கண்ணதாசன் பயணங்கள்

கண்ணதாசன் பயணங்கள், கவிஞர் கண்தாசன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 144, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-174-4.html கவிஞர் கண்ணதாசன் இலங்கை, ரஷ்யா, மலேசியா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கச் சென்று வந்த அனுபவங்களை பல்வேறு இதழ்களில் தொடர் கட்டுரைகளாக எழுதினார். அவற்றின் தொகுப்பே இந்நூல். வெளிநாட்டுக்கு வரவேண்டு என்று அவருக்கு அழைப்பு வந்ததிலிருந்து தொடங்கி, உடன் யாரை அழைத்துச் செல்வது என்று முடிவெடுத்தது, விசாவுக்காக அலைந்து, விமானப் பயண அனுபவங்கள் எல்லாவற்றையும் எழுதியிருந்தாலும், […]

Read more

தொல்காப்பியக் கவிதையியலும் தமிழிலக்கியமும்

தொல்காப்பியக் கவிதையியலும் தமிழிலக்கியமும், இரா. சம்பத், முரண்களரி பதிப்பகம், 34/25, வேதாச்சலம் தெரு, காந்தி நகர், சின்னசேக்காடு, மணலி, சென்னை 68, பக். 184, விலை 120ரூ. தமிழ்க் கவிதை என்பது மிக நீண்டதொரு வரலாற்றுப் பழமையினைக் கொண்டது. புதுக்கவிதையின் வகைமை, மரபுக்கவிதையில் கோட்பாடு, இலக்கிய மரபு, கவிதை மரபு, இலக்கியவியல் நோக்கு, யாப்பியல் நோக்கு எனப் பன்முகப் பார்வையில், தொல்காப்பியம், பதினெண்கீழ்க்கணக்கு, பாரதியார், தமிழ்நாடன், வானம்பாடிக் கவிஞர்கள் போன்றோரின் கவிதை மரபுகள் முதலியவை திறனாய்வு செய்யப்பட்டுள்ளன. இலக்கியவியல், யாப்பியல், மொழியியல் நோக்கில் எழுத்து […]

Read more

தடங்கலுக்கு மகிழ்கிறோம்

தடங்கலுக்கு மகிழ்கிறோம், தினகரன், வைகறை பதிப்பகம், 6, மெயின்ரோடு, திண்டுக்கல், பக். 128, விலை 60ரூ. வானத்தின் அழுக்கைக்குப் பின் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. ஒவ்வொரு துளியும் ஒரு உயிரின் பிறப்புக்காக. அதுபோல் வாழ்வு என்பது பிறருக்குப் பயன்பட வேண்டும். பிறருக்குப் பயன்படாத எதுவும் வாழ்வல்ல. இப்படி கட்டுரை முழுதும் இன்றைய இளைஞர்களுக்கான கருத்தாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர். எதிர்காலம் பற்றிய சிந்தனையை இதயத்தில் வளர்த்தவர்களே சாதனையாளர்களாக மிளிர்ந்திருக்கிறார்கள் என்று அறிவுறுத்துகிறார். அறநெறிக் கருத்துக்கள். ஆன்மீக நாட்டம். அறிவிருக்கு விருந்து. படிப்போருக்கு புதிய பாதை.   […]

Read more

எலிக்குஞ்சுகளும் படி நெல்லும்

எலிக்குஞ்சுகளும் படி நெல்லும், ஸ்ரீரங்கராஜபுரம் துளசி, அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி, பக். 64, விலை 30ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-178-7.html சுதந்திரம் வெட்டப்படுகிறது பூங்காச்செடிகள் எரிகிறது சூளை மண் மரணம். இம்மண்ணின் நாடித்துடிப்பை அரிய இந்தக் கவிதைகளே போதும். வார்த்தைகளை ஜாலமாக்கி ரசனைக்காக சில சொற்களைக் கோர்த்து கவிதையாக்கும் இந்த காலத்தில் மண்ணின் மணத்தை நுகரவைத்து, மக்களின் மனதை அறியச் செய்யும் ஹைக்கூக்களை, வாசிப்பு மனங்களில் ஆணியடித்து தொங்கவிட்டுப் போகிறார் துளசி. […]

Read more

இரோம் சர்மிளா

இரோம் சர்மிளா, பி. சிறீராஜ், மு.ந. புகழேந்தி, எதிர், 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 2, பக். 176, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-450-4.html உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் பாதி செயலிழந்து, வெளுத்துப்போய், மாதவிடாய் நின்று 10 ஆண்டுகளுக்கு மேல் இன்னும் பிடிவாதமாக உண்ணாவிரதம் இருக்கும் இந்தியாவின் இரும்புப் பெண்மணி. மணிப்பூரைச் சேர்ந்த இரோம் சர்மிளாவின் வாழ்க்கைக் கதையே இந்த நூல். மலையாளத்தில் பி. சிறீராஜ் எழுதிய நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் மு.ந. புகழேந்தி. […]

