நாட்டார் சிந்து கதைப் பாடல்கள்

நாட்டார் சிந்து கதைப் பாடல்கள், தொகுப்பாசிரியர் பா. சுபாஷ், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 240, விலை 160ரூ. கோவை, சேலம், ஈரோடு பகுதிகளில் நடந்த கொலைகள் பற்றிய, 14 பாடல்களைப் பதிவு செய்து, ஆய்வு நூலாக வழங்கிய நூலாசியர் முயற்சி பாராட்டிற்கு உரியது. கிராமியப் பழங்கலையை மீட்டுருவாக்கம் செய்கிறார் நூலாசிரியர். ஏறக்குறைய முற்றிலும் ஆதரவின்றி அழிந்து வருகிறது. இந்த தெருப்பாடல் கலை கொலைச்சிந்து. அம்மானை, கும்மி, வில்லுப்பாட்டு, உடுக்கடிப் பாட்டு போன்றவை குழுக்களாகப் பாடப்படுபவை. இந்த கொலைச்சிந்து, டேப் அடித்து தனியே நின்று பாடுவது. […]

Read more

2020 ஆண்டுக்கு அப்பால்

2020 ஆண்டுக்கு அப்பால், ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், ய.சு. ராஜன், தமிழில் சிற்பி, டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு, பக். 312, விலை 180ரூ. இந்த நூலை, கலாமின் இந்தியா 2020 என்ற நூலின் தொடர்ச்சியாகக் கொள்ளலாம். நூலின் தமிழ் வடிவத்தை பார்க்கும் முன்பே கலாம் காலமாகிவிட்டார். இதில் 2014ல் இந்தியா என்ற தலைப்பில் இருந்து, இந்தியாவில் முடியுமா? என்ற தலைப்பு வரை, மொத்தம் 15 பிரிவுகளில், விஷயங்கள் அலசப்படுகின்றன. அதைத் தொடர்ந்து, நான்கு குறிக்கோள்களை, நூலாசிரியர்கள் முன்வைக்கின்றனர். அவற்றின் விவரம் […]

Read more

வானம்பாடி

வானம்பாடி, த. கோவேந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 420, விலை 350ரூ. கோவையிலிருந்து வானம்பாடி புதுக்கவிதை இதழ் வெளிவருவதற்கு 13 ஆண்டுகளுக்கு முன்னரே வேலூரிலிருந்து புலவர் த.கோவேந்தன் வானம்பாடி என்ற பெயரில் கவிதை இதழை வெளியிட்டு, ஒரு பெரும் மரபுக்கவிதை பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளார். அந்த கவிதை இதழில் வந்த கவிதைகளின் தொகுப்பே இந்நூல். தமிழறிஞர்கள் மு.வ., அ.அப்பாதுரை, அண்ணா, வேங்கடபதி, அ.இ.பரந்தாமனார், புலவர் குழந்தை, டாக்டர் பூவண்ணன், பெருஞ்சித்திரனார், ம.இலெ. தங்கப்பா, சுப்பு ஆறுமுகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதைக்கானத்தை இதில் பதிவு […]

Read more

செங்கிஸ்கான் பேரர்கள்

செங்கிஸ்கான் பேரர்கள், தாழை மதியவன், தோணித்துறை வெளியீடு, தாழையான் பதிப்பகம், பக். 96, விலை 50ரூ. இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்களில் சிலரைப் பற்றிய வரலாற்றை சிறுகதையாகத் தந்துள்ளார் நூலாசிரியர். முகம்மது பின் காசிம், கியாசுதீன் பல்பன், முகம்மதுபின் துக்ளக், ஜகாங்கீர், ஷாஜகான் போன்ற மன்னர்களின் அகம் புறம் பற்றி பேசும் கதைகள். படிக்கப் படிக்க புத்துணர்ச்சி. தாஜ்மகால், குதுப்மினார், செங்கோட்டை என கோட்டைக் கொத்தளங்களைக் கட்டியவர்கள், நல்லதோர் வலுவான சமூகத்தைக் கட்ட முடியாதுபோனதைப் பற்றிய கவலை உண்டாக்கும் கதைகள். முகலாய மன்னர்களின் வரலாறு […]

Read more

வைரமுத்து சிறுகதைகள்

வைரமுத்து சிறுகதைகள், கவிஞர் வைரமுத்து, சூர்யா வெளியீடு, விலை 300ரூ. உலக சிறுகதைகளோடு ஒப்பிடத் தக்கவை! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000025177.html கவிதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொகுப்பின் மூலம், இலக்கியத்தில் முக்கியமானதும் கடினமானதுமான சிறுகதைத் துறையிலும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இந்த தொகுப்பிலுள்ள 40 கதைகளுக்குமான களங்கள் வேறுவேறு.காலங்களும் வேறுவேறு. ஆனால் இவற்றுக்கிடையேயான பொதுப்பண்பு, இவை மானுடத்தைப் பேசுகின்றன என்பதே. […]

