ஒருபிடிமண்

ஒருபிடிமண், இயக்குனர் ஸ்ரீதர், விஜயா பப்ளிகேஷன்ஸ், பக். 136, விலை 100ரூ. இயக்குனர் ஸ்ரீதரின் பெயரை தவிர்த்துவிட்டு, தமிழ் திரை வரலாற்றை எழுத முடியாது. அவர் கைவண்ணத்தில், சிவாஜி, முத்துராமன், கே.ஆர். விஜயா ஆகியோர் நடிக்க இருந்த படம் 1965ல் நடந்த, இந்தியா – பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்ததால் கைக்கூடவில்லை. இந்த திரைக்கதை ‘பொம்மை’ சினிமா இதழில் தொடராக வெளிவந்தது. தற்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. கர்னல் ரங்கதுரை கதாபாத்திரம் இடம்பெறும் போதெல்லாம், நம் கண்முன் சிவாஜி தெரிவது அற்புதமான அனுபவம். கதாபாத்திரங்களின் தேர்வே, […]

Read more

யாதுமாகி

யாதுமாகி, எம்.ஏ.சுசீலா, வம்சி புக்ஸ், விலை 180ரூ. தலைமுறைகள் யாதுமாகி ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறைப் பெண்களின் கதையைச் சொல்கிறது. கொள்ளுப்பாட்டி அன்னம்மாவுக்கு பத்து வயதில் திருமணம் நடக்கிறது. அதன் பிறகான அவளது வாழ்க்கை அடுப்படியின் கரியோடு உறைந்து போகிறது. கொள்ளுப்பேத்தி நீனா ஐஏஎஸ் படிக்கிறாள். இந்த தலைமுறை இடைவெளியை வலியோடும், உறுதியோடும் தாங்கிக்கொண்டு கல்வியையும், நம்பிக்கையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறார் அன்னம்மாவின் மகள் தேவி. காலக் கடிகாரத்தின் பெண்டுலம்போல தேவியின் மகள் சாரு அம்மாவின் வாழக்கையையும் தன்னையும் பற்றி நினைத்தபடி இருக்கிறாள். […]

Read more

மீறல்

மீறல், ஆங்கிலம் மாலதி ராவ், தமிழில் அக்களூர் இரவி, சாகித்ய அகாடமி, பக். 368, விலை 250ரூ. இந்த நாவல் 2007ம் ஆண்டின் சிறந்த ஆங்கில நூலுக்கான விருதைப் பெற்றது. 1930 மற்றும் 1940களில் இருந்த சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த நாவல், அந்தக் காலப் பெண்கள் மற்றும் சமூக கட்டமைப்புகளின் அவல நிலையை வெளிச்சப்படுத்திக் காட்டும் ஓர் அற்புதச் சித்திரம். சுதந்திரப் போராட்ட காலத்தில்தான், இந்தியப் பெண்கள் தங்களுக்கான பொருளாதார சமூக விடுதலையைக் கனவு காணும் துணிச்சல் பெற்றனர். நாவலில் வரும் […]

Read more

அதே வினாடி

அதே வினாடி, நாகூர் ரூமி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ. முதல் பொக்கிஷம், மூச்சின் ரகசியங்கள், மூச்சின் வகைகள், அந்த இரண்டு விநாடிகள், உடலாகிய சத்குரு, அசச்ம் என்பது, புள்ளிகள் கொண்ட ஆடுகுள், எல்லாமே விதி, நீங்கள்தான் அதுபோன்ற பல கட்டுரைகளின் தொகுப்பு நூல். தற்செயல்களைப் புரிந்துகொள்வது, நாம் விரும்புவதை அடைவதற்கான முதல்படி என்பதால் தற்செயல் எனும் அற்புத மாளிகைக்குள் கட்டாயம் பிரவேசித்து அங்கு என்னதான் நடக்கிறது என்பதை நாம் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை எளிதாக புரிந்து கொள்ளும்வகையில் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் […]

Read more

நீவாநதி

நீவாநதி, கவிப்பித்தன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 502, விலை 385ரூ. பொன்னை ஆற்றின் நுரைத்து ஓடிய வெள்ளத்தோடும் அதில் துள்ளிக் குதித்த மீன்களோடும் வாழ்ந்த வாழ்க்கையை இன்றைய தலைமுறையினர் தொலைத்துவிட்டதுமட்டுமல்ல, அதைப் பற்றிய கவலை எதுவும் இல்லாமல் வாழப் பழகிக் கொண்ட கொடுமையை அவர்களின் மொழியிலேயே ‘நீவாநதி’ என்ற தலைப்பில் நாவலாக்கித் தந்துள்ளார் கவிப்பித்தன். வேலூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கைதான் நாவலின் மைய இழை. அவர்களின் உயிர் ஆதாரமாக இருந்த நீவாநதி எனும் பொன்னை ஆறு ஆந்திர அரசு கட்டிய குறுக்கணையாலும் […]

