அந்நிய நிலத்தின் பெண்

அந்நிய நிலத்தின் பெண், மனுஷ்யபுத்திரன், உயிர்மை பதிப்பகம், சென்னை. சர்ச்சையை ஏற்படுத்தும் அந்நிய நிலத்தின் பெண் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் எழுதி, உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள, அந்நிய நிலத்தின் பெண் என்ற கவிதை நூலைப் படித்தேன். இந்த நூல் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன். நம் சமூகத்தின் ஆண், பெண் விருப்பங்கள், அவர்களின் உறவுகள் குறித்து, இக்கவிதை நூல் விவரிக்கிறது. அன்றாட வாழ்வீல் நாம் பயன்படுத்திய பயன்படுத்தும் பல சொற்களை கவிதையில் பயன்படுத்தி உள்ளார் ஆசிரியர். இந்த சொற்களை பயன்படுத்தக்கூடாத கெட்ட சொற்கள் என, […]

Read more

நடன மங்கை

நடன மங்கை, சுரேஷ் குமார் இந்திரஜித், உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-279-3.html தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்களுள் ஒருவரான சுரேஷ்குமார் இந்திரஜித்தின் சமீபத்திய சிறு கதைத் தொகுப்பு நடன மங்கை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் சுரேஷ் சென்ற ஒரு வருடத்தில் எழுதிய கதைகளின் தொகுப்பே இந்நூல். தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான மௌனியை ஒத்த விவரிப்பு மொழியைக் கொண்டவை சுரேஷின் கதைகள். அதே சமயம் மௌனியின் உலகத்தையும் தாண்டி எழும் இவரது எழுத்துக்கள் […]

Read more

ராஜீவ் காந்தி சாலை

ராஜீவ் காந்தி சாலை, விநாயக முருகன், உயிர்மை பதிப்பகம், சென்னை, பக். 328, விலை 240ரூ. சென்னை மாநகர வெளியில் ராஜீவ் காந்தி சாலை சென்னை நகரைச் சுற்றிலும் இயற்கை எழிலுடமன் விளங்கிய கிராமங்கள் நகரமயமாதலின் காரணமாக இன்று சிதிலமாகிகொண்டிருக்கின்றன இயற்கை வளமான பிரதேசத்தின் ஊடே மாமல்லபுரத்தினை நோக்கிச் செல்லும் ராஜீவ் காந்தி சாலை வெறுமனே போக்குவரத்திற்கானது மட்டுமல்ல. பாரம்பரியமான கிராமங்கள், ஐ.டி. கம்பெனிகள் என இரு வேறு உலகங்களைப் பிரிக்கும் எல்லையாக ராஜீவ் காந்தி சாலை விளங்குகிறது. பன்னாட்டுத் தகவல்தொடர்புக் கம்பெனிகளின் வருகையினால் […]

Read more

திரை இசை வாழ்க்கை

திரை இசை வாழ்க்கை, ஷாஜி, உயிர்மை பதிப்பகம், சென்னை. வாழ்வின் குறிப்புகள் தமிழில் வெகுமக்கள் இசைமீதான விமர்சனத்தை மிகச் சிறப்பாக எழுதக்கூடியவரான ஷாஜியின் புதிய கட்டுரைத் தொகுப்பு நூல் இசை திரை வாழ்க்கை. இதில் இசை மட்டுமல்ல. அற்புதமான பல ஆளுமைகளின் வாழ்வையும் தன் தேர்ந்த கவித்துவமிக்க உரைநடை மூலம் பதிவு செய்திருக்கிறார். முதல் கட்டுரையான மைக்கேல் ஜாக்சனை எடுத்துக்கொள்ளுங்கள். அக்கட்டுரை மேற்கத்திய இசை தெரியாத ஒரு சாமானியனுக்கும் ஜாக்சனின் மேதைமையை அறிமுகப்படுத்தி அவருடன் நெருக்கமாக்குகிறது. ராஜேஷ் கன்னா, ஸ்டீவ் ஜாப்ஸ், டாக்டர் தம்பையா, […]

