கவிஞர்களின் பார்வையில் காரிகைகள்

கவிஞர்களின் பார்வையில் காரிகைகள், ப. முத்துக்குமார சுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 156, விலை 95ரூ. பெண்ணின் உரிமை ஓட்டம் இன்னமும் முடியவில்லை பெண் வீட்டிலும், நாட்டிலும் எவ்வாறு போற்றப்படுகிறாள் என்பதை ஏட்டில் கவிஞர்கள் எப்படி தீட்டியுள்ளனர் என்று இந்த நூல் காட்டுகிறது. உலகில் முதன்முதலில், தாய் ஆட்சிதான் இருந்தது. தாயின் வழியே குடும்பமும், கூட்டங்களும் அறியப்பட்டன. ஆனால், ஆண் ஆதிக்கத்தால் பிறகு தலை கீழாக மாறிவிட்டன என்று துவங்குகிறது ஆய்வுப் பயணம். வீட்டுப் பராமரிப்பு, பயிரிட்டு பாதுகாத்தல், பிள்ளைப் பேறு என, பெண்ணின் […]

Read more

இஸ்லாமும் ஜீவகாருண்யமும்

இஸ்லாமும் ஜீவகாருண்யமும், கவி கா.மு. ஷெரீப், கலாம் பதிப்பகம், விலை 50ரூ. புலால் உண்ணும் முஸ்லிம்களுக்கும், ஜீவ காருண்யத்திற்கும் என்ன தொடர்பு என்று சிலர் வினவலாம். ஆனால் இந்த நூலில் ஜீவ காருண்யம் என்பது வேறு, புலால் உண்பது என்பது வேறு. இரண்டுமே பிரித்து வைத்து பார்க்க வேண்டியவை என்பதே கவி கா.மு.ஷெரீப் ஆய்வு செய்து எழுதியுள்ளார். மேலும் ஜீவகாருண்ம் – புலால் உணவு ஆகியவைகளில் உலகப் பெரும் சமயங்களின் கொள்கை, கோட்பாடுகளையும் அவர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 19/8/2015.   […]

Read more

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன், விகடன் பிரசுரம், விலை 165ரூ. பூச்சிக்கொல்லி விஷம், ரசாயன உரம் என்று 50 ஆண்டுகளாக இருந்த நவீன விவசாயத்தை இயற்கை வேளாண்மை நோக்கி திருப்புவதற்கான சிந்தனையை விதைத்த இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் கோ. நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாற்று நூல். தன் வாழ்நாள் முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்து, ரசாயன உரங்களுக்கு எதிராக பிரசாரம் செய்த அவர், அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இந்திய அளவில் இயற்கை வேளாண்மை வேகம் பெற்றதற்குக் காரணகர்த்தாவாக இருந்தவர். இறுதி காலம் வரை இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல், […]

Read more

நல்லவங்க அரசியலுக்கு வாங்க

நல்லவங்க அரசியலுக்கு வாங்க, சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 75ரூ. இந்நூலில் இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய லட்சியத் தலைவர்களாக பெருந்தலைவர் காமராஜர், உத்தமர் கக்கன், தோழர் ஜீவானந்தம், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோரின் பொது வாழ்க்கை வரலாறு சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் தூய்மையான அரசியல் மூலம் நல்லாட்சி ஏற்பட தேவையான நீதித்துறை, காவல்துறை மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உடனடி தேவைகளாக ஊழலற்ற நிர்வாகம், தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு மற்றும் நதிகள் இணைப்பு […]

Read more

நாடும் நலமும்

நாடும் நலமும், ஏ.எஸ். மாணிக்கம் அறக்கட்டளை, விலை 50ரூ. 600சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள சிறிய தீவு சிங்கப்பூர். குட்டித் தீவான சிங்கப்பூரின் விடுதலைக்கும், பின்னர் அதன் வளர்ச்சிக்கும், அந்த நாட்டு மக்களுக்கும், உலகத் தலைவர்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் லீ குவான் யூ. சிங்கப்பூரை வளம் மிகுந்த நலம் நிறைந்த நாடாக மாற்றிய பெருமை அந்த நாட்டின் தேசத்தந்தை என்று போற்றப்பட்ட லீ குவான் யூவையே சாரும். அந்த மாபெரும் மனிதரின் வாழ்க்கையையும், சிங்கப்பூரின் வளர்ச்சியையும் இந்த நூலில் ஆசிரியர் அனகை மாணிக்க ஆறுமுகம் […]