Read more

மன்மதன் வந்தானடி

மன்மதன் வந்தானடி, பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், விலை 130ரூ. ஒவ்வொரு பெண்களும் தனக்கு வரப்போகிற கணவன் பற்றி இனிய கனவு காண்கிறார்கள். அது நனவாகும்போது பிரச்சினை எதுவும் இல்லை. நேர்மாறாக அமையும்போது ஏமாற்றம், விரக்தி, குழப்பம் எல்லாம் சூழ்ந்து கொள்கிறது. அப்படிப்பட்ட நிலையில் அதை எப்படி எதிர்கொள்வது என்பதை இந்தக் கதையின் நாயகி வைதேகி எடுக்கும் முடிவே கதையின் மையக்கருத்து. அதுவே தாம்பத்தியத்தில் உண்மையான வெற்றி என்பது கதை நாயகி, நவயுக பெண்களுக்கு விடுக்கும் செய்தியாகும். வசீகர நடையால் வாசகர்களின் உள்ளங்களைக் கொள்ளை […]

Read more

சப்தங்கள்

சப்தங்கள், மலையாளம் வைக்கம் பஷீர், தமிழில் குளச்சல் மு. யூசப், காலச்சுவடு பதிப்பகம். நம்பினால் இருக்கிறான் To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000000462.html மலையாளத்தில் வைக்கம் பஷீர் எழுதி, தமிழில் குளச்சல் மு. யூசப் மொழிபெயர்த்த, சப்தங்கள் என்ற குறுநாவலை, சமீபத்தில் படித்தேன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நடைபாதை இருளில் சந்திக்கும் ஒருவரோடு, வைக்கம் பஷீர் நடத்தும் உரையாடலை, ஒருவர் கதையாக சொல்வதுதான் இந்த நாவல். இருளில் சந்திக்கும் அந்த நபர், ஒரு ராணுவ வீரன். அவரது வாழ்க்கை, காதல் […]

Read more

உலகில் ஒருவன்

உலகில் ஒருவன், குணா கந்தசாமி, தக்கை, பக். 144, விலை 120ரூ. ஐந்து வயது சிறுவனின் பார்வையில்… ‘மெமோய்ர்ஸ்’ என்ற இலக்கிய வகைப்பாடு, தமிழுக்குப் புதியதில்லை என்ற முன்னுரையோடு (தன்னுரை) கதைக் கூறத் துவங்குகிறார் குணா. ஐந்து வயது சிறுவன்தான், நாவலின் தலைவன். அவனுடைய பத்து வயது வரையிலான வாழ்க்கைச் சூழலை, அந்தச் சிறுவனின் உலகத்திலிருந்து, அவனுடைய பார்வையிலேயே சொல்வதுதான் இந்த நாவல். ஏற்கனவே இந்தப் பகுதியில், ரத்த உறவு, சூரிய வம்சம், கூளமாதாரி, வெலிங்டன் போன்ற நாவல்களை நூலாசிரியர், பட்டியலிடுகிறார். ஆனால், என்னைப் […]

Read more

யாதுமாகி

யாதுமாகி, எம்.ஏ. சுசீலா, வம்சி புக்ஸ், பக். 208, விலை 180ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024356.html தேவி என்ற தனித்துவம் கெண்ட பெண், தனக்கான பாதையை தானே வகுத்து, தன் வாழ்க்கையைத் தானே எழுதிக் கொள்கிறார். அவரது வாழ்வை வரலாறுபோல் அளிக்கிறார் அவர் மகள் சாரு. இந்த நூல் தற்கூற்று முறையில் சொல்லப்படுகிறது. குழந்தைமணமும், பெண் கல்வி மறுப்பும் இன்று அருகிப்போன பிரச்னைகளாக இருக்கலாம். ஆனால் அன்று அப்படி இல்லை. பால்ய விவாகத்தில் விதவையாகிப் போனவர் தேவி. எதிர்ப்புகளை […]

Read more

எனக்கு நிலா வேண்டும்

எனக்கு நிலா வேண்டும், சுரேந்திர வர்மா, தமிழில் எம்.சுசீலா, சாகித்ய அகாதெமி, பக். 960, விலை 550ரூ. குறிப்பிட்ட ஒரு துறையை மையமாகக் கொண்டு புதினம் எழுதப்படுவது புதிய விஷயமல்ல. ஹிந்தி எழுத்தாளர் சரேந்திரவர்மா, அவர் சார்ந்த நாடகத் துறையின் பலம், பலவீனங்களையும், வாழ்க்கையின் எதிர்பாராத சிக்கல்களையும், உள்ளரசியலையும், தனிமனித குணாதிசயங்களையும் முஜே சாந்த் சாஹியே என்ற இப்புதினத்தில் மிகத் தெளிவாகச் சித்திரித்திருக்கிறார். உத்திரப் பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான ஷாஜான்பூரின் சுல்தான்கஞ்சில் எழை பிராமண ஆசிரியரின் மகளாகப் பிறந்த யசோதா சர்மா, தனது […]

Read more
1 31 32 33 34 35 66