அச்சுவெல்லம்

அச்சுவெல்லம், பா. முருகானந்தம், பழனியப்பா பிரதர்ஸ், பக். 145, விலை 176ரூ. சூழ்நிலைகளால் உருவாகும் சம்பவங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடக்கின்றன. அவை அவ்வப்போது சிறுகதைகளாக உருப்பெறுகின்றன. அந்த வகையில் பா. முருகானந்தம், 15 சிறுகதைகளை, அச்சுவெல்லம் எனும் தலைப்பில் சிறுகதைகளாக தொகுத்து அளித்துள்ளார். தலைப்பு கதையான, ‘அச்சுவெல்ல’த்தில் பண்ணையார் வீட்டிற்கு போகும் ஒவ்வொரு அச்சுவெல்லத்திலும், கரிகாலன் கலக்கும் ‘பதம்’, அடிமைத்தனத்திற்கு எதிராகவும், இயலாமையின் வெளிப்பாடாகவும் மிக அழுத்தமாக படைக்கப்பட்டுள்ளது. ‘முதுகு வலி’ கதையில், ‘உடம்பில் இயல்வு நிலையிலேர்ந்து மாறுபட்டா அதைப் புரிஞ்சுக்கிட்டு மீண்டும் […]

Read more

இராமன் கதை

இராமன் கதை, முனைவர் ச.லோகாம்பாள், அருள் பதிப்பகம், பக். 576, விலை 430ரூ. ராமாயணத்தை பல கோணங்களிலும் நுணுக்கமாக ஆராய்ந்தெழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ராமாயண பாத்திரங்கள் ஒவ்வொன்றையும், கதைப் போக்குடன் தம் ஆய்வுக் கருத்துகளை நிறுவுகிறார் நூலாசிரியர். ராமபிரானின் குணநலன்களை அடுக்கிக் கூறும் நுலாசிரியர், ராமன் மாபெரும் மன்னன் என்ற இறுமாப்பின் உருவகமாகவே காட்சியளிக்கிறான் என்றும், கோபத்தால் பொறுமை இழந்து அரக்கர் முதலானோரைக் கொன்று குவித்த கொடியவன் ராமன் என்று கூறும் கருத்துகள், இந்த நூலை படிப்போருக்கு நெருடலாகவே இருக்கும். தசரதன், […]

Read more

காப்கா எழுதாத கடிதம்

காப்கா எழுதாத கடிதம், எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம், பக். 208, விலை 200ரூ. இன்று வாழ்வதே முதன்மையானது தமிழ் எழுத்துலகின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில், ஒருவரான எஸ். ராமகிருஷ்ணன், இலக்கிய இதழ்களிலும், இணையதளத்திலும் எழுதிய கட்டுரைகளில், 28 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, நூல் வடிவில் வெளிவந்துள்ளது. அனைத்து கட்டுரைகளும் புத்தகங்கள் தொடர்பானவை. வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ழன் காத்தூ, ஹெர்மென் மெல்வில், தோரரோ, மிரோஜெக், ரேமண்ட் கார்வர் உள்ளிட்டோரின் புத்தகங்கள் பற்றியும், அது தொடர்பான ஆசிரியரின் பார்வையும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. காப்கா, தன் […]

Read more

பன்முகப் பார்வை

பன்முகப் பார்வை, எஸ். பொன்னுசாமி என்ற எஸ்.பொ., மித்ரா பதிப்பகம். முற்போக்கிற்கு மாற்று நற்போக்கு இலங்கை எழுத்துலகில் முக்கிய இடத்தில் இக்கும் எஸ்.பொன்னுசாமி என்ற எஸ். பொ., வின் பன்முகப் பார்வை என்ற நூலை சமீபத்தில் படித்தேன். மித்ரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இலங்கையில், ஆறுமுக நாவலருக்கு அடுத்து, வசன நடையில், தரமான படைப்புகளை அளித்தவர் எஸ்.பொ. தலித் குடும்பத்தில் பிறந்ததால், கல்விக் கூடங்களில் மாணவர்களால் தரக்குறைவாக நடத்தப்பட்டார். இதுபோன்றதொரு நிலை, தன் வாரிசுகளுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, வளோள இனப் பெண்ணை திருமணம் செய்து […]

Read more

சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் கவிதைத் தொகுப்பு

சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் கவிதைத் தொகுப்பு, உரை விளக்கம் அருட்கவி அரங்க.சீனிவாசன், திருக்குறள் பதிப்பகம், பக். 536, விலை 500ரூ. உரையுடன் மீண்டும் வெளியானது அண்ணாமலை ரெட்டியார் பாடல்கள் தமிழ் வளர்த்த மதிப்பிற்குரிய தென்பாண்டித் தமிழகத்தில், பலவர்கள் பலர் தோன்றினர். அவர்களில் ஒருவர், கவியாற்றல் மிக்க இளைஞர், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார். 30 ஆணடுகளே வாழ்ந்த அவர், பல்வேறு தெய்வங்களையும், ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பத் தேவரையும் பாடியுள்ளார். இசையுலகமும், நாடக உலகமும் பொதுமக்களும் உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாடிய, உயர்வுமிகு காவடிச் சிந்துப் […]

