அவஸ்தை

அவஸ்தை, யூ.ஆர். அனந்தமூர்த்தி, தமிழில்-நஞ்சுண்டன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 208, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-193-0.html பிரபல கன்னட எழுத்தாளரான யூ.ஆர்.அனந்த மூர்த்தி எழுதி 1978ல் வெளிவந்த அவஸ்தேவின் மொழிபெயர்ப்பு. அனந்தமூர்த்தியின் பெரும்பாலான எழுத்துக்களைப் போலவே மரபுக்கும் புதுமைக்கும் இடையே நடைபெறும் போராட்டம்தான் இந்தக் கதையும் சித்தாந்த அடிப்படையில் ஒரு சமூகப் பிரிவின் வீழ்ச்சியும் புதிய குழுக்கள் அதிகாரம் ஏற்பது பற்றியும் நாவல் பேசுகிறது. கிராமத்தில் மாடு மேய்த்து வந்த ஒரு சிறுவன் சமகம் […]

Read more

சமணம் வளர்த்த தமிழ்

சமணம் வளர்த்த தமிழ், பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன் (மூன்று பாகம்) தமிழ் நிலையம், சென்னை 17,பக். 1233, விலை மூன்று தொகுதிகள் 700ரூ. வேதகாலத்திற்கும் முற்பட்டதான சமண சமயத்தின் மேன்மைகளைப் பற்றி, ரிக் வேதத்தில் குறிப்புகள் உள்ளன. சந்திரகுப்தர் தென்னாட்டுக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் சமண சமயம் பரவியிருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. தொல்காப்பியர் சமண சமயத்தவர் என்பதும், தொல்காப்பியம் ஏசுநாதர் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று. பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் சமண சமயம் பரவியிருந்திருக்கிறது. சமண […]

Read more

ஆட்சித்தமிழ் வரலாற்று நோக்கு

ஆட்சித்தமிழ் வரலாற்று நோக்கு, மு.முத்துவேலு, திருக்குறள் பதிப்பகம், சென்னை 78, பக். 176, விலை 90ரூ. சங்க காலம் முதல் தற்காலம் வரை ஆட்சிமன்றம், நிர்வாகம், நீதித்துறைகளில் தமிழ் பயன்படுத்தப்பட்டு வரும்விதம் குறித்துப் பேசும் நூல். சோழர் காலத்தில் கூற்றம், கோட்டம், நாடு, வளநாடு மண்டலம் என்று நிர்வாக அடிப்படையில் நிலப்பகுதிகள் பிரிக்கப்பட்டன. அப்போது கழஞ்சு, பாட்டம், கூலிர முத்தாவணம், மேரை, காணம் என்ற தமிழ்ப் பெயர்களில் விற்பனை வரி வசூலிக்கப்பட்டு வந்தன என்று எடுத்துக்காட்டியுள்ளார் நூலாசிரியர். சங்க காலம் ஆட்சித் தமிழின் பொற்காலம் […]

Read more

தமிழும் ஈழமும்

தமிழும் ஈழமும், குன்றில் குமார், செந்தமிழ் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 60ரூ. இலங்கையின் வரலாற்றை, 160 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகத்தில் சிறப்பான முறையில் எழுதியிருக்கிறார் குன்றில் குமார். இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள், ராஜ ராஜ சோழன் ஆட்சியின் கீழ் இலங்கை இருந்திருக்கிறது. சிங்களவர்கள் தங்கள் புனித நூலாகப் போற்றும் மகா வம்சம் சிங்கத்தின் மூலமாகத் தோன்றியவர்கள் சிங்களர்கள் என்று கூறப்பட்டுள்ளது. முதலான விவரங்களுடன் தனி ஈழம் கேட்டு […]

Read more

அவர்கள் சின்னஞ் சிறிய மனிதர்கள்

அவர்கள் சின்னஞ் சிறிய மனிதர்கள், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே) சென்னை 108, விலை 270ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-015-1.html லதா ரஜினிகாந்த் எழுதிய சிறந்த புத்தகம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா, கல்வி மீது ஆர்வமும், அக்கறையும் கொண்டவர். குழந்தைகளுக்கு சிறந்த கல்வி அளிக்கும் நோக்கத்துடன் ஆஷ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். கல்வித்துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் என்ற தலைப்பில் ஒரு சிறந்த புத்தகத்தை […]

