நகைச்சுவை சக்கரவர்த்தி ஜெ.பி. சந்திரபாபு

நகைச்சுவை சக்கரவர்த்தி ஜெ.பி. சந்திரபாபு, எஸ்.டி.வி., விக்டோரியா பதிப்பகம், பக். 408, விலை 300ரூ. நகைச்சுவை அரசர் சந்திரபாபுவைப் பற்றி எப்படி, இத்தனைத் தகவல்களை ஆசிரியர் சேகரித்தார் என்று, வியக்கும் வண்ணம், அத்தனைத் தகவல்கள் அடங்கிய பொக்கிஷம் இந்த நூல். பாபு நடித்த படங்களிலிருந்து, 300க்கும் அதிகமான புகைப்படங்கள், இந்தப் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளன. சந்திரபாபுவின் படங்கள், பாடல்கள், வாழ்க்கைத் தகவல்கள் என்ற மும்முனைத் தேடலில், ஐந்தாண்டுகள் மூழ்கி முத்துக்களை எடுத்துத் தந்திருக்கிறார் சொர்ணராஜன், தி. விக்டோரியா (எஸ்.டி.வி.). -எஸ். குரு. நன்றி: […]

Read more

மாற்றங்களை ஏற்போம்

மாற்றங்களை ஏற்போம், ரா. சொக்கலிங்கம், மனிதத்தேனீ பதிப்பகம், பக். 132, விலை 50ரூ. பொது அமைப்புகள், கல்வி நிலையங்கள், இலக்கிய, ஆன்மிக, அரசியல் கூட்டங்கள் என, இதுவரை 15 ஆயிரத்து 500 மேடைகள் கண்டவர் மனிதத்தேனீ சொக்கலிங்கம். மேடை பேச்சை முழுநேரத் தொழிலாக கொண்டுள்ள இவர், மூன்றாண்டுகளாக மேடைகளில் முழங்கியவற்றில் சிலவற்றை தேர்வு செய்து 40 கட்டுரைகளாக தந்துள்ளார். கட்டுரைகளை அறிவியல், மொழி, ஆளுமை, தன்னம்பிக்கை, சுற்றுலா, ஆன்மிகம், சுற்றுச்சூழல், மருத்துவம், ஊடகம், அரசியல் என வைகப்படுத்தி தந்திருப்பது சிறப்பு. மேடைப் பேச்சாளர்கள் கட்டாயம் […]

Read more

தொல்காப்பியத்தில் அறிவியல் சிந்தனைகள்

தொல்காப்பியத்தில் அறிவியல் சிந்தனைகள், முனைவர் கா. மணிகண்டன், சைந்தவி, பக். 239, விலை 225ரூ. தொல்காப்பியம் தமிழின் மிகப் பழைய இலக்கண நூல். எழுத்து, சொல், இலக்கணத்தோடு வாழ்க்கைக்கும்(பொருளுக்கும்) இலக்கணம் வகுத்த நூல். தொல் காப்பியத்தில் காணும் அறிவியல் சிந்தனைகளை நுணுகி ஆராய்ந்து, அறிந்து உணர்ந்த செய்திகளை, ஆசிரியர் விரிவாக்கி விளக்கி இந்நூலில் வழங்கியுள்ளார். நிலம், நீர், வளி, தீ, விசும்பு கலந்த மயக்கம் இவ்வுலகம் எனும் கருத்தும், செடி, கொடி வகையை உயிர்கள் வகையில் பிரித்திருப்பதும், பேச்சொலிகளின் அளவுகளை ஆய்ந்து கூறியுள்ள திறனும் […]

Read more

மறைந்த உலகம்

மறைந்த உலகம், ஸர் ஆர்தர் கோனான் டாயல், வழி நூலாசிரியர்-டாக்டர் கிருஷ்ணமாச்சாரி நரசிம்மன், எல்கேஎம் பப்ளிகேஷன்ஸ், பக். 640, விலை 320ரூ. துப்பறியும் கதைகள் பல படைத்த ஸர் ஆர்தர் கோனான் டாயலையும், அக்கதைகளில் உலா வந்த ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற துப்பறியும், கதாபாத்திரத்தை பலரும் இன்றும் நினைவில் கொள்வர் என்பது உறுதி. அவர் எழுதிய விஞ்ஞானத்தை மட்டும் மையக் கருத்துக்கள் கொண்ட நாவல் புரொபசர் சேலஞ்சர் ஸ்டோரிஸ் இன்றளவும் பலரும் படித்து மகிழ்வர். அதில் தி லாஸ்ட் வேர்ல்டு என்பதும் ஒன்று. அதன் […]

Read more

பத்துப்பாட்டில் வருணனை மரபுகள்

பத்துப்பாட்டில் வருணனை மரபுகள், முனைவர் ச.பொ. சீனிவாசன், சேகர் பதிப்பகம், பக். 312, விலை 225ரூ. தரமான, அரிதான, செம்மொழி சார்ந்த, நல்ல இலக்கியப் படைப்புகளை வெளியிடுகின்ற மரபை வழக்கமாய்க் கெண்டுள்ள பதிப்பகம் சேகர் பதிப்பகம். பிழை இல்லாது, நல்ல, எளிய கட்டமைப்போடும் நூல்களை வெளியிடும் பாங்கு நேர்த்தியானது. இந்த வரிசையில் நூலாசிரியர் முனைவர் ச.பொ. சீனிவாசன் எழுதிய, பத்துப்பாட்டில் வருணனை மரபுகள் என்ற நூலை வெளியிட்டுள்ளார். வருணனை என்னும் சொல் வடமொழித் தழுவல். எனினும் வேறு பெயர்களில் தமிழில் வழங்கியுள்ளதையும் ஆசிரியர் பல […]

