தென்னிந்திய ஸெளராஷ்ட்ர சமூக வரலாறு

தென்னிந்திய ஸெளராஷ்ட்ர சமூக வரலாறு – பெரியகுளம் கு.அ.ரெங்கராஜன்; பக்.216; ரூ.200; இராஜா வெளியீடு, 10, (மேல்தளம்) இப்ராஹிம்நகர், காஜாமலை, திருச்சிராப்பள்ளி. மிகவும் நுட்பமான முறையில் தகவல்களைச் சேகரித்து தென்னிந்திய செளராஷ்ட்ர மக்களது வரலாற்றை மிகவும் எளிமையாகவும், தகவல்களை முழுமையாகவும், சரித்திர, கல்வெட்டு ஆதாரங்களோடும் நூலாசிரியர் விவரித்திருப்பது தனிச்சிறப்பாகும். புராண காலத்திலிருந்து வரலாற்றை விவரிக்கும் நூலாசிரியர், சரித்திர காலத்திற்கான ஆதாரங்களுடன் அதை விளக்கியிருக்கிறார். செளராஷ்ட்ர மக்களது சமூக அமைப்பு, பண்பாடு, இடப்பெயர்வால் அதில் ஏற்பட்ட மாற்றம், தற்போது தென்னிந்தியாவில் அம்மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள், […]

Read more

பிரபஞ்சனின் மனிதர் தேவர் நரகர்

 மனிதர் தேவர் நரகர், பிரபஞ்சன், 256 பக்கங்கள், 180 ரூ, புதிய தலைமுறை, சென்னை – 32 நாற்பத்தைந்து தலைப்புகளில் பிரபஞ்சன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புத்தான் மனிதர் தேவர் நரகர். பிறந்த ஊர், பிறப்புக்கு காரணமான அப்பா என்று தொடங்கும் இந்த நூலின் உருவாக்கத்தில் ஒரு அமைப்பு முறை இருப்பதைக் காணமுடிகிறது. தாவரங்கள் விலங்குகள் பறவைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன என்பதனை நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்னும் கட்டுரைகள் விளக்குகிறது. ஆசிரியர்கள் பற்றிய பிம்பம், கதை எழுதக் காரணமான விஷயங்கள் என்று […]

Read more

சயாம்-பர்மா மரண ரயில் பாதை

சயாம்-பர்மா மரண ரயில் பாதை, சீ. அருண், விலை ரூ. 130; சயாம் மரண ரயில், சண்முகம், விலை ரூ. 150, தமிழோசை பதிப்பகம், 21/8 கிருஷ்ணா நகர்,   மணியக்காரம்பாளையம் சாலை, கணபதி, கோவை- 641012. ‘கேட்டிருப்பாய் காற்றே’ என்று மனம் கசந்து கண்ணீர் சிந்திய உலகத் தமிழர்களின் அவல வரலாறுகள் ஏராளம். ஆனால் தமிழர்களின் எந்தப் பேரவலமும் உலக வரலாற்றில் எந்த முக்கியத்துவமும் பெறுவதில்லை. நீதிமிக்க சமூகத்தின் பார்வைக்கும் வருவதில்லை. இரண்டாம் உலகப் போரின்போது சயாம்-பர்மா ரயில் பாதை அமைப்பதற்காக கூலிகளாக […]

Read more

சின்மயி விவகாரம்: மறுபக்கத்தின் குரல்

சின்மயி விவகாரம்: மறுபக்கத்தின் குரல், விமலாதித்த மாமல்லன், சத்ரபதி வெளியீடு, 5/6 CPWD (Old) Qtrs, பெசன்ட் நகர், சென்னை – 90. விலை ரூ.120 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-900-8.html சமூக வலைத்தளங்கள் கடந்த சில ஆண்டுகளில் தமிழில் விவாதங்களின் மொழியை முற்றாக மாற்றியமைத்துவிட்டன. சீரான, தர்க்கபூர்வமான வாதமுறைகள் மறைந்து, குறுக்குவெட்டாக பாய்ந்து செல்லும் வாத முறை இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. பாடகி சின்மயி ட்விட்டரில் தெரிவித்த சில கருத்துகள், அவர் மீது தெரிவிக்கப்பட்ட சில கருத்துகள் எல்லாம், சில […]

Read more

தமிழ்நாட்டில் காந்தி

தமிழ்நாட்டில் காந்தி, சந்தியா பதிப்பகம், 77, 53 ஆவது தெரு, 9ஆவது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 83. விலை ரூ. 75 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-8.html சுதந்திரப் போராட்டத்தின்போது 1934 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். தமிழ்நாட்டில் 23.2.1934 முதல் ஒரு மாத காலம் ரெயிலிலும் காரிலும் வண்டியிலும் பயணம் செய்தார். அப்போது காந்தியுடன் சென்றவர்களில், திருச்சியில் பிரபல டாக்டராக இருந்தவரும், பிற்காலத்தில் காங்கிரஸ் மந்திரிசபையில் இடம் பெற்றவருமான டாக்டர் டி.எஸ்.எஸ். […]