Read more

சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார்

சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார், பூங்கொடி பதிப்பகம், விலை 140ரூ. நாட்டுப்பற்று, இந்துமதப்பற்று, பொருளாதார ஏற்றத் தாழ்வு ஒழிப்பு ஆகிய பல கண்ணோட்டங்களில் பாரதியார் சமூக சீர்திருத்தத்தின் தேவைகளை வலியுறுத்தும் கருத்துக்களின் தொகுப்பு நூல். இந்தியாவில் விசேஷ கஷ்டங்கள் இரண்டு. 1. பணமில்லாதது, 2. சாதிக்குழப்பம். வறுமை எதிர்ப்புப் போராட்டமும், சாதி எதிர்ப்புப் போராட்டமும் இணைந்து நடந்தால்தான் சமத்துவம் ஏற்பட வழி பிறக்கும் என்றெல்லாம் பொருள் விரித்துக் கூறும் அளவிற்கு சூத்திரமாக அமைந்துள்ளது பாரதியாரின் இந்தக் கருத்து. சமூக சீர்திருத்தத்திற்காக பாரதியார் எழுப்பிய பல […]

Read more

பிணங்களின் முகங்கள்

பிணங்களின் முகங்கள் (நாவல்), சுப்ரபாரதிமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 248, விலை 200ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024698.html பனியன் கம்பெனிக்குப் போற பசங்க, எங்க கபடம் இல்லாம இருக்காங்க… என்று கேட்கிறாள் ஒரு தாய். படிக்கப் போக வேண்டிய வயதில் பணிக்குச் சென்று அல்லல்படும், டீன்-ஏஜ் பையன்களைப் பற்றிச் சொல்லும் நாவல் இது. பள்ளி நாட்களின் நினைவுகளோடும், விடுமுறைக்கால கனவுகளோடும் உலாவும் பிஞ்சுகளின் மனதையும், உடலையும், பல தனியார் தொழில் நிறுவனங்கள் காவு […]

Read more

நம்பிக்கை போதிமரம்

நம்பிக்கை போதிமரம், க. சிவராஜ், வாசகன் பதிப்பகம், சேலம், விலை 60ரூ. கட்டுரைகள் அடங்கிய இந்த தொகுப்பில், விவேகானந்தர், ராமகிருஷ்ணர், புத்தர், நேரு, காமராசர் போன்ற சான்றோர்களின் அரிய கருத்துக்கள் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 26/8/2015. —- தொழிற்சாலையில் மின் நிர்வாகம் அடிப்படைகள், மு.முத்துவேலன், தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம், கோயம்புத்தூர், விலை 450ரூ. தொழிற்சாலைகள் நடத்துபவர்கள் மின்சாரத்தை நன்றாக நிர்வாகம் செய்து, இழப்பை தடுத்து, மின்நிர்வாகத் திறனை மேலும் வளர்த்திக் கொள்ள இந்நூல் ஒரு வழிகாட்டியாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, […]

Read more

உன்னை நீ மறந்தேன்?

உன்னை நீ மறந்தேன்?, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. எனக்காக வாழ்வது தவறா? என் வாழ்க்கையின் அர்த்தம் என்ன? நான் யார்? போன்ற கேள்விகளுக்கும், வாழ்க்கையின் சவால்கள், ஆன்மிக விழிப்புணர்ச்சி ஆகியவற்றுக்குமான விளக்கங்கள் இந்நூலில் விவரித்து கூறியுள்ளார் மனோதத்துவ நிபுணர் அ. கீதன். நன்றி: தினத்தந்தி, 26/8/2015.   —- தமிழக விழிப்பின் முன்னோடி ஜி. சுப்பிரமணிய அய்யர், பூங்கொடி பதிப்பகம், சென்னை, விலை 80 ரூ. திருவையாற்றில் 1855ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி பிறந்த ஜி. சுப்பிரமணிய அய்யர், சுதேசமித்திரன் பக்திரிகையை […]

Read more

குமரி மாவட்டத் தமிழ் வழக்கு

குமரி மாவட்டத் தமிழ் வழக்கு, முனைவர் ச. சுஜாதா, சேகர் பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழ் வழக்கு , மொழிச்சுழல், கிறிஸ்தவ நாடார் வட்டார வழக்கின் இயல்புகள் ஆகிய தலைப்புகளில் நூலாசிரியர் ஆராய்ச்சி செய்த தகவல்கள் அடங்கிய நூல். வட்டார வழக்கியல் ஆய்வுக்கு மட்டும் அல்லது மொழி ஆய்வுக்கும் மொழியியல் ஆய்வுக்கும் இந்த நூல் பெரிதும் துணைபுரியும். நன்றி: தினத்தந்தி, 26/8/2015.   —- பிரியாணி சமையல், கிழக்கு பதிப்பகம், விலை 100ரூ. 100 வகை வெஜிடெபிள் பிரியாணி வகைகள், […]

Read more
1 2 3 4 5 7