அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்

அகத்தியர் யோக ஞானத் திறவுகோல், ஸ்ரீ ஸக்தி சுமனன். அகத்திய மகரிஷி, சித்தர்கள் கண்டறிந்த எல்லா வித்தைகளையும் தெளிவாக கூறியவர்களில் முதன்மை ஆனவர். அகத்திய மகரிஷி, தன் ஞானத்தை சுருக்கி, சித்தர் மார்க்கத்தில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்காக, 30 பாடல்களில் அகத்தியர் ஞானம் 30 ஆக தந்திருக்கிறார். தற்காலத்தவர்கள் விளங்கி கொள்ளும்படி, தியான சாதனையில் சித்த வித்யா விளக்கவுரையாக ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்கள் எழுதிய விளக்கவுரையே, அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் எனும் இந்நூல். அகத்திய மகரிஷியை, குருவாக கொண்டு சாதனை செய்ய […]

Read more

சொட்டாங்கல்

சொட்டாங்கல், எஸ். அர்ஷியா, எதிர் வெளியீடு, விலை 220ரூ. மதுரைமக்களின் வாழ்க்கை முறையை பற்றி ஆழமாகவும், கூர்மையாகவும் பேசியுள்ளது. ‘கொட்டாங்கல்’ நூல். இது மதுரையில் நடக்கும் கதையாக இருந்தாலும், தமிழக மக்கள் அனைவரையும் பாதிக்கும் கதையாகவும் உள்ளது. நன்றி: தினமலர், 17/1/2017.   —-   உங்கள் தேகமும் யோகமும், கவியோகி வேதம், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. யோகா பற்றிய நல்ல நூல். யோகாவினால் பொங்கி வரும் ஆழ்மன சக்தி, சபலத்தை ஒழித்தலும் அமைதியாகச் செயல்படுதலும், பொறுமையும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையும் […]

Read more

கௌதம நீலம்பரன் நாடகங்கள்

கௌதம நீலம்பரன் நாடகங்கள், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 380, விலை 230ரூ. மறைந்த சரித்திர நாவலாசிரியர் கௌதம நீலாம்பரன் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் எழுதி இடம்பெற்ற சரித்திர, சமூகப் பின்னணி கொண்ட நாடகங்களின் தொகுப்பு இந்நூல். ஞானயுத்தம், அருட்செம்மல் ஸ்ரீதாயுமானவர், ஸ்ரீ கிருஷ்ணதேவராயர், மானுட தரிசனம், சொர்க்கம் இங்கேதான், உறவின் எல்லைகள் உள்ளிட்ட பல நாடகங்கள் சுவாரஸ்யம் மிக்கவை. -மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2016.   —- யோகிகள் மற்றும் சித்தர்களின் சரயோகம், யோகி சிவானந்த பரமஹம்சா, விஸ்வயோக கேந்திரா டிரஸ்ட், விலை 120ரூ. […]

Read more

சப்தமில்லாத சப்தம்

சப்தமில்லாத சப்தம், ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 200ரூ. இருபத்தோராம் வயதில் ஞானம் பெற்ற ஆன்மிக அறிஞர் ஓஷோ, சிறப்பு டைனமிக் தியான முறைகளை அறிமுகப்படுத்தியவர். அவர் சீடர்கள் மத்தியிலும், தம்மைச் சந்திக்க வந்தவர்கள் நடுவிலும் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்புகள் 650 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உன்னதமான ஜந்து ஜென் கதைகள் மற்றும் சீடர்கள் கேட்ட கேள்விகளின் துணையுடன், தியானம் என்றால் என்ன என்பதற்கான தெளிவான விளக்கங்களை ஓஷோ இந்த நூலில் விளக்குகிறார். மனதின் செயல்பாடுகள் பற்றியும், அதை ஆராய்ந்து […]

Read more

உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள்

உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள், கவியோகி வேதம், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், பக். 192, விலை 110ரூ. யோகிராஜ் வேதாத்ரி மகரிஷியிடம் பயிற்சி பெற்ற இந்நூலாசிரியர் 75 வயதைக் கடந்தவர். இவர் குண்டலினித் தியானம், முத்ரைகள், ஆசனங்கள், யோகா, புத்தகங்கள் போன்றவற்றில் மிகுந்த அனுபவம் பெற்று, அவற்றை பலருக்கும் கற்பிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இந்நூலில் யோகா மற்றும் ஆசனங்கள் குறித்து 18 அத்தியாயங்களை எழுதியுள்ளார். ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில் தியானங்கள் குறித்தும், அவற்றுக்கான முன்னெச்சரிக்கைகள், இவை குறித்து எழும் பல்வேறு சந்தேகங்கள், தியானத்தை, […]

