நலவாழ்வின் படிகள் நான்கு

நலவாழ்வின் படிகள் நான்கு (நான்கு நூல்கள்), பேராசிரியர் எம். ராமலிங்கம், விஜயா பதிப்பகம், பக். 264, 152. 232, 264, விலை ரூ. 170, 95, 145, 170. உணவு, உடல், உள்ளம், வாழ்க்கை என, மொத்தம் நான்கு நூல்கள். உணவு- உணவின் அவசியம், பகுதிப் பொருட்கள், உணவில் குற்றமும், உண்பவர் குற்றமும் என, பயனுள்ள கருத்துகளை உள்ளடக்கியது இந்த நூல். உடல்-உடற்பயிற்சி, தூக்கம், ஆகாயம், சூரியன், காற்று, நீர், உணவும், உபவாசமும், மவுனத்தின் மாண்பு ஆகியவை இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன. உள்ளம்- ஏற்றத்திற்குப் […]

Read more

ஹோம் கார்டன்

ஹோம் கார்டன், பா. ன்சென்ட், சூரியன் பதிப்பகம், விலை 100ரூ. ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு, சமீபகாலமாக மக்களை வீட்டுத் தோட்டத்தின் பக்கம் ஈர்த்து வருகிறது. வீட்டிற்கு தேவையான காய்கறிகளை சாகுபடி செய்வதுடன், ‘டென்ஷனை’ குறைக்கவும், வீட்டுத் தோட்டங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன. அதீக செலவில்லாமல், அதீத உழைப்பும் தேவையில்லாமல், குறைவான இடத்தில் வீட்டுத் தோட்டம் அமைக்க ஆலோசனைகளை கூறியுள்ளார் நூலாசிரியர். மொட்டை மாடி மட்டுமின்றி, வீட்டு பால்கனியில்கூட செடி வளர்ப்பதற்கான எளிய ஆலோசனைகள் இடம் பெற்றுள்ளன. காய்கறிகள் முதல் […]

Read more

கனவுப்பட்டறை

கனவுப்பட்டறை, மதி, அகநாழிகை பதிப்பகம், பக். 160, விலை 160ரூ. அரசு பள்ளிகளில் படிக்கும், சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பிள்ளைகளின் மனங்களைப் புரிந்து கொள்வதற்கான முயற்சிதான் இந்த சிறுகதைத்தொகுப்பு. முகம் பார்த்து பேச மறுக்கும் மாணவன், உணவுக்கு வழியில்லாத சிறுவன், தற்கொலை எண்ணத்துடன் திரியும் சிறுமி, தாழ்வு மனப்பான்மையை மறைக்க முரடனான வேடமிடுபவன் என்று இந்தக் கதைகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவனையும், நாம் வெவ்வேறு பெயர்களில், தோற்றங்களில் தினம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம். வளரிளம் பருவத்தில் மாணவர்கள் மீது செலுத்தப்படும் அழுத்தங்கள், வாழ்வின் பிற்பகுதி வரை […]

Read more

இனிதே தொடரும் வானப்ரஸ்தம்

இனிதே தொடரும் வானப்ரஸ்தம், விஜயலட்சுமி சுந்தரராஜன், காவ்யா பதிப்பகம், பக். 160, விலை 150ரூ. காலவெள்ளத்தில் தோன்றிய முதியோர் இல்லங்களின் தேவை, அவசியத்தை பற்றி பேசுகிறது இந்த நூல். நூலாசிரியர் முதியோர் இல்லத்தில்தான் வசிக்கிறார். ‘கடந்த 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு, சமூக நிர்ப்பந்தங்களுக்காக, பெற்றோரைக் கவனிப்பதாக கூறி, நம்மையும் வருத்தி பெற்றோரையும் சிறுமைப்படுத்தினோம். வெளிநாடுகளில் வேலைக்காக செல்லும் பிள்ளைகள், சம்பளத்தையும் அங்கு கிடைக்கும் வசதிகளையும் பெற்றோருக்காக விட்விட்டு வரவேண்டுமான என்று யோசிக்கும் தலைமுறை’ (பக். 76) என, காலமாற்றத்தை சுட்டிக் காட்டுகிறார். முதியோர் […]

Read more

அம்ருதா

அம்ருதா, திவாகர், பழனியப்பா பிரதர்ஸ், பக். 448, விலை 335ரூ. ஒரு சித்ரா பவுர்ணமியின் அடுத்த பத்து நாளின் நிகழ்வுகளைச் சித்தரித்து குலோத்துங்க சோழனின் வரலாற்றை ஒட்டிய புதினம் இது. என்றாலும் சோழர் காலத்திய முந்தைய வரலாற்று நிகழ்வுகள் பலவும் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. இக்கதை நிகழ்வின் காலம் கி.பி. 1070. கதை நாயகி, அம்தா ஒரு கற்பனை கதாபாத்திரமே. காம்போஜ தேசத்துப் பேரழகி அம்ருதா. தேச ஜாதகத்தின் படி வரவிருக்கும் ஒரு பிரளயத்தையே நிவர்த்திக்கக்கூடிய அவளது சாதகமான ஜாதகத்தின் காரணமாக, சோழ மன்னன் […]

Read more

நபி வழி அறிவோமா?

