என்னுயிர் இந்திய இராணுவத்திற்கே

என்னுயிர் இந்திய இராணுவத்திற்கே, எஸ்.சக்தி கதிரேசன், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 55ரூ. படித்து பட்டம் பெற்று அரசு சார்ந்த உயர் பணியில் சேராமல் நாட்டைக் காக்கும் எல்லைப் பாதுகாப்புப்படையில் சேர்ந்த தியாக உணர்வை வெளிப்படுத்தும் சிறு நாவல்.   —-   கர்நாடக ருசி, வெ. நீலகண்டன், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் லிமிடெட், 7/1, மூன்றாவது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, விலை 75ரூ. 29 கர்நாடக மாநில வட்டார உணவு வகைகள் […]

Read more

அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முக்கியக் குறிப்புகள்

அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முக்கியக் குறிப்புகள், சசிமதன், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-141-8.html உண்பது, உறங்குவது, இனப்பெருக்கம் செய்வது என்பது மற்ற உயிரினங்களுக்கான வாழ்க்கை நியதி. ஆனால் மனித வாழ்க்கை அவற்றையும் கடந்து, அறிவார்ந்த நிலையில் சிந்தித்து, திட்டமிட்டு வாழ்வதாகும். அதற்கு நிறைய கஷ்டங்களையும், பிரச்னைகளையும் மனிதன், தன் வாழ்நாளில் சந்திக்க வேண்டியுள்ளது. அதில் வெற்றி பெற்றவனே சிறந்த வாழ்க்கையை அடைந்தவனாவான். அதற்கு […]

Read more

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (மூன்று பாகங்கள்)

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (மூன்று பாகங்கள்), பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், வசந்தா பிரசுரம், சென்னை 33,  முதல்பாகம் (பக்கம்-256, விலை-140ரூ), இரண்டாம் பாகம் (பக். 224, விலை 125ரூ), மூன்றாம் பாகம் (பக். 272, விலை 160ரூ). தினமணி கதிரில் வெளிவந்த ஆயுர்வேதம் தொடர்பான வாசகர்களின் கேள்வி பதில்கள் மூன்று பாகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தினமணி கதிரில் வெளியானபோது அதைப் படிக்கத் தவறியவர்கள், படித்தும் பாதுகாக்க முடியாதவர்கள் போன்றவர்களுக்காக அனைத்து கேள்வி பதில்களும் முழுமையாக இம்மூன்று பாகங்களில் இடம்பெற்றுள்ளன. திக்குவாய், அலர்ஜி, மாதவிடாய், ஒற்றைத் தலைவலி, […]

Read more

பாரதத்தின் பேரரசி

பாரதத்தின் பேரரசி (சாதனை வரலாறு), அழகிய பாண்டியன், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி. நகர், சென்னை 17, பக். 504, விலை 360ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-015-4.html முதல்வர் அம்மாவின் வாழ்க்கை சரிதத்தை புதுக்கவிதை நடையில் தந்துள்ளார் கவிஞர் அழகிய பாண்டியன். அம்மாவின் வாழ்வில் அவர் சந்தித்த தடைகள், இடையூறுகள், சூழ்ச்சிகள், சோதனைகள் என்று ஒன்றுவிடாமல் அலசி, அத்தனை சோதனைகளையும் சாதனைகளாக மாற்றிக் காட்டிய அவரது வீரத்தையும் காட்டி, அவரை பாரதத்தின் பேரரசியாக நம்முன் […]

Read more

இதயம் திருந்த இனிய மருந்து

இதயம் திருந்த இனிய மருந்து, சிராஜுல் ஹஸன், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை12, பக். 63, விலை 30ரூ. முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி முஸ்லிமல்லாத மக்களுக்கும் இஸ்லாத்தின் சில அடிப்படைச் செய்திகளை, இறை மார்க்கத்தின் சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துரைக்கும் நோக்கில் மிகமிக எளிமையாக ஆக்கப்பட்டிருக்கும் நூல் இது. இஸ்லாம் வலியுறுத்தும் இறைக்கொள்கை, ரமலான் மாதத்தின் சிறப்பு நோன்பு. மறுமை போன்றவற்றுடன் பெற்றோரை மதித்தல், நட்புக் கொள்ளுதல், கலந்தாலோசித்தல் முதலிய வாழ்வியல் நடைமுறைகளையும் மனதில் பதியும்படி விளக்கப்பட்டுள்ளது சிறப்பு. மனிதர்களின் இதயங்களில் படிந்துள்ள […]