Read more

தங்கர் பச்சான் கதைகள்

தங்கர் பச்சான் கதைகள், உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 210ரூ. இருக்கிற கடவுள்களும், இனி வரப்போகும் கடவுள்களும் கைவிட்ட தங்கர்பச்சானின் மனிதர்கள். தங்கர்பச்சானின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெள்ளை மாடு வெளிவந்த போது முந்திரித் தோட்டத்து மனிதர்களின் வாழ்வியலை அவ்வளவு நகாசுத்தன்மையுள்ளதாக இல்லாமல் வெளிப்பட்டிருப்பதாக ஒரு விமர்சனம் வந்தது. பின் நவீனத்துவ எழுத்து தீவிரமாக இருந்த காலகட்டம் அது. பின் நவீனத்துவக் காலகட்டத்தில் கலை அம்சங்களும் நாகாசுத்தன்மையும் கூட அவலட்சணமே. காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் விவரிப்பில் இலக்கண நேர்த்தியோ நகாசோ எதிர்பார்ப்பது ஒரு […]

Read more

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக, சு. தியடோர் பாஸ்கரன், உயிர்மை பதிப்பகம். சூழலியல் எழுத்தாளர்கள் சு. தியடோர் பாஸ்கரன், புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகு தமிழில் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்தார். அவருடைய சூழலியல் கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது.  தமிழகத்தில் சுற்றுச்சூழலில் மீதான ஆர்வம் பரவலாக, இந்தக் கட்டுரைகளும் ஒரு காரணம். நன்றி: தி இந்து, 22/4/2014.   —-   அணுகுண்டும் அவரை விதைகளும், பாமயன், தமிழினி. மூன்றாம் உலக நாடுகளை மிரட்ட வல்லரசு நாடுகள் எடுத்துள்ள புதிய ஆயுதம் விதைகள் என்பது போன்ற அதிர்ச்சியளிக்கும் […]

Read more

ஒரு சாமானியனின் நினைவுகள்

ஒரு சாமானியனின் நினைவுகள், க. இராசாராம், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 250ரூ. தமிழ்நாட்டின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் க. இராசாராம். சட்டசபை சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்தவர். தி.மு.க.வில் இருந்தாலும், அ.தி.மு.க.வில் இருந்தாலும் காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு. தமது அனுபவங்கள் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள், ஒரு சாமானியனின் நினைவுகள் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது இதில், பல முக்கியமான அரசியல் நிகழ்ச்சிகள் மூடி மறைக்கப்படாமல் பதிவு […]

Read more

வனசாட்சி

வனசாட்சி, தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-7.html கண்ணீர்த்தோட்டம் வறுமையில் இருந்த மக்களை வளமான வாழ்வு என்று ஏமாற்றி தேயிலைத் தோட்டங்களில் சிதைத்ததை விளக்கிய டேனியலின் எரியும் பனிக்காடு நாவலைப் போன்று தமிழகத்திலிருந்து கடல்வழியாக இலங்கைக்குச் சென்று உழன்ற மக்களின் சுமார் 200 ஆண்டு கதையைச் சொல்கிறது எழுத்தாளர் தமிழ்மகனின் வனசாட்சி. வடஇலங்கையில் கரையிறங்கி வழியெங்கும் அவஸ்தைகளை அனுபவித்து, குற்றுயிராக முன்பின் அறிமுகமே இல்லாத ஹட்டன் […]

Read more

காலமறிந்து கூவிய சேவல்

காலமறிந்து கூவிய சேவல், கே. ஜீவபாரதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ஏ1பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 95ரூ. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் கவிதைகளை அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட நூல். அவரைப்பற்றி வெளிவராத தகவல்களும் இதில் உள்ளன. நன்றி: தினத்தந்தி 8/5/2013.   —-   மைனஸ் ஒன், நந்தாகுமாரன், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, பக். 112, விலை 90ரூ. நவீன உலகின் மனித செயற்பாடுகள் அவனது பேச்சில் மொழியில் நடையில் […]

Read more

குருதியில் நனையும் காலம்

குருதியில் நனையும் காலம், ஆளுரு ஷாநவாஸ், உயிர்மை பதிப்பகம்,a 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18. விலை 100ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0000-202-1.html இஸ்லாமிய அரசியல் எழுச்சி மற்றும் சிந்தனைகளை, பாபர் மசூதி இடிப்புக்கு முன், பின் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில் சலுகைகளைப் பெறுவதாக, அதற்குப் போராடுவதாக முன்பு இருந்தது. ஆனால் பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு தங்கள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்வதற்கே பெரும்பாலான நேரத்தைச் செலவு செய்ய […]

Read more
1 2 3 4 5