எது தர்மம்

எது தர்மம், சுகி. சிவம், கற்பகம் புத்தகாலயம், விலை 90ரூ. நமக்குப் பிறர் என்னென்ன நன்மைகளெல்லாம் செய்ய வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அந்த நன்மைகளை நாம் பிறருக்குச் செய்வோம். நமக்குப் பிறர் என்னென்ன தீமைகளெல்லாம் செய்யக்கூடாது என்று நாம் கருதுகிறோமோ, அந்தத் தீமைகளை நாம் பிறருக்குச் செய்யாமல் இருப்போம். அவ்வளவுதான். இதற்குள்ளேயே எல்லாத் தர்மங்களும் அடங்கிவிட்டன என்று தர்மத்திற்கு விளக்கம் அளிக்கிறார் சுகி. சிவம். நன்றி: தினத்தந்தி, 14/9/2016.   —-   கவி வானம், தமிழ்மணி புத்தகப்பண்ணை, விலை 200ரூ. பல்வேறு பொருள்கள் […]

Read more

பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள்

பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள், கற்பகம் புத்தகாலயம், விலை 65ரூ. மனிதனின் தொழில் முன்னேற்றத்திற்கு சூத்திரம் இருப்பதுபோல, அவன் உண்ணும் உணவிற்கும் உண்டு. உடற்கூறுகளில் ஏதாவது மாறுதல்கள் ஏற்பட்டால் அதற்குத் தகுந்தாற்போல் உணவு முறை சூத்திரத்தை மாற்றி அமைத்து உடலின் இயக்கத்தை சீர் செய்யலாம் என்பதை விளக்குகிறது இந்த நூல். வயிற்றுப்புண், குடல் புண், மலச்சிக்கல், அஜீரணம், ரத்தக் கொதிப்பு, சிறுநிரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள், மூலநோய், நிரழிவு, மாதவிடாய்க் கோளாறு என அனைத்து முக்கியமான நோய்களுக்கான உணவு ஆலோசனைகளை எளிய நடையில் சமையல் […]

Read more

திடீர் இடியோசை

திடீர் இடியோசை, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 260ரூ. இன்றைய சமுதாயம் எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழிமுறைகளைச் சொன்னவர். நமது விரைவு வாழ்க்கையை நெறிப்படுத்த தியான முறையைத் தந்தவர் ஓஷோ. முப்பது ஆண்டுகளாக அவர் ஆற்றிய சொற்பொழிவு, எண்ணற்ற புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் இந்த திடீர் இடியோசையும் ஒன்று. இதை சுவாமி சியாமானந்த் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். எதற்காகவும் உன் வாழ்க்கையை தியாகம் செய்யாதே. வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய். வாழ்க்கைதான் இறுதி இலக்கு. அது எந்த நாட்டை விடவும் […]

Read more

பேசாத பேச்செல்லாம்

பேசாத பேச்செல்லாம், பிரியா தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, விலை 170ரூ. ஆண், பெண் வாழ்வில் ஒரு புரிதலை ஏற்படுத்த எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். அக்கட்டுரைகளின் மூலம் தனது பால்ய காலம் தொட்டு தற்போது வாழும் வாழ்க்கை வரையிலான அனைத்து சம்பவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் படம் பிடித்து நம் முன்னே திரைப்படமாகக் காண்பிக்கிறார் நூலாசிரியர் பிரியா தம்பி. காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வாழ்க்கைகள் இருக்கின்றன. சொந்த வாழ்க்கை, பொது வாழ்க்கை, அந்தரங்க வாழ்க்கை என்று கூறுவார். ப்ரியாவின் […]

Read more

வீடுதோறும் வெற்றி

வீடுதோறும் வெற்றி, டாக்டர் ந. சேதுராமன், கற்பகம் புத்தகாலயம், சென்னை, விலை 375ரூ. ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து டாக்டராக, தொழில் அதிபராக, அரசியல் கட்சித் தலைவராக வாழ்க்கையில் வெற்றி பெற்ற கதையை டாக்டர் ந.சேதுராமன் இந்த நூலில் சுவைபடச் சொல்கிறார். மருத்துவத் தொழிலில் ஈடுபட்டபோதிலும் நாணயமாக இருந்து நாணயம் சம்பாதித்ததைக் கூறுகிறார். தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் எதையும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடியே உரைக்கிறார். இந்த நூலைப் படித்துப் பார்த்தால் ஒரு சாதாரண மனிதர் படைத்த சாதனையைத் தெரிந்து கொள்ளலாம். நாமும் […]

