சொப்பன சுந்தரி

சொப்பன சுந்தரி, வானவில் புத்தகாலயம், சென்னை, விலை 299ரூ. பிரபல தெலுங் எழுத்தாளர் யத்தனபூடி சுலோச்சனா ராணி எழுதிய நாவல். தமிழில் கவுரிகிருபானந்தன் மொழிபெயர்த்துள்ளார். சேற்றில் பிறந்த செந்தாமரை மேனகா, தாயின் வாழ்க்கையில் நடந்த தடுமாற்றத்தால் சமுதாயம் அவர்களை மதிப்புக் குறைவாக நடத்துகிறது. மேனகா எதிர்பாராதவிதமாக நடிகையாகி விடுகிறாள். அவள் மனதார விரும்பிய ஹரி கிருஷ்ணாவுக்கும் ரேகாவுக்கும் திருமணம் நடக்கிறது. இந்த நிலையில் ரேகா இறந்து போகிறாள். ஹரி கிருஷ்ணன் மீது கொலை குற்றம் சாட்டப்படுகிறது. திகில்களும், திருப்பங்களும் நிறைந்த கதை. முடிவு என்னவாக […]

Read more

நபி வழி அறிவோமா

நபி வழி அறிவோமா, வழக்கறிஞர் வசந்தகுமாரி செல்லையா, சென்னை, விலை 280ரூ. மனித சமுதாயம் நேர் வழி பெற்று அதன் மூலம் இவ்வுலக – மறு உலக வாழ்வில் வெற்றி பெறுவதற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது இறை வேதமாகிய திருக்குர்ஆனும், அதன் விளக்கமாக வாழ்ந்த இறைத் தூதர் நபிகள் நாயம் (லஸ்) அவர்களின் போதனையும் அகும். அதன் அடிப்படையில் இறைமறை மற்றும் நபிகளாரின் பொன்மொழிகளின் அடிப்படையில் இந்த நூலை வழக்கறிஞர் வசந்தகுமாரி செல்லையா எழுதியுள்ளார். அழகிய முன் மாதிரியாகத் திகழ்ந்த அண்ணலாரின் வரலாற்றில் நடந்த […]

Read more

பெரியாரின் பாராட்டைப் பெற்ற பெரியோர்

பெரியாரின் பாராட்டைப் பெற்ற பெரியோர், தமிழறிஞர் நன்னன், ஏகம் பதிப்பகம், விலை 150ரூ. இவர்தாம் பெரியார் என் றதலைப்புடன் பெரியார் பற்றிய புத்தகங்களை எழுதி வருகிறார் தமிழறிஞர் நன்னன். பெரியாரின் பாராட்டைப் பெற்ற பெரியோர் என்ற தலைப்பில் 7வது புத்தகம் வெளிவந்துள்ளது. பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மகாத்மா காந்தி, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குன்றக்குடி அடிகளார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, விடுதலை ஆசிரியர் கி. வீரமணி, ஜி.டி.நாயுடு, வ.உ.சி., நெ.து. சுந்தரவடிவேலு, ஈ.வெ.கி.சம்பத், […]

Read more

மகா அவதார் பாபா

மகா அவதார் பாபா, வாசு. இராதாகிருஷ்ணன், மணிவாசகர் பதிப்பகம், விலை 60ரூ. சிதம்பரம் அருகில் உள்ள பரங்கிப்பேட்டையில் கி.பி. 203ம் ஆண்டில் பிறந்தவர் பாபா. பெற்றோர் சுவேதநாத அய்யர் – ஞானம்பிகை. பெற்றோருக்கு 8வது பிள்ளையாகப் பிறந்த பாபாவின் இயற்பெயர் நாகராஜ். சிரஞ்சீவியான பாபா, இன்னமும் இமயமலையில் வாழ்வதாகக் கருதப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாபா மீது மிகுந்த பக்தி கொண்டவர் என்பதும், அவர் வாழ்க்கை வரலாற்றை பாபா என்ற பெயரிலேயே திரைப்படமாக எடுத்ததும் அனைவரும் அறிவர். நூலாசிரியர் வாசு. இராதாகிருஷ்ணன், பாபா பற்றி […]

Read more

சாவித்திரி வாழ்க்கை வரலாறு

சாவித்திரி வாழ்க்கை வரலாறு, நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா, தோழமை வெளியீடு, விலை 250ரூ. நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று சாவித்திரி – கலைகளில் ஓவியம் என்ற தலைப்பில் நெஞ்சைத் தொடும் விதத்தில் எழுதியுள்ளார் நாஞ்சில் மு.ஞா. செ. இன்பா. 1955ல் வெளிவந்த மிஸ்ஸியம்மா படத்தில், ஜெமினிகணேசனும், சாவித்திரியும் இணைந்து நடித்தனர். அப்போது அரும்பிய காதல், பிறகு திருமணத்தில் முடிந்தது. இரு குழந்தைகள் பிறந்தன. 1968ம் ஆண்டில் சாவித்திரி டைரக்டர் ஆனார். அதனால் பல பிரச்சினைகளை சந்தித்தார். சொத்துக்களை இழந்தார். ஈருல் ஓருயிர் என்பதுபோல் வாழ்ந்த […]

