இஸ்லாத்தின் ஐந்து தூண்கள்

இஸ்லாத்தின் ஐந்து தூண்கள், கமருன் பப்ளிகேஷன், நெ.7, தனலட்சுமி காலனி முதல் தெரு, சாலிகிராமம், சென்னை 93, விலை 75ரூ. மனிதனிடத்தில் நற்பண்புகள், இறையம்சம், மனிதநேயம் போன்றவற்றை உருவாக்குவதற்காக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலமாக இறைவன் அறிமுகப்படுத்திய இஸ்லாத்தின் ஐந்து தூண்கள் என்றழைக்கப்படும் கலிமா (உறுதிமொழி), தொழுகை, நோக்பு, ஜக்காத் (ஏழை வரி), ஹஜ் ஆகியவை குறித்து பல ஆதார நூல்கள் உதவியுடன் அழகாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார் நூலாசிரியர் அல்ஹாஜ் என். முகம்மது மீரான். மேலும் இந்நூலில் மனிதர்களுக்கு நேர் வழி காட்டும் […]

Read more

முதலாளி ஆனவர்களின் வெற்றிக்கதை

முதலாளி ஆனவர்களின் வெற்றிக்கதை, பெரிகாம், 37, அசீஸ் மூல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை 6, விலை 80ரூ. தொழில் அதிபர்களாக உயர்ந்தவர்களின் வாழக்கை வரலாற்றைப் படித்துப் பார்த்தால் அந்த வெற்றிக்குப் பின்னால் கடும் உழைப்பு இருப்பது தெரியும். குறைந்த முதலீட்டில் முதலாளி ஆன 23 தொழில் முனைவோரின் வெற்றிக் கதைகள் தொழிலாளி டு முதலாளி என்ற இந்த நூலில் அடங்கியுள்ளன. இந்த வெற்றிக் கதைகளை இளங்குமார் சிங்காரம் விறுவிறுப்புடன் எழுதியுள்ளார். முதலாளியாக உயர விரும்புவோர் படிக்க வேண்டிய புத்தகம்.   —- […]

Read more

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம், இராம. கோபாலன், விஜயபாரதம் பதிப்பகம், 12, எம்.வி. நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை 31, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-490-8.html அரசின் செயல்பாடுகளை விமர்சித்து பேசவோ எழுதவோ முடியாது. அதன் அடக்குமுறைகளை ஏற்று இணங்கி நடக்க வேண்டும். மீறுபவர்கள் மிசா, டி.ஐ.ஆர, ஆகியவற்றின் கீழ் சிறையிலடைக்கப்பட்டு, துன்புறுத்தப்படுவர். அவசரச் சட்டத்தின் மூலம் பிரகடனப்படுத்தப்படும் இந்த நிலையை, நெருக்கடி நிலையாகும். நம் நாட்டின் இன்றைய தலைமுறையினருக்கு இதன் பாதிப்பு எத்தகையது என்பது […]

Read more

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பதிப்பகம், 8, மாசிலாமணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 400, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-4.html வெங்காயத்தில் இருந்து வெடிகுண்டுவரை இந்த நூல் அனைத்து விஷயங்களையும் பேசும் எனக்குறிப்பிட்டிருப்பதுபோல், பல துறைகளைச் சேர்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். பொதுக் கட்டுரைகள், தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம், அரசியல் – சமூகம், நாடகம் என ஆசிரியர் சில தலைப்புகளில் கட்டுரைகளைப் பிரித்துத் தந்துள்ளார். […]

Read more

காமராஜர் ஒரு சகாப்தம்

காமராஜர் ஒரு சகாப்தம், க. தாமோதரன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 217, விலை 130ரூ. 2011-2012ம் ஆண்டிற்கான, தமிழக அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய பணிக்கான அமைப்பின், நிதி உதவி பெற்று வெளியிடப்பட்டுள்ளது, இந்த நூல்.  1903 முதல் 1975 வரை வாழ்ந்த காமராசரைப் பற்றி, 15 தலைப்புகளில் விவரித்துள்ளார் ஆசிரியர். அவரது அரசியல் வாழ்க்கையில் மிகவும் பிரபலமானது காமராஜர் திட்டம். அது பற்றியும் முழுமையாக சொல்லப்பட்டிருக்கிறது. (அதாவது மூத்த தலைவர்கள் தாம் வகிக்கும் பதவியிலிருந்து விலகி கட்சிப் பணிகளை […]

