வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள், வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை 20, பக். 418, விலை ரூ.450 பல்வேறு இதழ்களில் வெளிவந்த நூலாசிரியரின் 80 சிறுகதைகளின் தொகுப்பு. பெரும்பாலான கதைகளின் களங்கள் கிராமத்து மண்ணின் மீதே என்றாலும் நகர்ப்புறங்களின் அனுபவச் சாயல்களும் சில கதைகளில் உண்டு. அகல், அவள் மற்றம் அம்மா சிறுகதையில் வரும் காங்சனாவின் பண்பு யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டது. வழிகாட்டும் ஒளியாகக் காஞ்சனா இருப்பதையும் தனது மனமே தவறாகச் சஞ்சலப்பட்டதையும் அழகிரி உணர்வதாகக் காட்டியிருக்கும் பாங்கு எழுத்தாளரின் எழுத்தாளுமையைக் காட்டுகிறது. ஆட்டோ சிறுகதை நகர்ப்புற, நடுத்தரப் […]

Read more

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி, முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தியாகராய நகர், சென்னை 17, பக். 176, விலை 55ரூ. தமிழர்களின் கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசைக்கலை, நடனக் கலை, நாடகக் கலை, இலக்கியக் கலை ஆகியவற்றைப் பற்றி தெளிவாகவும் ஓரளவு விரிவாகவும் எழுதப்பட்டுள்ள நூல். அழகுக் கலை என்பது ஒப்பனை மட்டுமல்ல என்பதை விளக்கும்விதமாக அழகுக் கலைகள் யாவை? என்ற தலைப்பில் ஒரு சிறப்பான கட்டுரையை எழுதியுள்ளார் நூலாசிரியர். […]

Read more

பாரதி ஒரு திருப்புமுனை

பாரதி ஒரு திருப்புமுனை, அ. அறிவுநம்பி, சித்திரம் வெளியீடு, 15, கலைவாணி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி 605008, பக். 132, விலை 75ரூ. மகாகவி பாரதியின் கலைச் சிந்தனைகளை ஆய்வு செய்யும் நூல். பாரதி ஒரு திருப்புமுனை, பாரதியின் கலைச் சிந்தனைகள், புனை கதை உத்திகள், பாரதியும் பிற நாட்டவரும் என்பன உள்ளிட்ட 10 தலைப்புகளில் புதுமையான ஆய்வுக் கட்டுரைகளை வடித்துள்ளார் நூலாசிரியர். உலகம் முழுமைக்கும் கவிதை பாடிய பாரதியை ஆங்கிலக் கவிஞர்கள் ஷெல்லியுடனும் கீட்ஸுடனும் ஒப்பாய்வு செய்திருப்பது சிறப்பு. தீக்குள் விரலை வைத்தால்… […]

Read more

கழியல் ஆட்டம்

கழியல் ஆட்டம், முனைவர். வே. கட்டளை கைலாசம், காவ்யா. நாட்டுப்புற நிகழ்த்துதல் கலைகளில் ஒன்றான ஆண்களின் ஆட்டக் கலையை பற்றியதே கழியல் ஆட்டம் என்ற இந்த நூல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஆண்கள் ஆடும் கோலாட்டம் தான் கழியல் ஆட்டம். இன்றைய சூழலில் பல்வேறு பொழுதுபோக்குகள் மக்களை ஆக்கிரமித்தாலும் நாட்டுப்புற கலைகளில் கிடைக்கும் இயற்கையான உற்சாகம் ஈடில்லாதது. இந்த ஆட்டத்தில் ஒத்த உடற்கட்டுள்ள எட்டு பேர் பங்கு கொண்டு ஆடுவர். கும்மிக்கழியல் என்ற ஆட்ட முறையில் மட்டும் எட்டு பேருக்கு மேல் கலந்து கொள்வர். […]

Read more

பகை தகர்க்கும் தமிழ்த் தேசியம்

பகை தகர்க்கும் தமிழ்த் தேசியம், வீர சந்தானம், பொன்னி வெளியீடு, 21/1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை 91, விலை 40ரூ. தூரிகைப் போராளி வீர. சந்தானம் எழுதிய புத்தகம் இது. ஒரு காலத்தில் இந்திய தேசியத்துக்கும் திராவிட தேசியத்துக்கும் தீராத கருத்து மோதல் இருந்து வந்தது. இப்போது திராவிட தேசியத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்குமான மோதலாக அது மாறி இருக்கிறது. இதில் தமிழ்த் தேசியத்தின் பக்கமாக ஓவியர் வீர.சந்தானம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். தமிழ்த் தேசியம் பேசுவதாலேய திராவிட இயக்கத்தின் சாதனைகளை, […]