Read more

356 தலைக்கு மேல் கத்தி

356 தலைக்கு மேல் கத்தி, பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-163-8.html அரசியல் சட்டத்தின் 356வது பிரிவு மாநில அரசுகளை கலைத்த மத்திய அரசுக்கு அதிகாரம் அளிப்பதாகும். அதாவது மாநில அரசுகளின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போன்றது. தமிழக முதல் அமைச்சர்களாக இருந்த மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜானகி அம்மாள், கேரளாவின் முதல் அமைச்சராக இருந்த கம்யூனிஸ்டு தலைவர் நம்பூதிரியோடு, ஆந்திர முதல் அமைச்சராக இருந்த […]

Read more

வெற்றிக்கொடி கட்டு

வெற்றிக்கொடி கட்டு, நாகூர் ருமி, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.120, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-392-3.html பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு, இலக்கு, லட்சியம் என்று இருந்திருக்கும். கல்லூரியை விட்டு வெளியே வந்து நிதர்சனத்தை எதிர்கொள்ளும்போது, பலருக்கு அவர்களது கனவுகளும் இலக்குகளும் எங்கோ விலகிச் சென்றிருக்கும். இது யதார்த்தம். அப்படிப்பட்டவர்களை வழி நடத்திச் செல்லும் நிலையில் உள்ள பெற்றோருக்கும், மூத்தோருக்கும் உதவும் வகையில், இந்த நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் […]

Read more

ஸ்ரீ ரமண மகரிஷி

ஸ்ரீ ரமண மகரிஷி, பாலகுமாரன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 600002, பக். 344, விலை 160ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-512-0.html இந்தியத் திருநாட்டின் பெருமைகளுள் குறிப்பிடத்தக்கது, ஞானியர் பலர் தோன்றி, மக்களை நெறிப்படுத்தியதாகும் என்பர். ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றோர், வடநாட்டில் தோன்றியதுபோல, ராமலிங்க சுவாமிகள், பட்டினத்தார் போன்றவர்கள் தென்னாட்டில் தோன்றி பெருமை சேர்த்தனர். அண்மையில் வாழ்ந்து மக்களை நெறிப்படுத்திய ஸ்ரீரமண மகரிஷியும் இன்றியமையாத மகான் ஆவார். அவரின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் தெளிவாகக் கூறுகிறது. […]

Read more

விவேகானந்தரைப் பற்றி விவேகானந்தர்

விவேகானந்தரைப் பற்றி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 481, விலை 100ரூ. சுவாமி விவேகானந்தர் தம்மையும் தமது வாழ்க்கை நிகழ்வுகளையும் பற்றி எழுதியுள்ள மிக அரிதான நூல் இது. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடனாக விவேகானந்தர் ஆனதும், தன் குருவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி அவர் விவரிப்பதும் ஒரு ஆன்மிக நாவல்போல் விரிகிறது. சிகாகோ சர்வதேச மகாசபையில் அவர் ஆற்றிய உரையும் அவர் இந்தியாவிற்குத் திரும்பி வர வேண்டிய அவசியமும் படிக்கும்போது நம் உடலில் ஒரு புது உணர்வு எழுகிறது. […]

Read more

தேசத்தை நேசிப்போம்

தேசத்தை நேசிப்போம், இளைஞர் இந்தியா செந்தமிழ்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109, பெருமாள் கோயில் தெரு, மாதவரம், சென்னை 60, பக். 335, விலை 150ரூ. நம் தேசம் காத்த தலைவர்களின் தியாகங்களையும் பாரதத் திருநாட்டின் மாபெரும் மாண்புகளையும் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் படைக்கப்பட்ட நூல். ஒரு பாரதபூமி ஒரு நாளில் ஒரு எளிய நிகழ்வில் ஒரு தனிப்பட்ட மனிதரின் முயற்சியில் விடுதலைக் கனியை எட்டிவிடவில்லை. அதற்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள், செக்கிழுத்தவர்கள், கல்லுடைத்தவர்கள், கைவிலங்கு, கால்விலங்கு, இரும்புக் குண்டுடன் வாழ்வை முடித்தவர்கள் எத்தனையோபேர். […]

Read more
1 750 751 752 753 754 841