தமிழி

தமிழி, வி.ஆனந்தகுமார், வி. ஆனந்தகுமார் வெளியீடு, விலை 250ரூ. 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று ஆதிமனிதனான ஆதிபகவன், பிறப்பித்த முதல் சொல் எது என்பதிலிருந்து ஆரம்பித்து குகைகளில் அவன் வைத்த அடையாளக் கோடுகள் பிற்காலத்தில் அவை எழுத்துக்களாக மாறின. இது தொடர்பாக அரிய தகவல்கள் அடங்கிய ஆராய்ச்சி நூலாகும். நன்றி: தினத்தந்தி, 27/1/2016.   —- தமிழக அரசுப் பணியில் சேருவது எப்படி?, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ. அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு சிறந்த வழிகாட்டி இந்நூல். அரசு […]

Read more

பூர்ணிமா கவிதைகள்

பூர்ணிமா கவிதைகள், டாக்டர் கோ. இளங்கோவன், பூர்ணிமா பதிப்பகம், விலை 150ரூ. டாக்டர் கோ. இளங்கோவன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. ‘வானம் சிரித்தால் மழையாகும். ஆழ் கடல் சிரித்தால் அலையாகும். அலைகள் சிரித்தால் நுரையாகும்”  என்பன போன்ற மனம் விரும்பும் கவிதைகள் உள்ளன. பளபளப்பான காகிதத்தில், வண்ணப் படங்கள் கண்ணைக் கவர்கின்றன. நன்றி: தினத்தந்தி, 27/1/2016.   —- மலர்ந்த வாழ்வு சிறுகதைகள், மா.செ. மாயதேவன், மா. ராமையா, ராமநாதன் பதிப்பகம், விலை 60ரூ. மலர்ந்த வாழ்வு, ரத்த தானம், கூண்டுக்கிளி மற்றும் உடைந்த […]

Read more

ஏன்? எதற்கு? ஆன்மிக சந்தேகங்களுக்கு விடையும் விளக்கமும்

ஏன்? எதற்கு? ஆன்மிக சந்தேகங்களுக்கு விடையும் விளக்கமும், நர்மதா பதிப்பகம், விலை 100ரூ. இந்து சமயத்தில் நிறைய சம்பிரதாயங்கள், சடங்குகள். ஆனால் ஒவ்வொன்றும் பொருள் பொதிந்தவை. அர்த்தம் அறியாததால் அவை வீண் என்று கருதுகிறோம். அவற்றின் பயன் அறிந்து பலன் பெற இந்நூல் உதவும். கோவிலில் இறைவனை வழிபடுதல், பிரகாரத்தைச் சுற்றி வருதல், திருமுழுக்கு (அபிஷேகம்) செய்தல், தானம் செய்தல், பூஜையறையின் விதிமுறைகள் இவை போன்ற ஆன்மிகத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அறிய பல விஷயங்களை கேள்வி – பதில் வடிவில் தொகுத்து அளித்துள்ளார் […]

Read more

பிருகு சம்ஹிதா

பிருகு சம்ஹிதா, தமிழில் எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன், குமரன் பதிப்பகம், விலை பிருகு சம்ஹிதா ரூ.500, விவாக தீபிகா ரூ.400. இந்து ஜோதிடத்தின் தந்தையாக விளங்கும் பிருகு மகரிஷியின் ஜோதிட நூல், “பிருகு சம்ஹிதா”. இந்த நூலை தமிழில் எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன் மொழி பெயர்த்துள்ளார். வடமொழியில் உள்ள மகரிஷியின் ஜோதிடக் கருத்துகளை தமிழ் மரபுக்கேற்ற வகையில், எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக எழுதியுள்ளார். 12 ராசிக்குரிய பலன்கள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1,296 லக்ன பாவ பலன்களை உள்ளடக்கியது. இதே ஆசிரியர் […]

Read more

வேலி

வேலி, வாஸந்தி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 175ரூ. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்களை படைத்தவரும், பத்திரிகை துறையில் முத்திரை பதித்தவருமான வாஸந்தி படைத்த 14 சிறுகதைகள் கொண்ட நூல். “மனுசத்தனம் இல்லாத குலப் பெருமை நமக்கு வேணாம்! ஒரு பெண்ணோட மனசு எப்படிப்பட்டதுன்னு அவங்களுக்குத் தெரியுமா? பெண்ணுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கிறது கூடத் தெரியுமா? முகமே இல்லாத கும்பலா போயிட்டோம். இப்படியே வாயை மூடிக்கிட்டு இருந்தோம்னு வெச்சுக்குங்க, நமக்குன்னு அடையாளமே இருக்காது. அவங்க சொல்றதுதான் […]