Read more

இஸ்லாமிய சட்ட கருவூலம்

இஸ்லாமிய சட்ட கருவூலம், அஷ்ஷெய்க் ஸெய்யத் சாபிக், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 250ரூ. திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி அடிப்படையில் இஸ்லாமிய சட்டங்கள் குறித்து அஷ்ஷெய்க் ஸெய்யத் சாபிக் எழுதிய ‘பிக்ஹுஸ் சுன்னா’ (இஸ்லாமிய சட்ட கருவூலம்) என்ற நூலை மவுலவி நூஹ் மஹ்ழரி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதுவரை 5 பாகங்கள் வெளியாகி உள்ளன. இது 6 வது பாகம். இதில் முழுக்க முழுக்க ‘திருமணம்’ குறித்து விளக்கப்பட்டுள்ளது. திருமண வாழ்வின் முக்கியத்துவம், திருமணம் செய்யும் முறை, மணக்கொடை, பலதாரமணம் போன்ற பல்வேறு தலைப்புகளில் […]

Read more

திரைப்படத் தணிக்கை முறை

திரைப்படத் தணிக்கை முறை, கமர்ஷியல் கிரியேஷன்ஸ், சென்னை, விலை 150ரூ. திரைப்படங்களை எடுத்து முடித்தபின், பட அதிபர்களை எதிர்நோக்கி இருக்கும் அடுத்த முக்கியமான வேலை, படத்தை தணிக்கை (சென்சார்) குழுவுக்கு அனுப்பி சர்டிபிகேட் வாங்குவதாகும். ஆபாசம் என்றும், ஆட்சேபகரமானவை என்று தணிக்கைக் குழுவினர் கருதுகிற காட்சிகளை, வெட்டி எறிந்து விடுவார்கள். தணிக்கைக் குழுவின் முடிவு அநீதியானது என்று பட அதிபர் கருதினால், அதை எதிர்த்து அப்பீல் செய்யலாம். இதை எல்லாம் விளக்கமாக கூறுகிறது. நாம் அறிந்து கொள்வோம் – திரைபடத் தணிக்கை முறை என்ற […]

Read more

நாடும் நலமும்

நாடும் நலமும், ஏ.எஸ். மாணிக்கம் அறக்கட்டளை, விலை 50ரூ. 600சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள சிறிய தீவு சிங்கப்பூர். குட்டித் தீவான சிங்கப்பூரின் விடுதலைக்கும், பின்னர் அதன் வளர்ச்சிக்கும், அந்த நாட்டு மக்களுக்கும், உலகத் தலைவர்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் லீ குவான் யூ. சிங்கப்பூரை வளம் மிகுந்த நலம் நிறைந்த நாடாக மாற்றிய பெருமை அந்த நாட்டின் தேசத்தந்தை என்று போற்றப்பட்ட லீ குவான் யூவையே சாரும். அந்த மாபெரும் மனிதரின் வாழ்க்கையையும், சிங்கப்பூரின் வளர்ச்சியையும் இந்த நூலில் ஆசிரியர் அனகை மாணிக்க ஆறுமுகம் […]

Read more

யோகாசனமும் மருத்துவப் பயன்களும்

யோகாசனமும் மருத்துவப் பயன்களும், டாக்டர் ரேவதி பெருமாள்சாமி, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 60ரூ. நோயின்றி நாம் நூறு ஆண்டுகள் வாழ வழிவகுக்கும் சக்தி யோகாசனங்களுக்கு உண்டு என்கிறார் நூலாசிரியர். நாம் முறையாக சோகாசனங்கள் செய்வதன் மூலம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக நோயின்றி வாழமுடியும் என்கிறார். மனதில் அமைதி ஏற்படுதல், உடல் வலிமை பெறுதல், இதய பாதுகாப்பு உள்ளிட்ட யோகாவின் பயன்களைக் கூறி, அந்த யோகாசனங்களை எப்படிச் செய்வது என்பதையும் விளக்கும் நூல். நன்றி: குமுதம், 3/8/2015.   —- 1001 […]

Read more

வெட்கம் விட்டுப் பேசலாம்

வெட்கம் விட்டுப் பேசலாம், சி. சரவண கார்த்திகேயன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 192, விலை 145ரூ. ஆபாசம் என்ற லேபிள் ஒட்டப்படும் விஷயங்கள் மற்றும் அவற்றின் வரைமுறைகள், காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றன என்ற முன்னுரையோடு ஆசிரியர், படிப்பவர்களை சுவர்ந்திழுக்கிறார். ப்ரா, காண்டம், சானிடரி நாப்கின் முதல் பால்வினை நோய்கள், மலட்டுத் தன்மை வரை, 22 தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் தந்திருக்கிறார். சோவியத் யூனியன் காலத்தில், சிறையிலிருந்த கைதிகளுக்கு, ரகசியமாக சாராயம் எடுத்துச் செல்ல, காண்டம் பயன்பட்டிருக்கிறது. ஒரு சராசரி சைஸ் காண்டத்தில், 3.79 […]

Read more
1 2 3 4