அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும்

அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும், பி.எஸ். ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 225ரூ. சித்தர்கள் தங்கள் கடும் தவத்தின் மூலம் முக்காலங்களையும் அறியும் ஆற்றல் பெற்றவர்கள் என்றும், தங்கள் பாடல்களின் மூலம் ஆன்மீகம் மற்றும் மருத்துவக் குறிப்புகளை விபரம் அறிந்தவர்கள் மட்டுமே புரியக்கூடிய பரிபாஷைகள் மூலம் வெளிப்படுத்தியவர்கள் என்றும், இவர்களைப் பற்றி பலவாறு கூறப்படுவதுண்டு. சித்தர்கள் என்றாலே திருமூலர் முதல் கோரக்கர் வரையிலான பிரசித்தி பெற்ற 18 […]

Read more

இப்படிக்கு வயிறு

இப்படிக்கு வயிறு, விகடன் பிரசுரம்,757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 75ரு. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-080-2.html நம் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் வயிற்றுக்கு பெரும் பங்கு உண்டு. நம் உயிரைக் காக்கும் வயிறு, உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது. வயிற்றைப் பராமரிக்கும் வழிமுறைகளை இந்நூல் விவரிக்கிறது. வயிறே பேசுவது போன்ற பாணியில் புத்தகத்தை எழுதுவதில் வெற்றி பெற்றுள்ளார் டாக்டர் செல்வராஜன்.   —-   எழும்பிப் பிரகாசி, கவிஞர் பொன். செல்வராஜ், கவிஞன் பதிப்பகம், 28, […]

Read more

தோழர் ஈ.வெ.ரா. நாகம்மையார்

தோழர் ஈ.வெ.ரா. , நாகம்மையார், முனைவர் ந.க. மங்கள முருகேசன், தென்றல் பதிப்பகம், 13/3, பீட்டர் சாலை குடியிருப்பு, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 204, விலை 150ரூ. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும், ஒரு பெண் இருக்கிறாள் என்னும் வாக்கிற்கு உயிரோட்டம் தரும் வகையில் ஈ.வெ.ரா. முன்னேற்றத்திற்கு அடித்தளமாய் விளங்கியவர் அவரது துணைவியார் ஈ.வெ.ரா., நாகம்மையார். நான் சுயநல வாழ்வில் மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாயிருந்த காலத்திலும், எனக்கு வாழ்வில், ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் […]

Read more

மரணத்தின் பின் மனிதர் நிலை

மரணத்தின் பின் மனிதர் நிலை, மறைமலையடிகள், நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர்,சென்னை 17, பக். 192, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-701-7.html மறைமலையடிகள் என்று தமிழறிஞர்களால் அழைக்கப்படும் இந்நூலாசிரியர், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த மறைத் திரு சுவாமி வேதாசலம் ஆவார். அன்றைய காலகட்டத்தில் தமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டு இப்போதும் பலரால் பாராட்டப்படுகிறது. இவர், மரணத்திற்குப் பின் மனிதர் நிலை என்ன என்பதை இந்நூலில் விளக்கியுள்ளார். கடவுளும் இல்லை. ஆத்மாவும் இல்லை. […]

Read more

சோழர் செப்பேடுகள்

சோழர் செப்பேடுகள், நடன. காசி நாதன், சேகர் பதிப்பகம், சென்னை 78, பக். 144, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-515-8.html சோழப் பேரரசர்களான சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடு அவரது மைந்தன் முதலாம் ராஜராஜனின் பெரிய லெயிடன் செப்பேடு, அவரது மகன் முதலாம் ராஜேந்திரனின் கரந்தைச் செப்பேடு, அவரது மகன்களில் ஒருவரான வீரராஜேந்திரனின் மகள் வயிற்றுப் பெயரனான முதலாம் குலோத்துங்கனின் சிறிய லெயிடன் செப்பேடு ஆகிய செப்பேடுகளின் தமிழ்ப் பகுதிகளின் மூலம் அடங்கிய நூல் இது. மேலும் […]

Read more

தேரையர் வெண்பா (அகர முதல – விளக்கவுரை)

