாபிராமன், தென்றல் நிலையம், பக். 208, விலை 150ரூ. டிஜிட்டல் துறையில் நவீனமாகிவரும் தொழில் நுட்பங்களை, மீடியா மாணவர்களுக்கு உதவும் வகையில் எழுதியுள்ளார். நன்றி: குமுதம், 28/3/2016.

Read more

அரண்மனை

அரண்மனை, தமிழில் இறையடியான், சாகித்ய அகாடமி, விலை 455ரூ. கன்னட எழுத்தாளர் கும்.வீரபத்ரப்பா எழுதிய படைப்புகளில் மிகச் சிறந்த நாவல். இது கன்னட நாவல் உலகின் போக்கையே மாற்றி அமைத்தது என்றால் மிகையாகாது. 19ம் நூற்றாண்டின் காலனித்துவ காலகட்டத்தை வித்தியாசமான நோக்கில் படம் பிடித்துள்ள நாவல் இது. இதில் அரசு விசுவாசம், கும்பினி சர்க்காரின் ஆளுமை, மக்கள் நம்பிக்கையின் எதிரெதிர்ப் போக்குகள் ஆகியன மிக அழகிய முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. புதுமையான முறையில் மண்ணின் வாசனையை தன்னகத்தே கொண்டுள்ள இந்த நாவலை, இறையடியான் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். […]

Read more

ஆதிசைவர்கள் வரலாறு

ஆதிசைவர்கள் வரலாறு, தில்லை எஸ். கார்த்திகேய சிவம், ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு, விலை 200ரூ. ஆதிசைவர்களுக்கும் சிவபெருமானுக்கும் உள்ள தொடர்பையும், ஆதிசைவர்களுக்கும் சைவ சமயத்திற்கும் உள்ள தொடர்பையும் விளக்கும் நூல். ஆதிசைவர்களின் வரலாற்றை இதன் மூலம் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். நன்றி: தினத்தந்தி, 30/3/2016.   —- தந்தை கோரியோ, சாகித்திய அகாதெமி, விலை 220ரூ. 19ம் நூற்றாண்டில் பாரிசு நகரத்தின் நாகரீக வாழ்வு யார் யாரை எப்பாடுபடுத்தியது என்பதை விளக்குவதே இந்நாவலின் நோக்கம். பாரிசு நகர மக்களின் பண்பாடு, பழக்க […]

Read more

இந்திய நேரம் 2 A.M

இந்திய நேரம் 2 A.M., பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், பக். 168, விலை 125ரூ. பட்டுக்கோட்டை பிரபாகரின் புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்று இது. 1986ல், முத்தாரம் இதழில் தொடராக வந்தது. மகேந்திரன், ஒரு தொழிலதிபர். அவர் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஸ்வர்ணா. மகேந்திரனின் பர்சனல் ஸ்டெனோ. ‘ஒரு துணைக்காக ஏங்கறேன் நான். என் மனைவி என்னை விட்டுவிட்டுப் போய் 12 ஆண்டுகள் ஆகின்றன. என் மேல் அக்கறை காட்ட, அன்பு செலுத்த யாருமில்லை. பசித்தாலும் கேட்க ஆளில்லை. என் தேவைகளை நானே […]

Read more

அஸ்தினாபுரம்

அஸ்தினாபுரம், ஜோ டி குருஸ், காக்கை பதிப்பகம், பக். 416, விலை 380ரூ. துறைமுக அவலத்தை தோலுரித்துக் காட்டும் நாவல்! ஜோ டி குரூஸின் கதை மாந்தர்கள் சாதாரண மனிதர்கள். ஆகையால் எளிதில் இனங்கண்டு கொள்ளப்படுபவர்கள். எங்கோ ஆமந்துரையில் பிறந்த அமுதனுக்கும், சென்னை செம்மாங்குப்பத்து ஆனந்திக்கும் வாழ்வில் இயற்கை சூட்சுமமான முடிச்சு போட்டிருந்தது என்பதுதான் அஸ்தினாபுரம் நாவலின் கதை. கதைக்கு அஸ்திவாரமே இந்த உறவுதான். அது உண்டான விதம், விரிந்து பரந்த் விஸ்தாரம் எல்லாம் அழகாகச் சொல்லப்படுகிறது. நாவல் சொல்லப்படும் விதத்தில், ஆசிரியரின் முழு […]