Read more

அகச்சுவடுகள்

அகச்சுவடுகள், கவிதாயினி அமுதா பொற்கொடி, வானதி பதிப்பகம், விலை 200ரூ. கவிதாயினி அமுதா பொற்கொடி எழுதிய கவிதைகளின் தொகுப்பு. “வல்லினமின்றி மெல்லினமின்றி இடையினமாய் அவதரித்தவள் நான்” என்று திருநங்கைகளைப் பற்றி பாடும்போதும், ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்ற தலைப்பில் ‘கலாவதி ஆனது நல வாழ்வு, கண்ணீரில் மிதக்குது பலர் வாழ்வு’ என்று மதுக்கடை பார்’ குறித்து சொல்லும்போதும் இவரது சொல்லாடல் நம்மை ரசிக்க வைக்கிறது. இந்தக் கவிதைத் தொகுதியில், அவர் சமூகக் கேடுகளையும், கலாச்சார சீரழிவுகளையும் சாடுகிறார். அவரது ஆழ் மனதின் உள்ளே உள் […]

Read more

கம்பராமாயணம் அயோத்தியா காண்டம்

கம்பராமாயணம் அயோத்தியா காண்டம், கோ.வில்வபதி, பழனியப்பா பிரதர்ஸ், விலை 900ரூ. வடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றிய ராமாயணத்துக்கு கவிதை அழகு மிக்க வர்ணனைகளுடன் புதுவடிவம் கொடுத்த கம்பரின் அற்புதத் திறமையால், ராமாயணம் என்றாலே கம்பராமாயணம் என்று கூறும் அளவுக்கு பெருமை பெற்ற கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்திற்கு, மிகச் சிறப்பான தெளிவுரையாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. அயோத்தியா காண்டத்தில் இடம் பெற்ற அனைத்து கவிதைகளுக்கும் விரிவான தெளிவுரையும், விளக்கமும் கொடுத்து இருப்பதுடன், கடினமான சொற்களுக்கான அர்த்தத்தையும் தந்து இருப்பதால், கம்பரின் காவிய சுவையை முழுமையாக […]

Read more

தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றங்கள்

தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றங்கள், கார்த்திலியா, விலை 90ரூ. விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட மனித சமுதாயமே இந்த நூற்றாண்டில் எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்சினை புவி வெப்பமயமாதல். இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள், வாழ்வாதாரங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை முறைகள் பாதிக்கின்றன. இது குறித்து உலகளவில் விவாதங்கள், கருத்தரங்குகள் நடந்துவரும் நிலையில், சுற்றுச்சூழல் பிரச்சினை, உள்ளூரில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த நூல் விரிவாக விவரிக்கிறது. கடல் நீர் மட்டம் உயர்ந்தால், தமிழகம் என்ன ஆகும்? ஆழிப்பேரலைக்கு அஞ்சாத காடுகள், வறட்சி போன்ற […]

Read more

பாட்டி சொன்ன புத்திசாலித்தனமான கதைகள்

பாட்டி சொன்ன புத்திசாலித்தனமான கதைகள், சரோஜா வைத்தியநாதன், மணிமேகலைப் பிரசுரம், விலை 50ரூ. நல்லதையே நினை, நல்லதையே செய், நல்லது நடக்கும். சோம்பேறியாக வாழாதே, சுறுசுறுப்புடன் வாழ், பிறரிடம் பொறாமை கொள்ளாதே, உழைப்பு உயர்வு தரும், நீயும் ஏமாறாதே, பிறரையும் ஏமாற்றாதே போன்ற நன்மை தரும் கருத்துக்களுடன் நம் பாட்டி சொன்ன கதைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.   —- சிவங்கங்கைச் சீமை படமாத்தூர் வரலாறு, கோ. மாரிசேர்வை, தமிழில் எஸ்.ஆர்.விவேகானந்தம், காவ்யா வெளியீடு, விலை 300ரூ. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த படமாத்தூர் […]

Read more

இந்திய குடியரசுத் தலைவர்கள்

இந்திய குடியரசுத் தலைவர்கள், மு. ஆனந்தகுமார், அறிவுப் பதிப்பகம், விலை 40ரூ. இந்திய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியின் அதிகாரம், தகுதிகள், சம்பளம், வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய பெட்டகமாக இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 1/4/2015.   —- கசங்கிய காகிதம், காளிதாஸ், சவுத் இந்தியன் போஸ்ட், விலை 50ரூ. காடு மரங்களை அழித்து விட்டு அதிக கட்டிடங்களைக் கட்டிவிட்டு எப்படித்தான் தோன்றுகிறதோ தொட்டியில் செடி வளர்க்க என்பது போன்ற பொதுநல கூர்மைப் பார்வை கொண்ட கவிதைகளின் தொகுப்பு நூல். […]

Read more
1 102 103 104 105 106 223