Read more

ஸ்காலர்சிப்

ஸ்காலர்சிப், ந. குமரன், போதி பதிப்பகம், திருப்பூர், பக். 302, விலை 250ரூ. கல்வி கடன் பெறுவது எப்படி? இணையத்தில் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் நமக்கு வேண்டியதை தேடித் தர கூகுள் இருக்கிறது. அதேபோல, அரசு மற்றும் தனியார் துறைகளில் மாணவ, மாணவியருக்குக் கிடைக்கும் கல்வி உதவித் தொகைகள் மற்றும் கல்விக் கடன்களைப் பற்றிய தகவல்களும், எட்டுத் திக்கும் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை தேடிப் பிடித்து தருகிறது இந்த நூல். இதுவரை தமிழில் இப்படி ஒரு விரிவான தொகுப்பு வராதது ஆச்சரியமே. ஒரு பக்கம் […]

Read more

நதிகள் இணைப்பு சாத்தியமா

நதிகள் இணைப்பு சாத்தியமா, குன்றில் குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக். 112, விலை 70ரூ. உ.பி., ஆந்திரா, கேரளா மாநிலங்களில் நதிகள் இணைப்பு வெற்றிகரமாக நடந்துள்ளதை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். நதிநீர் இணைப்பு திட்டம் பேரழிவு திட்டம் (பக். 68) என, ராகுலும், நதிகள் இணைப்பு என்பது ஒரு குப்பையான திட்டம் (பக். 70) என மேனகாவும் கூறியதை சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர். அதேநேரம் ஆந்திராவுக்கு தண்ணீர் தர ஒடிசாவும், தமிழகத்திற்கு தண்ணீர் தர கேரளாவும் விரும்பவில்லை. பீஹாரும், மேற்கு வங்கமும் கங்கை நீரை திசை […]

Read more

சங்கு தியானம்

சங்கு தியானம், யோகி சிவானந்த பரமஹம்சர், விஸ்வயோக கேந்திரா டிரஸ்ட், கிருஷ்ணகிரி, விலை 150ரூ. சங்குகளின் மகத்தான சக்தியை இந்நூல் விவரிக்கிறது. வலம்புரி சங்கு எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த இல்லத்தில் செல்வம் பெருகும். எல்லா தேவதைகளும் அங்கு வாசம் செய்வார்கள் என்று நூலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பல நாடுகளில் சேகரிக்கப்பட்ட அரியவகை சங்குகளின் வண்ணப்படங்கள் கண்ணைக் கவர்கின்றன. நன்றி: தினத்தந்தி, 21/10/2015.   —- சர்க்கரை (நீரழிவு) மீது அக்கறையா?, எஸ். காளிராஜ், சரணம் அறக்கட்டளை வெளியீடு, விலை 35ரூ. சர்க்கரை நோயாளிகள் […]

Read more

சினிமா பத்திரிகையாளர் சங்கம் 60ஆம் ஆண்டு சிறப்பு மலர்

சினிமா பத்திரிகையாளர் சங்கம் 60ஆம் ஆண்டு சிறப்பு மலர், சினிமா பத்திரிகையாளர் சங்கம், சென்னை, விலை 200ரூ. சென்னையில் உள்ள சினிமா பத்திரிகையாளர் சங்கம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகின்ற. அதையொட்டி சிறப்பு மலர் வெளியிட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் பற்றிய விவரங்கள் மட்டுமின்றி, நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், பட அதிபர்கள் பற்றிய சுவையான தகவல்களும் இடம் பெற்றுள்ளன. தமிழ் படம் தயாரித்த முதல் தமிழர் நடராஜ முதலியாரை டைரக்டர் ஸ்ரீதர் பேட்டி கண்டு எழுதிய கட்டுரை, தமிழ் நாட்டின் முதல் சினிமா பத்திரிகையான சினிமா உலகம் […]

Read more

அளவீடற்ற மனம்

அளவீடற்ற மனம், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 225ரூ. தத்துவ மேதை ஜே. கிருஷ்ண மூர்த்தி டெல்லி, கல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய இடங்களில் அக்டோபர் 1982 – ஜனவரி 1983க்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகளின் தொகுப்பு. அவரது ஆங்கில உரையைத் தமிழில் எம்.ராஜேஸ்வரி மொழிபெயர்த்துள்ளார். குழப்பத்திற்கான அடிப்படைக் காரணம், ஒழுங்கின்மை என்றால் என்ன? துக்கத்தைப் போக்குவது எப்படி? என்பன போன்ற கேள்விகளுக்கு அவருக்கே உரித்தான பாணியில் பதில் சொல்கிறார். மேலும் நெஞ்சத்துள் இருக்கும் மனம் எனும் அருமையான கண்ணோட்டத்தையும் அவர் நமக்கு […]

Read more
1 542 543 544 545 546 841