பொக்கிஷம்

பொக்கிஷம், ப்ரியா கல்யாணராமன், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 96, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-292-1.html ஐம்பெரும் காப்பியங்களில் வளையாபதி, குண்டலகேசி நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை. பெயரளவில்தான் அதை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு சொல்லிவைக்கிறார்கள். அதேபோன்று அரிசந்திர புராணம், நளவெண்பா, குசேலோபாக்கியானம், மணிமேகலை, சிவபுராணம், திருவாசகம் போன்ற பழந்தமிழ் புராணக் காப்பியங்களை எடுத்துப்படிக்க யாவரும் முன்வருவதில்லை. காரணம் நேரமின்மையும் அதன் கடுமையான நடையுமே. அத்தகைய இலக்கியங்களை அதன் சாரம் மாறாமல், எளிமையாக சுருக்கிச் சொல்லி விளங்க வைக்கும் முயற்சிதான் […]

Read more

தீராநதி நேர்காணல்கள்

தீராநதி நேர்காணல்கள், குமுதம் புதுத்தகம், சென்னை, பக். 200, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-260-1.html நேர்காணலை எந்த ஒரு இலக்கிய வகையுடனும் அவ்வளவு எளிதாக சேர்த்துவிட முடியாது. அது ஒரு புதுவகை இலக்கியமுமல்ல, எனென்றால் நேர்காணல் என்பது ஒரு வரையறைக்கு உட்பட்டதோ, உட்படாததோ அன்று. அது ஒரு கட்டற்ற வடிவத்தின் தன்னிச்சையான ஆளுமை வெளிப்பாடு. குமுதம் தீராநதியுல் வெளிவந்த நேர்காணல்களின் தொகுப்பு என்றாலும் இன்றைக்கும் அதன் வீச்சும் அவை பேசும் விஷயமும் பொருத்தமாக இருப்பதை உணரமுடிகிறது. இலக்கியவாதிகளுடனான […]

Read more

தொல்காப்பியத்தில் வீரநிலைக்கால எச்சங்கள்

தொல்காப்பியத்தில் வீரநிலைக்கால எச்சங்கள், முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன், தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர். எம்.பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், பக். 112, விலை 70ரூ. இசைக்குழுக்களாக வாழ்ந்த பழந்தமிழர்கள் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு சண்டை போட்டதை போர் என்று சொல்லக்கூடாது. அது தமிழர்களுக்குள் எழுந்த பூசல்களே என்பதை தொல்காப்பிய வழி சொல்வது ஆய்வுக்குரியது, மாமன்னர்கள் நடத்திய கடுமையான போர்களால் மக்கள் பட்ட சொல்லொண்ணாத் துயரங்களை புலவர்கள் எடுத்துச்சொல்லி, மன்னர்களை உணரச் செய்தது போன்ற வரலாற்றுக் காலச் செய்திகளை விளக்கும் இடங்கள் அதிகம். திணைதோறும் போர், நடுகல் வழிபாடு உள்ளிட்ட செய்திகள் […]

Read more

இளையராஜாவைக் கேளுங்கள்

இளையராஜாவைக் கேளுங்கள், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 184, விலை 120ரூ. இசைஞானி இளையராஜாவை தரிசிக்க ரசிகர்களுக்கும் வாசகர்களுக்கும் மிகப் பெரும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது குமுதம். வாசகர்கள் கேள்விக்கு இசைஞானி அளித்த பதில்களின் மூலம் அந்த தரிசனம் சாத்தியமானது. ஆனால் அவை வெறும் பதில்கள் மட்டுமல்ல. இசைஞானியின் வாழ்க்கையை அவரது அனுபவரீதியில், அவரே சொல்லக்கேட்ட மிகப் பெரிய பேறு அது. இசை, ஆன்மீகம், குடும்பம், நட்பு, சினிமா என்று எந்த ஒன்றைப் பற்றி பேசினாலும் அதில் தன் புகழை நாட்டாமல், உண்மைகளை வெளிப்படையாகப் […]

Read more

குமுதம் ஒரு பக்கக் கதைகள் 1999

குமுதம் ஒரு பக்கக் கதைகள் 1999, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 112, விலை 80ரூ. பரபரப்பான இந்த உலகில் ஒரே மூச்சில் படித்து விட வேண்டும். அதே சமயம் ஒரு சிறுகதையைப் படித்த திருப்தி கிட்ட வேண்டும் என்ற வாசகர்களின் எண்ணத்தை குமுதம் ஒரு பக்கக் கதைகள்தான் தீர்த்து வைத்தன. கதை எழுத ஆர்வம் உள்ள அனைவரையும் குறிப்பாக வாசகர்களையும் எழுதவைத்தது இந்தக் கதைகள்தான். அன்றாட வாழ்வில் நடக்கும் எந்த ஒன்றையும் இந்தக் கதைகள் விட்டு வைத்ததேர இல்லை. கொலை மனசு, நூலைப்போல, […]

