நான், ஜிபு மற்றும் புற்றுநோய்

நான், ஜிபு மற்றும் புற்றுநோய், ம.அஹமது நவ்ரோஸ் பேகம், என்.ஜே.பதிப்பகம், பக். 96, விலை 30ரூ. சென்னை புரசைவாக்கம் ஜே.எம்.பள்ளியின் முதல்வர் அஹமது நவ்ரோஸ் பேகம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் மகன் ஜிபு என்ற ஜிப்ரீல் பட்ட அவஸ்தைகளையும், எடுத்துக்கொண்ட சிகிச்சைகளையும் கண்ணீருடன் பதிவு செய்திருக்கும் நூல் இது. ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கே உரிய திறமையுடன் மிக நேர்த்தியாக இந்த நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். மகனுக்கு உடல்நலம் குன்றிய முதல் நாளில் தொடங்கி, அவனை மருத்தவரிடம் காட்டியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, மகனுக்கு செய்யப்பட்ட இரத்தப் […]

Read more

இயக்குநர் சிகரம் கே.பி.

இயக்குநர் சிகரம் கே.பி., சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. திரை உலகில் வரலாறு படைத்த கே.பாலசந்தரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் புத்தகம். பாலசந்தர் வாழ்க்கையுடன், அவர் இயக்கிய படங்களின் கதையையும், சிறப்பையும் சுவைபட விவரிக்கிறார் எழுத்தாளர் டி.வி. ராதாகிருஷ்ணன். நிறைய படங்கள் இடம் பெற்றிருப்பது, புத்தகத்துக்கு எழிலூட்டுகிறது. பாலசந்தர் பற்றிஅறிய சிறந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 29/7/2015.   —- முல்லை மண் மக்கள் இலக்கியம், முனைவர் வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. சங்க இலக்கியங்களில் மக்கள் […]

Read more

கம்பரின் நூலகம் ஆழ்வார்கள்

கம்பரின் நூலகம் ஆழ்வார்கள், நயவுரைநம்பி டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, விலை 200ரூ. வால்மீகி எழுதிய ராமாயணத்தில், ராமனை ஒரு மாவீரனாகத்தான் சித்தரிக்கிறார். திருமாலின் அவதாரம் என்று கூறவில்லை. ராமனை திருமாலின் அவதாரம் என்று எழுதியவர் கம்பர்தான். கம்பராமாயணத்தில், பலஇடங்களில் அடியெடுத்துக் கொடுத்தவர்கள் ஆழ்வார்கள் என்பதை ஆதாரத்துடன் எடுத்துக்கூறுகிறார் நயவுரைநம்பி டாக்டர் எஸ். ஜெகத்ரட்சன். கம்பராமாயணத்தின் சுவையான பல பகுதிகளை எடுத்துக்கூறி, அவற்றுக்கு அழகிய நடையில் பொருள் கூறுகிறார் ஜெகத்ரட்சகன். எனவே நூலைப் படித்து முடிக்கும்போது, கம்பராமாயணத்தையே படித்து முடித்த […]

Read more

நபி நேசம் நம் சுவாசம்

நபி நேசம் நம் சுவாசம், மவ்லவி பி.எம். கலீலுர் ரஹ்மான் மன்பஈ, எஸ்.கே.எஸ். பப்ளிகேஷன்ஸ், பக். 186, விலை 100ரூ. நபிகள் நாயகத்தின் மகத்துவம் எத்தகையது என்பதை, டாக்டர் கலீல் இப்ராஹிம் முல்லா காதிர் என்பவர் எழுதிய ஒரு அரபு நூலின் அடிப்படையில் இந்நூலை ஆசிரியர் உருவாக்கியுள்ளார். மனிதர்களை நல்வழிப்படுத்த வேண்டி, 1,25,000க்கும் மேற்பட்ட தூதர்களை (நபிமார்களை) இறைவன் இவ்வுலகிற்கு அனுப்பியுள்ளான். அதில் முதல் முனிதரும் முதல் நபியுமான ஆதாம் முதல் ஈஸா (யேசு) வரையிலான அனைத்து நபிமார்களும், வேதங்களும் இறுதி நபியாகிய முஹம்மது […]

Read more

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ், ச.க. இளங்கோ, பாரிநிலையம், பக். 488, விலை 180ரூ. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் திரைப்படத் துறையிலும் தனது முத்திரைகளைப் பதித்துள்ளார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் முதன்முதலில் திரைத்துறையில் நுழைந்தவர் பாரதிதாசனே. 1937ஆம் ஆண்டு முதன்முதலில் பாலாமணி அல்லது பக்காத்திருடன் படத்துக்குப் பாடல்கள் எழுதினார். 1938இல் எழுத்தாளர் வ.ரா.கேட்டுக்கொண்டதற்கிணங்க ஸ்ரீராமானுஜர் படத்துக்குப் பாடல் எழுதினார். 1940இல் வெளிவந்த காளமேகம் திரைப்படத்தின் கதை, வசனம், பாடல்கள் எழுதியது பாரதிதாசனே. ஓர் இரவு, பராசக்தி, இரத்தக்கண்ணீர், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி உள்ளிட்ட 17 படங்களில் பாரதிதாசனின் […]