Read more

அதிசய சித்தர் போகர்

அதிசய சித்தர் போகர், எஸ். சந்திரசேகரன், கற்பகம் புத்தகாலயம், விலை 90ரூ. தூய தவ வலிமையின் காரணமாக தெய்வநிலையை அடைந்துவிடும் மகான்களான சித்தர்கள் தங்களது அற்புத சக்திகளை, துன்பப்படுபவர்களின் துயரங்களைப் போக்குவதற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பதை நூலாசிரியர் விரிவாக எடுத்துக் கூறி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 14/10/2015.   —- இளவரைவியலும் தமிழ்நாவலும், ஆ.சிவசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 155ரூ. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றிய இனவரைவியல் செய்திகளை மனதில்கொண்டு இனவரைவியலுக்கும் நாவலுக்குமான தொடர்பை இந்நூல் ஆராய்கிறது. நன்றி: தினத்தந்தி, 14/10/2015.   […]

Read more

ஏற்றுமதி இறக்குமதி வணிகம்

ஏற்றுமதி இறக்குமதி வணிகம், ஜஸ்டின்பால், ராஜீவ் அசேர்கர், தமிழில் லயன் எம். சீனிவாசன், கற்பகம் புத்தகாலயம், பக். 255, விலை 250ரூ. வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு உதிவகரமான வழிமுறைகள், தகவல்கள் அடங்கிய நூல். வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும், ஏற்றுமதி தொடங்குவதற்கு முன்னர் பதிவு செய்தல், சர்வதேச வர்த்தகத்தில் பொதுவாக அளிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் முதற்கொண்டு பல அடிப்படை விவரங்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. சர்வதேச வர்த்தக் கலைச்சொற்களான இன்கோடெர்ம்ஸ் உள்ளிட்ட விவரங்கள், கடுமையான போட்டியும் சிக்கலும் நிறைந்த ஏற்றுமதித் தொழில் […]

Read more

ஏற்றுமதி இறக்குமதி வணிகம்

ஏற்றுமதி இறக்குமதி வணிகம், ஜஸ்டின் பால் ராஜீவ் அசேர்கர் , தமிழில் லயன் எம். சீனிவாசன், கற்பகம் புத்தகாலயம், சென்னை, விலை 250ரூ. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் குறித்து ஜஸ்டின் பால் ராஜீவ் அசேர்கர் எழுதிய நூல். இதைத் தமிழில் லயன் எம்.சீனிவாசன் மொழிபெயர்த்துள்ளார். அயல்நாட்டு வர்த்தக நிறுவனங்களின் கட்டமைப்பு, இறக்குமதி ஏற்றுமதி ஆவணங்களை தயாரிக்கும் முறை, சுங்க இலாகாசெயல்பாடுகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து பற்றி விரிவாக விளக்கியுள்ளார். ஏற்றுமதி இறக்குமதி வணிகம் சவால்கள் நிறைந்த பணியாகும். அதில் ஈடுபடுவோர் கையாள வேண்டிய நெறிமுறைகள் […]

Read more

செம்பியன் செல்வி

செம்பியன் செல்வி,  கோவி. மணிசேகரனின், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 525ரூ. கலிங்கம் எறிந்த கருணாகரத் தொண்டைமானைப் பற்றி ‘கலிங்கத்துப்பரணி’ எனும் தமிழின் தவக்காவியம் புகழ்கிறது. அந்த கருணாகரத் தொண்டைமானைக் கதாநாயகனாகக் கொண்டு எழுந்த உரைநடைக் காப்பியமே இந்த பல்லவ சரித்திர நாவல். புலவர்கள் மத்தியில் கருணாகரனுடைய வீரம் அருமையான காவியமாக உலவி வருகிறது. இதயத்தை மகிழ்விக்கும் வர்ணனைகள், உள்ளத்தைத் திடுக்கிட வைக்கும் போர்க் காட்சிகள், உணர்ச்சியைக் கவரும் காதல் நிகழ்ச்சிகள், சுவையோடு செல்லும் சம்பவக் கோவை – இவை அனைத்தும் நிரம்பியிருக்கின்றன. நாவலாசிரியர் […]

Read more

பாரதியார் கவிதைகள்

பாரதியார் கவிதைகள், உரையாசிரியர் கவிஞர் பத்மதேவன், கற்பகம் புத்தகாலயம், சென்னை, விலை 750ரூ. 39 வயது வரையே வாழ்ந்த முண்டாசுக் கவிஞர் பாரதியார் இயற்றிய கவிதைகள் ஏராளம். தேசப்பற்று, ஆன்மிகம், சமூக மாற்றம், சாதிமறுப்பு, பெண்ணியம் என்று அவரது கவிதை வானத்தின் அளவு, விரிந்து பரந்தது. அவரது அத்தனை கவிதைகளையும் அழகாகத் தொகுத்து, அவற்றுக்கு முதல் முறையாக உரையும் வழங்கி இருக்கிறார், ஆசிரியர். வசன கவிதைகள் தவிர்த்து மற்ற எல்லா கவிதைகளும் உரையும், மேலும் அவற்றை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் குறிப்புகளும் தந்து இருக்கிறார். […]

Read more
1 3 4 5 6 7