யட்சன்

யட்சன், சுபா, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. இரு இளைஞர்கள். அவர்கள் கனவுகள் வேறு, இலக்குகள் வேறு. ஒருவன் சாதுவானவன். குடும்பம் உள்ளவன். இன்னொருவன் முரட்டுத்தனமானவன். தனிமை விரும்பி அவர்கள் இருவரும் குறிப்பிட்ட பணிகளுக்காக புறப்படும்போது வாகனங்கள் மாறிவிட்டால்? அது அவர்களது கனவுகளை, இலக்குகளை, வாழ்க்கையை புரட்டிப் போட்டால் என்னவாகும் என்பதை கருவாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் யட்சன். எழுத்தாளர்கள் சுபா எழுதிய இந்தக் கதை திரைப்படமானது. மூலக்கதை இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. இந்த நூலில் யட்சன் திரைப்பட ஸ்டில்கள் வண்ணப்படங்களாக இணைக்கப்பட்டுள்ளன. […]

Read more

சேதுபதியின் சேவைக்காரன்

சேதுபதியின் சேவைக்காரன், காவ்யா, சென்னை, விலை 350ரூ. ராமநாதபுரம் என்ற சேது சீமையை ஆண்டவர்கள் சேதுபதிகள். அவர்கள் வரலாற்றில் நடந்த போதைக் களமாகக் கொண்டு இந்த நாவலை க.மனோகரன் எழுதியுள்ளார். சடையக்கத்தேவர் காலத்தில் மதுரை மன்னர் திருமலை நாயக்கரின் படைகள் ராமநாதபுரத்தைத் தாக்கும்போது நடக்கும் போரில் இருந்து கதை தொடங்குகிறது. அதே மதுரையை மைசூர் தளபதி முற்றுகையிட்டபோது, சேதுபதி விஜய ரெகுநாத தேவரின் உதவியை திருமலை நாயக்கரின் நாடினான். அதன் விளைவாக நடந்த மூக்கறுப்பு போர் வரை கதை நீள்கிறது. சேதுபதி மன்னர்கள் மாவீரர்களாகத் […]

Read more

காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள்

காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. சுதந்திரப் போராட்டத்தை அகிம்சை வழியில் மகாத்மா காந்தி நடத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஆயுதம் ஏந்தினால்தான் சுதந்திரம் பெறமுடியும் என்று கருதினார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் நேதாஜி வெற்றி பெற, காந்தியின் வேட்பாளர் பட்டாபி சீத்தா ராமையா தோல்வி அடைந்தார். பட்டாபியின் தோல்வி, என் தோல்வி என்று காந்தி கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து காந்திக்கும், நேதாஜிக்கும் நடந்த கடிதப் […]

Read more

வைரமுத்து சிறுகதைகள்

வைரமுத்து சிறுகதைகள், கவிஞர் வைரமுத்து, சூர்யா வெளியீடு, விலை 300ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000025177.html கவிதைகளிலும், திரைப்படப் பாடல்களிலும் சிகரம் தொட்ட கவிப்பேரரசு வைரமுத்து, இப்போது சிறுகதை உலகிலும் தடம் பதித்து, வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். இதில் உள்ள 40 கதைகளையும் படிக்கும் எவருக்கும், கற்பனைக் கதைகளைப் படிக்கும் உணர்வு ஏற்படாது. ஏதோ ஒரு கட்டத்தில் நிகழ்ந்த அல்லது கேள்விப்பட்ட சம்பவங்களே நினைவுக்கு வரும். சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைப்பித்தன், தன் வாழநாள் முழுவதும் எழுதிய சிறுகதைகளின் எண்ணிக்கை […]

Read more

ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள்

ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள், மாத்தளை சோமு, தமிழ்க்குரல் பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. மீண்டும் வரலாம் புன்ட்ஜில் கடவுள் பெரும்பாலும் வாய்மொழி இலக்கியமாகவே வலம் வருகிற பழங்கதைகள் சொல்லாமல் சொல்லி விளங்கவைக்கும் சிந்தனைகள் ஆழமானவை. இவற்றைப் புரிந்துகொள்ளவும் தனிப்பட்ட திறமை வேண்டும். அதுவும் ஆதிவாசிப் பழங்குடியினரிடையே உலவும் கதைகள் என்றால் அவற்றின் மதிப்பே தனி. அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அபாரிஜின் என்னும் ஆதிவாசிப் பழங்குடியினர் ஆஸ்திரேலியாவில் குடியேறினார்கள் என்றும், இவர்கள் இந்தியத் துணைக்கண்டப் பகுதியிலிருந்து சென்று குடியேறிய கற்கால மனிதர்களின் வழித் தோன்றல்கள் என்றும் […]