நபி வழி அறிவோமா?, திருமதி வசந்தகுமாரி செல்லையா, திருமதி வசந்தகுமாரி வெளியீடு, பக். 433, விலை 280ரூ. இந்நூலாசிரியர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், எழுத்தாளருமாவார். இவர் தன் மகன் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக மாறியதால், இஸ்லாம் குறித்து அறியும் விதமாக அது குறித்த நூல்களை ஆழமாக படிக்க, அதன் விளைவாக உருவானதே இந்நூல். இஸ்லாமிய மார்க்க அறிஞரைப் போல் மிக நுட்பமாக நபிகள் நாயகத்தையும், அவரது தூதுத்துவத்தையும் இஸ்லாமியை சித்தாந்தங்களுடன் இந்நூலில் விளக்கியுள்ளது – படிப்பவர்களை வியக்க வைக்கிறது. இந்நூல் 10 அத்தியாயங்களைக் கொண்டது. […]

Read more

லாக்கப்

லாக்கப், சந்திரகுமார் (ஆட்டோ சந்திரன்), டிஸ்கவரி புக் பேலஸ். அன்றாட பிரச்னைக்கு கிடைத்த வரவேற்பு! ஆட்டோ சந்திரன் என்ற சந்திரகுமார் எழுதிய லாக்கப் என்ற நாவலை படித்தேன். டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டு உள்ளது. கோவையை சேர்ந்த ஒரு இளைஞன் வேலைக்காக, பல்வேறு இடங்களுக்குச் செல்கிறார். 20வது வயதில், ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள, நெடுஞ்சாலை உணவகத்தில் வேலைக்கு சேர்கிறார். ஒரு நாள், அவர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்கின்றனர். கைதுக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. காவல் நிலையத்தில், திருட்டுக் குற்றம் […]

Read more

அலைகடலுக்கு அப்பால்

அலைகடலுக்கு அப்பால், பூங்கொடி பதிப்பகம், விலை 80ரூ. மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த பேராசிரியர் முனைவர் மு.பி. பாலசுப்ரமணியன் தனது அனுபவங்களை இந்த நூலில் எழுதியுள்ளார். தமிழ் மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக இச்சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதால், கட்டுரைகளில் தமிழ் மணம் கமழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 17/2/2016.   —-   செல்வம் தரும் தென்னை வளர்ப்பு, டாக்டர் வா.செ. செல்வம், நர்மதா பதிப்பகம், விலை 75ரு. அறிவியல் வழிமுறைகளால் சாதிக்க முடியாதவற்றை தனது அனுபவ ஆராய்ச்சி அறிவால் ஆராய்ந்து, தென்னை வளர்ப்போருக்கு ஒரு […]

Read more

தமிழை வளர்த்த முக்கியத் தமிழ் அறிஞர்கள்

தமிழை வளர்த்த முக்கியத் தமிழ் அறிஞர்கள், மறைமலை ராதா, மணிமேகலை பிரசுரம், விலை 60ரூ. தமிழ்த்தொண்டு புரிந்த உ.வே.சாமிநாத அய்யர், மறைமலை அடிகள் உள்ளிட்ட 20 செம்மொழிச் சிற்பிகளைப் போற்றுவதுடன், அவர்கள் ஆற்றிய பணிகளின் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 17/2/2016.   —- ஸ்ரீஹரி வம்சம், எல். வரலட்சுமி நரசிம்மன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 250ரூ. வேத வியாசரால் இயற்றப்பட்ட மகாபாரதத்தோடு இணைந்த ஒரு பாகமாக இருக்கிறது ஸ்ரீஹரி வம்சம். சுமார் 12 ஆயிரம் சுலோகங்கள் […]

Read more

அறம் பொருள் இன்பம்

அறம் பொருள் இன்பம், சாரு நிவேதிதா, அந்திமழை, விலை 200ரூ. மனதில் பட்டத்தை துணிச்சலாக எழுதும் எழுத்தாளர் சாரு நிவேதிதா. அவர் ஒரு பத்திரிகையில் எழுதிய கேள்வி – பதில் புத்தகமாக வெளிவந்துள்ளது. அரசியல், சினிமா, இலக்கியம், கடவுள், மதுவிலக்கு… இப்படி சகலவிதமான விஷயங்களையும் அலசி இருக்கிறார். சில பதில்கள் சிந்திக்க வைக்கின்றன. சில சிரிக்க வைக்கின்றன. ஒரு ஜோசியர் பற்றி அவர் எழுதியிருப்பதாவது: “ஒருமுறை அவர் இந்திரா காந்திக்கு ஜோதிடம் பார்த்திருக்கிறார். நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு இந்திரா காந்தி […]

Read more
1 508 509 510 511 512 841