Read more

இனியவளே

இனியவளே, என்.சி.மோகன்தாஸ், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 130ரூ. ‘இனியவளே வா… கால் சிலம்புகள் கண்ணகியிடமே இருக்கட்டும். கானல் வரிகள் கனவிலும் வேண்டாம். நாம் மூவரும் இணைந்து, இங்கே சிலப்பதிகாரத்தைத் திருத்தி எழுதுவோம்’ என்று சொல்லும் மோகன்தாஸ், ஒரு அருமையான முக்கோணக் காதல் கதையை தந்திருக்கிறார். கோபியின் காதலி யாமினி. இருவரும் வேளாங்கண்ணிக்கு, சுற்றுலா செல்கின்றனர். ஒரு மழைநாளில் அவர்கள் முதலிரவு. இடி எனும் மேளதாளத்தோடு, மின்னல் தெறிக்கும் மத்தாப்போடு, காற்று எனும் சாமரத்தோடு, மழை எனும் அட்சதையோடு அங்கே நடந்து முடிகிறது. […]

Read more

ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம், இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், விலை 175ரூ. சோழ மண்டலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்ட சரித்திரச் சிறப்பு வாய்ந்த மகாதேவபுரத்தை கதைக்களனாக கொண்டு படைக்கப்பட்ட பரபரப்பான மர்ம நாவல். ‘ஆனந்த தாண்டவம்’ என்ற உடனேயே எல்லோருக்குள்ளும் சிவபெருமானின் நாட்டிய உருவம்தான் ஞாபகத்திற்கு வரும். ஆனந்தம் ஏற்படப்போய் அவர் ஆடுகிறபடியால் அப்படி ஒரு பெயரா இல்லை, அதைப் பார்ப்பவருக்கு ஆனந்தம் வரும் என்பதால் அப்படி ஒரு பெயரா என்பது விவாதத்துக்குரியது மட்டுமல்ல, பெரும் ஆராய்ச்சிக்கும் உரியது. அதற்கான ஆராய்ச்சிகளும் நடந்தபடியே இருக்கின்றன. குறிப்பாக […]

Read more

போர்களும் தொலைந்து போன மனிதமும்

போர்களும் தொலைந்து போன மனிதமும், தஞ்சை செல்வன், மணிமேகலைப் பிரசுரம், விலை 190ரூ. உலகின் பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த எழுத்தாளர் தஞ்சை செல்வன், தன் பரந்த அனுபவத்தின் காரணமாக 416 பக்கங்கள் கொண்ட இந்த நெடிய நாவலை படைத்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் நடந்த போர்கள் பற்றியும், தமிழ் ஈழத்தில் நடந்த போர் பற்றியும் பல ஆச்சரியமான உருக்கமான தகவல்களை இந்த நாவலில் பதிவுசெய்துள்ளார். கதாபாத்திரங்கள் உயிரோவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. ஆசிரியரின் அழகான தமிழ்நடை இந்த பெரிய நாவலை விறுவிறுப்புடன் நடத்திச் செல்கிறது. “கடந்த […]

Read more

முப்பத்தி நாலாவது கதவு

முப்பத்தி நாலாவது கதவு, புல்வெளி காமராசன், அகநாழிகை பதிப்பகம், பக். 144, விலை 120ரூ. வாழ்க்கை தரும் நெருக்கடிக்கும் உறவுகள் தரும் ஏமாற்றத்திற்கும் இடையில் சிக்கி அல்லல்படும் பல பெண்களின், மனிதர்களின் கதைகளை தமிழில் தந்துள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.   —- மௌனப்போராட்டம், சீர்காழி உ. செல்வராஜு, வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 75ரூ. அறத்தையும் வாழ்வியல் தர்மத்தையும் எடுத்துரைக்கும் ஆக்கங்கள், பாக்கள் வடிவில். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.

Read more
1 28 29 30 31 32 66