Read more

உடையும் இந்தியா – கல்கி – ஃபாலோ அப் விமர்சனம்

கல்கியில் ரமணன் எழுதி 16-12-12 தேதியிட்ட இதழில் வெளிவந்த விமர்சனத்தை வாசிக்க இங்கே  க்ளிக் செய்யவும். இதற்கு எதிர்வினையாக கல்கி இதழில் வந்த விமர்சனம் கீழே. ஆதாரக் குறிப்புகள் 1486 (பாலோ-அப்: விமர்சனம்) ராஜீவ் மல்ஹோத்ராவும் அரவிந்தன் நீலகண்டனும் எழுதிய ‘உடையும் இந்தியா?’ பற்றி கல்கியில் விமர்சனம் செய்த ரமணன், அண்ணாதுரை சிஐஏ ஏஜெண்ட், ஈவெரா வன்முறையைத் தூண்டினார், மற்றும் ஹிட்லர் யூதர்களை இனப் படுகொலை செய்ததை வரவேற்றார் என்று அவதூறு செய்திருப்பதாகவும், திராவிட இனம் என்ற எதுவுமே இல்லை என்று ஆதாரமில்லாமல் வாதிட்டு […]

Read more

அஞ்ஞாடி

அஞ்ஞாடி, பூமணி, பக்கங்கள் 1066, வெளியீடு: க்ரியா, பி-37, கிரவுண்ட் ஃப்ளோர், 5வது குறுக்குத் தெரு, யுனிவர்சிட்டி காலனி, பாலவாக்கம், சென்னை – 41. விலை ரூ. 925 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-208-0.html தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் வரிசையில், கம்பீரமான ஓர் ஆசனத்தைப் பூமணிக்குத் தந்து இருக்கிறது ‘அஞ்ஞாடி’. ஆண்டி, மாரி என்ற இருவர் இடையே முகிழும் நட்பு தலைமுறை தலைமுறையாகத் தொடரும் கதை… அதனூடே கடக்கும் வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள்… இவைதான் ‘அஞ்ஞாடி’. […]

Read more

தமிழ் மக்கள் வரலாறு – சோழப் பேரரசின் காலம்

தமிழ் மக்கள் வரலாறு – சோழப் பேரரசின் காலம், க.ப. அறவாணன், வெளியீடு: தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை – 600 029. விலை ரூ. 250 கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, தி.வை.சதாசிவ பண்டாரத்தா, கே.கே.பிள்ளை – ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் சோழர் பேரரசு பற்றிய முதன்மை வரலாற்றை எழுதியதில் முக்கியமானவர்கள். இதில், பெரும்பாலும் சோழ அரசர்களின் வரலாறு முழுமையாகவும், சோழர்காலச் சமூக வரலாறு சற்றே குறைவாகவும் இருக்கும். மன்னர்களின் வரலாற்றைவிட, மக்களின் வரலாற்றைச் சொல்வதே உண்மையான வரலாறாக இருக்க […]

Read more

இருட்டிலிருந்து வெளிச்சம்

இருட்டிலிருந்து வெளிச்சம், அசோகமித்திரன், நற்றிணை பதிப்பகம், புதிய எண்: 243, ஏ. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005. விலை ரூ. 240 சினிமா தொடர்பாக அசோகமித்திரன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இவை வெறும் சினிமா விமர்சனங்களோ, அல்லது திரையுலகம் சம்பந்தமான தகவல் குறிப்புகளோ அல்ல. ஒரு எழுத்தாளன் இந்த பிரமாண்டமான கலையில் எதிர்கொண்ட சில அந்தரங்க தருணங்களைப் பற்றியது இந்த நூல். அந்த தருணங்கள் ஒரு எழுத்தாளனின் நுட்பமான மனதிற்கு மட்டுமே தட்டுப்படுபவை. சினிமாவைப் பொறுத்தவரை நமக்கு முன்னே கடந்து […]

Read more

விகடன் இயர்புக் 2013

விகடன் இயர்புக் 2013, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 2. விலை ரூ. 125 இது போட்டிகள் நிறைந்த உலகம். இதில் கல்வியும் அறிவும் ஒரு சேரப் பெற்ற மனிதனே வெற்றிபெற முடியும். கல்வியையும் பட்டங்களையும் கொடுக்கும் கல்லூரிகள், அறிவைக் கொடுக்கிறதா என்பது கேள்விக்குறி. இந்த நிலையில், அறிவு ஆயுதத்தை விகடன் பிரசுரம் தயாரித்துள்ளது; ஆண்டுதோறும் தயாரிக்கவும் உள்ளது. ‘புறத்தை அறிந்துகொள்ளப் பயன்படுவது தகவல். தன் அகத்தை ஆராய்ந்து தெளிவதற்கு முற்படுவது அறிவு. வாழ்வின் இருப்பை விளங்கிக்கொள்ள வழிவகுப்பது ஞானம்’ என்று, […]

Read more
1 821 822 823 824 825 841