பிரிவை நேசித்தவன்

பிரிவை நேசித்தவன், அம்பி. ராஜேந்திரன், முல்லை பதிப்பகம், சென்னை, விலை 40ரூ. பாசத்தின் உணர்வுகளையும், தாய்மையின் உயர்வையும், உலக நடப்புகளையும் கவிதை வரிகளில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 22/4/2015.   —- நானொரு சிந்து, இசைப்பிரியன், இசை ஆலயம் மியூசிக் புக் பப்ளிகேஷன், சென்னை, விலை 70ரூ. நடப்பது நடக்கட்டும், எதைக்கொண்டு உட்பட பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட பல்வேறு கவிதை தொகுப்புகள் இடம் பெற்ற நூலாகும். நன்றி: தினத்தந்தி, 22/4/2015.   —- […]

Read more

தமிழர் இலக்கியமும் சமூக அரசியலும்

தமிழர் இலக்கியமும் சமூக அரசியலும், தமிழறிஞர் க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம் வெளியீடு, சென்னை, விலை 80ரூ. தமிழறிஞர் க.ப. அறவாணன், பல்வேறு காலக்கட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எனினும், எல்லாக் கட்டுரைகளிலும் அடிநாதமாக ஒலிப்பது தமிழ்ப்பற்றே. சிதம்பரம் கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் ‘ஆடல் வல்லான்’ என்று அப்பரின் தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பிற்காலத்தில் ‘நடராஜன்’ என்று மாற்றப்பட்டது. இதேபோல், தூய தமிழில் அழைக்கப்பட்ட பல ஊர்களின் பெயர்களும் மாறிவிட்டன. ஹோமரின் இலியட் என்ற நூலையும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தையும் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள கட்டுரையும் சிந்தனைக்கு […]

Read more

மனதிற்கு மருந்து ஆல்பா

மனதிற்கு மருந்து ஆல்பா, நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. மனம் சக்தி மிக்கது. அதை சரியான பாதையில் இயக்க நமக்குத் தெரிய வேண்டும். அதற்கு தியானப்பயிற்சி மிக முக்கியமாகிறது. இதன்மூலம் கிடைக்கும் மனவலிமையால் வாழ்க்கையில் ஏற்படும் தினசரி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இதனை மையமாக வைத்து டாக்டர் விஜயலட்சுமி பந்தையன் எழுதி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 16/4/2014.   —- மாசறு கற்பினாள் அகலிகை, முல்லை பி.எல். முத்தையா, முல்லை பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் வரும் கிளைக் […]

Read more

இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்

இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, படைப்பாளிகள் பதிப்பகம். பல நூற்றாண்டுகளாக கற்பதற்கு கடினமானதாக கருதப்பட்ட, இந்திய தத்துவ நூல்களை எளிமைப்படுத்தி, அவற்றைப் பற்றிய புரிதலை நமக்கு இந்நூல் ஏற்படுத்துகிறது. இந்த நூலிலுள்ள 28 தொடர் கட்டுரைகள், இந்திய மண்ணில் வேர்விட்டு வளர்ந்துள்ள தத்துவங்களின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், பண்டைய மத்திய கால இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலைகளோடு ஒப்பிட்டு, தத்துவங்களின் உண்மையான மதிப்பையும், தேவையையும் நமக்கு அறிமுகம் செய்கின்றன. இந்த நூல் சென்னை தரமணியில் செயல்படும் உலகத் […]

Read more

புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்

புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள், முல்லை மு. பழநியப்பன், முல்லை பதிப்பகம், பக். 128, விலை 50ரூ. புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருத்தாசலம், சிறுகதைகளில் பெரும் புரட்சியும், புதுமையும் செய்தவல் இவர். புதுமைப்பித்தனின் வாழ்க்கைக் குறிப்பும், புதுமைப்பித்தன் கூறிய சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும், புதுமைப் பித்தனைப் பற்றி அறிஞர்களின் கருத்துரைகளும், இவரது நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முத்தான கருத்துரைகளும், கடிதங்கள், மதிப்புரைகள் ஆகியனவும் அடங்கியது இந்நூல். சிறிய நூல் என்னும் புதுமைப்பித்தனைப் பற்றித் தெரியாதவர்கள், தெரிந்து அறிந்துகொள்ள, நிரம்பச் செய்திகள் இதில் உள்ளன. அளவில் சிறிதாக இருந்தால் […]