தேரையர் வெண்பா (அகர முதல – விளக்கவுரை), கோக்கலை ஜே. ராஜன், மகராணி, சென்னை 101, பக். 496, விலை 250ரூ. தேரையர் என்பவர் தருமசௌமியர் என்பவருடைய மாணக்கர் என்றும் அகத்தியருடைய மாணக்கர் என்றும் கூறுவர். ஆனால் இவருடைய இயற்பெயர் சரியாகத் தெரியவில்லை. இவர் காலத்தில் நீங்காத தலைவலி கொண்ட ஓர் அரசனின் தலைவலியைப் போக்க, அவருடைய கபாலத்தைத் திறந்து பார்த்தபோது அங்கு ஒரு தேரை இருந்ததாம். உடனே ஒரு பாத்திரத்தில் நீரை வைத்ததும், தேரை அந்த நீரில் குதித்து நீங்கியதாம். பிறகு மூலிகையின் […]

Read more

ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்

ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம், டாக்டர் ஆர். சிவசக்தி வேலன், நர்மதா பதிப்பகம், 10, நானாதெரு, தி.நகர், சென்னை 17, பக். 216, விலை 80ரூ. திருவருட் பிரகாச வள்ளல் ராமலிங்க அடிகளால், 1851ல் பதிப்பித்து வெளியிடப்பட்ட இந்நூலை இயற்றியவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீகண்ணுடைய வள்ளல் ஆவார். தமிழ்க் குரிசில் சீகாழிச் சம்பந்தனை (பக். 31) தெய்வமாக வழிபட்டு இயற்றப்பட்ட, ஒழிவில் ஒடுக்கம் விரித்த நூற்கெல்லாம் விதை (32) எனலாம். வடலூர் வள்ளலார் பதிப்பித்த பின், வேதாந்த அடிப்படையில் விளக்கவுரை […]

Read more

பள்ளு இலக்கியத் திரட்டு

பள்ளு இலக்கியத் திரட்டு, தே. ஞானசேகரன், சாகித்திய அகடமி, ரவீந்திர பவன், 35, பெரோஸ்ஷா சாலை, புதுடில்லி 110001, பக். 192, விலை 110ரூ. பிள்ளைக்கவி முதல் பெருங்காப்பியம் ஈறாகக் கூறப்படும் 96 பிரபந்தங்களுள் ஒன்ற பள்ளு இலக்கியம். நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது எனும் அளவுக்கு, உழவர்களின் பாடல்கள் ஏராளமாக உள்ளன. இந்நூலில் கடவுள் வணக்கம் மூத்த பள்ளிவரல் இப்படியாக பள்ளிகளுள் ஒருவருக்கொருவர் ஏசல் என 48 உறுப்புகள் 14 வகைகளுக்குள் அமைக்கப்பட்டுள்ளது. 19 பள்ளு நூல்களில் இருந்து […]

Read more

புனித பூமியில் மனித தெய்வங்கள்

புனித பூமியில் மனித தெய்வங்கள், பதஞ்சலி, விடகன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, பக். 152, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-832-8.html நல்லது, கெட்டது எதுவென சரியாகத் தெரியாமல் தடுமாறி வாழும் மனிதகுலத்தார், நன்னெறியில் செல்ல, இறைவனே மனித வடிவில் தோன்றி, தான் வாழும் முறையாலும், உபதேசங்களாலும் நெறிப்படுத்தினான் என்று பெரியோர்கள் கூறுவர். இறை தத்துவத்தையும், ஆன்மிகத்தின் அவசியத்தையும், பக்தி இலக்கியங்கள் வாயிலாகவும், பாடல்கள் மூலமாகவும் பரப்பிய பல மகான்களின் வாழ்க்கையே நமக்கு சிறந்த வழிகாட்டியாகும். […]

Read more

மெழுகுவர்த்திகள்

மெழுகுவர்த்திகள், எ.எஸ்.யைர், பிரேமா பதிப்பகம், 58/1, ஆழ்வார்ப்பேட்டை தெரு, சென்னை 18, விலை 40ரூ. தன்னை அழித்துக்கொண்டு, தான் உருகி உலகத்திற்கு ஒளி வெள்ளத்தை தருவது மெழுகுவர்த்தி. அதன் தியாகத்திற்கு இணையாய் வாழ்ந்து, இந்த சமுதாயத்தின் மடமை இருளை விரட்ட தங்கள் தியாகச் செயல்களால் புது வெளிச்சம் பாய்ச்சியவர்கள் பற்றிய குறிப்புகளே மெழுகுவர்த்திகள் எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. சில தியாக மெழுகுவர்த்திகளான காந்தி, நேரு, காமராஜர், தெரசா, விவேகானந்தர், இந்திரா, ராஜிவ், ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வாழ்வியல் சம்பவங்கள் சுவாரஸ்யம் ததும்ப தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினமலர், […]

Read more
1 12 13 14 15