Read more

புலம் பெயர்ந்த தமிழர்கள் – மலேசியா

புலம் பெயர்ந்த தமிழர்கள் – மலேசியா, மைக்கேல் ஸ்டென்சன், தமிழில்-எஸ். கண்ணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 270ரூ. புலம்பெயர்ந்து செல்வது தமிழனுக்குப் புதிதல்ல. 18ம் நூற்றாண்டில் நீக்ரோ அடிமைகள் கப்பலில் ஏற்றப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதைப் போல இலங்கை, மலேசியா போன்ற நாடுகளின் தோட்டங்களில் வேலை பார்க்க தமிழர்கள் கொண்டுசெல்லப்பட்டார். எங்கேயாவது போய் பிழைத்துக்கொள் என்று இங்குள்ள பஞ்சமும் பட்டினிச் சாவு, சாதிக் கொடுமையும் அவர்களை விரட்டியது. ஒப்பந்தக் கூலிகள் என்று […]

Read more

நினைவு நாடாக்கள்

நினைவு நாடாக்கள், கவிஞர் வாலி, விகடன் பதிப்பகம். To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-394-7.html கவியரசர் கண்ணதாசனுக்கு ஒப்பாக வைத்து பாராட்டப்படுபவர் இந்நூலாசிரியர். இவர் கவிதை, கட்டுரை, பேச்சு, நடிப்பு, பாட்டு, ஓவியம் என்று பன்முகத் தன்மை கொண்டவர். இவர் திரைத் துறையில் நுழைந்தது முதல் அதில் கோலோச்சியது வரை அத்துறையில் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களையும் நினைவுகூறும்போது, நம்மையும் அந்தச் சூழலுக்கு கூட்டிச் செல்கிறார். தவிர இவரது எழுதிதும், நடையும் செறிவூட்டப்பட்ட புதிய தமிழை […]

Read more

தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம்

தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம், மூதறிஞர் தமிழண்ணல், தமிழ்ப் பேராயம், ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் 603203, பக். 80, விலை 45ரூ. தொல்காப்பியம் தமிழின் தொன்மையான நூல், தமிழின் பண்பட்ட இலக்கணச் செறிவைக் காட்டுவதோடு, தமிழர் வாழ்வியல் பற்றியும் விளக்குவது இது. எழுத்திற்கும், சொல்லிற்கும் எல்லா மொழிகளிலும்இலக்கணம் உண்டு. அகம்,புறம் என வாழ்வுக்கும் இலக்கணம் வகுக்கும் நூல் தொல்காப்பியம். மூதறிஞர் தமிழண்ணல் புலமையருள் புலமையர் தொல்காப்யித்தை முழுதுணர்ந்து கற்று உரை கண்ட அறிஞர். தொல்காப்பியத்துள் தலைவன் தலைவியர் இலக்கணம் வகுத்துள்ளபாங்கில், இருவர்க்கு இடையிலான […]

Read more

ஏற்றம் தரும் மாற்றம்

ஏற்றம் தரும் மாற்றம், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுதாங்கல், சென்னை 32, விலை ரூ.170. படிப்பறிவு இல்லாவிட்டாலும் பட்டறிவும், விடாமுயற்சியும், தொடர் பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் வெற்றி பெற முடியும் என்பதை உணர்த்தும் நூல். எளிய முறையில் மதிப்புக் கூட்டுதல் தொழில் மூலம் வெற்றி பெற்ற பலரது அனுபவங்களை தொகுத்தளிக்கிறார் வீ. அரிதாசன். நன்றி: தினத்தந்தி, 4/12/13.   —-   அவ்வையார் அருளிய நல்வழி (வாழ்வியலுரையும் தத்துவார்த்தமும்), கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், […]

Read more

காற்றோடு சில கனவுகள்

காற்றோடு சில கனவுகள், டாக்டர் ஷியாமளா, டி.எஸ். புத்தக மாளிகை, 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 100ரூ. 23 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். ஒவ்வொரு கதையும் யதார்த்த வாழ்க்கையை வைத்து எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலும் குடும்ப பெண்ணை சுற்றியே மற்ற பாத்திரங்கள் வலம் வருகின்றன. பொருத்தமான வார்த்தைகள், எடுத்துக்காட்டுகள், வர்ணணைகள் சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 4/12/13.   —-   ஜஸ்டிஸ் ஜெகதீசன், ராணிமைந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 208, விலை 200ரூ. சிலரின் வாழ்க்கை வரலாறு, பலருக்கு நல்வழிகாட்டியாக […]

Read more
1 723 724 725 726 727 841