Read more

பாரதத்தின் பேரரசி சாதனை வரலாறு

பாரதத்தின் பேரரசி சாதனை வரலாறு, அழகிய பாண்டியன், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 360ரூ. முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இளமை வாழ்க்கை, திரைத்துறை வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை ஆகிய 3 பிரிவுகளாக பிரித்து 119 தலைப்புகளில் ஆழ்ந்த சிந்தனைகள் அடங்கிய கவிதை தொகுப்பாக நூலாசிரியர் அழகிய பாண்டியன் தந்துள்ளார். அரிய புகைப்படங்ளையும் இடையிடையே சேர்த்திருப்பது புத்தகத்தின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது. அண்ணல் பிறந்தார் அஹிம்சை பிறந்தது, புத்தர் பிறந்தார் அன்பு பிறந்தது, அன்னை தெரசா பிறந்தார் […]

Read more

வைரமுத்து கவிதைகளில் கருவும் உருவும்

வைரமுத்து கவிதைகளில் கருவும் உருவும், முனைவர் ம.இசக்கியப்பன், திருக்குறள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர் நகர், சென்னை 78, விலை 105ரூ. கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நூலை முனைவர் ம.இசக்கியப்பன் எழுதியுள்ளார். கவிஞர் ஒரு அறிமுகம், உருவகக் கொள்கை, கரு ஒரு பகுப்பு, மொழிப் பயன்பாடு ஆகிய தலைப்புகளில் கவிஞரின் கவிதையாற்றலையும், மொழி ஆளுமையையும் அருமையான வகையில் புலப்படுத்தியுள்ளார். கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளில் கற்பனை, சொல்லாட்சி, அணிநயம், பழமொழியை ஆளும் திறன், ஓசை நயம் போன்றவை பரவிக் […]

Read more

கனவு மெய்ப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும், தமிழருவி மணியன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 600002, பக்கங்கள் 192, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-834-1.html தேசிய, இலக்கிய படைப்பாளி தமிழருவி மணியன். எழுத்திலும், பேச்சிலும் வெற்றிக் கொடி நாட்டிய இவர் மகாகவி பாரதியாரின் கவிதைகளிலும், கட்டுரைகளிலும், வாழ்விலும் புதைந்து கிடக்கும் புதுமைகளை, இந்த நூலில் வெளிப்படுத்துகிறார். தன்னைப் பற்றியே நினைத்து வாழ்ந்த சராசரி மனிதர்களுக்கு நடுவே மண்ணைப் பற்றியே சிந்தித்து செயற்பட்ட மகாகவியைக் காட்டுகிறார் மணியன். பாரதியைப் புதிய […]

Read more

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (நான்கு தொகுதிகள்)

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (நான்கு தொகுதிகள்), பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை 108, முதல் தொகுதி 240ரூ, இரண்டாம் தொகுதி 280ரூ, மூன்றாம் தொகுதி 290ரூ, நான்காம் தொகுதி 260ரூ. தமிழர்களின் உள்ளத்தில் மொழியுணர்வு என்ற விழிப்புணர்வுக்கு வித்திட்டவர் பாவேந்தர் பாரதிதாசன், காலத்தால் அழிக்க முடியாத அவரது கவிதைகளை, இளம் தலைமுறையினருக்கு அவர் விட்டுச் சென்ற சொத்தாகவே கருதலாம். தமிழ் அழியுமானால் தமிழர் அழிவர் என வீராவேசமாக அவர் முழங்கிய பாக்கள், படித்தவர்களின் மனதில் உணர்ச்சிகளை தூண்டின. இந்த புரட்சி […]

Read more

மருத்துவக் கையேடு

மருத்துவக் கையேடு, மணிமேகலை பிரசுரம், 7 தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17. விலை 100ரூ. சர்க்கரை நோய், காசநோய், பெண்களின் கர்ப்பகாலம், ஜீரணகோளாறுகள், நரம்புக்கோளாறு, இப்படி பலதரப்பட்ட நோய்கள் பற்றியும், சிகிச்சை முறைகள் பற்றியும் கேள்வி பதில் வடிவத்தில் எழுதியுள்ளார் டாக்டர் எஸ். ஜீவராஜன். மொத்தம் 503 கேள்வி பதில்கள். அனைவருக்கும் பயன்தரக்கூடிய மருத்துவ நூல் விலை 100ரூ. இதே நூலாசிரியர் எய்ட்ஸ் இல்லா இனிமையான உலகம் என்ற நூலையும் எழுதியுள்ளார். விலை 75ரூ. —-   வின்ஸ்டன் சர்ச்சில் 100, ராம்பிரசாந்த், […]

Read more
1 6 7 8 9