அம்பேத்கரின் அரிய கருத்துரைகள்

அம்பேத்கரின் அரிய கருத்துரைகள், அருள்மொழிப் பிரசுரம், விலை 60ரூ. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதை டாக்டர் அம்பேத்கர். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டவர். அவருடைய அரிய கருத்துக்களை தொகுத்துள்ளார் அச்சுதமங்கலம் சச்சிதானந்தம். சாதிப்பாகுபாடு, கல்வி, பொருளாதாரம், நாடு, மதம் குறித்து அம்பேத்கர் தெரிவித்த 282 கருத்துக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.

Read more

உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள்,

. உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள், டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 150ரூ. “பெரும் இடையூறுகளைக் கடந்து என்னால் சாதிக்க முடிந்திருக்கிறது என்றால், அது போலவே யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதுதான் இந்தப் புத்தகத்தின் வாயிலாக நான் சொல்ல விரும்பும் செய்தியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம். கடந்த 10 ஆண்டுகளில் அப்துல் கலாமுக்கு இளைஞர்களிடமிருந்து வந்த கடிதங்கள், கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கான பதில்கள் எல்லாம் வாழ்வில் அவர் கற்றுக்கொண்ட சுய அனுபவங்கள் சார்ந்தவை. […]

Read more

கால்டுவெல்லின் தமிழ்க்கொடை

கால்டுவெல்லின் தமிழ்க்கொடை, தொகுப்பாசிரியர் இரா. காமராசு, சாகித்திய அகாதெமி, விலை 180ரூ. சாகித்திய அகாதெமி சென்னை நடத்திய கால்டுவெல் குறித்த கருத்தரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளின் தொகுப்பு நூல். கால்டுவெல்லின் தமிழ் நோக்கு, அவரின் தமிழ்ப் பங்களிப்பு, திராவிடக் கருத்தியல் எனப் பல்வேறு பரிமாணங்களில் கால்டுவெல்லின் படைப்புகளையும், வாழ்க்கையையும் அலசி ஆராய்ந்து அவரின் பெருமையை நிலை நாட்டும் இந்நூல் தமிழ் ஆய்வு நூல்களில் முக்கியமான ஒன்றாகும். நன்றி: தினத்தந்தி, 20/7/2016.   —– மனிதனும் தெய்வமும், புத்தகப்பூங்கா, விலை 125ரூ. புராணங்கள், இதிகாசங்கள், வரலாறுகள் முதலியவற்றை […]

Read more

நியாயமா இது நியாயமா

நியாயமா இது நியாயமா, முனைவர் கமல.செல்வராஜ், காவ்யா, விலை 200ரூ. கல்வியின் நிலை, சமுதாய அமைப்புகள், அரசியல், பண்பாடு, கல்வி ஸ்தாபனங்கள், மதம் எனப் பல்வேறு பொருட்களைக் குறித்து அவர் ஆராய்ந்த கருத்துகளின் கருவூலமாக இந்த நூல் திகழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.   —- சாயி தரிசனம், தெ. ஈஸ்வரன், திருவரசு புத்தக நிலையம், விலை 100ரூ. ஸ்ரீ சத்திய சாயி பகவான் நேரில் தரிசித்த உணர்வை, இந்த நூலை படிப்பதன் மூலம் அனைவரும் பெற முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.

Read more

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர், பிரியா பாலு, சஞ்சீவியார் பதிப்பகம், விலை 115ரூ. கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லாதவர்களையும் கிரிக்கெட் பார்க்க தூண்டியவர் சச்சின் டெண்டுல்கர். இந்திய கிரிக்கெட் விளையாட்டில் இவர் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவருமில்லை. அவரின் சாதனையின் வரலாறே இந்நூல். சச்சின் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஏராளம். அதை கருத்தில் கொண்டு சச்சின் கிரிக்கெட் துறையில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து அவர் சந்தித்த, பெற்ற அனுபவங்கள், சாதனைகள், மற்ற வீரர்களக்க அவர் மீது இருக்கும் ஆபிப்பிராயம் போன்றவற்றின் தொகுப்பாக இந்நூல் உருவாகியுள்ளது. சச்சின் […]