Read more

நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம்

நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம், ப. இலட்சுமணன், மாதவ் பதிப்பகம், பக். 176, விலை 100ரூ. நாம் இந்தியர்கள் என்ற தலைப்பில் துவங்கி, தேச பக்திப் பாடல்கள் என, 15 அத்தியாயங்களோடு இச்சிறு நூல் முடிவடைகிறது. மாணவர்களுக்குப் பயனுள்ள பல செய்திகள் உள்ளன. புராதன பாரதத்தின் விஞ்ஞான சாதனைகள் வெற்றிலை போடுவதின் விஞ்ஞான விளக்கம்- பழைய சோற்றில் பி6, பி12, வைட்டமின்கள் உள்ளன என, பல சுவையான செய்திகளும் உள்ளன. -குமரய்யா. நன்றி: தினமலர், 11/5/2014.   —- நீ அசாதாரணமானவள்/ன், சோம. வள்ளியப்பன், […]

Read more

வியாபாரம் வெற்றிக்கு ஆதாரம்

வியாபாரம் வெற்றிக்கு ஆதாரம், மெர்வின், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. வியாபாரம் செய்து, லட்சாதிபதியாகவும், கோடீசுவரர்களாகவும் உயர்ந்தவர்கள் பலர். வியாபாரத்தில் வெற்றி பெறும் ரகசியத்தை இந்த நூலில் விவரிக்கிறார் எழுத்தாளர் மெர்வின். நன்றி:தினத்தந்தி, 7/5/2014.   —- மனதோடு ஒரு சிட்டிங், சோம வள்ளியப்பன், சிக்ஸ்த் சென்ஸ், பக். 133, விலை 85ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-220-8.html நூலாசிரியர், பிரபலமான மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர். மனதைப் புரிந்துகொள்ள, கைக்கொள்ள, சொல் பேச்சு கேட்க வைக்க, மொத்தத்தில் […]

Read more

ஆலமரம்

ஆலமரம், விஜயலஷ்மி சுந்தராஜன், மணிமேகலைப் பிரசுரம், பக். 958, விலை 490ரூ. ஆலமரம் நீண்ட காலக்கட்டத்தை உள் அடக்கிய ஒரு உயர்ந்த நாவல். சுதந்திரப் போராட்ட காலம். இரண்டாம் உலகப் போர் எல்லாம் இந்தக் கதையில் உண்டு. கூட்டுக் குடும்ப உறவுகளும் அதன் சாதக பாதகங்களுமே முக்கியமாக இதில் இடம் பெறுகின்றன. அணைத்துக் கொண்டு போக வேண்டிய ஆலமரம் போன்ற குடும்பத் தலைவி, தன் மரத்தின் அடியில் புல் பூண்டு கூட முளைக்க விடாத சுய நலம் பிடித்த ஆலமரத்தைப்போல், தன் குடும்பத்துக்கு சொத்து […]

Read more

வடலூர் வாய்மொழி

வடலூர் வாய்மொழி, சாமி சிதம்பரனார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. To buy this Tami book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-8.html பேரறிஞர் சாமி சிதம்பரனார், பல சிறந்த ஆய்வு நூல்களையும், இலக்கிய சமய நூல்களையும் ஏறத்தாழ 60 நூல்களுக்கு மேல் எழுதிக் குவித்துள்ள மூதறிஞர். இந்நூல் 1959ல் எழுதி வெளிவந்த  நூல். ராமலிங்கர் வரலாறு எனத் துவங்கி 41 அத்தியாயங்களில் உண்மைக்கு வெற்றி என்ற தலைப்போடு நூல் நிறைவடைகிறது. வடலூர் வள்ளற் பெருமான் பாடல் வரிகள் மேற்கோள்களோடு, ராமலிங்கரது கொள்கைகளையும், […]

Read more

சென்னைக்கு மிக அருகில்

சென்னைக்கு மிக அருகில், விஸ்வபாரதி, காவ்யா, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-221-8.html இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. பன்னிரெண்டு சிறுகதைகள். வாழ்க்கையோடு தொடர்புடைய விஷயங்களைக் கதைக் களமாக வைத்து, எழுதப்பட்டவை. புத்தகத்தின் தலைப்பாகத் தேர்வு செய்துள்ள கதையில், வீடு தேடும் இன்றைய மத்திய வர்க்க மக்களின் ஆர்வமும், தேடலும் மிக நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கடைசிக் கதை வடக்கத்தி பையன், நம்மை யோசிக்க வைக்கிறது. கதைகளின் வரிசைப்படி பொருளடக்கம் இல்லை. புத்தகத் தயாரிப்பில் இது அவசியமல்லவா? -ஜனகன். நன்றி: […]

Read more
1 192 193 194 195 196 240