Read more

கிராமத்து ராட்டினம்

கிராமத்து ராட்டினம், ஜி. மீனாட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 118. சமகாலப் பிரச்சினைகளின் கலை வடிவம் To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-1.html சிறுகதைகள் அருகிவரும் சூழலில் ஜி. மீனாட்சி பெயரைப் புதிதாக அறிய நேர்த்து. நல்ல தமிழில் எழுதியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. கதைச் கருக்கள் எளிமையானவை. மிக நுட்பமான விஷயங்களைப் பேச அவ்வளவாக சிரமமற்ற சம்பவங்களை அவர் தேர்ந்திருப்பது ஆச்சரியம் தருகிறது. மாறியிருக்கிற […]

Read more

உட்கவர் மனம்

உட்கவர் மனம், மரியா மாண்டிசோரி, தமிழில்-சி.ந. வைத்தீஸ்வரன், முல்லை பதிப்பகம், சென்னை 40, பக். 446, விலை 250ரூ. மாண்டிசோரி கல்வி முறையை அறிமுகப்படுத்திய டாக்டர் மரியா மாண்டிசோரி, இந்தியா சுதந்திரம் அடைந்த சமயம், அகமதாபாத்தில் ஆற்றிய சொற்பொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு The Absorbment Mind என்னும் நூல் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு. அதன் தமிழாக்கமே இந்நூல். குழந்தையின் தனிப்பட்ட மன ஆற்றலை இந்நூல் நமக்கு உணர்த்துகிறது. ஆசிரியர் இல்லாமல், சாதாரணமாகக் கருதப்படும் எவ்விதக் கல்வித் துணைக் கருவிகளுமில்லாமல், பெரும்பாலும் கவனிப்பாரற்றும் தடை செய்யப்பட்டும் இருந்தாலும், […]

Read more

உட்கவர் மனம்

உட்கவர் மனம், மரியா மாண்டிசோரி, தமிழாக்கம்-சி.ந. வைத்தீஸ்வரன், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, பக். 446, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-180-4.html குழந்தை நம்மால் நிறைக்கப்பட வேண்டிய ஒரு காலிப் பாண்டம் அன்று. ஓர் அசைவற்ற பொருள் அன்று. அது எதையெதைச் செய்கிறதோ, அத்தனையும் நம்மாலே தான் என்றும் கருதக்கூடாது. மனிதனை ஆக்குவது குழந்தையே (பக். 29) குழந்தையின் உள்ளத்தில் ஒரு சக்தி குடி கொண்டிருக்கிறது. இந்தச் […]

Read more

இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம்

இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, பக். 532, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-188-8.html புலிகளை வேட்டையாடாமல், புள்ளிமான்களை வளர்ப்பதில் பயனில்லை எனும் கட்டுரையில் துவங்கி, சுத்த ரத்தம் உடையவன் சும்மா இருகக முடியுமா? என்பது முடிய 40 கட்டுரைகள் டாடா, பிர்லா, பஜாஜ், அம்பானி, மிட்டல், டால்மியா, விஜய மல்லையா என்று பெரு முதலாளிகளின் மறுபக்கத்தை, வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார் […]

Read more

புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்

புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை 40, விலை 50ரூ. புதுமைப்பித்தனுக்குப் பின்னர் சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் பலர் தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்திருக்கிறார்கள் என்றாலும், சிறுகதை மன்னன் என்ற அடைமொழி புதுமைப்பித்தன் ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது. உலகத்தரம் வாய்ந்த சிறந்த சிறுகதைகள் பலவற்றை அவர் எழுதியிருப்பதும், அவை காலத்தை வென்று இன்றும் வாழ்ந்து கொண்டு இருப்பதும் இதற்குக் காரணம். புதுமைப்பித்தன் வெளியிட்ட புரட்சிகரமான கருத்துக்கள், அவர் நூல்களில் மூழ்கி எடுத்த முத்துக்கள், அவருக்கு […]

Read more
1 4 5 6 7 8