Read more

வாருங்கள் வெல்லலாம்

வாருங்கள் வெல்லலாம், மதுமிதா, மணிமேகலைப் பிரசுரம், விலை 40ரூ. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வாழ்ந்த மதுமிதா தன் அனுபவங்களையும், கற்பனை வளத்தையும் கலந்து கவிதைகளை எழுதியுள்ளார். சிறிய கவிதைகளிலும், பெரிய கருத்துக்கள் புதைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.   —- வெளிநாட்டு கல்வி வழிகாட்டி, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில எண்ணும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நூல். வெளிநாட்டுக் கல்விக்குத் தயாராவது எப்படி, வெளிநாடுகளில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள், கல்வி உதவித்தொகைகள் முதலான விவரங்கள் இதில் […]

Read more

வாதி பிரதிவாதி நீதி

வாதி பிரதிவாதி நீதி, சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ந. ராஜா செந்நூர் பாண்டியன், குமுதம் வெளியீடு, வலை 350ரூ. ஒரு பிரச்சினை, அது தொடர்பான வழக்கு, அதற்குரிய தீர்ப்பு இந்த மூன்றையும் ஒன்றிணைக்கம் நோக்கத்தில் தொகுக்கப்ட்ட நூல். பிரச்சினைகளுக்கு எளிதாக, நியாளமான தீர்ப்பினை பெற பாமர மக்களுக்கு உதவும் சட்ட ஆலோசனை நூலாக விளங்குகிறது. ஒவ்வொரு கட்டுரையும் திகில் நிறைந்த கதைபோலக் கொடுத்திருப்பதால், படிப்பவர்களுக்கு ஒரு நாலை படித்த உணர்வை இந்த நூல் ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கட்டுரைகளையும் படிக்கும்போது, இதற்கு நீதிபதிகள் என்ன தீர்ப்பு […]

Read more

வரப்பு

வரப்பு, அமுதா பாலகிருஷ்ணன், அமுதா பதிப்பகம், விலை 75ரூ. தொழில் அதிபர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், எழுத்தார்வம் மிக்கவர். சுய முன்னேற்ற நூல்கள் எழுதி புகழ்பெற்றவர். இப்போது 15 சிறுகதைகள் கொண்ட “வரப்பு” என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு கதையிலும், ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தி இருப்பது, பாராட்டத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.   —- பனையாளியும் மாடமாளிகையும், சாமி வெளியீடு, விலை 60ரூ. நூலாசிரியர் ஆத்மா கே. இரவி, ஓவியரும்கூட. எனவே தன் நாவலுக்கு உரிய படங்களை அவரே வரைந்துள்ளார். எனவே, […]

Read more

நல்ல தமிழில் எழுதுவோம்

நல்ல தமிழில் எழுதுவோம், என். சொக்கன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ. வழக்கமான இலக்கண நூல் அல்ல இது. விதி மேல் விதி சொல்லி இம்சிக்காமல், பல்வேறு சூத்திரங்களைச் சொல்லி குழப்பாமல், மிக இயல்பான முறையில் மிக இனிமையான புதிய வடிவில் அடிப்படை இலக்கணத்தைக் கற்றுக்கொடுக்கிறது இந்நூல். இலக்கணம் ஒரு மொழிக்கு ஆணி வேர் போல அவசியமானது என்பதையும் வலியுறுத்துகிறது. வழக்கமான அந்த இலக்கணப் பாடமுறையைக் கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாமே என சிந்தித்ததின் விளைவாக, செய்யும் உதாரணங்களுக்குப் பதிலாக, நாம் தினமும் பயன்படுத்தும் சொற்கள், […]

Read more

நா. முத்துக்குமார் கவிதைகள்

நா. முத்துக்குமார் கவிதைகள், நா. முத்துக்குமார், பட்டாம்பூச்சி பதிப்பகம், பக். 272, விலை 225ரூ. கவிதை காலத்தின் கண்ணாடியாகவும், சமூகத்தின் முகமாகவும் தனிநபர் தன் அனுபவங்களை தீட்டிடும் சித்திரமாகவும் பார்க்கப்படுகிறது. கவிதைக்கு மொழிவளம், அனுபவச் செறிவு மிகவும் அவசியம். நா.முத்துக்குமாருக்கு அவை இரண்டுமே வாய்த்திருப்பது வரம். நா.முத்துக்குமார் கவிதை, உரைநடை, திரைப்பாடல் என்று எழுத்தின் பல தளங்களிலும் இயங்குபவர். என்றாலும் கவிதை அவருக்கு தாய்வீடு. அந்தத் தாய் வீட்டில் அவரது பால்ய கால அனுபவங்களை அவர் பதிவு செய்திருக்கிறார். கவிதை மனம் எல்லோருக்குமே வாய்ப்பதில்லை. […]

Read more
1 475 476 477 478 479 841