Read more

நம் நாயகம்

நம் நாயகம், ஜெஸிலா பானு, அல்லாப் பிச்சை ராவுத்தர் அறக்கட்டளை, திருவாரூர் மாவட்டம், விலை 300ரூ. இறுதி இறைத் தூதராய் இந்த அவனியில் அவதரித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அகில உலகத்திற்கே ஓர் அழகிய முன் மாதிரி. அவர்கள் வாழ்வில் நடந்த அற்புதமான சம்பவங்களை 63 தலைப்புகளில் எழுத்தாளர் ஜெஸிலா பானு இந்த நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். நபிகளாரின் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனித சமுதாயம் பின்பற்றி நடக்க வேண்டிய போதனைகளாகும். அதே குழந்தைகளுக்காக அவர்கள் மொழியிலேயே சின்ன சின்ன கதைகளாக […]

Read more

திசை கடக்கும் சிறகுகள்

திசை கடக்கும் சிறகுகள், ஈரோடு தமிழன்பன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 275ரூ. கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. மானுட விடுதலையைப் பிரதானமாகக் கொண்டு கவிதைகளை இயற்றும் கவிஞர், ‘தமிழ்த் தாயே, இப்போது உனக்கென ஒரு நாடு இல்லை, உனக்குத் தெரியுமா?’ என்ற கேள்விகளால் நெஞ்சில் வேள்வி வளர்க்கிறார். சிலர் இறுக்கப் பிடித்து கை குலுக்கினால் அச்சமாக இருக்கிறது. மோதிரங்கள் களவு போகின்றன. போகட்டும், ஆனால் சில நேரங்களில், விரல் ரேகைகளே காணாமற் போய்விடுகின்றன. மூன்றாம் உலக நாடுகளில் மரணங்கள் நேரடிப் […]

Read more

நலம் காக்கும் சித்த மருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம், சித்த மருத்துவர் ப. செல்வசண்முகம், வலைத்தமிழ் பதிப்பகம், சென்னை, விலை 220ரூ. சித்தர்கள் கூறியுள்ள வாழ்வியல் நெறிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நூலை மருத்துவர் ப. செல்வ சண்முகம் படைத்திருக்கிறார். நோய் வருவதற்கான காரணங்கள் மற்றும் நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளை தெளிவாகவும், எளிமையாகவும் விளக்கியுள்ளார். உடம்பைப் பற்றியி சித்தர்களின் விளக்கம், உடல் கட்டமைப்பு, குளிக்கும் முறை, உணவு அருந்தும் முறை, முறையான தூக்கம், தூக்கமின்மைக்கான தீர்வுகள் போன்ற தலைப்புகளில் பயனுள்ள கருத்துகளை வழங்கி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி. […]

Read more

சுந்தர வால்மீகி ராமாயணம்

சுந்தர வால்மீகி ராமாயணம், அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 450ரூ. ராமாயணம், பாரத தேசத்தின் தலைசிறந்த இதிகாசங்களில் ஒன்று. ராமாயணம்தானே, எல்லாருக்கும் தெரிந்ததுதானே எனலாம். ஆனால் இந்நூல் முழுமையையும் படித்து முடித்தால், ராமாயண நிகழ்வுகளுக்கு இத்தனை அர்த்தங்கள் உள்ளனவா, நிகழ்வுகளுக்குள் இத்துணை சூட்சுமங்களும், ரகசியங்களும் உள்ளனவா என்று அதிசயிக்கத் தோன்றும். ராமஜென்ப பூமியான அயோத்தியில் துவங்கி, சீதாதேவி சிறை வைக்கப்பட்டிருந்த அசோக வனம் வரையில் உள்ள பெரும்பாலான ராமாயண நிகழ்விடங்களுக்குச் சென்று அந்தந்த சேத்ரங்களில் அந்தந்த தலங்களில், அந்தந்த தீர்த்தங்களில், அந்தந்த […]

Read more

மகாகவி பாரதியாரின் பகவத் கீதை

மகாகவி பாரதியாரின் பகவத் கீதை, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. எல்லோரும் படித்து பயன்பெற வேண்டிய நூல் பகவத் கீதை. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட கீதையை, மகாகவி பாரதியார் அழகிய தமிழில் மொழிபெயர்த்து முன்னுரையும் எழுதியுள்ள இந்நூல் தனிச்சிறப்பு வாய்ந்தது. நன்றி: தினத்தந்தி.   —- மாண்புமிகு மாணவராகலாம், சிவபாரதி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 40ரூ. மதிப்புமிக்க மாணவ சமுதாயம் மலரவும், நாளைய உலகை ஆளநல்ல தலைவர்கள் உருவாவதற்கான 10 தலைப்புகளில் நல்கருத்துகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி.

Read more
1 114 115 116 117 118 223