Read more

கதைப்பாடல் சுவடித் திரட்டும் பதிப்பும்

கதைப்பாடல் சுவடித் திரட்டும் பதிப்பும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, முதல் தொகுதி விலை 210ரூ. இரண்டாம் தொகுதி 220ரூ, மூன்றாம் தொகுதி 240ரூ. கதைப்பாடல் என்பது கதைத் தழுவிய நிலையில் அமையும் பாடல் எனலாம். கதைப்பாடல் அதிகமாகக் கிடைப்பது தமிழகத்தில்தான். தமிழில் கதைப்பாடலை கதை, கும்மி, பாட்டு, போர், அம்மானை, காவியம், மாலை, குறம், தூது, மசக்கை, வெற்றி, சண்டை, ஏணிஏற்றம் எனும் பல பெயர்களில் வழங்கி வருகின்றன. கதைப்பாடலைப் பாமரரின் அறிவுச் சொத்து, புலமைக் காவியம், வாழ்வியற் கருவூலம், சமூகம் காட்டும் […]

Read more

மீண்டும் ஆரியரைத் தேடி

மீண்டும் ஆரியரைத் தேடி, த. தங்கவேல், வெளியீடு சமூக இயங்கியல் ஆய்வு மையத்திற்காக, கோவை, விலை 240ரூ. தமிழக அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அதிகாரியும், பொறியாளரும், வரலாற்று ஆய்வாளருமான த.தங்கவேல் நீண்ட ஆய்வுகளை நடத்தி, வரைபடங்களுடன் தொகுத்த நூல் மீண்டும் ஆரியரைத் தேடி. இதில் ஆரியர்கள் என்றால் யார்? அவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களா? எங்கிருந்து, எப்போது வந்தார்கள்? அவர்களின் முக்கியமான அடையாளங்கள் என்ன? என்பன போன்ற விஷயங்களை மிக ஆழமாக ஆய்வு செய்து வெளியிட்டு இருக்கிறார். தமிழ், சமஸ்கிருதம் ஆகிய […]

Read more

நபி வழி அறிவோமா

நபி வழி அறிவோமா, வழக்கறிஞர் வசந்தகுமாரி செல்லையா, சென்னை, விலை 280ரூ. மனித சமுதாயம் நேர் வழி பெற்று அதன் மூலம் இவ்வுலக – மறு உலக வாழ்வில் வெற்றி பெறுவதற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது இறை வேதமாகிய திருக்குர்ஆனும், அதன் விளக்கமாக வாழ்ந்த இறைத் தூதர் நபிகள் நாயம் (லஸ்) அவர்களின் போதனையும் அகும். அதன் அடிப்படையில் இறைமறை மற்றும் நபிகளாரின் பொன்மொழிகளின் அடிப்படையில் இந்த நூலை வழக்கறிஞர் வசந்தகுமாரி செல்லையா எழுதியுள்ளார். அழகிய முன் மாதிரியாகத் திகழ்ந்த அண்ணலாரின் வரலாற்றில் நடந்த […]

Read more

சொப்பன சுந்தரி

சொப்பன சுந்தரி, வானவில் புத்தகாலயம், சென்னை, விலை 299ரூ. பிரபல தெலுங் எழுத்தாளர் யத்தனபூடி சுலோச்சனா ராணி எழுதிய நாவல். தமிழில் கவுரிகிருபானந்தன் மொழிபெயர்த்துள்ளார். சேற்றில் பிறந்த செந்தாமரை மேனகா, தாயின் வாழ்க்கையில் நடந்த தடுமாற்றத்தால் சமுதாயம் அவர்களை மதிப்புக் குறைவாக நடத்துகிறது. மேனகா எதிர்பாராதவிதமாக நடிகையாகி விடுகிறாள். அவள் மனதார விரும்பிய ஹரி கிருஷ்ணாவுக்கும் ரேகாவுக்கும் திருமணம் நடக்கிறது. இந்த நிலையில் ரேகா இறந்து போகிறாள். ஹரி கிருஷ்ணன் மீது கொலை குற்றம் சாட்டப்படுகிறது. திகில்களும், திருப்பங்களும் நிறைந்த கதை. முடிவு என்னவாக […]

Read more

கிராம நிர்வாக அலுவலர் கடமைகள் மற்றும் பணிகள்

கிராம நிர்வாக அலுவலர் கடமைகள் மற்றும் பணிகள், ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 330ரூ. ஒரு கிராமத்தில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருப்பவர் கிராம நிர்வாக அலுவலர். அந்தக் கிராமத்தில் நில நிர்வாகம், வரி வசூல், பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல், இதரத் துறை அலுவலர்களுக்கு உதவுதல் போன்ற எண்ணற்ற பணிகளை கிராம நிர்வாக அலுவலர் கவனித்து வருகிறார். அவர்களின் கடமைகள் மற்றும் பணிகள் குறித்து இந்த நூலில் வடகரை செல்வராஜ் விரிவாக விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி.   —- கலைஞர் பரணி கவிதை மலர்கள், கவிஞர் […]

Read more
1 543 544 545 546 547 841