Read more

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல், கங்கைகொண்ட சோழபுரம் வழி, அரியலூர் மாவட்டம், பக். 160, விலை 150ரூ. தமிழ் இலக்கியங்கள் மொழிவளம், கற்பனைத் திறன், வாழ்க்கைத் தர்மங்களை மட்டுமல்ல, அவை சரித்திரத்தின் பதிவுகளாகவும் திகழ்ந்துள்ளன என்பதை மிக மிக எளிமையாகக் கூறும்வகையில் நூலின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழக மன்னர்கள் தங்களுக்குள் ஒற்றுமையின்றி வாழ்ந்தார்கள் என்று எண்ணத்தை மாற்றும்வகையில் அமைந்துள்ள கரிகாற்சோழன் கட்டுரை முதல் பட்டினப்பாலை வரையில் அனைத்திலும் புதிய புதிய அரிய தகவல்களை அறியும் […]

Read more

கண்ணதாசன் பயணங்கள்

கண்ணதாசன் பயணங்கள், கவிஞர் கண்ணதாசன், பக்.144, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-174-4.html கவியரசு கண்ணதாசன் நாடறிந்த பாடலாசிரியர் மட்டுமல்ல, சிறந்த கட்டுரையாளர் என்று இந்நூலால் அறியலாம். கவிஞர் இலங்கை, ரஷ்யா, மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்றபோது, அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் ஆதங்கங்களையும் ஒளிவு மறைவில்லாமல் எழுதியுள்ளார். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர் 17/11/13.   —-   தேசத்தை நேசிப்போம், இளைஞர் இந்தியா, செந்தமிழ்த்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109, பெருமாள் கோயில் […]

Read more

நோய்மனம்

நோய்மனம், கோவி. பால. முருகு, தமிழ்வேந்தன் பதிப்பகம், வடலூர் 607303, பக். 112, விலை 70ரூ. கண்ணில் பட்டு கருத்தில் பதிந்து மனதைவிட்டு அகலாத கருத்தை ஏற்படுத்துபவையே சிறந்த சிறுகதைகள் என்பர் இலக்கிய ஆர்வலர். நூலாசிரியர் நல்ல சிறுகதைகளைப் படைக்க முயற்சித்திருப்பது தெரிகிறது. ஆனால், அதே சமயம், கருத்துத் திணிப்பின் களமாக சிறுகதையை அவர் பயன்படுத்துகிறாரோ என்ற எண்ணத்தை படிப்போர் மனதில் ஏற்படுத்துவதையும் தவிர்க்க முடியவில்லை. திருப்பம் என்ற முதல் சிறுகதையில் தொடங்கி வேட்கை வரையில் கதையை அவசர அவசரமாகக் கூறுவதுபோல இருக்கிறது. கதையைப் […]

Read more

கடவுளின் நிறம் வெண்மை

கடவுளின் நிறம் வெண்மை, 52 புனிதர்களின் சரிதம், எஸ்.கே.முருகன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 336, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-391-3.html நமது இதிகாசங்கள், புராணங்கள், உபநிடதங்களில் எண்ணற்ற புனிதர்கள் உலவுகின்றனர். அவர்களில் துருவன்,பிரகலாதன், நாரதர் போன்ற பக்த மகாரத்தினங்களை அனைவரும் அறிவர். அதே சமயம் புராணங்களில் எதிர்மறை நாயகர்களாக இருந்த பலரும்கூட, இறை பக்தியில் சளைத்தவர்களல்ல. அவர்களில் சிலரை அறிமுகப்படுத்தும் முயற்சியே இந்நூல் எனலாம். மது கைடபர், சூரபதுமன், மாருசன், சகுனி, கஜமுகன் […]

Read more

திருச்சி வே. ஆனைமுத்து கருத்துக் கருவூலம் (15 தொகுதிகள்)

திருச்சி வே. ஆனைமுத்து கருத்துக் கருவூலம் (15 தொகுதிகள்), வெளியீட்டகம், 8/2, இராசரத்தினம் தெரு, இரண்டாம் மாடி, மேற்குத் தாம்பரம், சென்னை 45, 15 தொகுதிகளும் சேர்த்து விலை 4500ரூ. 90 வயதைத் தொட்டு, பெரியாரின் பெருந்தொண்டராக இன்றும் உற்சாகமாக வலம் வருகிறார் திருச்சி வே. ஆனைமுத்து. அரசுப் பணியைத் துறந்து அரசியல் பணியை ஏற்றவர். பகுத்தறிவு, நாத்திகம், ஆகிய தத்துவத்துக்காக எழுதியும் பேசியும் போராடியும் வருகிறார். இளமையில் முடுக்குடன் இருப்பவர்கள் முதுமையை அடையும்போது மெள்ள தவங்கி, கொள்கையில் சாயம் வெளுத்து முடங்கிவிடக்கூடும். ஆனால் […]

Read more
1 731 732 733 734 735 841