Read more

பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்

பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள், இசைஞானி இளையராஜா, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 96, விலை 100ரூ. இசையே சிவன், சிவனே இசை என்ற சுந்தரர் வாக்குப்படி இசைஞானி சிவஞானி ஆகியிருக்கிறார். பாவை பாடிய வாயால் கோவை பாடுக என மாணிக்கவாசருக்கு சிவன் ஆணையிட்டதுபோல், பாவைப் பாடல்கள் பாடிய வாயால் திருப்பள்ளி எழுச்சியையும் பாடவைத்திருக்கிறார். பாவைப் பாடல்கள் 20, திருப்பள்ளி எழுச்சி 10 என்று இசைஞானி அருளியதை குமுதம் பு(து)த்தகம் நூலாக வெளியிட்டிருப்பது பெருமை. பாவைப் பாடல்களில் பெண்களைத் துயில் எழுப்பி இறைவன் புகழ்பாடி அருள்பெற […]

Read more

சார்வாகன் கதைகள்

சார்வாகன் கதைகள், சார்வாகன், நற்றிணை பதிப்பகம், சென்னை, பக். 544, விலை 400ரூ. சார்வாகனின் 41 சிறுகதைகளும், 3 குறுநாவல்களும் கொண்ட தொகுப்பு. சார்வாகன் எழுத்தாளர் மட்டுமல்ல. தொழுநோயாளிகளின் உடல் ஊனங்களைச் சீராக்கும் அறுவைச்சிகிச்சைத் துறையில் உலகப் புகழ்பெற்ற மருத்துவரும் ஆவார். இந்த சேவைக்காக பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். இவரின் எழுத்து வன்மை தொடர்பாக அசோகமித்திரன், மருத்துவர்கள் மகத்தான எழுத்தாளர்களாக விளங்குவதற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. ஆண்டன் செகாவ், ஏ.ஜே.கிரானின், சாமர் செட் மாம் எனத் தொடங்கி சார்வாகன் வரை கூறலாம் என்று கூறியுள்ளார். […]

Read more

அகிலம் வென்ற அட்டிலா

அகிலம் வென்ற அட்டிலா, ம.லெனின், சிக்ஸ்த் சென்ஸ், சென்னை, பக். 144, விலை 90ரூ. உலகை ஆட்டிப் படைத்த மாவீரர்களின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் அட்டிலா. கி.பி. 395இல் பிறந்த அட்டிலா உலடிகன் சகல வல்லமை பொருந்தியதாகக் கருதப்பட்ட ரோமானியப் பேரரசை தனது படை வல்லமையால் வென்றவன். சமகாலத்தில் உலகம் உணர்ந்த மேலாண்மைக் கொள்கைகளையும், ஆளுமை யுக்திகளையும் அந்தக் காலத்திலேயே தனது உள்ளங்கையில் வைத்திருந்தவன் அட்டிலா. நாடோடியாகத் திரிந்து கொண்டிருந்த தனது ஹுணர் இன மக்களை ஒன்று திரட்டி அவர்களுக்குள் இருந்த […]

Read more

பொன்மொழிகளும் புண் மொழிகளும்

பொன்மொழிகளும் புண் மொழிகளும், வெண்ணிற ஆடை மூர்த்தி, குமுதம் புதுத்தகம், சென்னை, பக். 88, விலை 75ரூ. வெண்ணிற ஆடை மூர்த்தி, தான் பார்த்த, படித்த, கேட்ட தகவல்களை தொகுத்து, குமுதம் புதுத்தகம் வாயிலாக நூலாக உருவாக்கியிருக்கிறார். இந்தியா, அமெரிக்கா, டச், ஸ்விஸ், இங்கிலாந்து உள்ளிட்ட சுமார் 48 உலக நாடுகளின் பொன்மொழிகள் இதில் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு புதுசெய்தியை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. பழமரத்தை நட்டவன், அநேகமாக அதன் பழங்களை நசுக்க வாய்ப்பு இருக்காது. இது டச் பொன்மொழி. இதுபோன்ற பயனுள்ள பொன்மொழிகள் […]

Read more

மண் மொழி மக்கள்

மண் மொழி மக்கள், கவிஞர் வாலி, குமுதம் பு(து)த்தகம், சென்னை 10, விலை 75ரூ. கவிஞர் வாலி குமுதம் இதழில் கடைசியாக எழுதி வெளிவந்த மண் மொழி மக்கள் தொடர் முற்றுப்பெறாமல் முடிந்த நிலையில் 10 வாரங்கள் மட்டும் வெளியான தொடர் புத்தகமாக வெளிவந்துள்ளது. ஒரு நாட்டில் வளமான மண்ணும், வளமான மொழியும் இருந்தால்தான் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பதை நூலாசிரியர் ஆணித்தரமாக கூறி உள்ளார். வழக்கமான வாலியின் வார்த்தை ஜாலங்களும், பலரது வாழ்க்கை ஜாலங்களும் விரவிக் கிடப்பதுடன், அபூர்வ புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. […]

Read more
1 2 3 4 5 7