Read more

பிணங்களின் கதை

பிணங்களின் கதை, கவிப்பித்தன், பாரதி புத்தகாலயம், சென்னை, பக். 160, விலை 120ரூ. நாம் வாழும் சமூகத்தின் பாரம்பரியத்தின் மீது அக்கறை கொண்டு, அதன் விழுமியங்கள் நவீனம் என்ற பெயரில் இப்போது மெதுவாகச் சிதைக்கப்படுவது நம்மில் எத்தனை பேர்? ஆனால், தொண்டை மண்டலத்தில் பிறந்த நூலாசிரியர், தனது இந்தச் சிறுகதை நூலின் மூலம் தாம் பிறந்த மண் பாரம்பரியத்தை இழந்து வருவது குறித்து கனத்த இதயத்துடன் ஆதங்கப்பட்டுள்ளார். புதுமை என்ற பெயரில் எப்படி எல்லாம் நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்களை நாம் உதாசீனப்படுத்துகிறோம்? இதனால், […]

Read more

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும்

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 288, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-284-1.html நக்கீரர், கபிலர், அவ்வை, கம்பன், பாரதி, வ.உ.சி., கவிமணி, பெரியார், லெனின், உமர் கய்யாம் முதலான கவிஞர்களையும், அறிஞர்களையும் பார்த்தும் படித்தும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ப. ஜீவானந்தம் பெற்ற அனுபவங்களின் தொகுப்புதான் இந்த நூல். 56 தலைப்புகளில், 56 அறிஞர்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ஜீவா. அவரின் உரைகள், புத்தக மதிப்புரைகள், அணிந்துரைகள் முதலானவற்றின் […]

Read more

கதையில் கலந்த கணிதம்

கதையில் கலந்த கணிதம், இரா. சிவராமன், பை கணித மன்றம், பக். 168, விலை 150ரூ. இந்த நூல் கதைகள் மூலம் கணிதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. இரண்டாக பிளந்தாலும் மீண்டும் ஒன்று சேரும் வரம் பெற்ற ஜராசந்தனை, மகாபாரத போரில் பீமன் எவ்வாறு வீழ்த்துகிறான் என்பதை 2025, 3025, 9801 என்ற எண்களை வைத்து கூறுவதை ரசிக்கலாம். குருசேத்திர போரில் கையாளப்பட்ட சக்ர வியூகம் எத்தகையது என்பதை விளக்கும் கணித முறையும் வியப்பளிக்கிறது. மகர வியூகம், கூர்ம வியூகம், பத்ம வியூகம், கருடு வியூகம், […]

Read more

நீட்சி

நீட்சி, பாரவி, இயல் பதிப்பகம், பக். 208, விலை 95ரூ. பாரவி எழுதும் பல கதைகள், பரிசோதனை முயற்சிகள். முதல் கதையான வரப்பு திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் பரிசு பெற்ற கதை. இது, வெள்ளந்தியான கிராமத்து மனிதர்களை அறிமுகம் செய்கிறது. எருமை மாட்டைக் கட்டி இருக்கும் மூக்கணாங்கயிறு இறுகி, ரத்த காயம் உண்டாவதைச் சொல்லி உருகுற கதை நிறம். கண் மருத்துவப் பரிசோதனைக்கு வரும் கிராமத்து மனிதர்களின் அவலங்களைச் சொல்லும் இருட்டு, இறுதிச் சடங்கின்போது வாய்க்கரிசி போடுவதைச் சொல்லும் வாய்அரிசி முதலியன மிக யதார்த்தமானவை, […]

Read more

ஜாதியற்றவளின் குரல்

ஜாதியற்றவளின் குரல், ஜெயராணி, கருப்பு பிரதிகள், தலித் முரசு, பக். 357, விலை 250ரூ. பத்திரிகையாளராக பணிபுரியும் ஜெயராணி, மீனா மயில் என்ற பெயரில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. புதிரை வண்ணார்களாக்கப்பட்ட, பூர்வீக வண்ணக் கலைஞர்கள், இந்தியனே வெளியேறு, பொய்யர்கள் ஆளும் பூமி, விடுதலை என்பது, இருக்க விடலாமா ஜாதியை, தேவாலயத்தில் ஜாதி வெளி, கண்டதேவி சூழ்ச்சி, இன்னுமா இந்துவாக இருப்பது போன்ற கட்டுரைகள், வாசகனின் மனசாட்சியோடு உரையாடுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை குறித்து எழுதுவோர், அவர்களின் […]

Read more
1 172 173 174 175 176 240