Read more

யோகாசனமும் மருத்துவப் பயன்களும்

யோகாசனமும் மருத்துவப் பயன்களும், டாக்டர் ரேவதி பெருமாள்சாமி, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 60ரூ. நோயின்றி நாம் நூறு ஆண்டுகள் வாழ வழிவகுக்கும் சக்தி யோகாசனங்களுக்கு உண்டு என்கிறார் நூலாசிரியர். நாம் முறையாக சோகாசனங்கள் செய்வதன் மூலம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக நோயின்றி வாழமுடியும் என்கிறார். மனதில் அமைதி ஏற்படுதல், உடல் வலிமை பெறுதல், இதய பாதுகாப்பு உள்ளிட்ட யோகாவின் பயன்களைக் கூறி, அந்த யோகாசனங்களை எப்படிச் செய்வது என்பதையும் விளக்கும் நூல். நன்றி: குமுதம், 3/8/2015.   —- 1001 […]

Read more

சங்கப்பாடல்களில் சாதி தீண்டாமை இன்ன பிற…,

சங்கப்பாடல்களில் சாதி தீண்டாமை இன்ன பிற…, வீ.எஸ். ராஜம்,மணற்கேணி பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 60ரூ. சாதி, தீண்டாமை என்ற கோட்பாடுகள் தமிழகத்தில் ஏன் தோன்றின, எப்போது தோன்றின? குறிப்பாக சங்க இலக்கியங்களில் அவை தென்படுகின்றனவா? என்ற தேடலின் முயற்சியே இந்நூல். சாதி, தீண்டாமை என்கிற கோட்பாடுகள் காலந்தோறும் எப்படி உருப்பெற்றன என்ற வகையிலும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நன்றி: குமுதம், 3/8/2015.   —- வல்லினம் நீ உச்சரித்தால், முகமது மதார், வாசகன் பதிப்பகம், சேலம், விலை 50ரூ. ஒவ்வொருவர் வாழ்க்கையின் ஏதாவது […]

Read more

கனவு சினிமா

கனவு சினிமா, க. மணிகண்டன், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 128, விலை 100ரூ. ஒரு உதவி இயக்குநரின் அனுபவங்களின் பதிவாக மட்டும் நில்லாமல், சினிமா இயக்குநராக வேண்டும என்ற கனவோடு வரும் இளைஞர்களுக்கு சொல்லித்தரும் அனுபவப்பாடமாகவும் இந்நூலைத் தந்துள்ளார் நூலாசிரியர். வாய்ப்புக்காக பல இயக்குநர்களைத் தேடிப் போனதை, கேட்டறிந்த உண்மைகளை, கண்டுணர்ந்த அனுபவங்களை கனவு சினிமாவாக பதிவு செய்துள்ளார். வாசிப்பவர்களுக்கு சுவாரசியத்தைத் தர கற்பனை கலந்திருக்கிறார். அதுதானே சினிமா. சினிமாவை சுவாசிப்பவர்கள் வாசிக்க வேண்டிய நூல். நன்றி: குமுதம், 3/8/2015.   […]

Read more

புனிதராற்றுப்படை

புனிதராற்றுப்படை, எம். அல்போன்ஸ், பொதிகை பதிப்பகம், சென்னை, பக். 104, விலை 80ரூ. சங்ககால ஆற்றுப்படை இலக்கியங்கள் அனைத்தும் இலக்கியக் கருவூலங்களாகும். சங்ககத் தொகை நூல்களுள் ஒன்று பத்துப்பாட்டு. இப்பத்துப்பாட்டில்தான் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை முதலிய ஆற்றுப்படை நூல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வரிசையில் தற்போது வெளிவந்திருக்கும் இந்தப் புனிதராற்றுப் படையையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆற்றுப்படுத்துதல் என்றால், வழிப்படுத்துதல் என்றும், ஆற்றுப்படை என்றால் வழிப்படுத்தி அனுப்புதல் என்றும் பொருள். விறலியர், பாணர், கூத்தர், பொருநர் போன்றோர் தம் வறுமையைப் போக்கிக் கொள்ள வள்ளல்களிடம் சென்று, பொன்னும் […]

Read more

இந்தியத் தேர்தல் வரலாறு

இந்தியத் தேர்தல் வரலாறு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த் சென்ஸ், பக். 608, விலை 650ரூ. இந்திராவை வாஜ்பாய் ஆதரித்தது ஏன்? உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 125 கோடி மக்கள் தொகையில் 80கோடிக்கும் அதிகமானோர், தேர்தல் முறையில் பங்கேற்பது, இதன் ஆணிவேர். நாட்டை நிர்வகிக்க, மக்கள் பிரதிநிதிகளை நேரடியாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலம், பிற பிரதிநிதிகளையும் மறைமுகமாகவும் தேர்வு செய்கின்றனர். மறைமுக தேர்வில், நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவரும் அடக்கம். சுதந்திரம் பெற்ற பின், இன்றுவரை, எத்தனையோ தேர்தல்களை […]

Read more
1 2 3 4 5 9