Read more

ஓமந்தூரார்-முதல்வர்களின் முதல்வர்

ஓமந்தூரார்-முதல்வர்களின் முதல்வர், எஸ். ராஜகுமாரன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-4.html காந்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் ஒருமுறை சொன்னார், ரத்தமும் சதையுமாக இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை எதிர்காலச் சமுதாயம் நம்ப மறுக்கும் என்று. அப்படி ஒரு மனிதர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியிலும் உட்கார்ந்து இருந்தார். அவர்தான் ஓமந்தூர் ராமசாமி செட்டியார். இந்தியா சுதந்திரம் அடையும்போது, அன்றைய சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்தவர். அன்று, பிரதமர் என்றுதான் […]

Read more

கடவுளைக் காட்டிய கவிகள்

கடவுளைக் காட்டிய கவிகள், மு. ஸ்ரீநிவாஸன், திருக்குறள் பதிப்பகம், சென்னை 78, பக். 240, விலை 150ரூ. கேரளத்தின் எழுத்தச்சன், ஸ்ரீநாராயண குரு, கர்நாடகத்தின் சர்வக்ஞர், கனகதாசர், புரந்தரதாசர், மகாராஷ்டிராவின் பக்த ஜனாபால், பஞ்சாபின் அர்ஜுன்தேவ், தமிழகத்தின் ஆளவந்தார் உள்பட 32 பக்திக் கவிஞர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கவிஞர்களின் முக்கியத்துவம், தனித்தன்மை, பக்தியினூடாக அவர்கள் பரப்பிய சமுதாயச் சிந்தனைகள் போன்ற அனைத்தையும் பற்றிய அற்புதமான செய்திகளைப் பரிமாறும் நூல். பல்வேறு மொழிக் கவிஞர்களின் குறிப்பிடத்தக்க கவிதைகளை மேற்கோளாக இனிய தமிழில் தந்திருக்கிறார் […]

Read more

வட்டி ஓர் உயிர்க்கொல்லி

வட்டி ஓர் உயிர்க்கொல்லி, நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 40ரூ. வட்டியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த உண்மை சம்பவங்களை எடுத்துக் கூறும் புத்தகம் இது. தொடக்கத்தில் வணிகர்களை மட்டுமே வட்டமிட்டுக் கொண்டிருந்த வட்டி தற்போது ஏழை மக்களை உயிர் கொல்லி நோய்போல் தொற்றிக் கொண்டுவிட்டது. வட்டிக்கான வாசல்களை அடையாளங்காட்டும் இஸ்லாம் மானுடவர்க்கத்தை வாழ்வாங்கு வாழ பல அறவுரைகளை கூறியுள்ளது. இதை பின்பற்றி ஆசிரியர் தாழை மதியவன் வட்டியால் ஏற்படும் தீங்கு குறித்து விளக்கி கூறி இருப்பது […]

Read more

திரைப்படத் தகவல்களின் வினாடி-வினா விடை

திரைப்படத் தகவல்களின் வினாடி-வினா விடை, டி.என். இமாஜான், சங்கர் பதிப்பகம், சென்னை 49, பக். 160, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-577-5.html வினாடி வினா வடிவத்தில் திரைப்படத்துறை சார்ந்த தகவல்களைச் சொல்லும் புத்தகம். இந்தப் புத்தகத்தில் உலக சினிமாவில் இருந்து உள்ளூர் சினிமா வரை அனைத்து முக்கியமான திரைப்படங்களைப் பற்றிய தகவல்கள் திறம்படத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் நடிக்க வந்த வருடம், அவர்கள் பெற்ற விருதுகள், மிக முக்கியமான படங்கள், அதனை இயக்கிய இயக்குநர்கள், உலக அளவில் […]

Read more

வெள்ளை மொழி

வெள்ளை மொழி, அரவாணியின் தன் வரலாறு, ரேவதி, அடையாளம், புத்தாநத்தம் 621310, பக். 271, விலை 200ரூ. நாமக்கல்லில் துரை சாமியாகப் பிறந்தவர், ரேவதி என்னும் திருநங்கையாக தன்னை மாற்றிக் கொண்டதற்கு முன்பும் பின்பும் அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், தன் வரலாறாகச் சொல்லிச் செல்லும் நூல். பெண் உணர்வோடு ஆணாக வளைய வரும் ஒருவருக்கு, ஆதரவாக இருக்க வேண்டிய குடும்பத்தினர், அவரை வெறுப்பதாலேயே அவர், தன்னுடைய சுயத்தை மீட்டெடுக்க குடும்பத்தை விட்டு வெளியேறி, சமூகத்தின் பொதுவெளியில் பல துயரங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை […]

Read more
1 2 3 11